Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

இந்தியத் துணைக் கண்டத்துக்குள் ஆரிய ஊடுருவல் சமீபத்திய ஜீன் ஆய்வுகள் சொல்வதென்ன?

இந்தியத் துணைக் கண்டத்துக்குள் ஆரிய ஊடுருவல்: சமீபத்திய ஜீன் ஆய்வுகள் சொல்வதென்ன?

சமீபத்திய ஜீன் ஆய்வுகள் இந்தியத் துணைக்கண்டத்துள் மத்திய ஆசியாவிலிருந்து ஆரிய ஊடுருவல்நிகழ்ந்துள்ளதை நிறுவியுள்ளதை அறிவோம் உலகெங்கிலும் உள்ள 92 ஜீன் ஆய்வறிஞர்கள், இந்த ஆய்வுகள் என்னதான் சொல்கின்றன என்பதைச் சுருக்கமான ஒரு அறிக்கையாக இப்போது வெளியிட்டுள்ளனர்  அது குறித்த Scroll.in கட்டுரையை இங்கு பகிர்ந்துள்ளேன்,
இந்தக் கட்டுரையில் அந்த 92 வல்லுனர்களின் கட்டுரை மட்டுமல்லாமல் மேலும் இது தொடர்பான இரு கட்டுரைகளுக்கான இணைப்புகளும் தரப்பட்டுள்ளன  மொத்தத்தில் இந்த நான்கு கட்டுரைகளையும் ஆழமாகப் படித்தால் என்னதான் இப்போது ஜீன் ஆய்வு மூலம் நிறுவப்பட்டுள்ளது என்பது விளங்கும்

கட்டுரை மூலம் நாம் என்ன புரிந்து கொள்கிறோம்?

உண்மையில் புதிதாக ஒன்றும் இப்போது தெரிந்து விடவில்லை  சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் வில்லியம் ஜோன்ஸ் முதல் அறிஞர் கால்டுவெல் வரை மொழியியல் ரீதியாக என்ன சொன்னார்களோ அவற்றுக்கு ஜீன் அறிவியல் மூலம் இப்போது நிரூபணம் கிடத்துள்ளது அவ்வளவே
சரி இப்போது இந்தக் கட்டுரை மூலம் நாம் என்ன புரிந்து கொள்கிறோம்? சுருக்கமாகச் சொல்வதானால்

ஆரிய ஊடுருவல்
ஆரிய ஊடுருவல்

  1. ஏதோ ஒரு வகையில் ஆரியப் பரவல் இங்கு நடந்துள்ளது உறுதியாகிறது. ஸ்தெப்பி வெளி நாடோடி மேய்ச்சல் இனத்தவரின் (அதாவது ஆரியர்களின்) நுழைவின் ஊடாகத்தான் இந்தத் துணைக் கண்டத்தில் இந்தோ – ஐரோப்பிய மொழி (அதாவது மூல ஆரியம்) மற்றும் ஆரியப் பண்பாட்டின் பரவல் முதலியன நிகழ்ந்துள்ளனன.

2.இதே ஸ்தெப்பி வெளியினர்தான் மேற்குத் திசையில் நகர்ந்து ஐரோப்பாவிலும் பரவியவர்கள். அதனால்தான் இன்றைய ஆரியம் இந்தியத்துணைக் கண்டத்திலுள்ள இன்னொரு முக்கிய மொழிக் குடும்பமான திராவிடத்தைக் காட்டிலும் ஐரோப்பிய மொழிகளுக்கே நெருக்கமாக உள்ளது. அதாவது மத்திய ஆசிய ஸ்தெப்பி வெளியிலிருந்து இந்தியத் துணைக்கண்டத்தை நோக்கி வந்தவர்கள் இங்கே ஆரிய சமஸ்கிருதம் உருவாகவும், மத்திய ஆசியாவிலிருந்து மேற்கில் நகர்ந்தவர்கள் இன்றைய ஐரோபிய மொழிகள் உருவாவதற்கும் காரணமானார்கள்

  1. தவிரவும் இந்த ஸ்தெப்பி வெளியினரின் பரவலுக்கும் பிராமண சாதி மற்றும் பண்பாட்டுப் (priestly caste and culture) பரவலுக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என்பதும் இன்று உறுதியாகியுள்ளது. மொத்தமுள்ள இந்திய மக்கள் குழுக்களை 140 ஆகப் பிரித்தால் இவற்றில் 10 குழுக்களின் மூதாதையர் ஒப்பீட்டளவில் சிந்து வெளியைக் காட்டிலும் அதிக அளவில் ஸ்தெப்பி வெளியுடன் உறவுடையவர்களாகவே உள்ளனர். அதாவது ஆரிய ஜீன் கலப்புள்ளவர்களாக உள்ளனர்.

