உயர்கல்வியில் பாலியல் தொந்தரவுகள்
உயர்கல்வியில் பாலியல் தொந்தரவுகள் பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன் போகிற போக்கில் ஒன்றை சொல்லிவிட்டுப்போனார்.. உயர்கல்வியில் இதுபோன்ற பாலியல் தொந்தரவுகள் குறித்து கேள்விபட்டிருக்கிறோம் இப்போது இளங்கலை பயில வரும் மாணவிகள் குறிவைக்கபடுகிறார்கள்.. என்றார் ..
ஆம் .. உயர்கல்வி பிஎச்டி போன்ற ஆய்வுகள் குறித்த கல்விக்கு வழிகாட்டுதல் என உயர்அதிகாரிகள் பேராசாரியர்களை நியமிக்கபடுவார்கள் அவரை வேண்டாமென சொல்லவேண்டுமெனில் அவரிடமே பரிந்துரையை பெற வேண்டுமென விதிகள் .. நிறைய பெண்களை பாதியிலேயே விட்டுவிட்டு போக செய்திருக்கிறது சில உன்னதமானவர்கள் கல்வித்துறையில் உண்டு .. மறுப்பதற்கில்லை.. மாறாக குறிபிபாக 15 ஆண்டுகளில் தான் இதுபோன்ற பாலியல் தொந்தரவுகள் வருவதாத செய்திகள் சொல்கிறது.. அதற்கான காரணம் தகுதி அடிப்படையிலான துணைவேந்தர் நியமனங்கள் நடைபெறுவதில்லை.. கல்வித்துறையில் அரசியலை அதீதமாக உட்புகுத்தியது எம்ஜிஆரென்றாலும் அது ஒரு வரம்பிற்குள் இருந்தது ஆனால் ஜெயலலிதா காலகட்டத்தில்தான்… சசிகலா உறவினர்களின் அன்பிற்கு பாத்திரமானவர்கள் நிரம்பபட்டார்கள்
உயர்கல்வியில் பாலியல் தொந்தரவுகள்
இப்போது பிடியாகியிருக்கிற நிர்மலா சொல்லும் சேதிகள் அதிர்வலையை தரலாம் 15 ஆண்டுகால செய்தியை ஒரிரு நாளில் சொல்லிவிட முடியாதுதான் நீண்ட விசாரணை தேவைபடும் அது காலதாமத்திற்கு வழிவகைசெய்யும் .. ஆனாலும் எம் பிள்ளைகள் இளங்கலை பட்டபடிப்பிற்கு கூட போராட வேண்டியிருக்குமென்கிற நிலை கொடூரமானது இதன் பின்னணியில் எந்த சக்தியெல்லாம் இருக்கிறதென்பதையும் அதன் வேர் எதுவரை பாய்ந்திருக்கிறதென்பதும் வெளிவரவேண்டும்..
பயமின்றி எம் குழந்தை கல்லூரிகளிலே பயிலும் சூழல் உருவாக வேண்டும்.. எத்தனை உயர்ந்தவராக இருந்தாலும் அவரை இனங்காண வேண்டும்.. இந்த Sex scandal எத்தனை பேர் தொடர்புடையவர் நிர்மலாவை யார் பணித்தார்கள் யாருக்காக இந்த வேலையை செய்ய சொன்னார்.. அவர் யார் எந்த கல்வி தகுதியோடு அவர் வலம் வருகிறார்.. என்பதையெல்லாம் வெளிகொணரவேண்டும் .. நிறைய நிர்மலாக்கள் உலவுகிறார்கள் வெளியே,தெரியாமல் அவர்களையெல்லாம் இந்த சமூகத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்
நிர்மலாக்கள் உலவுகிறார்கள்
நிற்க.. ஒழுக்க விழுமியங்களை காற்றில் பறக்கவிட்டு .. தங்களின் பதவிக்காக பெண்களை பகடையாக பயன்படுத்து ஆண் நிர்மலாக்களும் நிறைய காணலாம் .. பெண்களை அவர்களின் பொருளாதாரத்தை .. அவர்கள் உயர்கல்வி ஆசையை வைத்து பாலியல் தொந்தரவு செய்யும் ஆண் நிர்மலாக்கள் நிறைய உண்டு.. அதைவிட கொடூரம் அதை நியாயபடுத்துகிற கேடுகெட்ட ஜென்மங்கள்..
இதோ இப்போது கூட எஸ்.வி.சேகரெனும் அரை கிறுக்கன் கவர்னர் பெண் நிருபர் லட்சுமி சுப்ரமணியனின் கன்னத்தை தடவியதை நியாயபடுத்துகிறான்.. கவர்னர் இவளை தொட்டதற்கு அவர் தான் கையை கழுவ வேண்டுமென கூறுகிறான் அதோடு நிற்காமல் பத்திரிக்கை துறையில் ரிப்போர்டராக நிறைய படுக்கையை பகிர்ந்து கொள்ளவேண்டுமென கூறுகிறான் .. உயர்பதவியை அடைய வீட்டுப்பெண்களை பகடைகளாக்கும் வித்தைகள் அறிந்தவர் போலும்.. ஒரு சராசரி நேர்மை கூட இல்லாமல் தன் அண்ணி தலைமை செயலரென்பதால் தாறுமாறாக பேசுவதும் .. பின் இடுகையை நீக்குவதும் இவருக்கு பழக்கம்.. நிர்மலாவைவிட மிக மோசமானவர்கள் அவரை காப்பாற்ற துடிக்கும் சேகர் வகையறாக்கள்..
பாவம் என்செய்ய!
அவர்களுக்கு தெரிந்தது அது ஓன்றுதானே..
ஆலஞ்சியார்