தமிழ் நட்டு மக்களின் பிரச்சனை, இன்றே கட்சிக்குள் துவங்கியது வன்முறை. நாளை தமிழ் நாட்டிலா ?
MGR ரால் தோற்றுவிக்கபட்ட கட்சி AIADMK இன்று இந்த நிலைமையில்
இருப்பதற்கு காரணம் ஜெயலலிதாவே தான், ஜெயலலிதாவின் வீட்டு வேலைகளையும் அவரின் சொந்த வேலைகளை கவனித்து கொள்ள மட்டும் தானே சசிகலா நியமிக்க பட்டார் ? அதை யாரும் மறுக்க முடியாது, ஏன் என்றால் ஜெயலலிதாவே ஆங்கில காணொளி பேட்டி நடத்திய சிமி க்ரேவால் அவர்கள் சசிகலாவை பற்றி கேட்ட பொழுது அதை தானே ஜெயலலிதா சொன்னார்கள் ? பாகம் 2 டை பார்க்கவும். ஜெயலலிதா செய்த பெருந் தவறு சசிகலாவிற்கு நாளடைவில் மிக அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தார். இது ஜெயலலிதா கட்சிக்கு இழைத்த முதல் தவறு. இந்த தவறை சசிகலா நிதானமாக ஆணித்தரமாக பயன்படுத்தி கொண்டு இன்று அண்ணா திமுகாவை ஆட்டி படைக்ககிறார். ஜெயலலிதாவிற்கு தனது உடல் நிலை பற்றி நன்கு அறிந்தும் கட்சியின் தலைமை வாரிசு யார் என்று அறிவிக்கவில்லை. இது ஜெயலலிதா கட்சிக்கு இழைத்த இரண்டாம் தவறு. இவைகளின் விளைவு சசிகலா மற்றும் அவரது குடும்ப வளைர்சிக்கு விதையாகி விட்டத்து. எம்ஜிஆர் அவர்களாவது ஜெயலலிதாவை கட்சி கொள்கை பரப்பு செயளாராக நியமித்தார் பின்னர்பின்னர் அது கட்சி தலைமை தாங்க வழிவகுத்தது. ஆனால் யார் இந்த சசிகலா? இவர் எப்பொழுது கட்சியின் அங்கத்தினரானார் 1972 அல்லது 1982 ? கட்சியில் சசிகலாவின் பொறுப்பு என்ன ? கட்சிக்கு இவரது பங்கு என்ன ? கட்சிக்காக சசிகலா உழைத்து என்ன? காவேரி பிரச்சனையில் ஜெயலலிதாவுடன் சசிகலா உண்ணாவிரதமாவது இருந்தாரா ? சசிகலா என்றைக்காவது ஒரு நாள் தேர்தல் மேடையில் பேசியதுண்டா ? கட்சிக்காக சசிகலா தேர்தல் வாக்கு சேகரித்தாரா ? ஜெயலலிதா எங்கு சென்றாலும் சசிகலா அவருடன் பின்புறத்தில் நின்று கொண்டும் அமர்ந்து கொண்டும் தானே இருந்தார். எந்த நிலையிலும் அவர் ஒரு நாளும் வாயினாலும் சைகையினாலும் பேசியதை யாருமே பார்த்து இருக்க முடியாதே. அப்படி இருக்கையில் சசிகலா அவர்கள் ஜெயலலிதாவிற்கு என்னவாக இருந்து இருக்க முடியும் ? ஆனால் நிலைமையே மாறிவிட்டது. எம்ஜிஆரின் கடின உழைப்பால் வளர்ந்து தமிழகத்தை ஆண்ட அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்று கட்சிக்கு சம்மந்தமே இல்லாத சசிகலா குடும்பத்தினர் கட்சியையே முழுமையாக சொந்தம் கொண்டாட இறங்கிவிட்டார்கள். MGR காலத்தில் இருந்து அனுபவமிக்க மந்திரிகள் MP MLAகள் மற்றும் தொண்டர்களுக்கு இல்லாத அரசியல் அறிவு அனுபவம் சசிகலாவிடம் மட்டும் உள்ளதா ? இவர்கள் சசிகலாவிடம் சென்று கட்சி தலைமை ஏற்க கெஞ்சுவது எதை காட்டுகிறது? அவர்கள் அனைவரும் 1972இல் இருந்து அரசியல் அறிவு திறமை இல்லாத ஞன மற்றவர்களாகவும் டம்மி பிஸ்களாக இருந்தும் இப்பொழுதும் இருந்து கொண்டும் இருக்கிறார்கள் என்றும் நேற்று வந்த சசிகலாவிற்கு அதிக ஞானம் உண்டு என்று தானே அர்த்தம் ? எம்ஜியாரால் தோற்றுவிக்க பட்ட கட்சி இன்று இந்நிலையில் இருப்பதின் காரணம் சந்தர்ப்பவாதிகள் பணத்திற்கும் பதவிக்கும் உறுதுணையாக சசிகலாவுக்கு இருந்து அவரை சின்னாம்மா என்று அழைக்கும் அளவிற்கு சென்று விட்டார்கள். விரைவில் புரட்சி சின்னமா என்ற அடை பட்டத்தையும் வழங்கி பின்னர் டாக்டர் புரட்சி சின்னமா என்று அழைப்பார்கள். இவை அனைத்தும் கட்சியின் பிரச்சனை. ஆனால் கட்சியின் பிரச்சனை தமிழ் நாடுக்கு பாதிப்பு உண்டு. இவர் ஆட்சிக்கு வந்து விட்டால் தமிழ் நாட்டில் அரசு புறம்போக்கு என்ற நிலங்கள் அணைத்தும் வருவாய் துறை பதிவேடுகளில் இருந்த மறைந்து விடும். பொதுத்துறையிலும் அரசு வணிக கழகம் பெரும் பங்கு இவர்கள் கையில் தான் இருக்கும். பாதிக்கப்பட போகிறது தமிழ் நாட்டு மக்கள் தான். ஊழல் தலை தெறிக்க ஆடும். அதுதான் தமிழ் நட்டு மக்களின் பிரச்சனை.இன்றே கட்சிக்குள் துவங்கியது வன்முறை. நாளை தமிழ் நாட்டிலா ???
இந்த வலைப்பதிவில் தேடு
தமிழ் நட்டு மக்களின் பிரச்சனை, இன்றே கட்சிக்குள் துவங்கியது வன்முறை. நாளை தமிழ் நாட்டிலா?
பாலஸ்தீனம் எதிர்காலம் எப்படி இருக்கும் இனி பாலஸ்தீனம் என்ன செய்யவேண்டும்?
பாலஸ்தீனத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் இனி பாலஸ்தீனம் என்ன செய்யவேண்டும்?
பாலஸ்தீனம் எதிர்காலம் எப்படி இருக்கும் இனி பாலஸ்தீனம் என்ன செய்யவேண்டும்?
செய்யக்கூடாது !
1967க்கு பின்தான் இஸ்ரேலை ஓரு நாடாக அங்கிகரித்து, சில நாடுகள் அறிவித்தன என்பது பலருக்கும் தெரியும்.
ஹிட்லரால் படுகொலை செய்ப்பட்ட யூதர்கள், தங்களுக்கு என ஓரு நாடு இல்லாமல் அலைந்த போது பாலஸ்தினத்தில் ஓரு சிறு பகுதியை கொடுத்து யூதர்களுக்கு அங்கே அடைக்கலம் கொடுத்தனர் பாலஸ்தீன மக்கள்.
உலகில் பிறந்த 90% யுதர்களை நான் ஓருவனே அழித்து விட்டேன்.
மீதமுள்ள 10% சதவீதம் யுதர்களை இவ்வுலகிலே விட்டு செல்கிறேன். மீதமுள்ள 10% பேரின் செயலை பின்நாளில் மக்கள் தெரிந்து கொள்வார்கள். அப்பொழுது தான் நான் ஏன் 90% யுதர்களை அழித்தேன் என்பதை உலகம் உணரும் என்றார் ஹிட்லர்.
அவர் கூறியது போலவே விசப் பாம்பை பாலுட்டி, மடியில் தங்க இடம் கொடுத்த பாலஸ்தீன மக்களின் மொத்த நாட்டையும் யுதர்கள் ஆக்கிரமித்து, அப்பாவி பாலஸ்தீன மக்களை தினமும் கொன்று குவித்தார்கள்.
தான் அகதியாய் வந்தபோது அடைக்கலம் கொடுத்த மக்களை,
அகதியாக்கி மகிழ்ந்தார்கள் யுதர்கள். தொடர்ந்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கட்டி வந்தார்கள்.
இஸ்ரேலிக்கு ஆதரவாய் நின்ற நாடுகள் முதல் முறையாக, தங்களின் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள். எப்பொழுதும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தன் கள்ளக் குழந்தை இஸ்ரேலை காப்பாற்றி வந்த அமெரிக்கா,
இந்தமுறை வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதை தொடர்ந்து இனிமேல் ஆக்கிராமிப்பு கட்டிடம் கட்ட முடியாத நிலைக்கு இஸ்ரேல் தடுக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹீ
தனக்கு எதிராக வாக்களித்த ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இதர நாடுகளுடன் தற்காலிமாக உறவை துண்டித்து கொள்ளவதாக அறிவித்தது. தனது நாட்டு தூதர்களையும் திருப்பி அழைத்து விட்டது.
யாரிடம் தஞ்சம் புகுந்தார்களோ, அவர்களை சூறையாடிய யுதர்கள்,
யாரால் வளம் பெற்றார்களோ, அவர்களுக்கே சவால் விடும் நிலைக்கு வந்து விட்டார்கள்.
வாக்கெடுப்பில் கலந்து கொண்ட 12 நாடுகளும் ஒருமனதுடன் பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்தார்கள்.
இஸ்ரேலின் இந்த தீடிர் அறிவிப்பால் என்ன மாற்றம் என்பதை இறைவனே ஓருவனே அறிவான்.
மராட்டிய கோழை சிவாஜியின் துரோக வரலாறு
மராட்டிய கோழை சிவாஜியின் துரோக வரலாறு
மராட்டிய கோழை சிவாஜியின் துரோக வரலாறு…! ஒரு கோழையின் வரலாறு!!
இதுதான் மராட்டிய கோழை சிவாஜியின் துரோக வரலாறு
இவனை யெல்லாம் வீரன் என்றும் சூரன் என்றும் நம்பிக் கொண்டிருக்கும் சகோதரர்கள் வரலாற்று ஆதாரங்களுடனான இப்பதிவை அவசியம் படியுங்கள்.
கோழை சிவாஜியா -வீர சிவாஜியா ? வழிப்பறி குண்டன் சிவாஜி
கலாயர்களை கலங்கடித்த மராட்டிய சிங்கம்!!
வீரத்தின் பிறப்பிடம்!! அப்சல்கானை எதிர்கோண்டு வீழ்த்தி ——–களின் கதாநாயகனான சக்ரவர்த்தி!
மராட்டிய வழிப்பறி குண்டன் சிவாஜி யை பற்றி சங்கபரிவார்கள் புளுகுவதுதான் நீங்கள் மேலே படித்த வரிகள்
உண்மையை சொல்லப்போனால் சிவாஜியை விட ஒரு கோழை,
நம்பிக்கை துரோகி ஏமாற்றுக்காரன் நயவஞ்சகன்,
இந்திய வரலாற்றில் வேறு யாருமே இல்லை என சத்தியம் செய்து கூறலாம்.
இதோ சில ஆதாரப்பூர்வமான வரலாற்று சிதறல்கள்
1636ல் தன் அண்ணன் சாம்பாஜி மற்றும் தந்தை ஷாகாஜியை துணைக்கு வைத்துக்கொண்டு முகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக கலகத்தில் இறங்கி அண்ணனை இழந்து தந்தையை கைதியாக்கி தானும் தலைமறைவானார் சிவாஜி
பிறகு “எந்த மாதிரியான போர் நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டேன்,என் தந்தையை விடுதலை செய்யுங்கள்,அவருக்கான பழைய பொறுப்புகளை வழங்கி கருணை புரியுங்கள்” என பேரரசர் அவுரங்கசீப்புக்கு மன்னிப்பு கடிதம் எழுதி மாமன்னரின் கருணையை பெற்றார் வீர(???)சிவாஜி.
1656ல் மீண்டும் வீரத்தில்(???)இறங்கினார் சிவாஜி
புனேவுக்கு தெற்கில்முகலாய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த ஜாவ்லியின் மன்னர் சந்திரா ராவிடம் தனது இரண்டு ஆட்களை மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்துள்ளோம் என அனுப்பி,மன்னர் அயர்ந்தபோது அந்த இருவரும் மன்னரை கொன்று அங்கிருந்து ஓட்டமெடுத்தனர்,
அந்த இருவரும் தகவலோடு வந்து சேர்ந்ததும் மறைந்திருந்த சிவாஜி உடனே ஜாவ்லியை தாக்கி வெற்றி கொண்டார்
ஜாவ்லியை அடுத்து அஹமத் நகரை தாக்கினார் சிவாஜி,ஆனால் முகலாய படைகளிடம் வசமாக சிக்கிய சிவாஜி தப்பியோடி தலைமறைவானார்.
“ஏதோ தெரியாமல் நடந்து விட்டது,இனி முகலாய அரசின் எல்லைகளை காக்கும் விசுவாசியாக இருப்பேன், எனக்கு உயிர் பிச்சை தாருங்கள்” என மன்றாடியவராக மாமன்னர் அவுரங்கசீபுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி உயிர் பிழைத்தார் வீரசிவாஜி
பிறகு அவுரங்கசீப் ஆக்ராவுக்கு சென்ற சமயம் பார்த்து அஹமத் நகரை தாக்கி கைப்பற்றினார் சிவாஜி
இரண்டாம் ஆதில்ஷா சிவாஜியை அடக்க பிஜப்பூரின் தளபதி அப்சல்கானை அனுப்பினார்.
அப்சல்கான் படைகொண்டு வருவதை அறிந்த சிவாஜி பிரதாப்கடு கோட்டைக்கு சென்று பதுங்கி கொண்டார்
சிவாஜியும் அப்சல்கானும் சந்திக்க ஏற்பாடு
நான் அமைதியாக இருந்து தங்களிடம் அடங்கிப்போக விரும்புகிறேன்” என அப்சல்கானுக்கு கடிதம் எழுதினார் சிவாஜி
ஆனால் அப்சல்கான் இதை நம்பவில்லை,
தகவலை உண்மைதானா என அறிந்துகொண்டு வர கோபிநாத் எனும் தளபதியை சிவாஜியிடம் தூதுவராக அனுப்பினார்
தன்னை சந்திக்க வந்த கோபிநாத்திடம் “நான் நம் நம் மதத்தை காப்பாற்ற வந்தவன்,அப்சல்கானோ அழிக்கப்பட வேண்டியவன்
என் லட்சியத்தை நிறைவேற்றிட தாங்கள்தான் எனக்கு உதவி புரியவேண்டும்” எனக்கூறி கோபிநாத்துக்கு ஏகப்பட்ட பரிசு பொருட்களை கொடுத்து மூளைச்சலவை செய்து அப்சல்கானை நம்பவைத்தார்!
அப்சல்கான் கோபிநாத்தின் வார்த்தைகளை அப்படியே நம்பினார்.