4. பொதுவாக மதச் சடங்குகளை நிறைவேற்றுபவர்களாக, அதாவது புரோகிதர்களாக, உள்ள குழாம்கள் ஸ்தெப்பி வெளியுடனேயே மூதாதை உறவு கொண்டவர்களாக உள்ளனர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் வைதீகத்தையும் வேதப் பண்பாட்டையும் பரப்புவதில் முக்கிய பங்கை இவர்களே (அதாவது புரோகிதம் செய்த ஆரியர்களே) வகித்திருக்க வேண்டும்

தென் ஆசிய வேட்டை இனப் பண்பாடு ஆரிய ஊடுருவல்

  1. தொடக்க கால ஈரானிய விவசாயிகள் சொல்லிக் கொள்ளும்படியாக தென் ஆசிய வேட்டை இனப் பண்பாட்டுடன் (அதாவது ஒருவகை மூல திராவிடப் பண்பாட்டுடன்) மூதாதை உறவு கொண்டிருக்கவில்லை என்பது ஜீன் ஆய்வில் தெரிய வருகிறது. இதிலிருந்து ஜீன் பரவல் என்பது வெளியிலிருந்து தென் ஆசியாவுக்குள் பரவியதுதானே தவிர தென் ஆசியாவிலிருந்து வெளியே பரவவில்லை என்பது அறிய வரு கிறது.

  2. கிமு 2000 வாக்கில் ஸ்தெப்பி வெளி மேய்ச்சல் நாடோடிகள்(அதாவது ஆரியர்கள்) தெற்குத் திசையில் இருந்த (இந்திய) துணைக் கண்டத்தை நோக்கி நகர்ந்தனர். இதனூடாக இந்தியத் துணைக்கண்டத்திலிருந்த சிந்துவெளி மக்களுடன் ஒரு கலப்பு நிகழ்ந்தது

7.அதன் பின் சிந்து வெளி மக்களின் ஒரு பகுதி மேலும் தெற்கு நோக்கி நகரத் தொடங்கியிருக்க வேண்டும். இதனூடாகத் தென் ஆசிய வேட்டை இன மக்களுடன் கலப்பு ஏற்பட்டு பூர்வீகத் தென்னிந்தியர் உருவாகி இருக்க வேண்டும்
8.தொடர்ந்த தென் ஆசியச் சமூக உருவாக்கம் என்பது பூர்விக வட இந்தியர்களுக்கும் பூர்வீகத் தென் இந்தியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலப்பின் ஊடாகவே அதன் பின் ஏற்பட்டிருக்க வேண்டும்

Marx Anthonisamy

தன் மகனைக் கொன்றவர்கள் என யார் பெயரையும் சொல்ல மறுத்த இமாம்

தன் மகனைக் கொன்றவர்கள் என யார் பெயரையும் சொல்ல மறுத்த இமாம்

சென்ற வாரம் நான் ஜார்கண்டில் இருந்தபோது அடுத்த நாள் இராம நவமி. அப்போதே ராஞ்சியில் பெருங்கூட்டம் திரண்டிருந்தது. இராணுவமும் ஆங்காங்கு நிறுத்தப்பட்டிருந்தது  அன்றைய Hindustan Times நாளிதழில் ராமநவமி ஊர்வலத்தில் கலந்து கொள்ள இருப்பவர்கள் கூர் வாள்களைக் கடையில் வாங்கும் காட்சி படமாக வந்திருந்தது. எங்களுக்குத் தெரிந்த ஒரு வங்கப் பெண்மணி, “நீங்கள் நாளை ஊருக்குப் போவதாக இருந்தால் ரயில், பஸ் எதிலும் போக முடியாது. ஏர்போர்ட்டுக்குக் கூட இங்கிருந்து போவது சிரமம்” என எச்சரித்தார். நாங்கள் அன்றிரவே டெல்லி செல்ல முன் கூட்டியே ராஜதானி எக்ஸ்பிரசில் டிக்கட் ரிசர்வ் செய்திருந்தோம்

இது தேர்தல் ஆண்டு

தன் மகனைக் கொன்றவர்கள் என யார் பெயரையும் சொல்ல மறுத்த இமாம்
தன் மகனைக் கொன்றவர்கள் என யார் பெயரையும் சொல்ல மறுத்த இமாம்

