இந்திய முஸ்லிம்களுக்கு தேசபக்தி சான்றிதழ் தேவையா?
இந்திய முஸ்லிம்களுக்கு ‘தேசபக்தி சான்றிதழ்’ தேவையா? நாட்டில் தாராளவாத அரசியலும் இடதுசாரி சிந்தனையும் சுருங்கிவிட்டன ஆனால், அது முற்றிலுமாக முடிந்து போய்விடவில்லை
தாராளவாத அறிவுஜீவிகள் தங்கள் வார்த்தைகளை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்துகிறார்கள் என்பதும் உண்மைதான்
பொது வாழ்வில் பெருந்தன்மை, சகிப்புத்தன்மை குறைந்து வருவதை பற்றி விவாதிப்பதும் கடினமாகிவிட்டது
சுமார் 17 கோடி மக்கள்தொகை கொண்ட முஸ்லிம்கள் மற்றும் அவர்களது பிரச்சனைகளைப் பற்றி ஆசாதுதீன் ஓவைசி மட்டுமே பேசுகிறார்
முஸ்லிம்களின் பெயரை அடிக்கடி பயன்படுத்தும் காங்கிரஸ் அல்லது சமாஜ்வாதி போன்ற அரசியல் கட்சிகளும் பாகிஸ்தான், தீவிரவாதம், தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற விசயங்களில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படும்போது வாய்மூடி மெளனிகளாகி விடுகின்றன
இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற விவாதத்தை பல தீவிர அறிவுஜீவிகள் அண்மை நாட்களில் தொடங்கியுள்ளனர்
முஸ்லிம்கள் எப்படி உடுத்தலாம், எப்படி தோற்றமளிக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என எல்லா விசயத்திலும் கருத்து சொல்கின்றனர்
மாட்டிறைச்சிக்கு தடை என்ற விவாதம் பழங்கதையாகிவிட்ட நிலையில், புதிதாக தாடி, புர்க்கா என்று வேறுபல விசயங்களைப் பற்றி அறிவுரைகளை அள்ளி வழங்குகின்றனர்
பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றுவரும் வெறுப்பு அரசியல் தற்போது வெற்றியடைவதாக தோன்றுகிறது.
ஒருவர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவராக இருந்தால் அவரது நாட்டுப்பற்று கேள்விக்கு உள்ளாக்கப்படும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 1857 முதல் 1947 வரையான கால கட்டத்தில் நாட்டுக்காக பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் உயிர்த்தியாகம் செய்த நிலையில், நாட்டு விடுதலைப் போரில் முஸ்லிம்கள் பங்கேற்கவேயில்லை என்று பரப்புரை செய்யப்படுகிறது.
1947இல் நாடு விடுதலை பெற்றபோது, முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்கப்பட்டது. பெரும்பான்மையான முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு சென்றபோதிலும், லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்தியா தங்கள் தாயகம் என்ற எண்ணத்திலும், இந்துக்களின் மேல் இருந்த நம்பிக்கையாலும் பிறந்த இடத்திலேயே இருந்துவிட்டார்கள்.
இந்திய முஸ்லிம்களுக்கு நாட்டுப்பற்று சான்றிதழ்
இப்போது இந்துக்களின் தலைமைக்கு வலு சேர்க்க விரும்பும் சில அமைப்புகள், தேசபக்திக்கான சான்றிதழ்களை வழங்குகின்றன
தாடி வைத்திருக்கும் மற்றும் தொழுகை நடத்தும் முஸ்லிம்கள், குல்லாய், அணிந்த இஸ்லாமியர்கள் தேசபக்தி சான்றிதழுக்கு தகுதியற்றவர்களாக அறிவிக்கும் பொறுப்பை, ஒரு ஜனநாயக நாட்டில் அவை தானாகவே எடுத்துக் கொண்டுள்ளன
அப்துல் கலாமைப் போன்ற பகவத்கீதை படிக்கும், வீணை வாசிக்கும் இஸ்லாமியர்களே அவர்களுக்கு தேவை
ஆனால் தங்கள் மதத்தின் எந்த அடையாளத்தையும் அவர்கள் வெளிப்படுத்தக்கூடாது என்பதும் முக்கியம்.
ஆனால் மறுபுறத்தில், பஜனைகள், இந்து மத பாடல்களை இசைக்கலாம், பாடலாம், துதிக்கலாம். மத கோஷங்களை முழங்கலாம், புனித யாத்திரை மேற்கொள்ளலாம், சமய சடங்குகளை நடத்தலாம்
மதச்சின்ன்ங்களை அணிந்துக் கொள்ளலாம், இதெல்லாம் தேசபக்தி சான்றிதழ் கொடுக்க தகுதிகளாக வகைப்படுத்தப்படுகின்றன
அதாவது, இதுபோன்றவற்றை செய்யாதவர்கள், நாட்டுப்பற்று அற்றவர்கள். அதாவது நிச்சயமாக முஸ்லிம்களுக்கு தேசபக்தி இல்லை.
