ஆதித்யநாத் அரசின் போலீஸ்காரர்கள் இரண்டு முஸ்லிம் பையன்களைச் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்

ஆதித்யநாத் அரசின் போலீஸ்காரர்கள் இரண்டு முஸ்லிம் பையன்களைச் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள் ஆதித்யநாத் அரசின் போலீஸ்காரர்கள் இப்போது ஒரு படி முன்னேறிவிட்டனர் என்கவுன்டர் பண்ணப் போகிறோம் என்பதை ஊடகங்களுக்கு முன்பே சொல்லி, அவர்களை வீடியோ காமிராக்களுடன் வரச் சொல்லி வீடியோ பதிவு செய்துகொள்ளச் சொல்லி விட்டு இரண்டு முஸ்லிம் பையன்களைச் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்  உண்மை இது மிகையில்லை NDTV, DNA முதலான இணையத் தளங்களைப் பாருங்கள் தங்களுக்கு ‘இன்விடேஷன்’ வந்ததையும், வீடியோ எடுக்க அன்மதித்ததையும் செய்தியாகவே பதிவு செய்துள்ளனர். கூடவே அந்த வீடியோவையும் நீங்கள் பார்க்கலாம் இது நடந்தது செப் 20. இடம் அலிகாரில் ஹர்துவாகஞ் எனும் இடம் ஆதித்யநாத் அரசின் போலீஸ்காரர்கள் சொன்ன கதை அலிகார் போலீஸ் தலைமை அஜய் ஷானி கூறியது: முஸ்தஹீன் (22), நவ்ஷாத் (17) இருவரும் ஆறு பேர்களைக் கொன்ற குற்றங்களுக்காகக்த் தேடப்பட்டவர்கள்.…

Read More