இந்த ஆண்டு ராம நவமி கலவரங்களோடு அரங்கேறியுள்ளது இது தேர்தல் ஆண்டு  எந்த அளவுக்குக் கலவரங்கள் வெடிக்கின்றனவோ அந்த அளவுக்குப் பயன் என அவர்கள் நினைத்திருக்கலாம்
அசன்சாலில் (மே.வங்கம்) நடந்த வன்முறையில் மிகப் பெரிய இரத்தக் களறியாக அது மாறாமல் தடுத்த ஒரு இமாம் பற்றிய செய்தி இரண்டு நாட்களாக நாளிதழ்களில் வந்தவண்ணம் உள்ளன.
அப்படித் தடுத்தவர் தன் 16 வயது மகனை வன்முறைக்குப் பலி கொடுத்தவர். நூரானி மசூதியின் இமாம் மவுலானா இம்தாதுல் ரஷீதி.
பத்தாம் வகுப்புப் படிக்கும் அவரது மகன் ஷிப்துல்லா (16) அசன்சாலில் வன்முறை வெடித்த அன்று காணாமற் போனான். காவல்துறையில் மகனைக் காணோம் எனப் பதிவு செய்ததோடு ரஷீதி வேறொன்றும் செய்யவில்லை.
நான்கு நாட்களுக்கு முன் அவன் உடல் கிடைத்தது. அவன் அடித்தே கொல்லப்பட்டுள்ளான். அவனுக்கான இறுதி அஞ்சலித் தொழுகையின்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு கூடியிருந்தனர். உணர்ச்சிப் பெருக்கும், ஆத்திரமும், ஆவேசமும் நிறைந்திருந்த அந்தச் சூழலில் அமதி தவழ நின்றது இமாம் ரஷீதி ஒருவர்தான்
ஒரு சிறிய உரையை நிகழ்த்தி, அனைவரையும் அமைதியாகக் கலைய அவர் கெஞ்சிக் கேட்டுக் கொண்டபோது கண்ணீருடன் கலைவததைத் தவிர திரண்டிருந்த மக்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.
thecitizen.in லிருந்து இமாம் ரஷீதியைத் தொடர்பு கொண்ட போது அவர் சொன்னார்

வன்முறையை நாடாதீர்கள்

“அல்லாவால் அருளப்பட்ட வாழ்வை அவன் வாழ்ந்து முடித்துவிட்டான். இனி இன்னொருவரின் குழந்தை இப்படிக் கொல்லப்படாமல் தடுப்பதும் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதும்தான் நம் கடமை. நீங்கள் அவன்மீதும் என் மீதும் அன்பு கொண்டவர்களானால் வன்முறையை நாடாதீர்கள் அமைதிக்கு வழி வகுங்கள்…”
இப்படியாகச் சொல்வதற்கு எத்தனை மனத்திடம் வேண்டும் எனப் பதிலுறுத்தபோது அவர் கூறியவை
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. என்னுடைய மகன் இறந்து போனான் இனிமேல் அது பற்றி நாம் ஒன்றும் செய்ய முடியாது இனி இப்படி இன்னொரு குழந்தை கொல்லப்படாமலும், இன்னொரு வீடு எரிக்கப் படாமலும், இன்னொரு குடும்பம் இப்படியான துயருக்கு ஆளாகாமலும் உறுதி செய்வதுதான் நமது பணியாக இருக்க முடியும் மக்கள் பழிவாங்கத் துடிக்கின்றனர் ஆனால் என்னுடைய அசன்சாலில் , என்னுடைய இந்த நகரத்தில்  என்னுடைய இந்த நாட்டில் ஒற்றுமையும் அமைதியும் நிலவுவது அவசியம் என்பதை நான் அறிவேன்..”
இன்றைய Hindustan Times நாளிதழில் இன்னொரு செய்தி நம்மை நெகிழ வைக்கிறது
தன் மகனை யார் கடத்திச் சென்று கொன்றிருக்க முடியும் எனக் காவல்துறையினர் கேட்கும் கேள்விக்கு இமாம் ரஷீத் எந்தப் பதிலையும் சொல்ல மறுத்துள்ளதோடு அதில் அவர் உறுதியாகவும் உள்ளார்
“என் மகன் கொல்லப்பட்டதை நான் கண்ணால் பார்க்கவில்லை நான் யார் மீதும் ஐயம் கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டக் கூடாது என முடிவு செய்துவிட்டேன் ஏனெனில் நான் யாரையும் பார்க்கவில்லை அப்பாவிகள் யாரும் பிரச்சினைக்குள்ளாவதை நான் விரும்பவில்லை நான் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனக் குற்றம்சாட்டுகிறார்கள். இருக்கட்டும் இயன்றால் அவர்களே கண்டுபிடிக்கட்டும்..”