அரசு எப்போதெல்லாம் தோல்வியடைகிறதோ அப்போதெல்லாம் அது மறைந்துக் கொள்வதற்கு ஒரு முகமூடி தேவைப்படுகிறது. அதற்காக ஒரு எதிரியை தேடுகிறது
அரசு-ஆதரவு தேசியவாதிகள் அதைத் தூண்டிவிடுகிறது. தாங்களுடைய எதிரிகளுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவது அவர்களுக்கு கைவந்த கலை
எதிரிகளாக கருதும் தனிநபர்கள் அல்லது ஒரு அமைப்பின் மீது இத்தகைய தேசியவாத கேள்வியை எழுப்பி அவர்களை எதிரிகளாக காட்ட முயற்சிக்கப்படுகிறது
அமைப்பு என்பது ஒரு தொழிற்சங்கமாகவோ, மாணவர் அமைப்பாகவோ, அரசு சாரா அமைப்பாகவோ, பொதுமக்கள் இயக்கமாகவோ அல்லது வேறு எந்தவொரு அமைப்பாகவும் இருக்கலாம்
முஸ்லிம்களின் அதிகாரபூர்வ குழுக்கள் தேசபக்தி என்ற வரையறைக்குள் கொண்டு வரப்படுகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நாள்தோறும் நடைபெறும் விவாதங்களில் இதை தொடர்ந்து காணமுடிகிறது
இலக்கை முடிவு செய்துவிட்டு, இலக்குக்கு யார் பொருந்துவார்கள் என்பதும், பயன்படுத்தப்பட வேண்டிய ஆயுதம் எது என்பதையும் முடிவு செய்கிறார்கள் என்பதும் தெளிவாக தெரிகிறது. இதுபோன்ற காரணங்களால் முஸ்லிம்கள் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ்வது கடினமாகி வருகிறது
ஹர்ஷ் மந்தர் இது தொடர்பாக எழுதியுள்ள கட்டுரை குறிப்பிடத்தக்கது தனது கூட்டத்திற்கு வருமாறு முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்த ஒரு தலித் அரசியல்வாதி, ஆனால் ஒரு குறிப்பிட்ட விதமான குல்லாய் அல்லது புர்க்கா அணிந்து கொண்டு வரவேண்டாம் என்று குறிப்பிட்டுச் சொன்னார்
அது சரியில்லை என்று மறுக்கிறார் ராம்சந்திர குஹா இது முஸ்லிம்களை ஓரம்கட்டுவதற்கான முயற்சி என்று வாதிடுகிறார்
தங்கள் விருப்பங்களை அழித்துக் கொள்ளவேண்டும் என்று செய்யப்படும் சதி இது என்று அவர் சொல்கிறார்
ஆனால், முகுல் கேசவனின் கருத்துப்படி, முஸ்லிம்கள் புர்க்காக்களை துறக்கவேண்டும் என்று சொல்வது, முற்போக்கான நிகழ்ச்சிநிரலில் சேருவதற்கான அழைப்பாக பார்க்கவேண்டும்.
முஸ்லிம்கள் மீது அழுத்தம்
அரசின் அனைத்து கவனமும் முஸ்லிம்களின் சமூக சீர்திருத்தம், முத்தலாக், ஹஜ், மானியங்கள் பற்றியதாக இருக்கிறது
அதுமட்டுமா? மற்றும் ஹலலா பற்றிய விவாதங்களும் தீவிரமாகியிருக்கிறது
இந்த நாட்டில் வசித்தால் இப்படித்தான் வாழவேண்டும் என்று முஸ்லிம்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது
இந்த மூன்று அறிஞர்களின் அறிவார்ந்த கருத்துக்களும் முற்றிலும் சரியானவை அல்ல
சமூக அளவில் முஸ்லிம்கள் உடன் தொடர்பு கொள்வதோ அல்லது அவர்களது வீட்டிற்கு சென்று சிறிது நேரம் செலவிடுவதால் மட்டுமே, முஸ்லிம்களின் மனோபாவத்தையும், அவர்களின் சமூக கட்டுப்பாடுகளின் அடுக்குகளை புரிந்து கொள்வது கடினம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் கலந்துரையாடலில், நியூ எண்ட்ரி பிரவுன் பல்கலைக்கழக (New entry brown university) பேராசிரியர் அஷுதோஷ் வர்ஷ்னே, தேசியவாதத்தைப் புரிந்து கொள்ள புவியியல், மதம் அல்லது இன எல்லைகளை புரிந்துக் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த விஷயத்தை அதே சூழலில் புரிந்துகொள்ள வேண்டும், மேலும் இது மிகவும் சிக்கலானது. முஸ்லிம்களின் அடையாளம் குறித்த கேள்வியை முக்கியமானதாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு நாடும், மனிதகுலமும் எந்தவொரு விவகாரத்தையும் சரியாக புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதற்கு சொக்கத் தங்கமான ஒருவரின் உதாரணம் நம்மிடையே இருக்கிறது.