சந்திப்புக்கான அழைப்பு சிவாஜிக்கு சென்றது
1659 நவம்பர் 20 ஜாவ்லியின் காட்டுப்பகுதியில் சிவாஜியும் அப்சல்கானும் சந்திக்க ஏற்பாடு நடந்தது
சந்திப்புக்கு முதல்நாள் இரவே மராத்திய வீரர்கள் காட்டுப்பகுதியில் பதுங்கி கொண்டனர்
அப்சல்கான் தன்னோடு வந்திருந்த 1500 குதிரை வீரர்களை அஹமத் நகரிலேயே நிறுத்தி விட்டு தன் ஆயுதங்களையும் எடுத்துக்கொள்ளாமல்,
கவசமும் அணியாமல், இடைவாளையும் சயீத்பாண்டா என்னும் வீரனையும் வைத்துக்கொண்டு முகாமுக்கு வந்து சேர்ந்தார்
ஆனால் இங்கே சிவாஜி உடைக்குள் கவசத்தையும் தலைப்பாகைக்குள் தலைக்கவசத்தையும் அணிந்து கொண்டார்.
வலதுகையுரையில் ஒரு மறைக்கப்பட்ட பிச்சுவாக்கத்தி,
இடது கைவிரல் மோதிரங்களில் மறைத்து அமைக்கப்பட்ட இரும்பாலான மிகக்கூர்மையான புலிநகங்கள், ஆனால் பார்வைக்கு நிராயுதபாணியாகவே தெரிந்தார் சிவாஜி
கூடாரத்திற்குள் நுழைந்த சிவாஜியை கட்டித்தழுவி வரவேற்றார் அப்சல்கான். அப்சல்கானை நான்கைந்து முறை குனிந்து குனிந்து வணங்கிய சிவாஜி, திடீரென புலிநகங்களால் அப்சல்கானின் வயிற்றை கிழித்தார்
இதைக்கண்ட சயீத்பாண்டா சிவாஜி மீது பாய,
மறைந்திருந்த மராத்திய வீரர்கள் சயீத்பாண்டாவை குத்திக்கிழித்தனர்.
வலியால் துடித்த அப்சல்கான் சிவாஜியோடு மல்லுக்கு நின்றார்
ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பின்புறமாக இரண்டு வீரர்கள் அப்சல்கானை வெட்டி சாய்த்தனர்
அப்சல்கானின் தலையை கொய்துகொண்ட சிவாஜி அங்கிருந்து ஓட்டமெடுத்தார்.
அப்சல்கானை கொன்றவுடன் பிஜப்பூர் பன்ஹாலா ஆகிய இரண்டு கோட்டைகளையும் பிடித்தார் சிவாஜி
ஆனால் சுல்தான் இரண்டாம் ஆதில்ஷா நாலா திசையில் இருந்தும் பிஜப்பூர் பன்ஹாலாவை சூழ்ந்து தாக்க தொடங்கியவுடன் அஹமத் நகருக்கு சாக்கு கந்தலுக்குள் மறைந்து தப்பியோடினார் சிவாஜி
சிவாஜியை அடக்க 1660ல் தக்காணத்திற்கு ஷாயிஸ்தாகானை தளபதியாக நியமித்தார் அவுரங்கசீப்
புனேவில் உள்ள சிங்கார் கோட்டையில் அமர்ந்தார் ஷாயிஸ்தாகான்
பிறகு மூன்று ஆண்டுகள் வரை அமைதியாக இருந்த சிவாஜிக்கு ஷாயிஸ்தாகானை தாக்க தக்க சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது
அது 1663ம் ஆண்டு ரமலான் மாதம்.
பகலெல்லாம் நோன்பு இருக்கும் முகலாய வீரர்கள் இரவு முழுவதும் பிரார்த்தனையிலும் களைத்தும் இருப்பர்
அப்போது மராத்தியர்கள் யாரும் புனேவுக்கு நுழையாத வண்ணம் பாதுகாப்பு பலமாகவே இருந்தது
200 மராத்தியர்கள் வெவ்வேறு வேடங்களிட்டு புனேவுக்குள் நுழைந்தனர்.
கல்யாண ஊர்வலம் போன்று செட்டப் செய்து அதில் மணப்பெண் வேடத்தில் புனேவுக்குள் நுழைந்தார் சிவாஜி
அப்போது சில மராத்தியர்களோடு சமையல்றை வாயிலாக கோட்டைக்குள் நுழைந்த சிவாஜி அங்கே இருந்த சுமார் 38 பெண்களை கொன்றுகுவித்து முன்னேறினார்
பிறகு ஷாயிஸ்தாகானின் அறையில் நுழைந்து தொழுகையில் இருந்த ஷாயிஸ்தாகானை தாக்கியபோது அவரின் மகன் அபுல்ஆலம் கான் சிவாஜியை தாக்கினார்
உடனே மராத்திய வீரர்கள் அபுல்ஆலம் கானை கொன்றனர். ஷாயிஸ்தாகானின் மூன்று விரல்கள் துண்டானது, ஷாயிஸ்தாகான் சுதாரித்துக்கொண்டு பலமாக சிவாஜியை தாக்கினார், உடனே சிவாஜியும் மற்ற மராத்தியர்களும் ஓட்டம் பிடித்து காடுகளுக்குள் ஒளிந்து மறைந்தனர்
(மூன்று விரல் இழந்தும் எதிர்த்து அடித்து துரத்தியவன் வீரனா? ஓடியவன் வீரனா?)
இதே நோன்பு மாதத்தில் சூரத் நகரில் முகலாய வீரர்கள் அயர்ந்திருந்தபோது கொள்ளையடித்து கொண்டு தப்பினார் இந்த “வீர” சிவாஜி.
*உடனே அம்பர் ராஜா ஜெய்சிங் தலைமையில் திலாவர்கானை தளபதியாக நியமனம் செய்து பெரும் படை ஒன்றை தக்காணத்திலிருந்து அனுப்பினார் அவுரங்கசீப்
ஆண்டு 1665 ஜனவரி
பெரும் படை வந்துகொண்டிருக்கும் தகவலை கேட்ட சிவாஜி தன்வசமிருந்த 19 கோட்டைகளையும் காலி செய்து கொண்டு ராய்கருக்கு தப்பியோடினார்.
திலாவர்கான் சிவாஜிக்கு “ராய்கர் கோட்டையில் உயிரை விடப்போகிறாயா அல்லது ஒழுங்கு மரியாதையோடு அஹமத் நகர் வந்து சரணடைகிறாயா” என ஒரு கடிதம் எழுதினார்
இதனை படித்து பதறிப்போன சிவாஜி உடனே நிராயுதபாணியாக அஹமத் நகரில் உள்ள கோட்டையில் வந்து சரணடைந்து “சரணடையத்தான் வந்துள்ளேன்
மரணமோ மன்னிப்போ அல்லது சிறையோ ஏதுவேண்டுமானாலும் தாருங்கள்” எனக்கூறியபடி மண்டியிட்டு அமர்ந்து கொண்டார்
பிறகு “இதுவரை நான் பிடித்த 25 கோட்டைகளையும் தந்து விடுகிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் முகலாய பேரரசுக்கு 2,00000 பொற்க்காசுகளை கப்பம் கட்டுகிறேன்.
2000 யானைகளை தருகிறேன்
அடுத்த 7 ஆண்டுகள் வாளை ஏந்த மாட்டேன்.
தக்காணம் முதல் கோல்கோண்டா வரை முகலாய பேரரசின் எல்லைகளை காப்பேன்பிஜப்பூருக்கு இனி செல்லவே மாட்டேன்
உங்களின் சேவகனாக என்றும் இருப்பேன்” என மாமன்னர் அவுரங்கசீபுக்கு 23 பக்கத்தில் மன்னிப்பு கடிதம் ஒன்றை அனுப்பினார் சிவாஜி
மராட்டிய கோழை சிவாஜியின் துரோக வரலாறு.
கோழை சிவாஜி கோழைத்தனம் தொடரும்.
ஆதார நூல்கள்
The Mughals by Chop Singh Verma,Prakash books 2004,
the fall of the Maughal empire of Hindustan by Hg Keene.
oxford 1887,
the maraathas 16001818,series: the new cambridge History of india,
by Stewart Gordon. university of Michigan Ann arbor
தமிழச்சி ஜனநாயகத்தின் தோல்வி க்கு தவறான சித்தாந்தத்தைவிட, தவறான அமைப்பு முறையே காரணம்
தமிழச்சி ஜனநாயகத்தின் தோல்வி க்கு தவறான சித்தாந்தத்தைவிட, தவறான அமைப்பு முறையே காரணம் என்பது என் கருத்து. எல்லா அரசியல் சமுதாயங்களும் ஆள்வோர் / ஆளப்படுவோர் என இரண்டு வர்க்கங்களாகப் பிரிந்துள்ளன. இது ஒரு தீமையாகும். இந்தத் தீமை இத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை.
ஆனால் இதில் துரதிஷ்டவசமான விஷயம் என்னவென்றால், இந்தப் பிரிவினை கால இட வேறுபாடின்றி ஒரே மாதிரியானதாக படிநிலை அடிப்படையில் அமைந்து ஆள்வோர் எப்போதும் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஆளப்படுவோர் ஒருபோதும் ஆளும் வர்க்கமாக மாற முடியாதவர்களாகவும் இருப்பதேயாகும்.
ஓர் அரசாங்கத்தை அமைப்பதோடு திருப்தியடைந்து அந்த அரசாங்கம் தங்களை ஆள்வதற்கு விட்டுவிடுகிறார்கள். நாடாளுமன்ற ஜனநாயகம் மக்களது அரசாங்கமாக அல்லது மக்களால் நடத்தப்படும் அரசாங்கமாக என்றும் இல்லாதிருந்ததற்கும் உண்மையில் ஏன் அது பரம்பரை பரம்பரையாக ஒடுக்கப்பட்டு வந்த மக்களை வழிவழியாக ஓர் ஆளும் வர்க்கத்தால் ஆளப்பட்டு வந்த அரசாங்கமாக இருந்து வந்திருக்கிறது என்பதற்கும் இதுவே காரணமாகும்.
நேர்மையற்ற இந்த அரசியலமைப்பு முறைதான் நாடாளுமன்ற ஜனநாயகத்தை இத்தகைய பரிதாபகரமான தோல்விக்கு இட்டுச் சென்றுள்ளது. இதன் காரணமாகத்தான் நாடாளுமன்ற ஜனநாயகத்தால் சாமானிய மக்களுக்கு அது அளித்திருந்த வாக்குறுதியை, சுதந்திரத்தை, சொத்துரிமையை, சுபிட்ச வாழ்வை அவர்களுக்கு அளிப்பதாக அது தந்திருந்த உறுதிமொழியைக் காப்பாற்ற முடியவில்லை.
– தோழர் அம்பேத்கர்
[தொகுதி:17, பக்கம்:75]
மனிதர்கள் வாழ்வதற்கு உணவு, உடை, இருப்பிடம் முதலிய ஏராளமான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு தேவையும் ஒவ்வொரு பொருளின் மூலமே நிறைவேறுகின்றது. இயற்கையயோடு போராடித்தான் மனிதன் அந்தப் பொருட்களை உருவாக்க வேண்டியுள்ளது. இதையே உழைப்பு என்கிறோம்.
மனிதர்கள் உழைப்பதனால்தான் செல்வம் உண்டாகின்றது. ஆனால் அந்த செல்வத்தை ஒரு சிலர் மட்டுமே சுருட்டிக்கொள்கின்றனர். உழைப்பாளிகளுக்கோ கூலியாக சொற்ப பணமே கொடுக்கப்படுகிறது. இதுவே வறுமைக்குக் காரணம். உழைக்கும் மக்கள் இதை புரிந்து கொண்டு எதிர்த்துப் போராடினால், அவர்களை ஒடுக்குவதற்காக போலீசு, இராணுவம், சிறைச்சாலை, சட்டம் போன்றவை பணக்காரர்கள் உருவாக்கி வைத்துள்ளர். இதுவே அரசு எனப்படுகிறது. தற்போதுள்ள அரசு பணக்காரர்களுக்கானது. வறுமையில் வாடும் மக்களைச் சுரண்டுவதே அதன் நோக்கம்.
Written and Thanks by Thmizhazhi Tamizhazhi
தமிழச்சி ஜனநாயகத்தின் தோல்வி க்கு தவறான சித்தாந்தத்தைவிட, தவறான அமைப்பு முறையே காரணம்
முதலமைச்சர் ஜெயலலிதா வின் இறுதி நிகழ்வு ஏன் அவசர அவசரமாக நடத்தப்பட்டது?
முதலமைச்சர் ஜெயலலிதா வின் மரணச் செய்தி வெளிவந்த கிட்டதட்ட 14 மணி நேரத்திற்குள்ளாக இறுதிச்சடங்கு நட்த்தபட்டிருக்கிறது
முதலமைச்சர் ஜெயலலிதா வின் இறுதி நிகழ்வு ஏன் அவசர அவசரமாக நடத்தப்பட்டது என்கிற கேள்வி அதிமுகவினருக்கானது மட்டுமல்ல?
முதலமைச்சராக இருப்பவரின் மரணம், ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சி, ஆட்சியில் இருக்கும் கட்சி, இந்திய பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்கிற நிலையில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவருக்கான இறுதிச்சடங்கை இவ்வளவு அவசரமாக நட்த்தி முடிக்கவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்ட்து என்கிற கேள்வியை எளிதில் கடந்து விட முடியாது?.
ஒருவித பதட்டத்தையும், நெருக்கடியையும் செயற்கையாக ஏற்படுத்தியும், மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடுவை காவல்கார்ராக அமர்த்தியும், ஆளுனரை முன்னிலைப்படுத்தியும் இந்த செயல் ஏன் இவ்வளவு அவசரமாக நட்த்தப்ப்ட வேண்டும்.
தமிழகம் முழுவதுமிருந்து தொண்டர்கள் இறுதி நிகழ்வில் பங்கெடுப்பதும், மரியாதை செலுத்துவதும், தனது தலைமைக்கு நேரில் முகம்பார்த்து அஞ்சலி செலுத்துவதும் ஏன் நட்த்தப்பட வில்லை?.
அனைத்தும் முடிந்து நாளை முதல் சராசரி இயல்பு வாழ்க்கையை உடனடியாக கொண்டுவருவதன் அவசியம் எங்கிருந்து வருகிறது?. நாளை வழக்கம் போல பரபரப்பான வாழ்க்கை சூழலிலும், பணப்பற்றாக்குறையிலும், வங்கியின் வாசலிலும் இந்த மரணம் மறக்கடிக்கப்படச் செய்யப்பட வேண்டியது எதற்காக?
மக்களால் அங்கீகரிக்கப்பட்டவரோ அல்லது மரியாதை கொடுக்கப்பட்டவருக்கோ இறுதி மரியாதை கொடுக்கும் நிகழ்வு அனைவரையும் உள்ளடக்கியே நட்த்தப்பட்டுவருகிறது. இப்படியான நிகழ்வு ஒரு எழுச்சியையோ, துக்கத்தின் ஆழத்தையோ, உறுதிப்படுத்தலையோ நிகழ்த்துகிறது. அறிஞர் அண்ணா முதல் அனைவரும் இப்படியான ஒரு பதிவினை தங்களது இறுதி நிகழ்வில் ஏற்படுத்தினார்கள். இந்தியாவின் பிற இடங்களிலும் இது போன்றே நடத்தப்பட்டது
இம்மாதிரியான மக்கள் திரள் ஏற்படுவதை சாத்தியப்படுத்தவே ஈழப்படுகொலையின் போது தோழர்.முத்துக்குமாரின் உடலை மூன்று நாள் பாதுகாத்தோம். அது வரலாற்று சிறப்புமிக்க ஊர்வலத்த்னை பதிவு செய்த்து. ஆனால் அதன் பின்னர் அனைத்து ஈகியருக்கும் இப்படியான வாய்ப்பினை அரசு தடுத்த்து. இன்றுவரை இயக்க அரசியலில் இப்படியான நெருக்கடிகளே கொடுக்கப்பட்டு வருவதை தொடர்ந்து காணமுடிகிறது,. இந்த வழிமுறைகளுக்கு துணை போன கட்சியினருக்கும் இதே நிலை ஏற்பட்டிருப்பது. ஏன் இது நடந்தது?