வடமாநிலங்களில் பாரத் பந்த்அவாள்களின்" தீர்ப்பால் பற்றி எரிகிறது

வடமாநிலங்களில் பாரத் பந்த் அவாள்களின்” தீர்ப்பால் பற்றி எரிகிறது

வடமாநிலங்களில் பாரத் பந்த்  போலிஸ் துப்பாக்கி சூட்டில் பலர் பலி, பலர் படுகாயம்
வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று, அவற்றை நீர்த்து போகும் வகையியல் புதிய சட்டம் கொண்டு வந்த உச்சநீதிமன்ற “அவாள்களின்” தீர்ப்பால் பற்றி எரிகிறது பல மாநிலங்கள்
மத்தியப்பிரதேசத்தில் தொடங்கிய இந்த போராட்டத்தில் 5 பேர்கள் பலியாகி உள்ளனர். சாமியார் மாநிலமான உபியிலும் கடும் போராட்டம் அங்கே ஒருவரும், ராஜஸ்தானில் ஒருவரும் பலியாகி உள்ளனர். குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற இந்த பந்தால், இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடக்கபட்டுள்ளது. போராட்டம், டில்லி,பஞ்சாப், ஹரியானா மாநிலங்களுக்கும் ரயில் மறியல் போராட்டமாக் மாறியதால், பல ரயில் சேவைகள் முடக்கபட்டுள்ளன

வடமாநிலங்களில் பாரத் பந்த்

வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தால், அவரை உடனே கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை, தீரவிசாரனைக்கு பின்பே கைது செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள் மீது புகார் வந்தால், அவர்களின் மேலதிகாரிகளின் அனுமதி பெற்றே கைது செய்ய வேண்டும் – இதுதான் சட்டதிருததின் முன்வடிவம். இனி அப்படி அப்படி ஒரு சட்டமே தேவையில்லை என்ற அளவில்தான் இந்த சட்டதிருத்தம் உள்ளது என்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தலித் அமைப்புகள் மற்றும் பழங்குடியினர் இந்த பந்துக்கு அழைப்பு விடுத்து வடமாநிலங்களை முடக்கி போட்டுள்ளனர்

 

தமிழ்நாட்டை உயிரோடு தீ வைத்து எரிக்கிறது இந்தியா

தமிழ்நாட்டை உயிரோடு தீ வைத்து எரிக்கிறது இந்தியா

தமிழ்நாட்டை உயிரோடு தீ வைத்து எரிக்கிறது இந்தியா தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பூமியிலே தமிழகத்தின் இனப்பகை இந்திய அரசு இன்று விவசாயத்தை திட்டமிட்டு ஒழித்துவிட்டு,
தற்பொழுது தஞ்சை டெல்டா முழுவதும் மீத்தேன் எரிக்காற்று எடுத்து தஞ்சை நெற்களஞ்சியத்தை பாலைவனமாக மாற்றி வருகிறது.
இதன் ஒருபகுதியாக இன்று இனப்பகை இந்தியாவின் ONGC நிறுவனம் கதிராமங்கலம் பகுதியில் இருந்து மீத்தேன் எரிக்காற்று எடுத்துச் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு “தீ” பற்றி எரிந்து வருகிறது.
இதைப் பார்த்த கதிராமங்கலம் பகுதி மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்துப் போயுள்ளனர். 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து இந்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இனக்கொலை இந்திய அரசு தமிழ்நாட்டில் மீத்தேன் எடுக்கப் போகும் 110 இடங்களின் பட்டியலை வெளியிட்டு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழக மக்களே தமிழ்நாட்டை உயிரோடு தீ வைத்து
எரிக்கிறது இந்தியா
தமிழகத்தில் தற்பொழுது நடைபெறுவது வாழ்வா? சாவா? போராட்டம் .
நாளை நாம் உயிர்வாழ வேண்டுமென்றால் இன்று இந்திய அரசிற்க்கு எதிராக போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.
இது ஏதோ ஒரு டெல்டா பகுதி சார்ந்த பிரச்சினையாக எண்ணி கடந்து செல்லாதீர்கள் இது ஒட்டுமொத்த தமிழ்த் தேசியத்தின் பிரச்சினை.
தமிழினத்தின் பிரச்சனை
டெல்டா இன்று அழிந்தால் நாளை தமிழகம், தமிழினம் அழியும்.
எனவேக் காலத்தின் அருமைக் கருதி அழிவின் விளிம்பில் உள்ள தமிழகத்தைக் காக்க போராட வீதிக்கு வாருங்கள் தமிழர்களே!!.
“நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு கனமும் தவணை முறையில் தமிழ்நாடும், தமிழினமும் அழியும்!!!”
#SaveKathiramangalam
https://www.facebook.com/nimal.raghavan/videos/1346261362095974/?t=0
https://www.facebook.com/nimal.raghavan/videos/1346261365429307/?t=1

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left