Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates
தெரிந்து கொள்வோம் ##### . . 1. “ 34,433 நாட்கள் (94 வயது வரை) வாழ்ந்த தந்தைபெரியார் 15,12,000 கிலோ மீட்டர்கள் பயணம் செய்துள்ளார்! 21,400 மணிநேரம் சொற்பொழி வாற்றியுள்ளார் .” . . 2. “ தமிழில் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வந்தவர்பெரியார்! ணா,லை என 75 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலாக எழுத ஆரம்பித்தவர் அவரே.” . . 3. “ அண்ணா காலமாகும் வரை திமுகவிற்கு தலைவர் அறிவிக்கப் படவேயில்லை .” . . 4. “ அண்ணா தனது ஆட்சியின் போது தந்தை பெரியாரின் கொள்கையான சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் அரசாணையை கொண்டுவந்தார் .” . . 5. “ ராமசாமி என்பதே இயற்பெயர் பெண் உரிமைக்கு போராடியதால் பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டமே பெரியார்! அதுவே பெயராகிப் போனது .” . . இது போன்ற சின்ன சின்ன தகவல்களை தினமும் பெற . லைக் → வகுப்பறை
பதட்டமான தமிழ்நாட்டு சூழலில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி எதற்காக? ——————– கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை தொடர்பாக கோவையில் ‘இந்து பரிவாள அமைப்புகள்’ கலவரத்தை உருவாக்கினர். #இந்து_முன்னணி_தலைவர்_காடேஸ்வரா_சுப்ரமணி, ‘தமிழ்நாட்டை குஜராத்தாக மாற்ற வைத்து விடாதீர்கள்’ என மிரட்டல் விடுத்தார். ‘#இஸ்லாமியர்கள் தான் இந்து முன்னணி பிரமுகரை கொன்றார்கள்’ என்று பலமான குற்றச்சாட்டுகளை வைத்தார்கள். சர்வதேச சதியும் சசிகுமார் படுகொலையில் உள்ளதாக ஆவேசப்பட்டார்கள். ஆனால் சசிகுமாரை யார் கொன்றது? எதற்காக கொன்றார்கள்? கோவை இந்து முன்னணியின் சக நிர்வாகி #ஆனந்த்என்பவருக்கும் #சசிகுமார் படுகொலையில் தொடர்பு இருந்தது அம்பலமானதால் தன்னை காவல்துறை கைது செய்து விடும் என்று பயந்து தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆனந்திடம் மரண வாக்குமூலம் வாங்கப்பட்ட போது, ‘போலிஸ் தன்னை கைது செய்துவிடும்’ என்ற பயத்தில் தீக்குளித்ததாக குறிப்பிட்டார். அதன் பின் சில மணி நேரங்களில் ஆனந்த் இறந்தார். #பாஜக வைச் சேர்ந்தவரும் ஆர்.எஸ்.எஸ் அபிமானியுமான#கல்ராணராமன் என்பவர், “நாங்கள் காவல்துறைக்கு கிஸ்தியும் கொடுப்பதில்லை. மாட்டுக்கறி பிரியாணியும் போடுவதில்லை. அதனால்தான் ஆனந்தை பிடிக்க தீவிரம் காட்டினார்கள்” என்று குற்றம்சாட்டியுள்ளார். இவ்வாறாக இந்து பரிவாள அமைப்புகள் தங்கள் தவறுகளை மறைப்பதற்காக தங்களுக்குள் இணக்கமாக இருப்பதைப் போல் நாடகம் போடுகின்றன. #இந்து_கட்சி யைச் சேர்ந்த #செந்தில் என்பவர் செப்டம்பர் 20இல், ‘நேற்று, இன்று, நாளை’ என்று ஒரு பதிவுடன் 3 படங்களை இணைத்திருந்தார். ‘நேற்று’ என்பதில் செப்டம்பர் 16 இல், #இந்து_மக்கள்_கட்சிதென்மண்டல தலைவர் வே.தர்மாவின் கார் கொளுத்தப்பட்ட புகைப்படம். ‘இன்று’ என்பதில் செப்டம்பர் 19 இல், #இந்து_முன்னனி சங்கர் மீதான தாக்குதல் புகைப்படம். ‘நாளை’ என்பதில் கோவை இந்து முன்னணி சசிகுமார் புகைப்படம். செந்தில் பதிவு செய்த நாள் செப்டம்பர் 20.