பிராந்திய கட்சிகளின் ஆதிக்கத்தினை நிறுத்திடுமா ஜெயல்லிதாவின் மரணம், திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து தேசிய கட்சிகளுக்கு நகரும் முக்கிய தருணம் இது, ஜெயல்லிதா விட்டுச் செல்லும் இடத்தை வைத்து பாஜக தமிழக அரசியலை கைப்பற்றவேண்டுமென சு.சாமி சொல்வது என பல்வேறு புள்ளிகளை இணைத்தால் இந்த அவசர இறுதி நிகழ்வின் அரசியல் புரியும்.
வெங்கைய நாயுடு ஏன் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் அருகே நிற்க வேண்டும்? அவர் கட்சி உறுப்பினரோ, முதலமைச்சர் ஜெயலலிதா நண்பரோ, உறவினரோ, குறைந்தபட்சம் தமிழகத்தைச் சேர்ந்தவரோ கிடையாது. ஒரு கேபினட் அமைச்சர் அவ்வாறு அங்கே ஆக்கிரமித்து நிற்கவேண்டிய அவசியம் என்ன? தொலைக்காட்சிகளில் பார்ப்பன பாஜக உறுப்பினர்கள்/ ஆதரவாளர்கள் ஏன் முன்னிறுத்தப்பட வேண்டும்.? எந்த அரசியலை திணிக்க விரும்புகிறார்கள்?
மிக நுணுக்கமாக திட்டமிட்டு இறுதி நிகழ்வு அவசர அவசரமாக நடத்தப்பட்டது. குறைந்த பட்சம் ஜெயல்லிதா உடல் புதைக்கப்படும் நிகழ்வின் இட்த்தில் போதுமான வெளிச்சமோ, காட்சிப்படுத்தலோ நட்த்தாமல் போனதை கவனிக்காமல் இருக்க இயலாது.
மக்கள் திரளாக சேர்வதற்கு முன்பே, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சென்னை வந்து சேர்வதற்கு அவகாசம் கொடுக்காமல், அப்படியான திட்டமிடலுக்கு வாய்ப்பினை கொடுக்காமல், அதிமுகவின் கட்சியினரின் முடிவிற்கு விடாமலும், அதை முடிவெடிக்க்க் கூடிய சூழலை அனுமதிக்காமலும் இந்நிகழ்வு மோடி அரசினால் கட்டுப்படுத்தப்ப்ட்ட்தையே கவனிக்க முடிகிறது.
ஜெயல்லிதாவிற்கு பெரும்திரளாக மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் மாநில அரசியல் திரட்சி மேலும் வலுப்பெறும் ஒரு நிகழ்வாக ஜெயல்லிதாவின் இறுதி நிகழ்வு அமைந்துவிடும் என்பதை மோடி அரசுக்கு உணர்ந்தே இருக்கிறது. இதுவே மிகமுக்கிய காரணம் என்பதே உண்மை.
மேலும், இந்திய தொலைக்கட்சிகளில் ஏன் ஜெயல்லிதா உடல் எரிக்கப்படாமல் புதைக்கப்பட்ட்து எனும் விவாதம் வைக்கப்படுகிறது.
அதாவது இங்கிருக்கும் மாநில அரசியல் மற்றும் அதன் அடையாளங்கள், திரட்சியடைதல் என்பதை இந்திய அரசு விரும்பவில்லை என்பதையே இந்நிகழ்வு காட்டுகின்றன.
மேலும் அதிமுக கொடி மறைக்கப்பட்டு, இந்தியக் கொடி முன்னிலைப்படுத்தப்பட்ட்து எதனால்? தந்தி தொலைக்காட்சி வர்ணனையாளர் ‘இந்திய அரசியலுக்கும், நலனுக்கும் முன்னிலை கொடுத்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா என திரும்ப திரும்ப வலிறுத்தியது எதனால்?
நேற்றிலிருந்து பாஜகவின் வெங்கய்ய நாயுடுவிற்கு இங்கு என்ன வேலை? எனும் கேள்வியிலிருந்தே விவாதங்கள் துவங்குகிறது.
மரபாகவே குறைந்த்பட்சம் 24 மணி நேரம் உடல் பார்வைக்கும், மரியாதைக்கும் வைப்பது எனும் நடைமுறையை யார் மாற்றியது எனும் கேள்வி எளிதில் சாகாது?. ஜெயல்லிதாவின் இறுதி நிகழ்வில் அதன் தொண்டர்கள் பெருமளவு பங்கேற்கமுடியாமல் செய்யப்பட்ட கேள்வியை எழுப்ப வேண்டியது அவசியம்.
ஏன் அவசர அவசரமாக முதலமைச்சர் ஜெயலலிதா இறுதி நிகழ்வு நடத்தப்பட்டது என்கிற கேள்வி அதிமுகவினருக்கானது மட்டுமல்ல.
Thirumurugan Gandhi
ஜெயலலிதா இருந்த போதும் பினாமி முதல்வர் இறந்த போதும் பினாமி முதல்வர் என்றால்
ஜெயலலிதா இருந்த போதும் பினாமி முதல்வர். இறந்த போதும் பினாமி முதல்வர் என்றால்
ஆட்சியாளர்களின் ஊழல்களையும், சட்ட விரோத செயல்களையும் அதற்கு இணக்கமாக செயல்படுபவர்களையுமே ஆட்சிக்கு வரும் ‘கட்சி அரசியல்வாதிகள்’ தலைமை செயலாளராக நியமித்துக் கொள்கிறார்கள். அப்படித்தான் ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்ற போது தனது ஆட்சியின் தலைமை செயலாளராக ‘ராம் மோகன் ராவ்’ என்பவரை நியமித்தார்.
தலைமை செயலாளர் ஆவதற்கான தகுதி அடிப்படையில் ‘ராம் மோகன் ராவ்’ நியமிக்கப்படவில்லை. அவரைவிட தகுதியும் அனுபவமும் மிக்க நேர்மையான அதிகாரிகள் 1981 ஆம் ஆண்டு பிரிவில் 22 பேர்கள் உள்ள நிலையில், 1985 ஆம் ஆண்டு பிரிவில் 13வது நபரான ராம் மோகன் ராவ்வை ஜெயலலிதா எதற்காக தேர்ந்தெடுத்தார்?
“சோனியாவுக்கு கிடைத்த பினாமி மன்மோகன் சிங் போன்று ஜெயலலிதாவுக்கு கிடைத்த பினாமி பன்னீர் செல்வம். அத்வானிக்கு பினாமி மோடி.”
பினாமிகளாக அரசியல்வாதிகளால் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு என்று சில குணங்கள் இருக்க வேண்டும். அத்தனை அயோக்கியத்தனங்களுக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நன்றியுள்ள நாய் போன்று அவர்களை சுற்றித் திரிய வேண்டும். எப்போதாவது எலும்பும் துண்டு போன்று சில அதிகார பதவிகளை அரசியல்வாதிகள் தூக்கி போடுவார்கள். அதைக் கவ்விக் கொள்ள வேண்டும். அந்த பதவியின் அதிகாரத்தை அந்த அரசியல்வாதிகளுக்காக சட்டங்களையும் வளைத்து நெளித்து அரசியல்வாதிகளுக்கு ஏற்றார் போல் சட்ட விரோத செயல்களை சட்ட ஆதரவுடன் நடப்பதாக காட்ட வேண்டும்.
இந்த பினாமிகளில் மோடிக்கும், பன்னீர் செல்வத்திற்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இருவருமே டீ கடையில் வாழ்க்கையை ஆரம்பித்த பாமர மனிதர்கள். படிப்பறிவற்றவர்கள். மோடிக்கு கிடைத்த பதவி பிரதமர். பன்னீருக்கு மட்டும் எப்போதுமே எடுபிடி முதல்வர்.
பாருங்கள்….. “ஜெயலலிதா இருந்த போதும் பினாமி முதல்வர். இறந்த போதும் பினாமி முதல்வர் என்றால்….”
நேற்று முன்தினம் இந்த எடுபிடி முதல்வர் பினாமி பிரதமரை சந்திக்கிறார். அப்போதே ஜெயலலிதாவின் இருட்டுக்குள் நடந்த மறுபக்க அரசியலின் ஆவணங்கள் அனைத்தும் மோடியிடம் கொடுக்கப்பட்டுவிட்டன. அதற்கு பிறகே தமிழ்நாட்டுக்குள் இராணுவ பாதுகாப்போடு தலைமை செயலகத்திற்குள் ராம் மோகன் ராவ் அறைக்குள் விசாரணை. அதற்கு எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் தனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல் பினாமி முதல்வர் தலைமை செயலகத்தை விட்டு வெளியேறுகிறார். இது ஒட்டு மொத்த மக்களாட்சிக்கு எதிரான தலைகுனிவு.
தமிழ்நாட்டுக்குள் நடத்திய இதே அணுகுமுறையை மோடி மேற்கு வங்காள முதல்வர் மம்தா தலைமை செயலகத்திற்குள் இராணுவ பாதுகாப்புடன் சோதனையிட உள்நுழைந்த போது தலைமை செயலகத்தின் கதவை பூட்டு உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினார் அந்த பெண் முதல்வர். அது எதிர்புணர்ச்சி. பயந்து போன மோடி ஓடிப்போனது மட்டுமல்ல அவமானப்பட்டதும் அங்கேதான். ஆனால் தமிழ்நாட்டு பினாமி முதல்வர் ஆள்காட்டி வேலையைத்தானே செய்து கொண்டிருக்கிறார்?
ஆயிரம் இருந்தால் என்ன? அவர் பச்சை தமிழர் என்பதால் அவரை ஆதரிப்போம் என்று போலி தமிழ் தேசியவாதி சீமான் போன்ற குள்ள நரிகள் ஆதரிக்கவும் செய்கிறார்கள்.
இப்போது புது தலைமை செயலாளராக மாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த மாமி எஸ்.வி.சேகர் (பா.ஜ.க) ஆத்து உறவுக்காரர். இந்த மாமியை யார் தமிழக செயலாளராக நியமித்தார்கள் என்று சில மணி நேர குழப்பத்திற்கு பிறகு தமிழக கவர்னர் நியமித்தார் என்று செய்தி வருகிறது.
கவர்னருக்கு அந்த அதிகாரம் இல்லையே என்று இப்போது சர்ச்சைகள் வலுத்துள்ள நிலையில், கிரிஜா தமிழ் பேசும் பார்ப்பனத்தி. ‘தமிழ் பேசும் பார்ப்பனரும் தமிழரே’ என்று இப்போதும் சீமான் போன்ற அரை வேக்காடுகள் ஆதரவு கரம் நீட்டுவார்கள்.
ஆனால் இந்த மாமி பா.ஜ.க உளவாளி. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் பா.ஜ.கவின் விசுவாசிசாக இருந்து இனி ஆட்டி வைக்கப் போகும் பார்ப்பனீய சூத்திரத்தாரி.
இப்போதும் இந்த ஆரியர் / திராவிடர் எதிர்ப்பு அரசியல் தமிழர்களுக்கு பிடிபடவில்லை என்றால் மீண்டும் முதல் பத்தியை வாசித்து பாருங்கள்.
ஜெயலிலதா, சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக மட்டுமே தனக்கு இணக்கமான நபரை தேர்ந்தெடுத்தார். ஆனால் கிரிஜா என்ற தேர்வு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவின் பின்புலம் அதிபயங்கரமானது. அதன் அரசியல் மத/சாதி/மனிதநேயத்திற்கு எதிரானதாக உருவெடுத்து ஜனநாயகத்தை மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழீனத்தையும் நாசப்படுத்திவிடும்.
#தமிழச்சி
23/12/2016
பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் யாருக்குத் தான் லாபம்?
பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் யாருக்குத் தான் லாபம்? அறிவிப்புக்கு முன்னதாகவே நிலங்களாக வாங்கிக் குவித்து தமது கருப்புப் பணத்தை பா.ஜ.க கும்பல் பதுக்கிக் கொண்டனர் என செய்திகள் வெளியாகின.
கருப்புப் பண ஒழிப்பு, கள்ளப் பண ஒழிப்பு – இதன் மூலம் தீவிரவாத ஒழிப்பு, வறுமை ஒழிப்பு என்பது போன்ற தம்பட்டங்களோடு துவங்கிய பண மதிப்பழிப்பு அறிவிப்பு தற்போது அதன் இறுதி இலக்கை அடைந்துள்ளது. உண்மையில் கருப்புப் பண ஒழிப்போ, கள்ளப் பண ஒழிப்போ மோடியின் சிந்தனையிலே இருந்திருக்க சாத்தியமில்லை என்பது அவரும் அவரது அமைச்சரவை சகாக்களும் பேசுவதிலிருந்தே வாக்குமூலங்களாக வெளிவரத் துவங்கி விட்டன.
எனில், பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் யாருக்குத் தான் லாபம்? அறிவிப்புக்கு முன்னதாகவே நிலங்களாக வாங்கிக் குவித்து தமது கருப்புப் பணத்தை பா.ஜ.க கும்பல் பதுக்கிக் கொண்டனர் என செய்திகள் வெளியாகின. பெரும் முதலாளிகள் இதனால் பாதிக்கப்படவில்லை என்பதை அறிந்து கொள்ள பொருளாதார அறிவு கூடத் தேவையில்லை – வங்கிகளின் முன் நிற்கும் வரிசைகளைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். கருப்புப் பண முதலைகள் இந்த அறிவிப்பினால் பலனடைந்துள்ளனர் என்பது ஒரு பரிமாணம் – அதையும் தாண்டிய வேறு ஒரு உண்மையும் உள்ளது.
அது என்னவென்பதைப் பார்ப்பதற்கு முன், பணமதிப்பழிப்பு பற்றி துவக்கத்தில் சொல்லப்பட்டது என்ன, நடந்தது என்ன?
சுழற்சியில் இருக்கும் மொத்த ரொக்கத்தில் சுமார் மூன்றிலிருந்து ஐந்து லட்சம் கோடி ரூபாய்கள் வரை கருப்புப் பணம் என்றது நவம்பர் 8-ம் தேதி வெளியான மோடியின் அறிவிப்பிற்கு முந்தைய ரிசர்வ் வங்கியின் கணக்கீடு ஒன்று. கடந்த நவம்பர் 2-ம் தேதி ராஜ்யசபையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வா, மோடியின் அறிவிப்பு வெளியான சமயத்தில் புழக்கத்திலிருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களின் மொத்த மதிப்பு 15.44 லட்சம் கோடி என்றார்.
