கோவை அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கத்தியால் குத்திக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பள்ளி மாணவி
கோவையை அடுத்த சூலூர் திருச்சி ரோடு மதியழகன்நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் ரூபா (வயது 17). இவர் காங்கயத்தில் உள்ள விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிற்கு வந்திருந்தார்.
இவருடைய வீட்டின் அருகில் வசிப்பவர் கண்ணன். இவருடைய மகன் சுரேஷ் (23). பெயிண்டர். இவர் ரூபாவிடம் தன்னை காதலிக்குமாறு கூறி அடிக்கடி பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. அதற்கு ரூபா, தன்னை பின்தொடர்ந்து வரவோ, பேசி தொந்தரவு கொடுக்கவோ வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
குத்திக்கொலை
சம்பவத்தன்று சுரேஷ், ரூபாவை பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்கும்படி தொந்தரவு செய் துள்ளார். அதை ரூபா ஏற்க மறுத்ததால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவி ரூபாவின் கழுத்தில் குத்தி உள்ளார். இதனால் வலியால் துடித்த ரூபாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள் சுரேஷ் தப்பி ஓடி விட்டார்.
இது குறித்த தகவலின் பேரில் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ரூபா அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சுரேசை தேடி வந்தனர். அப்போது சூலூர் குப்பைக் கிடங்கு அருகே மறைந்திருந்த சுரேசை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தன