#சசிகுமார்_படுகொலை செய்யப்பட்ட நாள் செப்டம்பர் 23. இந்து முன்னணியில் உள்ள சசிகுமார் செப்டம்பர் 23 இல் கொல்லப்படுவார் என்னும் தகவல் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த செந்திலுக்கு செப்டம்ப ர் 20ந் தேதியே எப்படி தெரிந்திருந்தது? #இந்து_சங்க_பரிவாளங்கள் எதற்காக இப்படி திட்டமிட்ட கலவரங்களை தூண்டினார்கள்? ராம்குமார் சிறைக்குள் கொல்லப்பட்டது செப்டம்பர் 19இல்.#ராம்குமார்_படுகொலை திசை திருப்பப்பட வேண்டும் என்பதில் இந்து பரிவாள அமைப்புகள் தீவிரமாக இயங்கின. சுவாதி படுகொலை முழுக்க இந்து சங்க பரிவாளங்கள் கூட்டணியும் பா.ஜ.கவின் அரசியல் ஆதரவும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டுக்குள் #மதக்கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்பதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தீவிரம் காட்டின.#சுவாதி மதமாற்றம் ஏற்காத சுவாதியின் குடும்பத்தினருக்கு உதவியது ஆர்.எஸ்.எஸ் என்ற இந்து தீவிரவாத அமைப்புதான். #சுவாதி_படுகொலை செய்யப்பட்ட மறுநாளில் அவளை கொன்றவன் இஸ்லாமிய இளைஞன் என்று முதலில் எழுதியது#திருச்செந்தூர் ‘வினோத் இந்து நேஷனலிஸ்ட்’ ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர். அவர் எழுதிய தகவல்களை #ஓய்ஜிமகேந்திரன்உள்ளீட்ட பார்ப்பன பனியாக்கள் அச்சு எடுத்தன. ராம்குமார் சிறைக்குள் படுகொலை செய்ததற்கும் இதே ஆர்.எஸ்.எஸ் இயக்கமே காரணம். ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? என்பதை இன்னும் வெளியில் தெரியாத அளவு மர்மங்களால் சூழ்ந்திருப்பதற்கு காரணமும் இதே ஆர்.எஸ்.எஸ் இந்து பரிவாள அமைப்புகள் தான். இத்தனை பதட்டங்களோடு தமிழ்நாடு இன்று மர்ம பிரதேசமாக மாற்றப்பட்டிருக்கும் நிலையில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது ஏன்? “தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற முயலும் இந்து முன்னணியை தடை செய்” என்று #மக்கள்_நலக்_கூட்டணிகள்போராடிய போது 2.500 பேர்களை கைது செய்த காவல்துறை, நீதித்துறை, தமிழக அரசு “ஆர்.எஸ்.எஸ் இந்து பயங்கரவாத இயக்கத்தை டவுசர் போடாதே. முழு பேண்ட் போட்டு ஊர்வலத்தை நடத்து” என அனுமதி கொடுப்பது மதக் கலவரத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவதற்காகவா? #மதவெறுப்புவாத_அரசியல் அரசு அதிகாரமிக்க நபர்களிடம் இருந்தால் நாடு கலவர பூமியாகவும் இரத்த ஆறு ஓடும் சாக்கடையாகவும் தான் இருக்க முடியுமென்பதை இவர்கள் அறியாதவர்களா? எதற்காக இஸ்லாமிய வெறுப்பின் மீது இந்துக்களையே கொன்றொழிக்க முயலும் அரசியலை இந்துக்களுக்கு எதிராக இருக்கும் இந்து அமைப்புகள் செய்கின்றன? [பிகு: பதிவிற்கு தொடர்புடைய படங்கள் நீக்கப்பட்டுள்ளன என்பதால் இம்முறை பதிவின் கீழ் உள்ள பின்னூட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன] #தமிழச்சி 09/10/2016