நவம்பர் 28-ம் தேதி வரை (பதினெட்டு வங்கி வேலை நாட்களில்) மொத்தம் சுமார் 8.45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பழைய நோட்டுக்கள் மக்களால் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வங்கியும் சுழற்சிக்கான நிதியாக (500, 1000, 100, 50, 20 மற்றும் 10 ரூபாய்த் தாள்கள் உள்ளிட்டு) சுமார் 4.06 லட்சம் கோடி ரூபாயை இருப்பில் வைத்திருக்கும். ஆக, புழக்கத்தில் இருப்பதாக சொல்லப்படும் 15.44 லட்சம் கோடியில் நவம்பர் 27-ம் தேதி வரை சுமார் 12.5 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. இதோடு அன்றாடப் புழக்கத்துக்கான நிதிக் கையிருப்பான 50 ஆயிரம் கோடி ரூபாய்களையும் சேர்த்தால் மொத்தம் 13 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் சேர்ந்துள்ளது – வெறும் 18 நாட்களில்!
பணம் செலுத்தப்பட்டு வரும் வீதத்தை கணக்கில் கொண்டால் டிசம்பர் மாத இறுதிக்குள் குறைந்தபட்சம் 2 லட்சம் கோடி ரூபாய் வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்பட்டு விடும். ஆக, புழக்கத்தில் இருப்பதாக சொல்லப்பட்ட 3 – 5 லட்சம் கோடி ரூபாய் எங்கே தான் போயிருக்கும்?
ரிசர்வ் வங்கி வழக்கமாக வெளியிடும் இருவார அறிக்கைகள் இதற்கான பதிலைச் சொல்கின்றன. மோடியின் அறிவிப்பு வெளியானது நவம்பர் 8-ம் தேதி. செப்டெம்பர் மாதம் 16-ம் தேதியிலிருந்து 30-ம் தேதி வரையிலான 15 நாட்களில் மட்டும் (13 வங்கி வேலை நாட்கள்) சுமார் 3.03 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது.
மேலுள்ள இரண்டு படங்களை கவனியுங்கள். இதே காலப்பகுதியில் முந்தைய ஆண்டுகளில் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்ட தொகையை விட இந்த ஆண்டு ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிக ரொக்கம் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் பரஸ்பர நிதியத்தில் (mutual fund) செய்யப்படும் முதலீடும் வழக்கத்தை விட அதிகமாக (19,630 கோடி) இருந்துள்ளது.
இதிலிருந்து நாம் இரண்டு முடிவுகளுக்கு தான் வந்தாக வேண்டியுள்ளது :
முதலாவதாக, புழக்கத்தில் இருப்பதாக சொல்லப்பட்ட கருப்புப் பணம் என்பது மிகக் குறைவானதாக ஒன்றாகவே இருக்க வேண்டும். கருப்புப் பணம் சட்டப்பூர்வமான ரியல் எஸ்டேட் முதலீடுகளாகவோ, பங்குகளாகவோ, அந்நிய நேரடி முதலீடாகவோ இருக்க வேண்டும். மக்களின் கையில் புழங்கும் ரொக்கப் பணத்தில் கருப்புப் பணம் பெரியளவில் இல்லை.
இரண்டாவதாக, அரசு முன்னரே மதிப்பிட்ட 3-5 லட்சம் கோடி கருப்புப் பணம் புழக்கத்தில் இருந்தால், அது மோடியின் அறிவிப்பிற்கு முன்பாகவே வங்கிகளில் செலுத்தப்பட்டு வெளுப்பாகியுள்ளது. மோடியின் அறிவிப்பு அவரது அமைச்சரவை சகாக்களுக்குக் கூட தெரிவிக்காமல் இரகசியம் காக்கப்பட்டது என அவர்கள் சொல்லிக் கொள்வது உண்மை எனில், கருப்புப் பணப் பதுக்கல்காரர்களுக்கு மோடியே நேரடியாக தகவல் சொல்லி அவர்களைக் காப்பாற்றியிருக்கிறார் என்றாகிறது.
ஒருகட்டத்தில் பணமதிப்பழிப்பு நடவடிக்கையே ஒட்டுமொத்தமாக டுபாக்கூர் என்பது அம்பலமாகத் துவங்கியவுடன், இந்தியா நெடுக பல்வேறு மாநிலங்களில் பல்வேறு நபர்களிடம் சில பல கோடிகளை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இந்நடவடிக்கைகளை பத்திரிகைகளில் படாடோபமாக அறிவித்து ”கருப்புப் பணம் குவியலாக இருக்கிறது” என்கிற கருத்தாக்கத்தை நிலைநாட்டும் வேலைகளில் இறங்கியுள்ளது அரசு. ஒருவேளை அரசு சொல்வது உண்மையாக இருந்தாலும் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் அளவு, உள்நாட்டில் புழக்கத்தில் இருப்பதாக சொல்லப்பட்ட கருப்புப் பொருளாதாரத்தின் அளவு ஆகியவற்றோடு ஒப்பிட்டால் கடந்த ஒருசில வாரங்களில் பிடிபட்டிருக்கும் தொகை வெறும் கொசுறு தான்.
அடுத்து, பண மதிப்பழிப்பு அறிவிப்பின் போது சொல்லப்பட்ட மற்றொரு காரணம் கள்ளப்பணம். அதாவது புழக்கத்தில் இருந்த 15.44 லட்சம் கோடியில் 400 கோடி மதிப்பிலான கள்ளப்பணம் கலந்துள்ளதாகவும் மக்களால் எது போலி எது உண்மை என்றே கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து கள்ளப்பணம் ஒழிந்து விடும் என்றும் சொல்லப்பட்டது. இந்த 400 கோடியையும் பாகிஸ்தானும், சீனாவும் அவர்களது சொந்தச் செலவில் அச்சிட்டு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைப்பதாகச் சொன்ன காவி கும்பல், மோடியின் அறிவிப்பை எதிர்ப்பவர்கள் தேச துரோகிகள் எனவும் பிரகடனம் செய்தனர்.
ஆனால், நவம்பர் 27-ம் தேதி வரை வங்கிகளில் செலுத்தப்பட்ட 8.45 லட்சம் கோடி ரூபாயில் வெறும் 9.6 கோடி மதிப்பிலான கள்ளப்பணமே பிடிபட்டுள்ளது என அறிவித்துள்ளது அரசு. அதாவது வெறும் 0.001 சதவீதம். ஆக, கள்ளப்பணத்தை ஒழிக்கிறோம் என பீற்றிக் கொண்டதும் பச்சைப் பொய் என்பது தெளிவாகி விட்டது. எனில், தனது கோமாளித்தனமான அறிவிப்பின் மூலமும் அது தோற்றுவித்துள்ள சொல்லொணாத துயரத்தின் மூலமும், அந்த அறிவிப்பு விளைவித்துள்ள நூற்றுக்கணக்கான மரணங்களின் மூலமும் எதைச் சாதிக்க நினைக்கிறார் மோடி?
அதற்கான பதிலை மோடியும் அவரது சகாக்களுமே தற்போது தெளிவாக சொல்லத் துவங்கியுள்ளனர். ஆரம்பத்தில் சொன்ன கருப்புப் பண ஒழிப்புக் கதைகள் தற்போது வற்றியுள்ள நிலையில் தற்போது ரொக்கமில்லா மின்பரிவர்த்தனை குறித்தும் வருமான வரித் தளத்தை அகலப்படுத்துவது குறித்தும் பேசத் துவங்கியுள்ளனர். வருமான வரித் தளம் அதிகரிப்பு என்பது அரசின் எந்த உதவியும் இன்றி சுயேச்சையாக இயங்கி வரும் தற்சார்பு பொருளாதாரத்தை அழித்து அதில் ஈடுபடும் எளிய மக்களைக் கசக்கிப் பிழிந்து வரி பிடுங்கும் அதே நேரம் பெருமுதலைகளுக்கு வரி விலக்கு அளிக்கும் நடவடிக்கை என்பது வினவின் முந்தைய கட்டுரைகளில் விளக்கப்பட்டுள்ளது.
அச்சடித்த நோட்டுகளை பரிவர்த்தனைக்கு பயன்படுத்துவதற்கு பதில், மின்செலாவணியை பயன்படுத்துவது. அதாவது, நாம் வாங்கும் கடையில் பொருட்களுக்கு ஈடான தொகையை அச்சடித்த நாணயங்களாக கொடுப்பதற்கு பதில் மின்பரிவர்த்தனையாக கொடுப்பது இவையே ரொக்கமற்ற பரிவர்த்தனை என்று அழைக்கப்படுகிறது.
இந்த விதமான பரிவர்த்தனைக்கு முதலில் வர்த்தகர்கள் மின் பரிவர்த்தனை சேவை வழங்கும் நிறுவனத்திடம் கணக்கு ஒன்றை துவக்க வேண்டும். அது அவர்களது வங்கிக் கணக்குடனும், கைபேசியுடனும் இணைக்கப் பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள் வர்த்தகர்களுக்கு டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு, வங்கியின் இணைய சேவை அல்லது ஆண்ட்ராய்டு கைபேசி மூலம் ரொக்கமில்லா மின் பணத்தை செலுத்திக் கொள்ளலாம். இதற்கு மின் பரிவர்த்தனை சேவை வழங்கும் நிறுவனத்திற்கு வர்த்தகர்கள் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும்.
வாடிக்கையாளர்கள் ஆண்ட்ராய்டு செயலி மூலம் மின் பரிவர்த்தனையை நடத்திக் கொள்ள மின் பரிவர்த்தனை சேவை வழங்கும் நிறுவனத்தின் செயலியை கைபேசியில் நிறுவிக் கொள்ள வேண்டும். அதில் தங்களது பணத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வங்கி பரிவர்த்தனைகள் கூட இல்லாமல் பணத்தை செலுத்த முடியும்.
இவ்வாறான மின் பரிவர்த்தனை சேவையை யார் வேண்டுமானாலும் அளித்து விடமுடியாது. இதற்கென ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றாக வேண்டும். மோடியின் பண மதிப்பழிப்பு அறிவிப்பு வெளியாவதற்கு மிகச் சரியாக 73 நாட்களுக்கு முன் (ஆகஸ்டு 19-ம் தேதி) மத்திய ரிசர்வ் வங்கி பதினோரு நிறுவனங்களுக்கு இவ்வாறான மின் பரிவர்த்தனை சேவை வழங்கும் உரிமத்தை கொள்கை அடிப்படையில் வழங்குகின்றது.
கொள்கையடிப்படையிலான அனுமதி பெற்ற நிறுவனம், ரிசர்வ் வங்கி விதித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு 18 மாதங்களுக்குள் பரிவர்த்தனை சேவையைத் துவங்கலாம். ரிசர்வ் வங்கி ஆகஸ்டு 19-ம் தேதி அனுமதி வழங்கிய 11 நிறுவனங்களில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் ஒன்று. மோடியின் அறிவிப்பு வெளியானதற்கு இரண்டே நாட்களுக்குள் பாரத ஸ்டேட் வங்கியும் ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்து மின் பரிவர்த்தனை சேவையைத் துவங்கும் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகின்றது.
இந்நிலையில் மோடியின் அறிவிப்பு வெளியாகி 23 நாட்கள் கழித்து கடந்த டிசம்பர் 1-ம் தேதியன்று முகேஷ் அம்பானி சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ரிலையன்ஸ் சார்பாக ஜியோ மணி (JIO Money) என்கிற மின் பரிவர்த்தனை சேவையைத் துவங்குவது தொடர்பானது.
அடுத்த சில வாரங்களில் நாடெங்கும் உள்ள சுமார் ஒரு கோடி சிறு வணிகர்களை ஜியோ மணி வலைப் பின்னலுக்குள் கொண்டு வரப்படவுள்ளதாக அறிவித்த அம்பானி, ஜியோ மணி செயலியில் மக்கள் தங்களது பணத்தைச் சேர்த்துக் கொள்ள நாடெங்கும் மிக விரைவில் மைக்ரோ ஏ.டி.எம் மையங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். மேலும், சில்லரறை வர்த்தகத்துக்கான செயற்சூழல் (Digital retail ecosystem) ஒன்றை உருவாக்குவதே தங்களது லட்சியம் என அறிவித்தார் அம்பானி. அதாவது பொருள் – பண பரிவர்த்தனை நடக்க வாடிக்கையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் தேவையான அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு மின்வெளி (Digital Space).
நுகர்வோருக்குத் தேவைப்படும் பொருள் அவர் வசிக்கும் இடத்தைச் சுற்றி எங்கே கிடைக்கும், என்னென்ன விலைகளில் கிடைக்கும் என்பதில் துவங்கி அந்தப் பொருள் மட்டுமின்றி அதனோடு தொடர்புடைய பிற பொருட்களை வாங்குவது குறித்துமான சகல விவரங்களும் அவரது செல்பேசியில் செயல்படும் ரிலையன்சின் செயலியே (App) வழிகாட்டுவதோடு – அந்தப் பொருள் வாங்குவதற்காக நிகழும் பணப்பரிவர்த்தனையும் ரிலையன்சின் மற்றொரு செயலியின் (Relinace Jio Money App) மூலம் நடக்கும்.
ஏற்கனவே இதே சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் உண்டெனினும், அவை தனித்தனியான நிறுவனங்களின் சேவைகளாக உள்ளன. ரிலையன்சின் திட்டம் பரிவர்த்தனைச் சங்கிலியை முழுமையாக கட்டுப்படுத்துவது என்பதுடன் அதற்கு மேல் வேறு நோக்கங்களையும் கொண்டது.
சில்லறை வர்த்தகத்தை ஒழித்துக் கட்டும் ரிலையன்சின் முந்தைய ரிலையன்ஸ் ஃபிரஷ் போன்ற முயற்சிகளை விடவும் தற்போதைய திட்டம் முழு வெற்றியடையும் என்பது அம்பானியின் எதிர்பார்ப்பு. மோடியின் பண மதிப்பழிப்பு அறிவிப்பிற்குப் பின்னான சூழல் அந்த நோக்கத்திற்கு தோதானதாக உள்ளது. மின் பரிவர்த்தனையை அடிப்படையாக வைத்து சில்லறை மற்றும் சிறு கடை வியாபாரிகள் இயங்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி அதற்கென செய்ய வேண்டிய செலவுகள் மற்றும் ஒவ்வொரு சிறிய பரிவர்த்தனைக்கும் வழங்க வேண்டிய சேவைக் கட்டணங்கள், வரிகள் உள்ளிட்ட கூடுதல் செலவினங்களும் உள்ளன.
மற்றொரு புறம், சில்லறை வர்த்தகம் இயங்கும் முறை மற்றும் மக்களின் வாங்கும் போக்கு (Buying Pattern) குறித்த விவரங்கள் அனைத்தும் ரிலையன்ஸ் வசம் இருக்கும். ஏற்கனவே ஜியோ செல்பேசி சேவையின் வழியே அதன் வாடிக்கையாளர்களுடைய இணையச் செயல்பாடுகளை மட்டுமின்றி வோல்ட் (VoLTE – Voice On LTE) முறையில் இயங்கும் தொலைபேசி அழைப்புகளையும் கண்காணிக்கும் தொழில் நுட்பம் ரிலையன்சிடம் உள்ளது. இதோடு சேர்த்து மக்கள் தங்களது பணத்தை செலவழிக்கும் முறை குறித்த விவரங்களும் சென்று சேர்கின்றது.
தொகுப்பாக பார்க்கும் போது, மக்களுடைய அரசியல் கருத்துக்கள் மட்டுமின்றி அவர்களது பொருளாதாரச் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துவதோடு நாட்டின் ஒட்டுமொத்த சில்லறை வர்த்தகத்தின் எதிர்காலத்தையும் அம்பானியின் கையில் வாரிக் கொடுத்துள்ளார் மோடி.
நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு கார்ப்பரேட்டுகளே நேரடியாக மக்களின் அரசியல், பொருளாதார நடவடிக்கைகளின் மீது அதிகாரத்தைச் செலுத்த முற்படும் டிஜிட்டல் பாசிசம் நம் வாயிலில் நிற்கின்றது. இதற்கு மேலும் மோடியின் நடவடிக்கையை கருப்புப் பண ஒழிப்போடு மட்டும் தொடர்புபடுத்தி அதன் சாத்திய அசாத்தியங்களுக்குள் புகுந்து மயிர் பிளக்கும் விவாதங்களைச் செய்து கொண்டிருப்பது அறிவுடைமையா?
– முகில்
செய்தி ஆதாரங்கள் :
- Fake notes worth Rs.9.6 crore recovered in Nov.
- Demonetisation will push up tax collections: Arun Jaitley
- Demonetisation’s rude shock: There may not be any black money
- Unravelling the mystery behind Rs 3-lakh crore deposits in 15 days
- Reliance Jio Money to Roll Out to Merchants From Monday
- Reliance Jio May Announce Payments Bank, 4G Feature Phone, Enterprise Solutions
- RIL-SBI joint venture: Jio Payments Bank incorporated
கருப்புப் பணம் நடுநிலையான கருத்து கணிப்பு, மோடி அரசுக்கு எதிரான மக்களின் நிலை!
பா.ஜ.க அரசின் ரூபாய் மதிப்பழிப்பு நடவடிக்கை ஆரம்பித்து மூன்று வாரங்களுக்கு பிறகு கருத்துக் கணிப்பு ஒன்று நடத்த முடிவு செய்தோம். பொதுவான ஊடக செய்திகள், நேரடி அனுபவங்கள், ஆங்காங்கே மக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தையும் ஆய்வு செய்து சுமார் 25 கேள்விகளை தெரிவு செய்தோம். அதையும் பல சுற்று விவாதங்களுக்குப் பிறகு 13 கேள்விகளாக சுருக்கினோம்.
எங்களுடைய நோக்கம் கருப்புப் பணம் குறித்து மக்களுக்கு என்ன தெரியும், மோடியின் அறிவிப்பு குறித்து என்ன கருதுகிறார்கள், இந்த நடவடிக்கை என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் – ஏற்படுத்தாது என்பதை துல்லியமாக கண்டுபிடிப்பது. அதே நேரம் முதலாளித்துவ ஊடகங்கள் – நிறுவனங்கள் பின்பற்றும் குறிப்பிட்ட பதிலை வாங்குவதற்காகவே தயாரிக்கப்படும் கேள்விகள்-சர்வேக்களுக்கு மாறாக, உண்மை நிலவரத்தை கண்டுபிடிக்கும் வண்ணம் கேள்விகள், அனைத்து கருத்துக்களுக்கும் வாய்ப்பு அளிக்குமாறான பதில்களையும் உள்ளடக்கி தயாரித்தோம்.
பிறகு யாரிடம் எடுப்பது என்ற பிரச்சினை. சாதாரண மக்கள், நடுத்தர வர்க்கம், மாத அதிக ஊதியம், குறைந்த மாத ஊதியம், தினசரி ஊதியம், மாணவர்கள், இல்லத்தரசிகள், சிறு வணிகர்கள் போன்ற பெரும்பான்மை மக்களை சென்றடைவதற்கு திட்டமிட்டோம். அதன்படி சென்னை, வேலூர், திருச்சி, கோவை, தஞ்சை, மதுரை ஆகிய நகரங்களில் பகுதிகள் தீர்மானிக்கப்பட்டன.
சென்னையில் எம்.எம்.டி.ஏ காலனி மற்றும் மதுரவாயல் எம்.எம்.டி.ஏ காலனி குடியிருப்புக்கள், இரு பகுதிகளிலும் கடைத்தெரு, சந்தை போன்ற பொது இடங்கள்; திருச்சியில் திருவெறும்பூர், சுப்ரமணியபுரம், வயலூர் போன்ற புறநகர் பகுதிகளின் குடியிருப்புகள், கடைத்தெருக்கள், ஏ.டி.எம் வரிசைகள், பிஷப் ஹீபர் கல்லூரி; தஞ்சையில் புது பேருந்து நிலையம், கடைத்தெரு, கட்டிடத் தொழிலாளிகள், மானோஜிப்பட்டி குடியிருப்பு; மதுரையில் நீதிமன்ற வளாகம், மகவுப் பாளையம் – எல்லீசு நகர் – பழங்காநத்தம் குடியிருப்புக்கள், கடை வீதிகள், ஏ.டி.எம் வரிசைகள்; கோவையில் சூலூர், கவுண்டம்பாளையம், துடியலூர் குடியிருப்புகள்; வேலூரில் பழைய பேருந்து நிலையம், புது பேருந்து நிலையம்; ஆகிய இடங்களில் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது.
மொத்தமாக 85 தோழர்கள் கருத்துக் கணிப்பில் பங்கேற்றனர். சில இடங்களில் ஒரு நாளும் சில ஊர்களில் இரு நாட்களும் கருத்துக் கணிப்பு நடைபெற்றன. சென்னையில் 12.12.2016 அன்று வீசிய புயலுக்கு முந்தைய நாளில் எடுக்கப்பட்டது. மற்ற ஊர்களில் அதே நாளிலும் அடுத்து வரும் இரு நாட்களிலும் எடுக்கப்பட்டன. கருத்துக் கணிப்பை அனுபவம் வாய்ந்த தோழர்கள் ஒருங்கிணைத்தனர்.
சென்னையில் வினவு செய்தியாளர் குழு, ம.க.இ.க மற்றும் பு.மா.இ.மு தோழர்களும் மற்ற நகரங்களில் ம.க.இ.க தோழர்களும் பங்கேற்றனர். களத்திற்குச் செல்லும் தோழர்களின் அரசியல் அமைப்பு பின்புலம் அறிமுகமாகாத வண்ணம் பகுதிகள் தெரிவு செய்யப்பட்டன. எங்கள் படிவங்களை நிரப்பிய மக்களில் மூன்று பேர் மட்டும் தோழர்களை ‘இன்னார்’ என்று கண்டு பிடித்தனர். அதே நேரம் அந்த மூன்று பேரும் அதற்காக தமது கருத்தை மாற்றிக் கொள்ளாமலேயே படிவங்களை நிரப்பினர்.
வீடுகளில் உள்ள பெண்கள், சாதாரண மக்கள் பலரிடம் கேள்விகளைக் கேட்டும், புரிய வைத்தும் பதில்கள் நிரப்பப்பட்டன. நடுத்தர வர்க்கத்தினர் அவர்களே பதிவு செய்தனர். ஏ.டி.எம் வரிசைகளில் நின்றோர் கொலை வெறியுடன் கருத்துக்களை பேசிய வண்ணம் ஆவேசத்துடன் படிவங்களை நிரப்பினர். திருநங்கைகள் இருவரும், தமிழ் தெரிந்த சில வெளிமாநிலங்களைச் சேர்ந்தோரும் இக்கணிப்பில் பங்கேற்றிருக்கின்றனர்.
செய்தியாளர்கள் பல்வேறு சிறிய குழுக்களாக பிரிக்கப்பட்டனர். சந்திக்கும் மக்களின் வயது, பாலினம், தொழில் மற்றும் கட்சி சார்பு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்வது, முடிந்த வரை அனைத்துப் பிரிவு மக்களின் கருத்துக்களும் பிரதிபலிக்கும் வகையில் கருத்துக்கணிப்பை நடத்துவது என அவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருந்தது.
கருத்துக்களை அறிந்து அதை வெளியிடுவதோடு, நாங்களே விரும்பாத கருத்தாக இருந்தாலும் கூட அது ஏன் மக்களிடம் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதையும் அதற்கான சமூக பொருளாதார பின்புலத்தையும் ஆய்வு செய்வதே எமது நோக்கமாக இருந்தது. இந்த பகுதி அடுத்த பாகத்தில் வெளிவரும். முதலில் கருத்துக் கணிப்பு யார் யாரிடம் எங்கே என்ன பிரிவினரிடத்தில் எடுக்கப்பட்டது என்பது குறித்த விளக்கப் படங்களைப் பாருங்கள்.
_______
சர்வேயில் பங்கேற்ற மொத்த மக்கள்
____________________
சர்வேயில் பங்கேற்ற மக்கள் இடம் வாரியான எண்ணிக்கை மற்றும் சதவீதம்
____________________
சர்வேயில் பங்கேற்ற மக்கள் வயது வாரியான விவரம்
____________________
சர்வேயில் பங்கேற்ற மக்களின் வருமான ரீதியிலான பிரிவு எண்ணிக்கை மற்றும் சதவீதம்
____________________
சர்வேயில் பங்கேற்ற மக்களின் நகரம், கிராமம் சதவீதம்
____________________
சர்வேயில் பங்கேற்ற 3157 பேரில் நாளிதழ் படிக்கும் பழக்கம்
____________________
சர்வேயில் பங்கேற்ற 3157 பேரில் டி.வி செய்தி பார்க்கும் பழக்கம்
____________________
சர்வேயில் பங்கேற்ற 3157 பேரில் நாளிதழ், டி.வி செய்தி இரண்டும் பார்க்கும் பழக்கம்
____________________
சர்வேயில் பங்கேற்ற 3157 பேரில் கட்சி ஆதரவு
____________________
கருத்துக் கணிப்பு முடிந்த பிறகு அனைத்து படிவங்களையும் கணினியில் பதிவு செய்யும் இமாலய பணி அச்சுறுத்தியது. அடுத்த நாளே வந்த வர்தா புயல் எமது பணியை பெரிதும் பாதித்தது. பிறகு தகவல் பதிவு செய்வதற்கான மென்பொருளை தயார் செய்து பல தோழர்கள் தமது அலுவலக பணிகளை முடித்து விட்டு கணினியேற்றம் செய்தனர். ஒரிரு தோழர்கள் இதற்காக கடுமையாக உழைத்தனர். பிறகு தகவல் பதிவு முடிந்து அதை பல்வேறு முறைகளில் சரிபார்த்து, பல்வேறு முறைகளில் இணைத்து ஆய்வு முடிவுகளை எடுக்கும் பணி நடந்தது. இறுதியாக வரைபடங்களை தயாரித்து அனைத்தும் சர்வே முடிவுகளாக உங்கள் பார்வைக்கு வருகிறது.
அனைத்து இடங்களையும் சேர்த்து இந்த கருத்துக் கணிப்பிற்கு ஆன செலவு, படிவம் தயாரிப்பு, எழுது பொருள் செலவு, உணவு தேநீர் செலவு அனைத்தும் சேர்ந்து ரூ. 6,000த்திற்குள் மட்டும்தான். சென்னை சர்வேயில் பங்கேற்ற தோழர்கள் பலர் தமது காலை, மதிய உணவை அம்மா உணவகத்தில் முடித்தனர். அதுவும் அன்றைக்கு ஜெயலலிதா மரணத்தை ஒட்டி அங்கே இலவசமாக வழங்கப்பட்டது.
பொதுவாக கருத்துக் கணிப்புக்கான செலவு என்பது சந்திக்கப்படும் மக்களின் தலைக்கு இத்தனை ரூபாய் என்று தீர்மானிக்கப்படுகிறது. மேலோட்டமான சர்வே, விரிவான சர்வே, ஆழமான சர்வே என்று இதற்கு முதலாளித்துவ உலகம் விலையை நிர்ணயித்திருக்கிறது. வினவு சர்வேயை அதோடு ஒப்பிட்டுப்பார்த்தால் தலைக்கு 1000 ரூபாய் என்று வைத்தால் முப்பது இலட்சம் வருகிறது. அதையே ரூ.6000 செலவில் உங்களுக்குத் தருகிறோம்.
கருத்துக் கணிப்பில் கேட்க்கப்பட்ட கேள்விகள் – அதற்கு மக்கள் அளித்த பதில்கள்:
1. எல்லையில் வீரர்கள் கஷ்டப்படும் போது ஏ.டி.எம்.மில் நிற்க உனக்கு என்ன கேடு என்ற கேள்வி
____________________
2. ஜெயலலிதா, சசிகலா, சன் டி.வி மாறன்களின் கருப்புப் பணத்தை மோடி கைப்பற்றுவாரா?
____________________
3. கருப்பு பணத்தில் 50% அரசுக்கு கொடுத்துவிட்டு 50% வைத்துக் கொள்ளலாம் என்று சென்ற வாரம் மோடி அரசு புதிய சட்டம் கொண்டு வந்திருப்பது சரியா, தவறா?
____________________
4. பார்ட்டிசிபேட்டரி நோட் என்பது பற்றி தெரியுமா?
____________________
5. கருப்புப் பணம் அதிகமாக இருப்பது எங்கே?
____________________
6. ரஜினி, அமிதாப் பச்சன் போன்ற நடிகர்கள் வாங்கும் சம்பளம் எத்தகையது?
____________________
7. மோடியின் நடவடிக்கையால் அரசு அலுவலகங்களில் இலஞ்சம் ஒழியுமா?
____________________
8. அண்ணாச்சி கடைகளில் நீங்கள் எந்த முறையில் பொருள் வாங்க விரும்புகிறீர்கள் ?
____________________
9. இனிமேல் தனியார் பள்ளி / கல்லூரிகளில் கருப்புப் பணமாக வாங்கப்படும் கட்டாய டொனேசன் நிறுத்தப்படுமா?
____________________
10. பி.ஜே.பி., காங்கிரஸ் கட்சிகளுக்கு முதலாளிகள் கொடுக்கும் நன்கொடை
____________________
11. மோடி நடவடிக்கையால் பாதிப்பிருந்தாலும் நீங்கள் ஏன் போராடவில்லை?
____________________
12. மோடியின் நடவடிக்கையால் சிறுதொழில்கள், சிறு வணிகம் தொழிலாளிகளுக்கு வேலை கிடைக்கவில்லை. என்ன கருதுகிறீர்கள்?
____________________
13. நீங்கள் எத்தனை நாட்கள் வங்கியின் முன் வரிசையில் நின்றீர்கள்?
____________________
“அரசியல்வாதிங்க கஸ்டப்படறாங்களா? எங்க சார்.. ஒரு அரசியல்வாதி கஸ்டப்படறத காட்டுங்க பாக்கலாம்? வயசாளி ஜனங்கதான் சார் லைன்லே நின்னு செத்து விழறாங்க? அந்த ஆளுக்கு ஒரு மனசாட்சி இருக்காதா… இத்தினி ஜனங்க செத்துப் போயிருக்காங்களேன்னு உறுத்தாதா? என்ன சார் ஜென்மம்”
“இல்லைங்க.. இப்படியெல்லாம் கொஞ்சம் நாள் சிரமங்கள் இருக்கும், அதைப் பொறுத்துக்கிட்டா எதிர்காலம் நல்லா இருக்கும்னு தானே மோடி சொல்றாரு? கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டாமா?”
“ஒழிக்கட்டும்.. யாரு வேண்டாமின்னு சொன்னா? ஆனா இவரா ஒழிக்கப் போறாரு? அம்மா செத்து மாலை போட வந்தவரு.. நேரா போயி சசிகலா மண்டைய நீவிக்கிட்டு நிக்கிறாரு. இவரு எங்கேர்ந்து கருப்புப் பணத்தை ஒழிச்சிடப் போறாரு?”
