Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

புதிய அணுகுமுறைகள் புதிய திட்டங்கள் கட்டுமானத்துறையில்


புதிய அணுகுமுறைகள் புதிய திட்டங்கள் கட்டுமானத்துறையில்

புதிய அணுகுமுறைகள் புதிய திட்டங்கள் கட்டுமானத்துறையில்

ர்த்தக ரீதியாக புதிய அணுகுமுறைகள், மாற்று யுக்திகள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் குறைவான பட்ஜெட் ஆகியவற்றின் அடிப்படையில் தொழில் ரீதியாக, புதிய திட்டங்கள் கட்டுமானத்துறையில் வேகமெடுத்து வருகின்றன. அந்த வகையில், பல்வேறு உலக நாடுகளிலும் நடைமுறையில் இருக்கும் ‘ஸ்டூடண்ட் ஹவுஸிங்’ அதாவது மாணவர் குடியிருப்பு என்ற புதிய வடிவத்தை ரியல் எஸ்டேட் வல்லுனர்களும், நிதி ஆலோசகர்களும் பரிந்துரை செய்வது கவனிக்கத்தக்கது. 

‘ஸ்டூடண்ட் ஹவுசிங்’

அதாவது, ஒவ்வொரு வருடமும் கல்வி பெறும் வாய்ப்புகளுக்காக இந்தியாவின் வெவ்வேறு பகுதியிலிருந்தும், உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் இந்தியாவின் பல முக்கியமான நகரங்களில் லட்சக்கணக்கான மாணவர்கள் பல இடங்களில் தங்கி கல்வி கற்க வேண்டியதாக இருக்கிறது. 

ஏற்கெனவே, ஹாஸ்டலில் தங்கி படிப்பது என்ற வழக்கமான முறை இருந்துவரும் சூழ்நிலையில், ‘ஸ்டூடண்ட் ஹவுஸிங்’ என்ற புதிய முறையில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும் பட்சத்தில், அனைத்து தரப்பு மாணவ, மாணவியர்களின் கவனத்தையும் அது கவருவதாக இருக்கும் என்று வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலை நாடுகளில் பிரபலம்

இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகள் பலவற்றிலும் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் ‘ஸ்டூடண்ட் ஹவுஸிங்’ முறையில் அதன் உள்கட்டமைப்பு உள்ளிட்ட கச்சிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் போன்றவை அங்கு உள்ள மாணவர்களை கவர்ந்திருக்கிறது. மும்பை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு, பல இடங்களிலிருந்து வருங்காலங்களில் உயர்கல்வி பெறும் நோக்கத்துடன் மாணவர்கள் வரும் வாய்ப்புகள் இருக்கின்றன. அவர்களுக்கு தேவைப்படும் சகல வசதிகளோடு அமைக்கப்படும் ‘ஸ்டூடண்ட் ஹவுசிங்’ என்ற மாணவர் குடியிருப்பு அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக இருக்கும் பட்சத்தில் நல்ல வரவேற்பை பெறும்.

‘சர்வீஸ் அபார்ட்மெண்ட்’

தொழில் அல்லது வியாபார ரீதியாக சென்னையில் சில மாதங்கள் தங்கி இருக்க வேண்டும் என்ற சூழலில் இருக்கும் வர்த்தகர்கள் உள்ளிட்ட இதர தொழில் முனைவோர்களுக்கு தற்போது ‘சர்வீஸ் அபார்ட்மெண்ட்’ என்ற குடியிருப்புகள் பல இடங்களிலும் இருந்து வருவது கவனிக்கத்தக்கது. அவர்களுக்கு அங்கு உணவு மற்றும் தங்கும் இடம் போன்ற வசதிகள் மாதாந்திர கட்டண அடிப்படையில் வழங்கப்படுகின்றன. 

வருட ஒப்பந்தம்

மாணவர் குடியிருப்புகளை வருடாந்திர ஒப்பந்த முறையில் மாணவர்கள் அல்லது மாணவியர்களிடம் அவர்களது பெற்றோர்கள் அல்லது நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் அளிப்பதோடு, இரு தரப்புக்கும் நன்மைகளை தரும் விதத்தில் ஒப்பந்தத்தை அமைத்துக்கொள்வதும் முக்கியமானது என்பதை வல்லுனர்கள் வலியுறுத்துகிறார்கள். மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு தனித்தனியான குடியிருப்புகள் இருக்கவேண்டும் என்ற கருத்தும் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய யுக்திகள் அவசியம்

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் புழங்கும் அளவில், மேற்கண்ட திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. மேலை நாட்டின் வியாபாரம் மற்றும் வர்த்தக வடிவங்கள் இந்தியா போன்ற நாடுகளுக்கு அவ்வளவு கச்சிதமாக பொருந்தாது என்ற வணிக அடிப்படைகளையும் நிபுணர்கள் கவனத்தில் கொண்டுள்ளார்கள். மேற்கண்ட முறை புதியதாக இருந்தாலும், அவற்றின் தேவைகள் உலகமெங்கும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன என்ற கருத்தையும் அவர்கள் முன்வைக்கிறார்கள்.

Buy Properties in Chennai 

வீட்டுமனை அளவுகளை கணக்கிடும் எளிய முறைகள்



வீட்டுமனை அளவுகளை கணக்கிடும் எளிய முறைகள்


ழைய காலங்களில் நிலத்தின் அளவுகள் குழி, வேலி, மா என பேச்சு வழக்கத்திலும், ஏக்கர், ஹெக்டேர் என்ற அளவீட்டு முறையிலும் குறிக்கப்பட்டு வந்தது.




 வீட்டு மனைகளை பொறுத்தவரை சதுர அடி கணக்குகளில் சொல்லப்படுவது இப்போது நடைமுறையாகும். சென்னை போன்ற நகர்ப்
வீட்டுமனை அளவுகளை கணக்கிடும்  எளிய முறைகள்
Add caption
புறங்களில் கிரவுண்டு என்ற அளவீட்டில் குறிப்பிடப்படுவதும் நடைமுறையில் உள்ளது.

வெவ்வேறு அளவுகள்


குறிப்பாக வீட்டு மனைகள் வாங்கும்போது சதுர அடி, சென்ட் மற்றும் கிரவுண்டு அளவுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நிலமானது சதுர அடி, சென்ட் அல்லது கிரவுண்டு போன்ற அளவுகளில் இருக்கும்போது அதை வேறொரு அடிப்படை அளவாக எவ்வாறு மாற்றி, அறிந்து கொள்வது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். வீட்டு மனை அளவானது சதுர அடியில் இருந்தால், அதை எவ்வாறு சென்ட் அளவில் மாற்றுவது..? அல்லது சென்ட் அளவை எவ்வாறு சதுர அடியாக மாற்றுவது..? என்ற சுலபமான வழிமுறையை இங்கே காணலாம். 

வித்தியாசமான அளவுகள்


பொதுவாக, சம்பந்தப்பட்ட இடம் எவ்வகையாக இருந்தாலும் அதற்கு நான்கு எல்லைகள் இருப்பது வழக்கம். ஒரு சில இடங்களில் நான்கு எல்லைகளுக்கும் மேற்பட்டு ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் கொண்ட நிலங்கள் அல்லது மனைகள் இருப்பதும் உண்டு. இன்னும் சில இடங்களில் மூன்று பக்க அளவுகள் மட்டும் கொண்ட முக்கோண வடிவ மனைகளும் இருப்பதுண்டு. அவற்றின் மொத்த அளவை கணக்கிடுவது சற்று சிக்கலான முறையாக இருப்பதால், நான்கு பக்கங்கள் உள்ள மனை அல்லது இடங்களுக்கான கணக்கீட்டு முறைகளை மட்டும் இங்கே  காணலாம்.

சம அளவு மனை


வழக்கமாக, மனையின் அளவுகள் நான்கு பக்கங்களிலும் சமமாக இருக்கும் பட்சத்தில், அதன் நீளம் மற்றும் அகலத்தை பெருக்கி வரும் அளவுதான் அதன் மொத்த அளவாகும். அதாவது, ஒரு மனை நீளவாக்கில் இரு புறங்களிலும் 50 அடிகள் இருப்பதாகவும், அகலவாக்கில் இரு புறங்களிலும் 25 அடிகள் இருப்பதாகவும் கொண்டால் அந்த மனையின் ஒட்டு மொத்த அளவானது 1250 சதுர அடியாகும்.


Ads by ZINC
வெவ்வேறு அளவுகள்

ஒரு இடம் அல்லது மனையானது தனது நான்கு பக்கங்களிலும் வெவ்வேறு அளவுகளை கொண்டதாக இருக்கும் பட்சத்தில், அதன் எதிரெதிரான பக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது மனையில் நீளவாக்கில் எதிரெதிராக உள்ள இரு பக்கங்களிலும் உள்ள அளவுகளை கூட்டிக்கொள்ள வேண்டும். அவ்வாறு கூட்டி வரக்கூடிய விடையை இரண்டால் வகுத்து அந்த எண்ணை குறித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, மனையின் அகல வாக்கில் எதிரெதிராக உள்ள இரு பக்கங்களிலும் உள்ள அளவுகளை கூட்டிக்கொள்ளவேண்டும். வரக்கூடிய விடையை இரண்டால் வகுத்து அந்த எண்ணை குறித்துக்கொள்ளவேண்டும். மேற்கண்ட முறைகளில் கிடைத்த இரண்டு எண்ணிக்கைகளையும் பெருக்கினால் வரக்கூடிய அளவுதான் மனையின் மொத்த அளவாகும். 

அதாவது, மனையின் இரு பக்க நீளங்கள் முறையே 48 மற்றும் 54 என்று இருப்பதாகவும், இரு பக்க அகலங்கள் முறையே 28 அடி மற்றும் 24 அடி என்று இருப்பதாகவும் கொள்வோம். நீள வாக்கில் உள்ள அளவுகளை கூட்டினால் 102 அடி வரும். அதை இரண்டால் வகுத்தால் 51 அடி வருகிறது. 

அகல வாக்கில் உள்ள அளவுகளை கூட்டினால் 52 அடி வரும். அதை இரண்டால் வகுத்தால் 26 அடி வருகிறது. ஆக, மேற்கண்ட 51 மற்றும் 26 ஆகியவற்றை பெருக்கினால் வரக்கூடிய விடையான 1326 என்பதுதான் மனையின் மொத்த சதுர அடி அளவாகும்.   

சென்ட் அளவு







பொதுவாக, ஒரு சென்ட் என்பது 435.6 சதுர அடியாக கணக்கிடப்படுகிறது. ஒரு ஏக்கர் என்பது 100 சென்ட் கொண்டதாகும். அதையே சதுர அடியில் குறிப்பிடுவதென்றால், ஒரு ஏக்கர் என்பது 43560 சதுர அடிகள் கொண்டதாகும். குறிப்பிட்ட மனையின் மொத்த சதுர அடி அளவை 435.6 என்ற அளவால் வகுத்தால் கிடைக்கும் அளவானது அந்த மனையின் மொத்த சென்ட் அளவாகும். அதாவது,  1326 சதுர அடி கொண்ட மனையின் அளவை 435.6 என்ற அளவால் வகுத்து கிடைக்கும் 3.04 (3 சென்ட்) என்பதுதான் மனையின் சென்ட் அளவாகும்.  

கிரவுண்டு அளவு


ஒரு கிரவுண்டு என்பது 2400 சதுர அடிகள் கொண்டதாகும் எனவே, குறிப்பிட்ட மனையின் மொத்த சதுர அடி அளவை 2400 என்ற அளவால் வகுத்தால் கிடைப்பது மனைக்கான கிரவுண்டு அளவு ஆகும். மேற்கண்ட மனையின் மொத்த சதுர அடியான 1326 என்பதை 2400 என்ற அளவால் வகுத்தால் வரக்கூடிய 0.55 என்ற விடை (அரை கிரவுண்டுக்கு சற்று கூடுதல்) மனையின் கிரவுண்டு அளவாகும்

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left