சூத்திரர்கள் மாக்கள். பார்ப்பான்கள் மாமக்கள்! பிராமணன்’ கொலை செய்தால், உச்சிக் குடுமியிலிருந்து, மயிரை மட்டும் வெட்டினால் போதும் இது மனுதர்மம் கூறும் நீதிகளில் ஒன்று. இதுதான் பல நூறு ஆணடுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்து சட்டம். ஆங்கிலேயர்கள் இந்தியாவில் அரசியல் ஆதிக்கத்தை நிறுவிய பிறகும் 1772-ஆம் ஆண்டு வரை கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்களுக்கு மனுதர்மத்தின் அடிப்படையிலேயே நீதிமன்றங்களில் தண்டனைகள் வழங்கப்பட்டன. லண்டனில் இருந்த உச்சநீதிமன்றமான ‘பிரிவி கவுன்சில்’ வரை இந்தியர்களின் வழக்கில் இதுதான் பின்பற்றப்பட்டது
“Cialis No Prescription” மனுதர்மம்
வெள்ளைக்கார நீதிபதிகளுக்கு மனு தர்மத்திலிருந்து இதை எல்லாம் எடுத்துக்கூற நீதிமன்றங்களிலேயே பார்ப்பனர்கள் நியமிக்கப்பட்டார்கள். பிறகு, இந்த மனுதர்மத்தை நீதிபதிகளே நேரடியாக அறிந்திட 1801-இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கமே ஹென்றி தாமஸ் கோல் புரூச் என்பவரை நியமித்து, ‘மனுதர்மத்தை’ ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது 1860-ஆம் ஆண்டில்தான் கிரிமினல் குற்றங்களுக்கு மனுதர்ம அடிப்படையில் தண்டனை வழங்குவது நிறுத்தப்பட்டது. ஆனால், குடும்பம், மதம், வாரிசுரிமை, சாதி, சொத்துப் பிரச்சினை போன்ற சிவில் வழக்குகளில் ‘மனுதர்ம’த்தின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின், 1950-ஆம் ஆண்டு அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகுதான் ‘மனுதர்மத்துக்கு பதிலாக சிவில் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் முறை வந்தது
பார்ப்பான்களைத் தவிர மற்ற சாதிகள் கல்வி கற்க கூடாது
“பார்ப்பான்களைத் தவிர மற்ற சாதிகள் கல்வி கற்க கூடாது” என்ற பார்ப்பான்களின் ஒடுக்குமுறையை ஆங்கிலேயர்கள் 1850-க்கு பிறகு மாற்ற முற்பட்டு 1910-களில் தான் அதை நடைமுறைக்கு கொண்டு வரமுடிந்திருக்கிறது எனவே தான் பெரியாரும் அம்பேத்கரும் பார்ப்பான்கள் தங்கள் சுயநலத்திற்காக மட்டுமே எழுதி வைத்துக் கொண்ட மனு தர்மத்தை கொளுத்தினார்கள். சிவில் சட்டங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வர போராடினார்கள்…. அப்பாடா! நம்ப காலத்தில் இந்த மனுதர்மம் சட்டம் நடைமுறையில் இல்லை என்று இளைய தலைமுறையினர் பெருமூச்சி விடுகிறீர்களா? உங்களை எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இப்போதைய ‘நவீன பார்ப்பான்கள் மனுநீதி’யை நவீனமாக்கி விட்டார்கள்
‘சூத்திரன்’ கொலை செய்தால் சிறை தண்டனை கொடு
‘பார்ப்பான் கொலை செய்தால் ஒரு சூத்திரனை பிடித்து சிறை தண்டனை கொடு.’ சுவாதி படுகொலையில் நடந்து கொண்டிருக்கும் அரசியலும் இதுதான். சுவாதி பார்ப்பனப் பெண்தான். ஆனால் இஸ்லாமியனை காதலித்து திருமணம் செய்துவிட்டாள். அப்பா ஆர்.எஸ்.எஸ் அபிமானி. சித்தப்பா ஒரு இந்து அமைப்பின் தீவிர அரசியல் செயற்பாட்டாளர். கருப்பு முருகானந்தத்திற்கு நெருக்கமானவர். விளைவு…. சுவாதி கொல்லப்பட்ட மறுநாளே ‘பிலால் என்னும் இஸ்லாமியன் தான் கொன்றான்’ என்று எழுதிய ‘வினோத் இந்து நேஷனலிஸ்ட்’ என்பவர் பார்ப்பான் பா.