- தமிழகம் மெங்கும் பீட்டா எதிர்ப்பு அலை வலுக்கிறது அணைத்து முன்னணி நடிகரும் தமிழகத்தில் பீட்டாவுக்கு எதிரான மாணவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் இருக்கின்றார்கள்.
- ரஜினிகாந்த் சூர்யா ஆர் ஜெ பாலாஜி, நடிகர் ஜி வி பிரகாஷ் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான்,ஆகியோர் ஆதரவு தெரிவித்து இருக்கின்றார்கள்,
- மேலும் தமிழகத்தில் முக்கிய அரசியல் விமார்கர் ஒருவர் இதைப்பற்றிக் கருத்து தெரிவிக்கையில்,
இந்தத் தன்னிச்சையான மக்களின் எழுச்சியானது தமிழக அரிசியல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமைந்து உள்ளது,- மேலும் இதே போலத் தொடர்ந்து எதிர்ப்பு இருக்குமானால்,தமிழத்தில் உச்ச நீதி மன்றம் விதித்து உள்ள ஜல்லி கட்டுத் தடை நிச்சயமாக நீங்கும்,மற்றும் பீட்டா என்ற அமைப்புக்கு இந்திய அளவில் தடை வருவதற்கும் வாய்ப்பு மிக அதிகம்,
- ஆகவே மாணவர்கள் இந்தப் போராட்ட தை எந்தச் சூழ் நிலையிலும் ஜல்லி கட்டுத் தடை நீங்காமல் கை விடக் கூடாது,
- மற்றும் இந்த எதிர்ப்பு அலை பீட்டாவிற்கு மிகப் பெரிய பின் அடைவு,பீட்டா என்ற அமைப்பின் உண்மையான முகம் இந்திய அளவில் எல்லோர்க்கும் தெரிய ஆரம்பித்து வீட்டது
- பீட்டா என்றால் எனறால் விலங்கு களுக்கு பாதுகாப்பு தரும் ஒரு தொண்டு நிறுவனம் என்று தான் எல்லோரும் இதுவரை நம்பி இருந்தார்கள் ஆனால் இன்று எல்லா முன்னணி நடிகரும் அரசியல் வாதிகளும் வெள்ளிப்பைடயாகவே பீட்டாவின் செயலை விமர்சிக்க ஆரம்பித்த விட்டார்கள், பீட்டா இந்திய மண்ணை விட்டு ஓடும் நாள் விரைவில் வரும்!
- ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தமிழகம் முழுவதும் போராடி வருபவர்களின் உணர்வோடு நானும் கைக்கோர்க்கிறேன் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
- இதேபோல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் போராட்ட களத்தில் இணைந்துள்ளார்.
- மேலும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி நடிகர் சிம்பு ஏற்கெனவே தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.
- இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நாளை இரவு 8 மணிக்கு வீட்டுக்கு அருகிலேயே போராட்டத்தைத் துவங்குவோம். மேலும் இதற்கான தடை நீங்கும் வரை போராட்ட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
- ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டத்துக்குப் பல்வேறு தரப்பினர் ஆதரவு அளித்து வரும் வேளையில் ஆர்.ஜே.பாலாஜி போராட்டக்களத்தில் இளைஞர்களைச் சந்தித்து பேசி வருகிறார்.
- ஏற்கெனவே பாலாஜி ஜல்லிக்கட்டு ஆதரவாகப் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை கேள்வி கேட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் போராட்டம் எந்தக் கட்சி சார்பும் இல்லாமல் நடந்து வருகிறது.
- இது தொடர்பாகச் சூர்யா ட்விட்டர் பக்கத்தில்,’ ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு எதிரானது என்று பொய் பிரசாரம் செய்து நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்றது பீட்டா அமைப்பு. ஜல்லிக்கட்டு மூலம் மாடுகள் வதை செய்யப்படுகின்றன என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. மக்களின் போராட்டம் வெற்றி பெற்று ஜல்லிக்கட்டு விரைவில் நடைபெறும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
#JusticeforJallikattu Spread the message pic.twitter.com/aw3FVGdMJP
— STR (@iam_str) January 17, 2017