Tamil Political news 

சசிகலா நாற்காலி உங்களுக்கு வாய்க்காமல் போகட்டும்

Shalin Maria Lawrence : ஜெயலலிதா பதவிக்கு வந்தவுடன் ஒரு விஷயம் மட்டும் கண்டிப்பாக செய்திருப்பார் . அது தன் அரசியல் எதிரிகளை பழிவாங்குவது . அதில் மட்டும் தான் அவர் தீவிரமாக இருந்திருப்பார் . சொத்துக்குவிப்பும் , ஜோசிய பைத்தியக்காரத்தனங்களும் , மக்கள் நலன் புறக்கணிப்பும் 1989 ஆம் ஆண்டு சசிகலாவுடன் போயஸ் தோட்டத்தில் வந்து குடியேறிவைகள் . தற்கொலை முயற்சிகளுக்கும் மனப்பிறவிழற்கும் பரிச்சயமான நடிகை ஜெயலலிதாவை அரசியல்வாதி ஜெயலலிதா ஆக்குகிறார் சசிகலா . தன் alter – ego வாக சசியை பார்க்கிறார் ஜெயலலிதா . கிடைக்காத அன்பு கிடைத்த பூரிப்பில் ஆளகிடைத்த மாநிலத்தை தோழியின் காலடியில் சமர்பிக்கிறார் ‘Iron lady ‘ 1991 ஆண்டு முதல் 2016 வரை அதிமுக ஆட்சி என்ற பெயரில் நம்மை ஆண்டது இன்று ‘வேலைக்காரி’ என்று பலரால்…

Read More

'சசிகலா இப்படித்தான் மிரட்டுவார்!' கங்கை அமரன் அனுபவக் கதை

‘முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா நிச்சயம் மிரட்டியிருப்பார்” என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இதுகுறித்து இசையமைப்பாளர் கங்கை அமரன் நமக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டி. முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பதற்கு என்ன காரணம்? என்னுடைய கருத்து யாருக்கும் ஆதரவு கிடையாது. தமிழ்நாட்டின் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து விட்டு மனக்குமுறலுடன் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவரது மனநிலையை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. பேட்டியின் போது சசிகலா, மிரட்டியதாக தெரிவித்தார். நிச்சயம் சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டி இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பையனூர் பங்களாவை சசிகலா என்னிடம் எப்படி மிரட்டி வாங்கினார் என்பது எனக்குத் தெரியும். அதுபோல இன்னும் சில வி.வி.ஐ.பி.க்களிடமிருந்து சசிகலா தரப்பு சொத்துக்களை மிரட்டி வாங்கி உள்ளது. உங்களை சசிகலா எப்படி மிரட்டினார்? பையனூர்…

Read More

காதலிப்பதும் திருமணம் செய்வதும் ஒருவரது தனிப்பட்ட உரிமை

ஆமா பிடல்கேஸ்ட்ரோவுக்கு எத்தனை மனைவியர், துணைவியர்! அவரும் தொழிலாளிபோல வாழ்ந்தாரா? கதை விடக் கூடாது. மாவோ சுகபோக வாழ்க்கை வாழ்ந்தது பொய்யா? Kanagaraj Easwaran இது கீழைத்தேய பழமைவாத மரபிலிருந்து பிறக்கும் தவறான கருத்து. ஐரோப்பாவில் உள்ள பாலியல் சுதந்திரத்தை “சீரழிவுக் கலாச்சாரம்” என்று பிழையாகப் புரிந்து கொள்கிறார்கள். தமிழ்ப் பழமைவாதிகள் மட்டுமல்ல, முஸ்லிம் மத அடிப்படைவாதிகள் கூட இப்படித் தான் வக்கிரமாகச் சிந்திக்கிறார்கள். மேலைத்தேய நாடுகளில் சுதந்திரமான காதல் இருக்கிறது. அதாவது, காதலிப்பதும்  திருமணம் செய்வதும் ஒருவரது தனிப்பட்ட உரிமை, அதில் சமூகம் செல்வாக்கு செலுத்த முடியாது. வயதுக்கு வந்த பிள்ளைகள் என்றால், பெற்றோரும் கட்டுப்படுத்த முடியாது. ஓர் ஆணும் பெண்ணும் விரும்பினால் கூடி வாழலாம். விருப்பமில்லா விட்டால் பிரியலாம். அது அவரவர் விருப்புவெறுப்புகளை பொறுத்த விடயம். அந்தச் சமூகத்தில் தனி மனிதர்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது.…

Read More

அஞ்சு வருஷத்துல மூணு பேரு. இந்த மூணு பேரும் பண்ணிய கூத்துகள்

  எங்க ஸ்டேட் கர்நாடகாவுல சிலபல வருஷம் முந்தி பீஜேப்பீ பவர்ல இருந்தாங்க. அந்த டைம்ல, எடியூரப்பா, சதானந்த கௌடா, ஜெகதீஷ் ஷெட்டர்னு மூணு சீஎம்கள் இருந்தாங்க. அஞ்சு வருஷத்துல மூணு பேரு. இந்த மூணு பேரும் பண்ணிய கூத்துகள் பிடிக்காம, அடுத்த எலக்‌ஷனில் காங்கிரஸ் ஜெயிச்சி, சித்தராமய்யா முதல்வர் ஆனார். கடந்த மூணரை வருஷமா அவர்தான் சீ.எம். பீஜேப்பீ ரூலில் சிலபல ஆட்கள் பண்ணிய டுபாக்கூர்களும் காரணம். ஜனார்த்தன் ரெட்டி ஒரு உதாரணம். என்ன திருகுதாளம் போட்டாலும் டமில்நாட் போல வராது. பீஜேப்பீல வந்த மூணு பேருமேகூடப் பழுத்த அரசியல் அனுபவம் உள்ளவங்க. ஆனால் டமில்நாட்ல அதெல்லாம் தேவையில்ல போலன்னு இப்போ தெரிஞ்சிட்டதால, இவங்கல்லாம் செம்ம காண்டுல இருக்காங்க. டமில்நாட்ல சி.எம் ஆக என்னன்ன தகுதிகள் வேணும்னு யோசிச்சா, கட்டாயம் பீஹார்தான் நினைவு வரும். பீஹார்…

Read More

நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய முடியாது

மிக முக்கிய தீர்ப்பு :- ஓர் எதிரிக்கு வழங்கப்பட்டுள்ள முன் ஜாமீனை ரத்து செய்வதற்கு முன்பாக, அந்த எதிரிக்கு அறிவிப்பு அனுப்பி, அவர் தரப்பு வாதத்தையும் நீதிமன்றம் கட்டாயம் கேட்க வேண்டும். நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனை தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது. ஜாமீன் வழங்குவதற்கும், அதனை ரத்து செய்வதற்கும் வேறுபாடு உள்ளது. அவை இரண்டும் வெவ்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஜாமீன் நிபந்தனைகளில் ஒன்றாக எதிரி காவல் நிலையத்தில் அல்லது நீதிமன்றத்தில் முன்னிலையாகி கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தாலும், எதிரி அவ்வாறு செய்யவில்லை என்ற காரணத்திற்காக அவரது ஜாமீனை உடனடியாக ரத்து செய்யக் கூடாது. எதிரி காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ ஆஜராகி கையெழுத்து போடாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எதிரியின் குடும்பத்தில் ஒரு துயர சம்பவம் நடந்திருக்கலாம் அல்லது நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம்…

Read More