தேசியவாதம், தேசபக்தி மற்றும் மனிதகுலம் பற்றி மகாத்மா காந்தி என்ன சொல்கிறார் என்பதை ஆராய்வது அவசியம்.
மகாத்மா காந்தி இந்தியாவைப் பற்றிய தனது கனவுகளைச் சொல்லும் ‘இண்டியா ஆஃப் மை ட்ரீம்ஸ்’ என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்
‘தேசப்பற்றுக்கும், மனிதர்களின் மீதான அன்புக்கும் இடையே நான் எந்த வித்தியாசத்தையும் பார்க்கவில்லை, நான் மனிதநேயனாக இருப்பதாலேயே தேசபக்தனாக இருக்கிறேன்
தேசபக்தரின் வாழ்க்கையின் கொள்கையானது, ஒரு மதம் அல்லது பரம்பரையின் தலைவரின் வாழ்க்கையில் இருந்து வேறுபட்டதல்ல
ஒரு தேசபக்தர், மனிதனை தீவிரமாக நேசிக்காவிட்டால் அவருக்கு நாட்டின் மீதான அன்பு குறைவானது என்று கூறலாம்.”
காந்தி மேலும் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்: “குடும்பத்திற்காக ஒருவரையும், ஒரு கிரமத்திற்காக ஒரு குடும்பத்தையும், ஒரு மாவட்டத்திற்காக ஒரு கிராமத்தையும், தனது பிரதேசத்திற்காக ஒரு மாவட்டத்தையும் தியாகம் செய்யலாம் என்று சொல்வதைப்போல, அவசியம் ஏற்பட்டால் உலக நலனுக்காக ஒரு நாட்டின் விடுதலை தியாகம் செய்யவேண்டும்”.
நாடு சுதந்திரமடைய வேண்டும்
எனவே எனது தேசியவாதத்தின் கற்பனை இதுதான், “நாடு சுதந்திரமடைய வேண்டும் என்பது எனது நோக்கமாக இருக்கும்போது, மனிதகுலத்தின் பாதுகாப்பிற்காக தன்னார்வ மரணத்தையும் ஏற்றுக்கொள்ளலாம். இங்கு இனவெறிக்கு இடம் கிடையாது, நமது நாட்டுப்பற்று இப்படி இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்”.
தேசியவாதத்தின் உண்மையான தோற்றம்
மகாத்மா காந்தி தெளிவாகக் கூறுவது இதுதான்: “எமது தேசியவாதம் பிற நாடுகளுக்கு நெருக்கடி கொடுப்பதாக இருக்காது. எவரும் நம்மை சுரண்ட அனுமதிக்காத அதே நேரத்தில், நாமும் வேறு யாரையும் சுரண்டமாட்டோம். சுயராஜ்ஜியம் என்பது முழு மனிதகுலத்திற்கும் சேவை செய்வது என்பதாகும்.”
மகாத்மா காந்தியின் சொற்களின்படி, அவரது தேசியவாதம் குறித்த கருத்து, ஒழுங்கற்ற நிலையில் இருந்து நீண்ட தொலைவில் உள்ளது. உண்மையில் இதுதான் தேசியவாதத்தின் உண்மையான நிலைப்பாடு.
மகாத்மா காந்தியின் தேசபக்தி மதத்தை அடிப்படையாக கொண்டதல்ல. எந்தவொரு மதத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும் குரலை எழுப்புவதல்ல. வெளியில் இருந்து வரும் குரல் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் என்பதற்கான சாத்தியமும் இல்லை.
தங்களது மத-சமூக-கலாசார வாழ்வில் முஸ்லிம்கள் அல்லது கிறித்துவர்களின் விமர்சனங்களை கேட்க எத்தனை இந்துக்கள் விரும்புவார்கள்?
தேசத் தந்தை மகாத்மா காந்தி தார்மீக சக்தியை உண்மையில் நம்பினார் ஆனால் நம் நாட்டின் தற்போது பலம் வாய்ந்ததாக இருப்பது அரசியல் சக்திகளே.
Thanks By BBC Tamil