– வினவு சர்வேயில் தனியார் பள்ளி ஆசிரியையின் கருத்து
சிறுபான்மை என்றாலும் கணிசமான மக்கள் “மோடியின் நடவடிக்கை கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கானதே” என்று நம்பினர். அவ்வாறு நம்பியவர்களும் மோடியின் நடவடிக்கையை ஆதரிக்காதோரும் மதிப்பழிப்பு நடவடிக்கை செயல்படுத்தப்படும் முறையை மிகக் கடுமையாக விமரிசித்தனர். ஆச்சரியமாக, பாரதிய ஜனதா ஆதரவாளர்களும், மோடியின் இரசிகர்களுமே கூட இந்நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழிந்து விடாது என்றே தெரிவித்தனர்.
உழைக்கும் மக்களில் ஒரு சிறு பிரிவினர் தாம் அனுபவிக்கும் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளை ‘தேச நலனை’ முன்னிட்டு தாங்கிக் கொள்வதாக தெரிவித்தனர். என்றாலும், பெரும்பான்மை மக்கள் மோடியின் நடவடிக்கை கருப்புப் பண ஒழிப்புக்கானது அல்ல என்றே நம்புகின்றனர். பொருளாதார ஆய்வுகளில் இருந்தோ, பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையிலோ மக்கள் அந்த முடிவுக்கு வந்தடையவில்லை; மாறாக தமது சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளில் இருந்தே அந்த முடிவுக்கு வந்துள்ளனர். அதே நேரம் மோடியின் நடவடிக்கையை ஆதரிக்கும் கணிசமானோரின் கருத்தை உருவாக்கும் பணியில் ஊடகங்களின் செல்வாக்கு இருப்பதையும் நாம் மறுக்க இயலாது.
படிவத்தின் ஆரம்பத்தில் வயது, தொழில், பாலினம், கட்சி சார்பு, டி.வி – தினசரி செய்தி படிக்கும் பார்க்கும் வழக்கம் போன்ற அறிமுக விவரங்களைப் பெற்றுக் கொண்டோம். அதன் அடிப்படையில் இந்த சர்வேயின் முடிவுகள் குறித்த ஆய்வு அடுத்த பாகத்தில் வெளிவரும்.
”கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன்னு சொல்றாரு.. சரிங்க, ஆனா இது வரைக்கும் கருப்புப் பணம் வச்சிருக்கிற ஒரு அரசியல்வாதி, ஒரு காலேஜ் ஓனருன்னு எவனையுமே அரெஸ்ட் பண்ணலைங்களே? தோ பாருங்க.. இன்னிக்கு ஞாயித்துக் கிழமை.. கறியெடுக்க கையிலே காசில்ல. ரெண்டு மூணு நாளாவே வேலை செய்துட்டு இருந்த ஏ.டி.எம்கள் கூட வேலை செய்யாமே கிடக்கு. காலைலேர்ந்து ஒவ்வொரு தெருவா சுத்தி வந்தும் பாத்தாச்சி.. தோ அங்கே பாருங்க.. கார்லே போறான் அவன் கஷ்டப்படுவான்னா நினைக்கிறீங்க?”- என்கிறார் லெட்சுமணன்.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர் சென்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்துள்ளார். லெட்சுமணன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவருக்கு அருகே இருந்த அவரது நண்பர் மணிகண்டன் குறுக்கிடுகிறார்..
“ஏய்.. இருப்பா. தினத்தந்தியப் பாரு வேலூர்ல கோடி கோடியா புடிச்சிருக்கானாம்.. மோடி ஒருத்தனையும் விடமாட்டாருபா..” என்றவர், நம்மிடம் “சார், சுதந்திரத்திலேர்ந்து எத்தினி பேரு ஆண்டிருக்காங்க.. எவன் ஒருத்தனுக்காவது மோடிக்கு இருந்தா மாதிரி தில்லு இருந்திருக்கா? நீங்க வேணா பாருங்க.. இப்ப ரெண்டாயிரம் நோட்டு விட்டிருக்காரா.. இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாரும் அதை வாங்கிப் பதுக்குனதுக்கு அப்புறம் அதையும் செல்லாதுன்னு சொல்லிடுவாரு.” என்றார்.
“அப்படியே செத்து செத்து வெளையாட வேண்டியது தானா? யோவ்.. புடிச்சதெல்லாம் புது நோட்டுய்யா.. கவருமெண்டுக்கே தெரியாம எப்டி அவனுக்கு கிடைச்சிதாம்? என்னாங்கடா கொரளி வித்த காட்றீங்க” என்று தனது நண்பரை முறைத்த லெட்சுமணன், நம்மிடம் திரும்பி “சார், எப்டி பழைய கருப்புப் பணத்தை புது கருப்புப் பணமா மாத்தினானுங்களோ அதே மாதிரி நாளைக்கு ரெண்டாயிரம் நோட்டு செல்லாதுன்னு அறிவிச்சா வேற நோட்டுக்கு மாத்திடுவானுங்க. கவர்மெண்ட்டே இதுக்கு உள்கை சார்” என்கிறார்.
நண்பர்களின் மோதலுக்கு காரணமாகி விடக்கூடாதென அவர்கள் நிரப்பிய படிவங்களை வாங்கிக் கொண்டு நகர்ந்தோம். மோடி ரசிகர் மணிகண்டன் நிரப்பியிருந்த படிவத்தைப் பார்வையிட்டோம் அதில் பள்ளி கல்லூரிகளில் செலுத்தப்படும் டொனேசன் இனிமேலும் கருப்பாகத் தான் இருக்கும் என்பதற்கான பெட்டியில் டிக் அடித்திருந்தார். இருபத்தைந்து வயதுக்கு கீழ் இருந்த இளைஞர்கள் பெரும்பாலும் அரசியல் கட்சி ஆதரவற்றவர்களாவோ, மோடி ரசிகர்களாகவோ இருந்தனர். அவர்களுமே கூட இந்நடவடிக்கை லஞ்சத்தை ஒழித்து “வெள்ளையான” இந்தியாவைப் படைக்கும் என நம்பவில்லை.. “ஒரு அட்டெம்ப்ட் தானே பாஸ்” என்றார் ஒரு இளைஞர். அதே நேரம் இந்த பிரிவினர் குறிப்பாக மாணவர்கள் நாட்டு நடப்பு குறித்த பொது அறிவு ஏதுமற்றும் இருந்தது உண்மை. அது குறித்த ஆய்வும் இரண்டாம் பாகத்தில் வரும்.
“ஒன்றுமில்லாததற்கு ஏதோவொரு முயற்சி எடுப்பது நல்லது தானே” என இளைஞர்கள் நினைக்கிறார்கள் என்றால் குடும்பத் தலைவிகளின் கருத்தோ அதற்கு நேர் எதிரான திசையில் இருந்தது.
“மோடி அக்கவுண்டுலே காசு போடுங்கன்னு சொன்னதை நம்பி 13 ஆயிரத்த போட்டேன் தம்பி. ரெண்டு நா மின்ன போயி கேட்டா காசு தரமாட்டோமின்னு பேங்குல சொல்லிட்டாங்க. நான் போயி மேனேஜரு கிட்டே அழுகவும் ஒரு நாளைக்கு ரெண்டாயிரம் தாரோமின்னு சொன்னாரு. அன்னிக்கு சொன்ன படி காசு குடுத்தாங்க. நேத்து காசு எடுக்கலாமுன்னு ஆட்டோவுக்கு போக வர 100 ரூபா செலவு செஞ்சிட்டு பேங்குக்கு போனா இல்லேன்னு திருப்பி அனுப்பிட்டாங்க” என்கிறார் 60 வயதான பாத்திமா என்கிற முதிய பெண்.
அவரது வீட்டு வாடகையை வசூலிக்க புரசைவாக்கத்திலிருந்து வந்திருந்தார் வீட்டு உரிமையாளர். அவருக்கு அறுபது வயதுக்கு மேலிருக்கும்.
“சார் தப்பா நெனச்சிக்காதீங்க.. இன்னும் ரெண்டு ஒரு நாள்லே நானே கொண்டாந்து குடுத்துடறேன்” என்று அவரிடம் சொல்லி வழியனுப்பிக் கொண்டிருந்தார் பாத்திமா.
“மனுஷனுக்கு மனுஷன் இது கூட செய்யாட்டி எப்படிம்மா..” என்றவர் இரண்டடி நகர்ந்த பின் திரும்பி ”காசு கிடைச்சதும் கொண்டாந்து குடுத்துடுங்க.. இப்ப நான் வந்து போறதுக்கே இருநூறு ரூபா செலவு செய்திட்டேன்” என்றபடி நடையைக் கட்டினார்.
“பாருங்க தம்பி, இனி நான் வாடகை குடுக்க போக வர ஆட்டோவுக்கு செலவு செய்யனும். வயசாயிப் போச்சி.. பஸ்சுலயும் போக முடியாது. ஏதோ ஓனரு நல்ல மனுசனா இருக்கப் போயி பதினோராந்தேதி ஆகியும் வாடகை வசூலாகலைன்னு சத்தம் போடாம போறாரு” என்கிறார் பாத்திமா.
குடும்ப பாரத்தை தாங்குவதற்காக சிறிய நிறுவனங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் பலருக்கும் சம்பளம் அளிக்கப்படவில்லை.
“சார் எங்க மேடம் தினசரி கொஞ்சம் கொஞ்சமா காசு எடுத்து அதையெல்லாம் சேத்து வைச்சி தான் சம்பளம் குடுக்க முடியும்னு சொல்லிட்டாங்க. இப்ப செலவுக்கு நாங்க எங்க சார் போவோம்? மோடி குடுப்பாரா சார்?” என்றார் தனியார் பள்ளி ஆசிரியை ப்ரமிளா.
அதே நேரம் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருக்கும் இல்லத்தரசிகளும் அரசியல் – பொது அறிவில் பின்தங்கியிருப்பதை பார்க்கமுடிகிறது. அவர்களின் கருத்தை டி.விக்கள் உருவாக்குகின்றன என்பதை மறுக்க முடியாது. இல்லத்தரசிகளில் கணிசமானோர் மோடியின் நடவடிக்கைகளை ஆதரிக்கின்றனர். ஆனால் வேலைக்கு போகும் பெண்களோ மோடியை கடுமையாக எதிர்க்கின்றனர். இது குறித்த ஆய்வும் பின்னர் வரும்.
மக்களின் துயரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. அரும்பாக்கம் அண்ணா பெரும்பாதையில் இருக்கும் கறிக் கோழி கடைக்காரர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தோம்.
“யாரும் செலவு செய்யத் தயாரில்ல சார். கைலேர்ந்து போனா வராதுன்னு எல்லாரும் கிடைச்ச ஆயிரம் ரெண்டாயிரத்தையும் வீட்லேயே வைச்சி பாத்து பாத்து தண்ணி குடிச்சிட்டு இருக்கானுங்க. எங்க பொழப்பு நாறிடிச்சி சார்” என்றார்.
அவருக்கு அக்கம் பக்கமாக கடை போட்டிருந்தவர்கள் தற்போது வியாபாரம் இல்லாமல் மூடி விட்டதாகத் தெரிவித்தார். “சார் இந்தக் கோழியெல்லாம் தாங்காது சார். வர வர தள்ளி வுட்டுடனும். தேங்கிடிச்சின்னா நம்ப கைக்காசு தான் போகும்” என்றவர், பகுதியில் இருந்த சில அசைவ உணவகங்களின் ஆர்டர் குறைந்த அளவிலாவது வந்து கொண்டிருப்பதால் தனது பிழைப்பு ஏதோ ஓடிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அவரிடம் ஸ்வைப் மிசின் வைத்துக் கொள்வதில் என்ன பிரச்சினை என்று கேட்டோம் “சார், நான் படிச்சதே அஞ்சாங்கிளாஸ் தான்.. அதுக்கெல்லாம் என்னா ரூல்சுன்னே தெரியாது சார்” என்றார்.
இரண்டு சக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் ஏஜெண்ட் ஒருவர், வங்கி அட்டைகளைத் தேய்த்து வண்டி வாங்கிச் சென்ற தனது வாடிக்கையாளர்களின் அடையாள அட்டை நகல்களை ஒப்படைக்க வேண்டுமென அவரது வங்கி திடீரென சொன்னதாகவும், இப்போது அந்த வாடிக்கையாளர்களை எங்கே போய்த் தேடுவதெனத் தெரியவில்லை எனவும் புலம்பினார். மேலும், பல சந்தர்பங்களில் வங்கி அட்டைகளைத் தேய்த்து வண்டி வாங்கிச் சென்று இரண்டு நாட்கள் கழித்தே தனது கணக்குக்கு பணம் மாறுவதாகவும் தெரிவித்தார்.
“சரிங்க.. மோடி நாட்டோட பிரதமரு. அவரு சொல்றதுல எதுனா அர்த்தம் இருந்தாகனும் இல்ல. நீங்க கண்டிப்பா கார்டுல தான் வண்டி தருவேன்னு சொல்லிட வேண்டியது தானே?”
“சார் இதுக்கு இணையம் வேலை செய்யனும். அப்படியே வேலை செய்தாலும் பேங்க்கோட சர்வர் ஒழுங்கா இருக்கனும்.. அதாவது மூட்டைப்பூச்சி நசுக்கற மிசின் மாதிரி சார். அப்படியே ரெண்டு நாள் கழிச்சி நம்ம அக்கவுண்டுக்கு காசு வந்தாலும், ஒரு வாரத்துக்கு இவ்வளவு தான் எடுக்க முடியும்னு லிமிட் செட் பண்ணியிருக்காப்ல மோடி.. அப்புறம் நாங்க ரொட்டேசனுக்கு எங்கே போவோம்? எல்லாம் கேட்கிறதுக்கு நல்ல இருக்கும் அவ்ளோ தான் சார்” என்றார் சலிப்பாக.
மக்களின் துன்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வது ஒரு பக்கமென்றால் அதை எந்த வகையிலும் எதிர்க்காமல் சமூகத்தில் நிலவும் அச்சுறுத்தும் மௌனமோ இன்னொரு புறம். அது குறித்த கேள்வியும் படிவத்தில் உண்டு. அதில் பெரும்பாலானோர் வேறு வழியில்லை என்றே தெரிவித்தினர்.
திருச்சியில் முதல் கேள்விக்கு சரி என்றும், தவறு என்றும் டிக் அடித்தவர்களிடம் விளக்கம் கேட்டு அவர்கள் அளித்த பதில் மூன்று வகையாக இருந்தது.
அ.தி.மு.க-பி.ஜே.பி இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் இராணுவ வீரர்கள் நாட்டுக்காக நிற்கின்றனர் நாம் ஏ.டி.எம்-ல் நிற்பது ஒன்றும் தவறு இல்லை. என்று கூறினார்கள்.
கட்சி சாராத அரசு ஊழியர்கள், வியாபரிகள், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ஓரளவு அரசியல் கண்ணோட்டம் உள்ளவர்கள் இராணுவ வீரர்கள் சம்பளத்திற்காக நிற்கின்றனர் எங்களது பணத்தை எடுக்க நாங்கள் ஏன் நிற்க வேண்டும்? வேலைகளை விட்டுவிட்டு இங்கு வந்து காத்துக் கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு எத்தனை முதலாளிகள் காரை ரோட்டில் போட்டு விட்டு நிற்கிறார்கள்? நீங்களே பாருங்கள். மோடி வந்து வரிசையில் நிற்பாரா? இல்லை. இந்த ஆளு நிர்வாக திறமையில்லாத நபருங்க இந்த இரண்டாயிரம் பணத்திற்காக தினமும் இந்த வெயிலில் நிற்க வேண்டியுள்ளது, என்று கூறினார்கள்.
இன்னும் சிலபேர் அரசுக்கு சார்பாக சர்வே எடுக்கிறீங்களா? என்று கேட்டனர். இல்லை ஊடக ஆராய்ச்சி என்று ஏதோ சொன்னதும் ஒருவர் உங்களால் தான் இந்த மோடி ஆட்சிக்கு வர முடிந்தது. விளம்பரம் செய்தே பிரதமரா வந்துவிட்டான் பாவி, உங்களை முதலில் உதைக்க வேண்டும் என்றார். சிலர் மோடியின் நோக்கமே வரி கூட்டுவதற்கு தான் இப்படி செய்கிறார் என்றனர்.
மூன்று நபர்கள் படிவத்தில் அரசியல் கட்சிகளின் பெயர்களை வெளிப்படையாக போடக்கூடாது (காங் + பா.ஜ.க வாங்கும் கருப்புப் பண நன்கொடை குறித்த கேள்வி) எவனாவது சண்டைக்கு வருவார்கள், அதனால் பெயர்களை தவிர்த்து விடுங்கள் என்றனர். சிலர் ஏ.டி.எம் வரிசையில் நிற்பவர்கள் கருப்பு பணம் வைத்துள்ளவர்களா? என்ற கேள்வியையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றனர்.
திருச்சியின் மைய SBI வங்கிக்கு முன் எடிஎம் வரிசையில் உள்ளவர்களிடம் சர்வே எடுத்த போது தான் மோடியை கெட்டவார்த்தைகளில் திட்டினார்கள். முக்கியமாக நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான் அதிக படியான பாதிப்பில் உள்ளதாக கருத்து தெரிவித்தனர்.
அதே நேரம் குடியிருப்பிலோ, மதுரை நீதிமன்ற வளாகத்திலோ மோடியை ரசிக்கும் மக்களும் உண்டு. கோவையில் பா.ஜ.க தரப்பினரும் டி.வி விவாதங்களில் பேசுவது போலவே சொல்கின்றனர். இருப்பினும் படிவத்தில் அவர்கள் அனைத்திற்கும் மோடிக்கு ஜே போடவில்லை.
கட்சி சார்பு என்று பார்த்தால் எங்களது கணிப்பில் மொத்த மக்களில் 4 சதவீதம் பேர் பா.ஜ.க-விற்கு ஆதரவு என்றே தெரிவித்திருக்கின்றனர். அவர்களுடைய கருத்துரைக்கும் பாணியும், அ.தி.மு.கவினரின் பாணியும் பெரிய அளவில் வேறுபடவில்லை. ஆனால் அ.தி.மு.கவில் சாதாரண மக்களும் பா.ஜ.கவில் நடுத்தர வர்க்கமும் பெரும்பான்மையாக இருக்கின்றனர். தி.மு.க செல்வாக்கு அதிகம் இருந்த தஞ்சை, வேலூர் பகுதிகளில் கருத்துக்கள் மற்ற ஊர்களை விட மாறுபட்டு இருப்பதையும் பார்க்க முடிந்தது.
சென்னையில் சொந்தமாக பட்டரை வைத்திருக்கும் மெக்கானிக் ஒருவரை சந்தித்தோம். குழந்தைக்கு உடல் சுகமில்லை எனவும், கடந்த மூன்று நாட்களாக வங்கியில் பணம் எடுக்க முடியாமல் தவிப்பதாகவும், தெருவில் போவோர் வருவோரில் எப்போதோ பார்த்து சிரித்தவர்களைக் கூட விடாமல் கைநீட்டி காசு கேட்டும் கிடைக்கவில்லை என்றும், கிட்டத்தட்ட பிச்சைக்காரனின் நிலைக்கு தான் வந்து விட்டதாகவும் சொல்லிக் கண்கலங்கினார்.
“சரிங்க… கஸ்டப்படறேன்னு சொல்றீங்க. இதுவரைக்கும் நாங்கள் பார்த்த பலரும் இதையே தான் சொல்றாங்க ஆனா ஏன் யாருமே போராட முன்வரலை?”
“வேற வழியில்ல சார்..” என்றவர் அவரிடமிருந்த படிவத்தை நம்மிடம் தந்து விட்டு தலையைக் குனிந்து கொண்டார்.
மொத்தத்தில் மிகப் பெரிய ஏமாற்றம் ஒன்றை மக்களிடம் காண முடிந்தது. அதோடு கூட எப்போது வெடிக்கும் எனத் தெரியாத எரிமலை ஒன்று உள்ளே குமைந்து கொண்டிருப்பதையும் கண்டுணர முடிந்தது.
தகவல் தொகுப்பு: வினவு செய்தியாளர்கள் மற்றும் ம.க.இ.க மதுரை, திருச்சி, தஞ்சை, கோவை, வேலூர் தோழர்கள்
வரைபடம், வடிவமைப்பு: துரை – கலா
களப்பணி: ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள் மற்றும் வினவு செய்தியாளர்கள்
மென்பொருள், தகவல் பதிவு: வினவு தொழில்நுட்பக் குழு
ஆய்வு – ஒருங்கிணைப்பு: வினவு கருத்துக் கணிப்புக் குழு
1 மறுமொழிகள் | விவாதத்தில் பங்குபெறுங்கள்
ஜெயலலிதா தமிழரே தாய்மொழி தமிழே
தினத்தந்தி தினமலரின் பொய் முகம் பாரீர்
தினத்தந்தி தினமலரின் , தினகரன் உட்பட சில நாளிதழ்கள் மீது காவல்துறை இணை இயக்குனர் திரு. திரிபாதி (ADGP) அவர்களை சந்தித்து புகார் அளித்தோம் …
சமீபத்தில் மதுரையை சேர்ந்த அப்பாஸ் அலி , சம்சுன் கறீம் ராஜா , சுலைமான் ஆகியோரை தேசிய புலனாய்வு ஏஜென்சி IPC mysore PS Case No 63/2016 under section 120 b , 121,121a UAPA சட்டத்தின் படி கைது செய்வதாக கூறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மைசூர் அழைத்து சென்றுள்ளனர் …
ஆனால் தினமலர் , தினதந்தி , தினகரன் போன்ற ஊடகங்கள் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 22 தலைவர்களை கொல்ல சதி என்று தலைப்பு செய்தியும் , அல்-குவைதா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் முஸ்லீம்களுக்கு எதிரான தவறான செய்தி வெளியிட்டு முஸ்லீம்களை வன்கொடுமை செய்கின்றனர் ..
எங்களின் மனுவை பெற்றுக்கொண்ட இணை இயக்குனர் நாங்கள் (போலீஸ்) ஊடகத்திற்க்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முடியாது நீங்க நீதி மன்றத்தில் வழக்கு தொடுங்கள் , அல்லது பிரஸ் கவுன்சிலில் புகார் கொடுங்கள் என்றார் மிக விரைவில் இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம் இன்ஷாஅல்லாஹ் ..
ரசூல் மைதீன்
தலைமை நிலையச்செயலாளர்
அப்ரோஸ் பாஷா
தென்சென்னை மாவட்ட தலைவர்
முஹம்மது யூசுப்
வடசென்னை மாவட்ட தொண்டரணி தலைவர்
உத்தமபாளையம் சித்திக் ஆகியோர் உடனிருந்தனர் உடன்
அனபுடன்
தடா ஜெ.அப்துல் ரஹிம்
இந்திய தேசிய லீக் கட்சி
மாநில தலைவர்
தினத்தந்தி தினமலரின் பொய் முகம் பாரீர்
ஒரு அடிமுட்டாளை – பொறுக்கியை ஏன் அமெரிக்கர்கள் தங்கள் அதிபராகத் தெரிவு செய்தனர்?
ஜனநாயகத்தின் பக்தர்கள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் தெருவில் இறங்கிப் போராடி வருகின்றனர். இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த மாபெரும் தோல்வி என்கின்றனர் அமெரிக்கத் தெருக்களில் பேரணியாகச் செல்லும் மக்கள். அமெரிக்க முதலாளித்துவ பத்திரிகைகளோ திகைப்பில் ஆழ்ந்துள்ளன – நடந்து முடிந்த சம்பவங்களை நம்ப முடியாபமல் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.
உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அதற்கெல்லாம் பொருள் விளக்கம் சொல்லும் அமெரிக்க அறிவுஜீவிகள் சொந்த நாட்டில் நடந்து முடிந்துள்ளவற்றுக்கு என்ன சொல்வதெனத் தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். எதிர்காலத்தில் நிலைமையை எப்படிச் சமாளிப்பது, எந்தவிதமாக தங்களது நலன்களைக் காத்துக் கொள்வது என முதலாளி வர்க்கம் ஆலோசிக்கத் துவங்கி விட்டது. அமெரிக்காவின் அண்டை நாடுகள் வேறுவழியின்றி ’பொறுத்திருந்து’ பார்க்கப் போவதாக அறிவித்துள்ளன. தேர்தல் கருத்துக்கணிப்புப் புலிகளோ தங்கள் தலைகளை பூமிக்குள் புதைத்து விட்டு ஆசன வாயால் முனகிக் கொண்டுள்ளனர்
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்றுள்ளார்.
முதலாளித்துவ பத்திரிகைகள் நம்பமுடியாத ஒன்று நடந்தேறி விட்டது போல புலம்பி வருகின்றன. அமெரிக்க ஜனநாயகத்தின் பக்தர்களோ ஒரு சுபயோக சுபதினத்தில் உலக ஜனநாயகத்தின் கருவறையை முதன்முறையாக திறந்து பார்த்ததைப் போலவும், அது உண்மையில் விபச்சார விடுதியின் அறையாக இருப்பதை அப்போது தான் கண்டுபிடித்தவர்களைப் போலவும் வாயடைத்துப் போய் நிற்கின்றனர். டிரம்பின் வெற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஒரு அடிமுட்டாளை – பொறுக்கியை – ஊரறிந்த அயோக்கியனை – புளுகனை – ஏமாற்றுக்காரனை – பெண் பித்தனை ஏன் அமெரிக்கர்கள் தங்கள் அதிபராகத் தெரிவு செய்தனர்?
முதலில் இந்தத் தேர்தல் நல்லவற்றுக்கும் தீயவற்றிற்கும் இடையே நடந்த மோதல் அல்ல. கேவலத்திற்கும் கழிசடைக்கும் இடையே நடந்த போட்டி – இதில் கழிசடை வென்றுள்ளது. பல ஜனநாயக காதலர்கள் முன்னிறுத்தியதற்கு நேர் எதிரான பிம்பம் கொண்டவர் ஹிலாரி கிளிண்டன். குறிப்பாக விக்கிலீக்ஸ் பகிரங்கப்படுத்திய மின்னஞ்சல்கள் ஹிலாரி எந்தளவுக்குப் போர் வெறி கொண்டவர் என்பதையும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தோற்றத்தில் நேரடியாக பங்குடையவர் என்பதையும் அம்பலப்படுத்தின.
பெருவாரியான வெள்ளையின தொழிலாளிகள் டிரம்புக்கு வாக்களித்தோடு, அமெரிக்காவின் மத்திய பகுதி மொத்தமும் அவரை ஆதரித்திருப்பது தற்போது தெளிவாகியுள்ளது. இவர்களில் கணிசமானவர்கள் படிப்பறிவில்லாதவர்கள், இனவெறியர்கள் என்பதையும் அமெரிக்க ஊடகங்கள் தற்போது பீறாய்ந்து வருகின்றன. குடியரசுக் கட்சி சார்பாக அதிபர் வேட்பாளராவதற்கான போட்டியின் போது நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் வெள்ளை இனத்தவர்களின் குரலை ஓங்கி ஒலித்தார் டிரம்ப்.
தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து வந்த சமயத்திலேயே குடியரசுக் கட்சியில் பெருவாரியாக தங்களை இணைத்துக் கொண்டு டிரம்புக்கு ஆதரவான பிரச்சாரங்களை நடத்தி வந்தனர், கூ கிளக்ஸ் கிளான் என்கிற வெள்ளை நிறவெறி அமைப்பின் உறுப்பினர்கள். எட்டாண்டுகளாக நடக்கும் கருப்பினத்தைச் சேர்ந்த ஒபாமாவின் ஆட்சி, அதிகரித்து வரும் எல்.ஜி.பி.டி உரிமைகள் குறித்த விவாதங்கள் உள்ளிட்டவைகளோடு அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபராக முன்னிறுத்தப்பட்ட ஹிலாரி கிளிண்டன் என அனைத்தும் ஒன்று சேர்ந்து வெள்ளை இனவெறியர்களை மொத்தமாக டிரம்பின் பின் அணிதிரட்டியது. டிரம்ப் வென்றதை அடுத்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் அவரை அதிபராக ஏற்க மறுத்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், கூ கிளக்ஸ் கிளான் வெற்றிப் பேரணிகளை நடத்தி வருகின்றது.
இது ஒருபுறம் இருக்க, அமெரிக்க வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் ஹிலாரி கிளிண்டனை ஸ்தாபனத்தின் (Establishment) பிரதிநிதியாக (ஆளும் வர்க்கத்தின் ஒட்டு மொத்தமாக) அடையாளம் கண்டனர். இதோடு சேர்த்து கடந்த எட்டாண்டு ஜனநாயக கட்சியின் ஆட்சியும், அதற்கு எதிரான அதிருப்தியையும் ஹிலாரி சுமக்க வேண்டியிருந்தது. இதனுடன் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தல்களும் இணைந்து கொள்ளவே, அவருடைய தோல்வி ஏறக்குறைய உறுதியானது.
இதற்கு நேர்மாறாக டொனால்ட் டிரம்ப் அமைப்பு முறைக்கு எதிரானவராக அடையாளம் காணப்பட்டார். தேர்தல் பிரச்சாரங்களின் போது டிரம்ப் அடித்த வாய்ச்சவடால்களை ‘அறிவார்ந்த’ பத்திரிகையாளர்கள் முகம் சுழித்த போது மக்கள் முகம் மலர்ந்தனர். ஃபோர்ட் கார் கம்பெனித் தொழிற்சாலைக்கு அருகே நடந்த பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய டிரம்ப், “ஏய் போர்டு கம்பெனி முதலாளியே, இங்கேயிருந்து தொழிற்சாலையை மெக்சிகோவுக்கு மாற்றினால், அமெரிக்காவுக்குள் நுழையும் ஒவ்வொரு காருக்கும் வரியைப் போட்டுத் தீட்டி விடுவேனாக்கும்” என்று முழங்கிய போது கூடியிருந்த தொழிலாளர்கள் ஆர்ப்பரித்தனர். இதே போல் சீனாவில் உற்பத்தியாகும் ஆப்பிள் போன்களுக்கு வரியை உயர்த்தப் போவதாக டிரம்ப் அறிவித்து முதலாளிகளின் வயிற்றில் புளியைக் கரைத்தார் – மக்களோ அதை இரசித்தனர்.
அடுத்து, ஒபாமாவின் தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் அதன் வெளியுறவுக் கொள்கைகளை புதிய பிற்போக்குவாதிகளும் (Neo conservatives) தாரளவாத போர்வெறியர்களுமே (Liberal hawks) தீர்மானித்தனர். அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்குச் சேவை புரியும் இப்பிரிவினரால் ஆக்கிரமிக்கப்பட்ட சிந்தனைக் குழாம்களின் வழிகாட்டுதல் சிரியா உள்ளிட்ட போர்களையும், ரசியாவுடனான மோதல் போக்கையும் தீர்மானித்தன.
துவக்கத்திலிருந்தே ரசியாவுடன் மோதல் போக்கைக் கைவிடுவதைக் குறித்து பேசி வந்த டிரம்ப், சிரிய போர் அமெரிக்காவின் மிகப் பெரிய தவறு என விமர்சித்து வந்தார். தற்போது டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், அமெரிக்காவின் மத்திய கிழக்குக் கொள்கையிலோ, ரசியாவுக்கு எதிரான போக்கிலோ எதாவது மாற்றம் ஏற்படுவதற்கான அடிப்படை உள்ளதா? இல்லை. ஏனெனில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை என்பது அதன் ஏகாதிபத்திய பொருளாதார நலன்களை அடிப்படையாக கொண்டது. ஒரு நாட்டுடன் போர் வேண்டுமா வேண்டாமா என்பதை முதலாளிகளின் பிரதிநிதிகளால் கட்டுப்படுத்தப்படும் அமெரிக்க ஆளும் வர்க்கமே தீர்மானிக்கிறது – அதை அறிவிக்கும் உரிமை மட்டுமே அதிபருக்கு உண்டு.
எனினும், டிரம்ப் தனது பிரச்சாரங்களில் போர்களுக்கு எதிராகவும், அமெரிக்க பொருளாதார நலன்களுக்கு எதிராக (ரசியாவுடன் இணக்கமாகச் செல்வது) எப்படி பேசினார்? இது அமெரிக்க ஆளும் வர்க்கம் மற்றும் அதன் நலன்களை பிரதிபலிக்கும் அமெரிக்க அரசு கட்டமைப்புக்கும் எதிராதனாயிற்றே? அவர் ஏன் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள வேண்டும்? இங்கே தான் டிரம்பின் தனிப்பட்ட பண்புகள் முன்னுக்கு வருகின்றன.
டொனால்ட் டிரம்ப், ஹிலாரி கிளிண்டனைப் போல் ‘அனுபவம்’ வாய்ந்த அரசியல்வாதி அல்ல. பிறக்கும் போதே வாயில் வெள்ளிக் கரண்டியோடு பிறந்தவர். அவரது வாயிலிருந்து கரண்டியை உருவும் போது என்னவெல்லாம் வழிகிறதோ அதெல்லாம் கட்டளைகள். அந்தக் கட்டளைகளை நிறைவேற்றும் கடமை அந்தக் கட்டளைகளுக்கு உட்பட்ட அனைவருக்கும் உண்டு என நம்புகிறவர்.
தானே ஒரு பெருமுதலாளி என்பதால் , அந்த உலகத்தின் இருண்ட பக்கங்கள் டிரம்புக்கு தெள்ளத் தெளிவாகத் தெரியும். அரசாங்கத்தின் திரைமறைவு இயக்கம், அது எந்தளவுக்கு முதலாளிகளின் நலனோடு பிணைக்கப்பட்டுள்ளது, அரசுக்கு முதலாளிகள் அளிக்கும் உத்தரவுகள் கொள்கை முடிவுகளாக எவ்வாறு அமல் படுத்தப்படுகின்றது, இதில் மக்களுக்கு சொல்லப்படுவது எவை – சொல்லப்படாத உண்மைகள் எவை, போர்கள் ஏன் நடக்கின்றன – அதன் பின் உள்ள சொல்லப்படாத காரணங்கள், மக்கள் நலன் என்பதாக முன்வைக்கப்படும் திட்டங்களின் உண்மை நோக்கம் என்ன – என்பதெல்லாம் மக்களை விட மிகத் தெளிவாக அதே உலகத்தில் இயங்கும் டிரம்புக்குத் தெரியும்.
அவர் ஒரு முதலாளி என்றாலும் உதிரித்தனம் கொண்ட மைனர். எனவே, ரசியாவுடனான மோதல் போக்கோ, சிரியாவில் நடக்கும் போரோ… எதனைக் குறித்தும் பேசும் முன்பாக அது முதலாளித்துவ வர்க்கத்தின் நலனைக் கட்டிக் காப்பாற்றும் அரசுகட்டமைவின் (Establishment) கருத்துடன் ஒத்துப் போக வேண்டுமே என்கிற அச்சம் டிரம்பிடம் இல்லை. அவர் அந்தக் கட்டமைவிற்கு மேலாகத் தன்னை நிறுத்திப் பார்க்கிறார். எனவே அதன் போலித்தனங்களையும், ஊடகங்களின் வழியாக அது எவ்வாறு நியாயப்படுத்தப்படுகின்றது என்பதையும் அறிந்தவர். லட்சக்கணக்கான மக்களின மரணங்களையே குழிதோண்டிப் புதைத்த அந்த உலகத்தில், தனது ‘கருத்துக்கள்’ கடலில் கரைத்த பெருங்காயமே என்பதை அவர் முற்றாக அறிந்துள்ளார்.
அப்படி அனைத்துக்கும் மேலிருந்து பார்ப்பதால், அவர் அளித்த வாக்குறுதிகளுக்கு விளக்கங்கள் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை – பொறுப்பேற்க வேண்டிய தேவையுமில்லை. ஒவ்வொன்றும் பேசும் போது பேச்சாக இருக்கும் – பேசி முடித்த பின் தெறித்து விழுந்த எச்சிலாக இருக்கும். இவற்றில் எதையாவது டிரம்ப் நிறைவேற்றுவாரா? அது அவரின் அந்தந்த நேரத்திய மனநிலையைப் பொறுத்தது. குடிகாரன் பேச்சு போலத் தான். நேற்று வரை நீங்கள் சொன்னவற்றில் இன்னதெல்லாம் நிறைவேற்றப்படவில்லையே என்று நாளை யாராவது கேட்டால் “அப்படியா சொன்னேன்” என்று புறங்கையால் ஒதுக்கி விட்டுப் போவார் அல்லது ”நீ எவன்டா அதைக் கேட்க” என்று அதே புறங்கையை ஓங்கவும் செய்வார்.
எனவே தான், ”ஒபாமா கேரைத் தூக்கிப் போடுவேன் – போட்டபின் எதாவது ஒன்றைக் கொண்டு வந்து விடலாம்” “சீனாவை தட்டி வைப்பேன்” “ரசிய அதிபர் புதின் நல்லவர்.. அவரை ஈசியாக டீல் செய்வேன்” “மெக்சிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஒரு சுவரைக் கட்டுவேன் – அதற்கான செலவை மெக்சிகோவை ஏற்கச் செய்வேன்” என்பதில் துவங்கி எதைக் குறித்தும், எந்த நேரத்திலும், எப்படி வேண்டுமானாலும் அவரால் பேச முடிகிறதது. சீமான், விஜயகாந்த் வகையறாக்கள் அளிக்கும் வாக்குறுதிகளை கவனித்துப் பார்த்தால், அதில் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற பொறுப்போ, நாளை பதில் சொல்லியாக வேண்டுமே என்கிற அச்சத்தையோ நாம் காண முடியாது. டிரம்ப் ஒரு சர்வதேச சீமான்.
ஹிலாரி ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி (Seasoned politician) என்பதால் எதைக் குறித்தும் வாக்குறுதி அளிப்பதற்கு முன் அதன் சாதக பாதகங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு பேச வேண்டியிருந்தது. ஆனால், டிரம்ப் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் சாத்தியப்பாடுகள் குறித்து அவருக்கு எந்த அக்கறையும் இல்லை. வேலையிழப்புக்கு என்ன காரணம்? வந்தேறிகள். அதற்கு என்ன செய்யலாம்? அவர்களை விரட்டியடித்து விடலாம். இதைத் தான் படிப்பறியும், உலக ஞானமும் இல்லாத வெள்ளையின தொழிலாளர் வர்க்கம் விரும்பியது. ஹிலாரி கிளிண்டன் மற்றும் அவரது பிரச்சாரக் குழுவினர் மெனக்கெட்டு கட்டமைத்த “ரசிய பூதம்” “இசுலாமிய வேதாளம்” ”மூன்றாம் உலக காட்டுமிராண்டிகள்” போன்றவற்றை வெறும் வெற்றுச் சவடால்களின் மூலமாகவே ஊதித் தள்ளிவிட்டார் டிரம்ப்.
கடந்த ஓராண்டுகளாக குடியரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களைத் தொடர்ந்து வரும் ஆவணப்பட இயக்குனர் மைக்கேல் மூர், டிரம்ப் வெல்லப் போகிறார் என்பதை முன்னரே யூகித்து விட்டார். குடியரசுக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த வாக்காளர் ஒருவர், மைக்கேல் மூரிடம் “நாம் டிரம்புக்கு ஓட்டளிக்க வேண்டும். அனைத்தையும் தலைகீழாக கவிழ்த்துப் போட வேண்டும்” (Shake things up) என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஏகாதிபத்திய மூலதனம் தனது லாப வேட்டைக்காக உள்நாட்டிலிருந்து உற்பத்தி ஆலைகளை மூன்றாம் உலகநாடுகளுக்குக் கடத்திச் சென்றதால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது அமெரிக்க தொழிலாளர் வர்க்கம். இந்தப் போக்கானது பொதுவில் குற்றச் செயல்களை அதிகரித்திருந்தாலும், குறிப்பாக கருப்பினத்தவரிடம் அதிகரித்தளவில் காணப்படுகின்றது. மாறாக வெள்ளையினத்தவரிடம், வேலையிழப்புகள் நம்பிக்கையற்ற நிலையைத் தோற்றுவித்து போதைப் பழக்கத்தை அதிகரித்துள்ளது. எனவே வழமையான ஆளும் வர்க்கப் பசப்பல்களை அவர்கள் நம்ப மறுக்கின்றனர். மறுபுறம் இதே பிரிவினர் கல்வியறிவற்றவர்களாகவும், அரசியல் அறிவற்றவர்களாகவும் இருப்பதால் டிரம்ப் முன்மொழியும் எளிமையான தீர்வுகளுக்கு பலியாகினர். இதோடு கூடவே, வெள்ளையினத்தின் இறுதி மீட்பராக டிரம்ப்பை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டர் இனவெறி அமைப்பினர்.
தற்போது அமெரிக்கா ஒரு அதிதீவிர வலதுசாரிப் பாதைக்குள் அடியெடுத்து வைத்திருப்பதாகவும், கூ கிளக்ஸ் கிளான் போன்ற இனவெறி அமைப்புகள் குடியரசுக் கட்சியைக் கைப்பற்றும் அபாயம் இருப்பதாகவும் லிபரல் ஜனநாயகவாதிகள் அச்சப்படுகின்றனர். ”டிரம்ப் போன்ற ஒரு அரைவேக்காட்டின் விரல் நுனியில் அமெரிக்க அணுகுண்டுகளை இயக்கும் சிவப்புப் பொத்தான் இருப்பதை நினைத்தாலே நடுக்கமாக உள்ளது” எனப் பதறுகிறது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை.
தாராளவாத ஜனநாயக காதலர்கள் அச்சப்படுவதைப் போல் அணுகுண்டின் சிவப்புப் பொத்தானின் மேல் டிரம்பின் விரல்கள் தாளமிட்டு விடுமா? உறுதியாகச் சொல்ல முடியாது. அரசுக் கட்டமைவிற்கு உள்ளே வானளாவிய அதிகாரத்துடன் நுழைந்துள்ள டிரம்ப்பை அது தனக்கேற்றபடி மறுவார்ப்பு செய்யுமா இல்லையா என்பதைப் பொறுத்தது. ஒருவேளை அரசுக் கட்டமைவின் தேவைகளுடன் டொனால்ட் டிரம்பின் சிந்தனைப் போக்கு பொருந்தி வரவில்லை என்றால்? ஹிலாரிக்கு இருப்பதைப் போல் திட்டமிட்ட கொடூர (systematic cruelty) மனம் டிரம்புக்கு இல்லை என்பதால் – அச்சச்சோ மக்கள் பாவம் என்றும் சிந்திக்கலாம்; அல்லது ஹிலாரியைப் போல் விளைவுகளைக் கணக்கிட்டுப் பார்க்கும் பொறுமை இல்லாததால் – மூன்றாம் உலகக் குரங்குப் பயல்கள் செத்தொழியட்டும் என்றும் சிந்திக்கலாம். எனினும் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்த அமெரிக்க அரசுக் கட்டமைவு தனக்கேற்றபடி டிரம்ப்பை தகவமைத்துக் கொள்ளும் வாய்ப்புகளே அதிகம் என்பதையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து, பெண்களைக் குறித்து இழிவாக சிந்திக்கும் ஒரு பொறுக்கியை எப்படி அமெரிக்க வாக்காளர்கள் தெரிவு செய்தனர் எனக் கலங்குகின்றனர் மேற்கத்திய பாணி பெண்ணுரிமை ஆர்வலர்கள்.
அது தான் அமெரிக்கா. பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடற்கரையோர மாநிலங்களைத் தாண்டி அமெரிக்காவின் மத்திய பகுதி மொத்தமும் தீவிர கத்தோலிக்க அடிப்படைவாத கருத்துக்களுடனும் மத்திய கால கலாச்சார விழுமியங்களுடனுமே உள்ளது. டிரம்ப்புக்கு வாக்களித்த பெண்ணிடம் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிருபர் ஒருவர் ”பெண்களை இழிவாக பேசும் டிரம்ப்புக்கு ஏன் வாக்களித்தீர்கள்?” எனக் கேட்டதற்கு அவர் அளித்த பதில், “அவர் தான் உண்மையான ஆம்பிள்ளை”.
ஆணாதிக்க எதிர்ப்பு, எல்.ஜி.பி.டி இயக்கங்கள், ஒருபாலினத் திருமணங்கள் என்பவை எல்லாம் நகரங்களில் உள்ள படித்த உயர் நடுத்தர வர்க்க அமெரிக்கர்களின் உலகத்துடன் முடிந்து விடுகின்றது. உண்மையான அமெரிக்காவோ கத்தோலிக்க தாலிபான்களின் சித்தாந்தத்தில் லயித்துக்கிடக்கிறது.
இறுதியாக, டிரம்ப் இசுலாமியர்களுக்கு எதிரானவர் என்பதால் இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் எதாவது எலும்புத் துண்டுகள் கிடைக்கும் என வாயில் எச்சிலூறக் காத்திருக்கின்றனர் அமெரிக்கவாழ் இந்தியர்கள். உண்மையில் டிரம்ப் குடியரசுக் கட்சியை வெளியிலிருந்து வந்து கைப்பற்றியவர் என்பதால் உட்கட்சியிலிருந்து எழும் கலகக் குரல்களை எதிர்கொள்ள வெள்ளையின வெறியர்களையே நம்பியுள்ளார். வெள்ளையின வெறியர்களை அவர் தனது ஏவல் நாய்களாகப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இனவெறியர்களைப் பொருத்தவரையில் தலையிலிருப்பது குல்லாவா குடுமியா என்பதல்ல பிரச்சினை – தோலின் நிறம் கருப்பா வெளுப்பா என்பதே முக்கியம்.
எனவே, முதலில் நாஜிகள் தாக்கப் போவது உங்களையல்ல – ஆனால் உங்கள் பாதுகாப்பும் உறுதியல்ல
அமெரிக்கர்கள் Thanks by Vivavu Tamil news