ஜ.கட்சியைச் சேர்ந்த இவர் திருச்செந்தூர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் உறுப்பினர் இவர் எழுதிய அவதூறு தகவலை தான் ஓய்.ஜி.மகேந்திரன், எச்.ராஜா, ராம்கி போன்ற பார்ப்பான்கள் பரவலாக்கினர் இணையதளங்களில் எதிர் விமர்சனங்கள் தீவிரம் அடையவே ‘வினோத் இந்து நேஷனலிஸ்ட்’ தன்னுடைய பதிவை நீக்கிவிட்டு தன்னுடைய பேஸ்புக் பக்கத்தின் பெயரையும் மாற்றினார். சுவாதி கொல்லப்பட்ட இடத்தில் பிலால் கதறி அழுது கொண்டிருந்தார். அவரை ஏன் இந்த பார்ப்பான் கொலையாளியாக அடையாளப்படுத்தினார்? சுவாதிக்கும் பிலாலுக்கும் எந்த வகையில் தொடர்பு இருந்தது என்பது இவருக்கு எப்படி தெரிந்தது? சுவாதி தன்னை போன்று பார்ப்பன குடும்பத்தை சேர்ந்தவர் என்று தெரிந்திருந்தும் உண்மையான குற்றவாளியை கண்டு பிடியுங்கள் என்று கூறாமல் பிலாலை இழுத்துவிட்டது ஏன்? சுவாதியின் அப்பா, “தன் மகளை கொன்றது யார் என கண்டுபிடித்து தண்டியுங்கள்” என புகார் அளிக்காதது ஏன்?
நமது விவாதம் என்னவென் றால்
இப்படி பல கேள்விகள் நீண்டு கொண்டே இருக்கின்றன நமது விவாதம் என்னவென்றால் சுவாதியின் அப்பா, சித்தப்பா மற்றும் பா.ஜ.க / இந்து அமைப்புகள் சில பார்ப்பன அரசியல்வாதிகளின் பின்னணியில் நடைபெற்ற சுவாதி படுகொலையில் குற்றவாளியாக ராம்குமாரை அடையாளப்படுத்தியதோடு அவர் பேசிவிடாமல் இருக்க கழுத்தையும் அறுத்து அந்த சூத்திர இளைஞனை சிறைக்குள் தள்ளும் நவீன மனுவாதிகளாக இருக்கிறார்களே இவர்களை ‘சிவில் சட்டம்’ என்ன செய்தது? திலீபன் மகேந்திரன், சுவாதி கொலை தொடர்பாக அவதூறு பதிவு எழுதியதாக கருப்பு முருகானந்தம் என்பவரால் புகார் அளிக்கப்பட்டு இன்று சிறைக்குள் மனநல நோயாளிகளை அடைத்து வைத்திருக்கும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளாரே அந்த நிலை ஏன் ‘வினோத் இந்து நேஷனலிஸ்ட்’, ஓய்.ஜி.மகேந்திரன், எச்.ராஜா, ராம்கி போன்ற அவதூறு பதிவு எழுதிய பார்ப்பான்களுக்கு இல்லை? இதற்கான அனைத்து ஆதாரங்கள் இருந்தும் இவர்கள் மீது புகார் கொடுக்கப்படுமானால் அதை நடைமுறைப்படுத்த இந்த அரசும் காவல்துறையும் முன்வருமா? இதுதான் இந்து சமூகத்தின் சிக்கல். இங்குதான் ஜனநாயகம் இருப்பதாக, மக்களாட்சி நடப்பதாக நம்மை நம்ப வைக்கும் இந்து அரசியல் / இந்து மனுசட்டம் முயற்சிக்கிறது.
இதன் வெளிப்பாடுதான்
“சூத்திரர்கள் மாக்கள். பார்ப்பான்கள் மாமக்கள்.”
இது இந்துக்கள் வாழும் நாட்டின் இந்து நீதி
மனுநீதி பெரியார், அம்பேத்கர் காலங்களில் மட்டும் எரியூட்டப்பட்டவை அல்ல. பார்ப்பான்களால் அது புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே எரியூட்ட முயலும் ரோகித்து வேமுலா போன்ற இளைஞர்களையும் எரித்து அநீதியை நீதி என்றே பறைசாற்றும் சாத்தானின் இந்து வேதம் மனுநீதி! தமிழச்சி 30/08/2016 ‘வினோத் இந்து நேஷனலிஸ்ட்’ குறித்த தரவுகள் “சூத்திரர்கள் மாக்கள். பார்ப்பான்கள் மாமக்கள்.”
Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates