Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

சென்னையில் வெடித்தது மீண்டும் ஒரு மெரினா புரட்சி

சென்னையில் வெடித்தது மீண்டும் ஒரு மெரினா புரட்சி

சென்னையில் வெடித்தது மீண்டும் ஒரு மெரினா புரட்சி, கடந்த வருடம் எவரும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்றால் ஜல்லிக்கட்டு காகா மக்கள் நடத்திய மெரினா புரட்சி அது போல் இப்போது வெடித்தது மீண்டும் ஒரு மெரினா புரட்சி மக்கள் நடத்த துணிந்து விட்டனர்.
கவரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல் கர்நாடகம் இருக்கிறது அதை கண்டும் காணாமல் மத்திய அரசு இருக்கிறது நமது தமிழக அரசு நிலைபாடோ சொல்லவே வேண்டாம் மத்திய அரசு ஆனைக்கு கட்டு பட்ட பூனை போல் பதுங்கியே இருக்கிறது ஆக தமிழகத்தின் நிலைதான் என்ன?
அநேக டெல்டா மாவட்டங்கள் எல்லாம் காவேரி தண்ணியை நம்பியே இருக்கிறது ஆகவே மக்கள் புரட்சி ஆரம்பித்து விட்டது இன்று மாலை முதல் முக நூல் வழியாக மக்கள் மக்கள் இனைந்து மீண்டும் ஒரு மெரினா புரட்சி ஆரம்பித்து விட்டார்கள்
https://www.facebook.com/dil.ku.12/videos/1741061262584095/?t=0
காவிரி விவகாரத்திற்காக முகநூல் வழியாக இணைந்து போராட்டத்திற்கு வந்தோம் – இளைஞர்கள் பேட்டி
* மாட்டுக்காக போராடியது போல் தற்போது தமிழ்நாட்டுக்காக போராடுகிறோம் – இளைஞர்கள்

* ஜல்லிக்கட்டுக்காக போராடி வெற்றி பெற்றது போல், காவிரிக்காகவும் போராடி வெற்றி பெற தமிழர்கள் ஒன்று கூட வேண்டும் – இளைஞர்கள்
#MarinaProtest | #Yougsters | #Marina | #CauveryIssue | #CauveryManagementBoard
மீண்டும் ஒரு மெரினா புரட்சி
மீண்டும் ஒரு  புரட்சி

ஆ.ராசா மீது குற்றச்சாட்டு! இதுதான் இந்திய அரசியல்

ஆ.ராசா மீது குற்றச்சாட்டு  இதுதான் இந்திய அரசியல்!

ஆ.ராசா மீது குற்றச்சாட்டு!  இதுதான் இந்திய அரசியல் நியூஸ் 18 டிவியில் அண்ணன் ஆ.ராசா அவர்களது பேட்டி முழுவதுமே சின்ன சின்ன பகுதியாக பிரித்து போடலாம்!
ராசா மீது குற்றச்சாட்டு எழுந்த பிறகு அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார்! அதன்பிறகு நாடாளுமன்றத்தில் முரசொலி மாறன் படத்துக்கு மாலை அணிவிக்கிற நிகழ்வொன்றில், ராசா ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக கலந்துகொள்கிறார்!
விழா முடிந்து வரும்போது பிரதமர் மன்மோகன் சிங், ஆ.ராசா வை முதுகில் சினேகமாக தட்டுகிறார். நேற்றுவரைக்கும் தன்னுடைய அமைச்சரவையில் இருந்த ஒருத்தரை பிரதமர் முதுகில் கை வைக்கிறார்!

இதை போட்டோ எடுத்து மீடியாக்களில், ஊழல்வாதி ராசாவை தட்டிக்கொடுக்கும் மன்மோகன் சிங் என செய்தி வெளியிடுகிறார்கள். வட இந்திய செய்தி சேனல்கள் விவாதம் செய்கின்றன. பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேலி செய்கின்றன.ஆ.ராசா மீது குற்றச்சாட்டு
ஆண்டுகள் உருண்டோடுகின்றன
ஒரு அமைச்சரிடம் முறைகேடாக கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது என்பதை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் வருமானவரித்துறை தெரிவிக்கிறது. அதை ஆதாரமாக நீதிமன்றத்திலே காட்டி இந்திய தேர்தல் ஆணையம் ஆர் கே நகர் தேர்தலை நிறுத்துகிறது! அந்த அமைச்சர் அதன்பிறகு தொடர்ந்து வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை செய்யப்படுகிறார்.
அந்த அமைச்சரவை ஏற்பாடு செய்த ஒரு அரசு விழாவிற்கு பிரதமர் மோடி வந்து கலந்துகொண்டு வாழ்த்தி பேசுகிறார்!
இப்போது அன்றைய தினம் ராசாவை கேலி பேசிய எந்த ஊடகங்களும் மோடி மீது விமர்சனம் வைக்கவில்லை..!
இதுதான் இந்திய அரசியல்..!
– Sivasankaran Saravanan

காவிரி மேலாண்மை வாரியம் எந்த நீதிமன்றமுமே தலையிட முடியாது

காவிரி மேலாண்மை வாரியம் எந்த நீதிமன்றமுமே தலையிட முடியாது

காவிரி மேலாண்மை வாரியம் தான் அமைக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறது; காரணம், காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு சொல்லியது அதைத்தான்
நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு குறிப்பிட்ட தண்ணீர் அளவில்தான் நான்கு மாநிலங்களுக்கும் மனக்குறை
மீளாய்வுத் தீர்ப்பில் அது மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது
மற்றபடி, காவிரி மீதான ”உரிமை-பாத்தியதை” என்பது உலகளாவிய, இப்பேரண்ட, ஆம், இயற்கை விதிப்படியானது; அதில் உச்ச நீதிமன்றமல்ல, எந்த நீதிமன்றமுமே தலையிட முடியாது.
மீளாய்வுத் தீர்ப்பில் காவிரி நீர் எந்த மாநிலத்துக்கும் சொந்தமில்லை என்று சொல்லியிருப்பது அப்பட்டமான சட்ட மீறல்.
காவிரி தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய இந்த நான்கு மாநிலங்களுக்கே சொந்தம்.
மாநிலங்களை இப்படி வரிசைப்படுத்துவதற்குக் காரணம், ”காவிரி உடலின் பெரும் பகுதி தமிழ்மண்” என்பதால்தான் Image may contain: 1 person, smiling, on stage
அப்படியிருக்க, காவிரித்தாயைப் ”அழிக்க ” நினைக்கும் கர்நாடகாவின் கயமைத்தனத்திற்கு துணைபோவதென்ன ஒன்றிய பாஜக மோடி அரசு எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்குமான காவிரி மீதான ”உரிமை-பாத்தியதை”யைக் கத்தரித்துவிடுவதும்; காவிரியை முற்றாகக் கையாளும் உரிமையை கர்நாடகாவுக்கு விட்டுவிட்டு, காவிரி உட்பட நீராதாரங்கள் மொத்தத்தையும் கார்ப்பொரேட்மயமாக்கிவிடுவதும்தான் மோடியின் மூளைத்திட்டம்.
அதனால்தான் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்க செய்கிறது மோடி அரசு.
இதைத் தெரிந்து புரிந்து தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும் தமிழக அதிமுக எடப்பாடி பழனிசாமி அரசு என்று கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
இந்த நிலையில்தான், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், அதன்பின் டெல்லிக்கு தமிழ்நாட்டில் வேறென்ன வேலை இருக்க முடியும் என்று கேட்கிறோம்.
அப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பட்சத்தில் டெல்லிக்கு இங்கு எந்த வேலையும் இல்லை என்றே சொல்கிறோம்.
அதனால் அதனை நடைமுறைப்படுத்தும் வேலையில் இறங்குவோம் என்பதைச் சொல்லிக்கொள்கிறோம்.
அதன் தொடக்கமாக, இங்கு ஒரு ராப்பகல் கொள்ளையே நடத்திக்கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் சுங்கச்சாவடிகள் ஏப்ரல் 1 தேதி முதல் சுங்கவரி தர மறுக்கும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறோம்.
இதற்காக அல்லாமலும் இந்தச் சுங்கச்சவடிகளை அப்புறப்படுத்த வேண்டியதற்குக் காரணங்கள் உண்டு.
தமிழ்நாட்டையே தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்து கசக்கிப் பிழிவதற்கும் சூறையாடுவதற்குமான அத்தாட்சிதான் இந்தச் சுங்கச்சாவடிகள் நடத்திவரும் ராப்பகல் கொள்ளை!
மொத்தம் 45 சுங்கசாவடிகள் தமிழ்நாட்டில். ஆண்டுதோறும் சுழற்சி அடிப்படையில் செப்டம்பர், ஏப்ரல் மாதங்களில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. சாலைகளின் தன்மையைப் பொறுத்து 7 முதல் 10 சதவீதம் வரை கட்டண உயர்வு.
சாலைப் பராமரிப்புக்கென்றுதான் ஆண்டு தோறும் இந்தக் கட்டண உயர்வு. ஆனால் எந்தப் பராமரிப்பும் கிடையாது.
சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது விதி; ஆனால் எந்தச் சாவடியிலுமே அது கிடையாது.
குடிநீர் கழிப்பறை, போதிய அளவு மின்விளக்குகளாவது உண்டா என்றால் அவையும் இல்லை.
இப்படி காட்டிமிராண்டித்தனமான கார்ப்பொரேட் கொள்ளை நடப்பதை நாகரிகமும் மனிதாபிமானமும் உடைய மனிதர்களால் எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும்?
மகாராஷ்டிர மாநிலம்தான் முதலில் இதற்கு எதிர்வினையாற்றியது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மாநிலமெங்கும் அல்ல, மும்பையிலுள்ள ஒரு 5 சுங்கச்சாவடிகளில் மட்டும் 2012ல் எடுத்த கணக்குப்படி, ஒப்பந்ததாரர் செய்த முதலீடு ரூ.2,100 கோடி; 2017க்குள் அவர் வசூலித்த சாலை வரி மூலம் ரூ.14, 524 கோடி. அதாவது அவர் அடித்த கொள்ளை ரூ.12,424 கோடி.
இந்த ராப்பகல் கொள்ளை ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா அந்த சுங்கச்சாவடிகளைத் தாக்கி சூறையாடியதையடுத்தே வெளிச்சத்துக்கு வந்தது.
நவநிர்மாண் சேனா என்பது சிவசேனாவிலிருந்து பிரிந்து எழுந்த கட்சி என்பதை நினைவில் கொள்க!
இந்த ராப்பகல் கொள்ளையிலும் அதிபயங்கரம் என்னவென்றால், காலக்கெடு முடிந்த பின்னரும் இந்த வசூல் கொள்ளை தொடர்வதுதான்.
உதாரணத்திற்கு, அதே மும்பையில், காம்கோன்– ஜல்னா புறவழிச்சாலை; மும்பை– புனே அதிவிரைவு நெடுஞ்சாலை ஆகியவற்றில் காலக்கெடு முடிந்த பின்னரும் வரி வசூல் நடந்தது; அப்போது சாலைப் பராமரிப்பு 60 சதவீத அளவுக்கே நடந்திருந்தது. ஆனால் பல்லாயிரம் கோடிகள் சுருட்டப்பட்டிருந்தது. இதை 2013ல் மகாராஷ்டிர அரசின் பொதுக்கணக்குக் கமிட்டி அறிக்கையே சொல்லியது.
தமிழ்நாட்டிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுங்கசவடிகளில் பல முறை போராட்டங்களை நடத்தி உள்ளது.
நம் தமிழ்நாட்டிலும் கிருஷ்ணகிரி – தொப்பூர் நாற்கர சாலைக்கு செலவிட்டது ரூ.160 கோடி. இதில் சராசரி மாதம் வசூலாகும் சுங்கவரி ரூ.3.5 கோடி. 25 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் இது. அப்படியென்றால் கொள்ளையை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
சென்னை மாநகரத்தில் சட்டதிற்க்கு புறம்பாக சில சுங்கசவடி செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் சில பகுதிகளில் குறுகிய தொலைவில் சுங்கசவடி சட்டதிற்க்கு புறம்பாக செயல்பட்டு வருகிறது.
2009ல் பெங்களூர்– மங்களூர் நெடுஞ்சாலையில் இப்பகற்கொள்ளைக்கு எதிராகப் போராட்டம் நடந்தது; 2012ல் உத்தரப் பிரதேசத்தில் யமுனா அதிவிரைவு நெடுஞ்சாலையில் விவசாயிகளின் டிராக்டருக்கு வரி கேட்டதால் போராட்டம் நடந்தது.
இந்த ராப்பகற்கொள்ளையைத் தடுக்க ஒரே வழி அந்தக் கொள்ளைக்கூடங்களை அப்புறப்படுத்துவதுதான்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அன்பார்ந்த தமிழக மக்களே ஏப்ரல் 1 தேதி முதல் சுங்கவரி தர மறுக்கும் போராட்டத்தை தொடங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அனைத்து நிலை பொருப்பாளர்களும் போராட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கசவடிகளிலும் சுங்கவரி தர மறுக்கும் போராட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வருகின்ற 01.04.2018 அன்று நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் இன்று 28.03.2018 விடுத்துள்ள அறிக்கையில்

கொலையாளியை கவுரவிக்கும் சங்க்பரிவார் அமைப்புகள்!

கொலையாளியை கவுரவிக்கும் சங்க்பரிவார் அமைப்புகள்!

ராஜஸ்தானில் கூலித் தொழிலாளியை எரித்து கொன்ற கொலையாளியை ராமநவமியில் அலங்கார வாகனம் அமைத்து கவுரவிக்கும் சங்க்பரிவார் அமைப்புகள்!
ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தில் தங்கி கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்த மேற்கு வங்க மாநிலம், மால்டாவைச் சேர்ந்த முகமது அஃப்ராசுலை, இந்துத்துவா அமைப்பை சேர்ந்த சம்புலால் ரேகர் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி அடித்துக் கொலை செய்து, தீயிட்டு எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
லவ் ஜிகாதில் இருந்து சிறுமியை காப்பாற்றவே இப்படி செய்ததாக குற்றவாளியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது  விசாரணையில் அது பொய் என தெரியவந்தது
இந்நிலையில், இதில் மிகவும் மோசமான சம்பவமாக, கடந்த வாரம் ஜோத்பூரில் நடைபெற்ற ராம நவமியில் சம்புலால் ரேகரை கவுரவிக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினரால் அவரை பெருமைப் படுத்தும் விதத்தில் எடுத்துச் செல்லப்பட்ட அலங்கார ஊர்திதான்
இந்து கடவுள் ராமர் பிறந்த தினத்தில் உலகம் முழுவதும் ராம நவமி பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகிறது
கூலி தொழிலாளி முகமது அஃப்ராசுலை கொன்ற சம்புலால் ரேகரை கவுரவிக்கும் வகையில் அவனை போன்று ஆடை அணிந்து, கோடாரியை கொண்டிருப்பவர் ஊர்தியில் அமர செய்யப்பட்டு ஊர்வலம் சென்று உள்ளது
இத்தகைய வெறியூட்டப்பட்ட இந்துத்துவா பயங்கரவாதிகளின் ஊர்வலத்தை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக புகார் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என கூறியுள்ளது காவல்துறை

களந்தை செல்வன்

பணத்துக்காக இந்துத்துவா செய்திகளை வெளியிட ஊடகங்கள் ஒப்புக்கொண்டன' கோப்ராபோஸ்ட் புலனாய்வு

பணத்துக்காக இந்துத்துவா செய்திகளை வெளியிட ஊடகங்கள் ஒப்புக்கொண்டன’  கோப்ராபோஸ்ட் புலனாய்வு

பணத்துக்காக இந்துத்துவா செய்திகளை வெளியிட ஊடகங்கள் ஒப்புக்கொண்டன  செய்தி இணையதளமான ‘கோப்ராபோஸ்ட்’ (Cobrapost) நடத்திய ரகசியப் புலனாய்வு ஒன்றில், பணத்திற்காக ‘இந்துத்துவா கொள்கைக்கு ஆதரவான மெல்லிய செய்திகளை ‘ வெளியிட 17 இந்திய ஊடக நிறுவனங்கள் ஒப்புக்கொண்டது பதிவாகியுள்ளதாகக் கூறியுள்ளது

ஆப்பரேஷன் 136′ (operation 136) என்று பெயரிடப்பட்டிருந்த அந்தப் புலனாய்வில் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட காணொளிகளின் சில காட்சிகளை அந்த செய்தி இணையதளத்தின் ஆசிரியர் அனிருத்தா பஹால் திங்களன்று டெல்லி பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்

: கோப்ராபோஸ்ட் புலனாய்வு

கடந்த 2017ஆம் உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில் (World Press Freedom Index 2017), இந்தியா 136-ஆவது இடம் பிடித்ததை தொடர்ந்து இந்த புலனாய்வுக்கு ‘ஆப்பரேஷன் 136 என்று பெயரிடப்பட்டது.
இந்தப் புலனாய்வின்போது, கோப்ராபோஸ்ட் இணையதளத்தின் செய்தியாளர் ஒருவர், ‘ஸ்ரீமத் பகவத் கீதா பிரசார் சமிதி’ எனும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டு, 17 நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை சந்தித்துள்ளார்.
இந்துத்துவ அரசியலுக்கு ஆதரவாக பிரிவினையை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிட்டால், பெரும் தொகை வழங்கப்படும் என்றும் மூன்று மாத காலம் தொடர்ச்சியாக விளம்பரங்கள் கொடுக்கப்படும் என்றும் அந்த நிருபர் ஊடக நிறுவனத்தினரிடம் கூறியுள்ளார்
ஏழு செய்தித் தொலைக்காட்சிகள், ஆறு செய்தித்தாள்கள், மூன்று செய்தி இணையதளங்கள் மற்றும் ஒரு செய்தி முகமை உள்ளிட்ட அந்த 17 ஊடகங்களிலும் மூத்த பொறுப்புகளில் உள்ளவர்கள் பணத்துக்காக இந்துத்துவத்துக்கு ஆதரவான செய்திகளை வெளியிட ஒப்புக்கொள்வது கோப்ராபோஸ்ட் வெளியிட்டுள்ள காணொளியில் பதிவாகியுள்ளது.

பணத்துக்காக இந்துத்துவா

வரும் 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எதிர்க் கட்சித் தலைவர்களான ராகுல் காந்தி, மாயாவதி, முலாயம் சிங் யாதவ் ஆகியோருக்கு எதிராக மட்டுமல்லாது, ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்குள் சர்ச்சைக்கு ஆளாகும் தலைவர்களான அருண் ஜேட்லி, மனோஜ் சின்ஹா, ஜெயந்த் சின்ஹா, வருண் காந்தி மற்றும் மேனகா காந்தி ஆகியோருக்கு எதிராகவும் செய்திகளை வெளியிட அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தொலைக்காட்சிகளில் ஒன்றான இந்தியா டி.வியின் விற்பனைப் பிரிவுத் தலைவர் சுதிப்தோ சௌத்ரி, “ஆச்சார்ய சத்திரபால் அடல் எனும் அந்த நபர் செய்திகளுக்கு பணமளிப்பதாக கூறியதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தகைய செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை. எங்கள் விற்பனைப் பிரதிநிதி ஒருவர் ஒரு விளம்பரத்தை வெளியிட ஒப்புக்கொள்வது குறித்து பரிசீலனை செய்வதாக கூறுவதே அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளது. இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தவே கோப்ராபோஸ்ட் தேர்ந்துடுக்கப்பட்ட காணொளிகளை மட்டும் வெளியிட்டுள்ளது. இந்தியா டிவி சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று பிபிசி அனுப்பிய கேள்விக்கான பதிலில் தெரிவித்துள்ளார்.

2019 நாடாளுமன்ற தேர்தலையொட்டி அந்த செய்திகளை வெளியிடுமாறு ஊடகங்களிடம் கேட்கப்பட்டதுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caption2019 நாடாளுமன்ற தேர்தலையொட்டி அந்த செய்திகளை வெளியிடுமாறு ஊடகங்களிடம் கேட்கப்பட்டது

அந்தக் காணொளிகளின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள இந்தி நாளிதழான தைனிக் ஜக்ரானின் முதன்மை ஆசிரியர் சஞ்சய் குப்தா, “ஜார்கண்ட், பிகார் மற்றும் ஒடிஷா மாநில விற்பனை மேலாளர் சஞ்சய் பிரதாப் சிங் செய்தி வெளியிடுவது குறித்து உத்தரவாதம் அளிக்க அவருக்கு அதிகாரம் இல்லை. அந்தக் காணொளி உண்மை என்று கண்டறியப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழிடம் கூறியுள்ளார்.
அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதாகவும், சமூகத்தில் பிரிவினையைத் தூண்டும் செய்திகளை வெளியிடுவதாகவும் சமீப காலங்களில் இந்திய ஊடகங்கள் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றன
Thanks by Tamil BBC
Need to sell your Property 

தேர்தல் தில்லுமுல்லு வேலைகளை தொடங்கிவிட்ட பாஜக

தேர்தல் தில்லுமுல்லு வேலைகளை தொடங்கிவிட்ட பாஜக

தேர்தல் தில்லுமுல்லு டெல்லியில் நடந்த சமூக ஆர்வலர்கள் கூட்டத்தில் பல செயல் திட்டங்களுக்கான ஆலோசனை மற்றும் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களும் பெறப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் பெங்களுரில் நடந்த தேர்தல் முறைகேடுகளை தவிர்க்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் குரைஷி, கர்நாடக மூத்த அமைச்சர் ரோஷன் பேக் மாநில சிறுபான்மை கமிஷன் மற்றும் வஃபுபோர்டு தலைவர்கள் மூத்த அரசு அதிகாரிகள் போன்றவர்கள் கலந்து கொண்டனர்

சிறப்பு அழைப்பாளராக நாமும் கலந்து கொண்டோம் 2019 தேர்தல் தில்லுமுல்லு

சச்சார் கமிட்டி அறிக்கையையும், பரிந்துரையையும் அளித்த குழுவைச் சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் அளித்த அறிக்கை அனைவரையும் திகைப்படைய வைத்தது.
ஏறக்குறைய 15 இலட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் பட்டியயிலிருந்து நீக்கப்பட்டதற்கான விவரத்தை அவர்கள் கணிணி ஆதாரங்களுடன் அளித்தனர்.
அவ்வாறே பா.ஜ.க.விற்கு எதிராக வாக்களிக்கும் இதர வாக்காளர்களிலும் கணிசமானவர் நீக்கப்பட்டுள்ள தகவலையும் அறிய முடிந்தது தேர்தல் தில்லுமுல்லு
மூன்று மாதிரி தொகுதிகளில் நீக்கப்பட்டவரின் பட்டியலை விலாசத்துடன் அளித்ததை மாநில அரசு அதிகாரிகளே அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.
பெங்களுரு மையத்திலுள்ள அமைச்சர் ரோஷன் பேக் வெற்றி பெற்ற சிவாஜி நகர் தொகுதியில் மட்டும் 8000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட தகவல் தெரிவித்ததை அவர் முதலில் மறுத்தாலும் ஒரே நாளில் ஆய்வு செய்து அறிவிப்பதாகக் கூறினார்.
ஆய்விற்குப் பின் மறுநாளே அத்தகவல் உண்மை என்று அவர் அளித்த பேட்டி ஊடகங்களில் வெளியாயின. இவரின் வீடியோ கிளிப் கீழே இணைக்கப்பட்டுள்ளது

தேர்தல் தில்லுமுல்லு

இந்த மோசடியை சரி செய்து நீக்கப்பட்ட வாக்காளர்களை மறு பதிவு செய்ய அதிவேகமான செயல் திட்டங்கள் கர்நாடக அரசும், ஆர்வலர்களும் மேற் கொண்டுள்ள நிலையிலும் 3 லட்சம் வாக்காளர்கள் மட்டும் மாநில அளவில் தேர்தலுக்கு முன் பதிவு செய்ய முடியும் என்று அறிய முடிகிறது.
இந்தியா முழுவதும் ஏறக்குறைய 3.5 – 4 கோடி முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கப் பட்டிருக்கலாம் என்ற தகவலும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஏறக்குறைய
10 – 12 இலட்சம் முஸ்லிம் வாக்களார் நீக்கப்பட்டியிருக்கலாம் என்பதை தோராயமாக கணக்கிட்டாலும்,
மூன்று தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டு கணிணி மூலம் நீக்கப் பட்டியல் சில நாட்களில் அளிக்க கோரியுள்ளேன்.
பாராளுமன்ற தேர்தல் ஒரு வருடம் இருப்பதால் பா.ஜ.க. அல்லாத அரசியல் கட்சிகள், இசுலாமிய இயக்கங்கள் சமூக அமைப்புகள் போன்றவை ஒருங்கிணைந்து இந்த சதியை முறியடிக்க வேண்டும்.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழகத்தில் விரைவில் கூட்டபடும்.
(மேலும் விவரங்கள் அடுத்த பதிவில்)
https://youtu.be/hv2iCvg5X5g
Like and Follow :
www.facebook.com/IsupportPFI

பி ஜெ பி யால் இந்துமக்களுக்கு என்ன லாபம்

ஹெச்.ராஜாவின் பதிவிற்கு ஒருவர் போட்ட பதிலை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்!

பி ஜெ பி யால் இந்துமக்களுக்கு என்ன லாபம் அவர்கள் அடைந்த பலன் உங்களால் இந்து மதத்தை வைத்து ஆட்சிக்கு வந்த பிஜேபியால் இந்த நான்கு ஆண்டில் இந்துகளுக்கு என்ன லாபம் கிடைத்தது என்று கூற முடியுமா? மறுபடியும் ஏன் இந்துகள் பிஜேபிக்கு ஓட்டுப் போட வேண்டும், அதனால் இந்துகளுக்கு என்ன லாபம் என்று கூறமுடியுமா

பி ஜெ பி யால் இந்துமக்களுக்கு என்ன லாபம்

பி ஜெ பி யால் இந்துமக்களுக்கு என்ன லாபம்
பி ஜெ பி யால் இந்துமக்களுக்கு என்ன லாபம்

#RSS #BJP சங்பரிவாரங்களுக்கு ஒர் வேண்டுகோள்!!

உங்களால் இந்து மதத்தை வைத்து ஆட்சிக்கு வந்த பிஜேபியால் இந்த நான்கு ஆண்டில் இந்துகளுக்கு என்ன லாபம் கிடைத்தது என்று கூற முடியுமா? மறுபடியும் ஏன் இந்துகள் பிஜேபிக்கு ஓட்டுப் போட வேண்டும், அதனால் இந்துகளுக்கு என்ன லாபம் என்று கூறமுடியுமா?
லாபம் எதுவுமில்லை என்றால் கிழே உள்ளவற்றுக்கு உறுதிமொழியையாவது தர முடியுமா?
உண்மையிலேயே இந்து மதத்தவர் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் ,
கிறிஸ்தவர்களுக்கும் மூஸ்லீம்களுக்கும் நீ நீட் தேர்வில் இருந்து விலக்கு கொடுக்க​ வேண்டாம். மாறாக​, நீர் பாசம் காட்டுவதாய் கூறும் இந்து மக்களுக்காவது நீட் தேர்வில் இருந்து விலக்கு கொடு பார்ப்போம்!
கிறிஸ்தவர்களுக்கு நீர் சாதி ரீதியான இட​ ஒதுக்கீட்டை​ கொடுக்க​ வேண்டாம்! மாறாக​, நீர் பாசம் காட்டுவதாய் கூறும் இந்து மக்களுக்களின் சாதி ரீதியான இட​ ஒதுக்கீட்டை எதிர்க்க​ மாட்டேன்
என்ற​ உறுதிமொழியை கொடு பார்ப்போம்.
கிறிஸ்தவர்களுக்கும் மூஸ்லீம்களுக்கும் நீர் வேலை வாய்ப்பை கொடுக்க​ வேண்டாம்! மாறாக​, நீர் பாசம் காட்டுவதாய் கூறும் இந்து மக்களுக்காவது வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடு பார்ப்போம்!
கிறிஸ்தவ மீனவர்கள் மூஸ்லீம் மீனவர்கள் குரலை கூட​ நீர் கேட்க​ வேண்டாம்! மாறாக​, நீ பாசம் காட்டுவதாய் கூறும் இந்து மீனவர்களுக்காவது குரல் கொடு பார்ப்போம்!
கிறிஸ்தவ விவசாயிகள் மூஸ்லீம் விவசாயிகள் இவர்களுக்கு கூட​ உதவி செய்ய​ வேண்டாம்!! மாறாக​, நீ பாசம் காட்டுவதாய் கூறும் இந்து விவசாயிகளுக்காவது உதவி செய் பார்ப்போம்!
சாமானிய​ கிறிஸ்தவ​ மூஸ்லீமகளுக்கு கூட​ நீர் மருத்துவ​ வசதி செய்தி கொடுக்க​ வேண்டாம்! மாறாக​, நீர் பாசம் காட்டுவதாய் கூறும் சாமானிய​ இந்து மக்களுக்காவது மருத்துவ​ வசதி செய்து கொடு பார்ப்போம்!
சாமானிய​ கிறிஸ்தவ​ மூஸ்லீமகளுக்கு கூட​ நீர் கல்வி கொடுக்க​ வேண்டாம்! மாறாக​, நீர் பாசம் காட்டுவதாய் கூறும் சாமானிய​ இந்து மக்களுக்காவது கல்வி கொடு பார்ப்போம்!!
BC/SC/ST பிரிவை சேர்ந்த​ மாற்று மதத்தை சேர்ந்தவரை கோவில் கருவறையில் விட​ வேண்டாம்! மாறாக​, நீர் பாசம் காட்டுவதாய் கூறும் BC/SC/ST பிரிவை சேர்ந்த​ இந்து மக்களையாவது கோவில் கருவறையில் விடு பார்ப்போம்
கிறிஸ்தவ​ தலித்தை கூட​ அடி உதை கொல் ! மாறாக​, நீர் பாசம் காட்டுவதாய் கூறும் இந்து தலித்தையாவது சக​ மனிதனாய் மதி பார்ப்போம்
BC/SC/ST பிரிவை சேர்ந்த​ மாற்று மதத்தை சேர்ந்தவர்ககளை கூட​ உங்க​ மடம் சுயமரியாதையோடு நடத்த​ வேண்டாம், மாறாக​, நீர் பாசம் காட்டுவதாய் கூறும் BC/SC/ST பிரிவை சேர்ந்த இந்துக்களையாவது உங்க​ மடம் சுயமரியாதையோடு நடத்தட்டும் பார்ப்போம்
இவ்வாறு அடுக்கி கொண்டே செல்லலாம்! 
நீர் நிச்சயம் இவற்றை செய்ய​ மாட்டாய்! இந்து மக்களை மத​ ரீதியாக​ தன் வசப்படுத்தி விட்டு அவர்களின் உரிமைகளை பறித்து நீர் ஆட்டம் போடத் தான் இந்து என்று போலி பாசம் காட்டுகிறாய்
என்பது தெரியும்
உண்மையான #இந்து என்றால் #Share பன்னு
பி ஜெ பி யால் இந்துமக்களுக்கு என்ன லாபம்

தமிழகம் இதுவரை கண்டிராத எதிர்ப்பு தடை உத்திரவு துளிர்க்க துடிக்கும் பாசிசம்

தமிழகம் இதுவரை கண்டிராத எதிர்ப்பு தடை உத்திரவு துளிர்க்க துடிக்கும் பாசிசம் அசம்பாவிதம் நேர கூடாதுதென்று பொதுமக்கள் பீதி

இந்த இன்று தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட ரத யாத்திரைக்கு அணைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து கொண்டு உள்ளார்கள்
சிலர் மேலோட்டமாக இது என்ன பெரிய விஷயம் யாத்திரை தானே போகின்றார்கள் போனால் என்ன என்று எண்ணுபவரும் இருக்கிறன்றனர்,
ஏன் எல்லோரும் எதிர்க்கின்றார்கள் என்றால்? அயோத்தி பிரச்சனை இப்போது உயர்நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது அதோடு மட்டுமல்லாமல் ஒரு சாராரின் இழப்பு! இன்னும் நீதி கிடைக்காமை போன்ற பிரச்சனைகள் இருக்க வழக்கு இன்னும் முழுமையான தீர்ப்பு கிடைக்காமல் இருக்க இன்று இந்த ஆ தீ மு க அரசு இப்படியொரு வரலாற்று சிறப்பு மிக்க அனுமதி கொடுத்ததோடு மட்டுமல்லாமல்
திருமாவளவன் உட்பட முக்கிய தலைவர்கள் பலரை கைது செய்து இறக்கின்றனர் இங்கே முகநூலில் இதற்க்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்ததை காண்போம்
 
உடனடியாக இந்துத்துவ கலவர அமைப்புகளை தடைசெய்யாவிட்டால் மசூதி, சர்ச் உடைப்பு நடத்தி இஸ்லாமியர்களை பதிலடி கொடுக்கத்தூண்டி பதட்டம், பிரச்சனைகளை உருவாக்கியதைப்போல இப்போது பெரியார் சிலை,லெனின் சிலை உடைப்பு ,கம்யூனிஸ்ட் அலுவலகம் எரிப்பு போன்ற சம்பவங்கள் மூலம் அறவழி போராளிகளை பதில் வன்முறையில் ஈடுபட வைக்கிறார்கள்..
பூணூல் அறுப்பு, இப்போது சங்கரமடம் உடைப்பு என்று எங்கள் தோழர்களை எதிர்வினை செய்ய தூண்டிவிடுவதால் உடனடியாக இந்துத்துவ பாஸிஸ பயங்கரவாத அமைப்புக்களை அரசு தடை செய்ய வேண்டும்
நா. பாஸ்கர்

1 hr

புதுக்கோட்டை
பெரியார் சிலை உடைப்பு சம்பவத்தின் எதிரொலி…!
சேலத்தில் பார்ப்பன சங்கரமடம் திராவிடர் விடுதலை கழக தோழர்களால் உடைக்கப்பட்டது.
 

இரதத்தில் வருவது ராமர் ஆக இருந்தா பரவாயில்லை
இரதத்தில் வருவது மதமாச்சே
இது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல,ராமரை அழைத்து வருவதாக சொல்லும் அமைப்பு மீது தான் சந்தேகம்

ஏனென்றால் அவர்களின் முந்தைய நிலை அப்படி ,ஏன் தமிழ்நாட்டில் தினம் ஒரு கோயிலில் திருவிழா நடத்தப்பட்டு தான் வருகிறது ,சாமியை வைத்து தேரில் கொண்டு வரத்தான் செய்கின்றனர் ,யாராவது இது வரை தடுத்துள்ளார்களா இல்லை தடுக்க தான் முடியுமா
இதை தடுக்கிறார்கள் என்றால் ராமரை கொண்டுவருபவர்கள் நல்லவர்களா என்ற கேள்விக்குறி?
Image may contain: 6 people, crowd

தென்காசியில் ராம ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் சாலை மறியல்!

#BREAKING | தென்காசியில் ராம ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் சாலை மறியல்!

Posted by News7Tamil on Monday, 19 March 2018

Image may contain: 3 people, people sitting
TMMK MEDIA வன்மையாக கண்டிக்கிறோம். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் M.H ஜவாஹிருல்லாஹ்,பெரியார் திராவிடர் விடுதலை கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன்,திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோரை கைது செய்த பாஜக வின் எடுபிடி அரசாக செயல்படும் தமிழக அரசை வண்மையாக கண்டிக்கின்றோம்

 

Posted by Umamani Kalingarethinam on Monday, 19 March 2018

Image may contain: 2 people

ராம் ராஜ்ய யாத்திரை மூ க ஸ்டாலின் எதிர் வினை

ராம் ராஜ்ய யாத்திரை  மூ க ஸ்டாலின் எதிர் வினை

ராம் ராஜ்ய யாத்திரை  என்ற பெயரில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டுகிறோம் என்ற போர்வையில் தமிழ்நாட்டிற்குள் யாத்திரை நடத்துவதற்கும், அந்த யாத்திரை நடத்துவதற்கு அனுமதித்துள்ள அதிமுக அரசுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

மதக்கலவரம் தூண்டும் பாசிசம்  பா.ஜ.க ஆட்சி

ராம் ராஜ்ய யாத்திரை
ராம் ராஜ்ய யாத்திரை

மத்தியில் பா.ஜ.க ஆட்சி இருப்பதையும், தமிழகத்தில் அவர்களின் எடுபிடியாக அதிமுக அரசு நடப்பதையும் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் நிலவி வரும் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் விஷ விதையை விதைக்க விஸ்வ இந்து பரிஷத் முயற்சிப்பது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் திட்டமிட்ட நடவடிக்கையாகும்

ராமர் கோயில் வழக்கு நிலுவையில்

மாண்பமை பொருந்திய உச்சநீதிமன்றத்தில் ராமர் கோயில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது- அதுவும் குறிப்பாக அந்த வழக்கு விசாரணையை மாண்புமிகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தற்போது நடத்திக் கொண்டிருக்கும் போது இப்படி நாடு முழுவதும் ராமர் கோயில் கட்ட ஆதரவு திரட்டுவதற்காக யாத்திரை நடத்துவது உச்சநீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்ல- மாட்சிமை பொருந்திய உச்சநீதிமன்றத்திற்கே அழுத்தம் கொடுக்கும் முயற்சியாகவே எண்ணிட வேண்டியதிருக்கிறது

ராம் ராஜ்ய யாத்திரை பாசிசம்

சட்டத்தின் ஆட்சியை மத்திய பா.ஜ.க. அரசு மதிக்கிறது என்றால், “உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது  இந்த நேரத்தில் நீங்கள் யாத்திரை நடத்தி உச்சநீதிமன்றத்திற்கு தர்மசங்கடம் ஏற்படுத்தக் கூடாது என்று மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. அதன் துணை அமைப்பான விஸ்வ இந்து பரிஷத்திற்கு எச்சரிக்கை விடுத்திருக்க வேண்டும்
ஆனால் “வளர்ச்சி” என்று முழக்கமிட்டு மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டின் மதசார்பற்ற தன்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கும், நாட்டின் பன்முகத்தன்மைக்கும் எதிரான செயல்களில் ஈடுபடுவோரின் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும் மத்திய ஆட்சியாளர்கள் அப்படியெல்லாம் எச்சரிக்கவும் தயாராக இல்லை, அறிவுரை வழங்கவும் தயாராக இல்லை என்பது நாட்டின் ஒருமைப்பாட்டில் நம்பிக்கையுள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது
“சட்டத்தின் ஆட்சி” என்பது தங்களுக்குப் பொருந்தாது என்ற அராஜக மனப்பான்மையுடன் இந்துத்துவா அமைப்புகளை செயல்பட விடுவது நாட்டிற்கு நல்லதல்ல!
சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் “மதபயங்கரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று ஒப்புக்கு அறிவுரை வழங்கிய அதிமுக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமியோ இந்த ரதயாத்திரையை தமிழ்நாட்டிற்குள் நாளைய தினம் நுழைய விட்டு தன் முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொள்வதிலேயே ஆர்வமாக இருக்கிறார் என்பது வேதனையளிக்கிறது
சமூக நல்லிணக்கம் நிலவும் தமிழ் மண்ணில் மத துவேஷத்தை, மத பயங்கரவாதத்தை கிளப்பி விட்டு ஆட்சிக்கு வந்து விடலாம் என்று பா.ஜ.க. வும் சரி அதன் துணை அமைப்புகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருவது மிகுந்த கவலையளிக்கிறது என்றாலும், இந்த பாச்சா எல்லாம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் பண்படுத்தியிருக்கின்ற தமிழ் மண்ணில் எடுபடாது என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்
ஆனாலும் தங்களின் பினாமி ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது என்ற ஒரே தைரியத்தில் இந்துத்துவா அமைப்புகள் தமிழகத்தில் நடத்தும் அத்து மீறல்கள், அராஜகங்களை எல்லாம் அதிமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதால், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் போன்ற அமைப்புகளும் பயந்து ஒதுங்கி நிற்க வேண்டிய அசாதாரண சூழ்நிலை தற்போது தமிழகத்தில் நிலவுகிறது
இது மாநில பொது அமைதிக்கு எவ்விதத்திலும் ஏற்றது அல்ல!
ஆகவே, மதநல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் வகையிலும், ராமர் கோயில் விவகாரம் உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கின்ற நேரத்திலும், விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் “ரத யாத்திரையை” தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் உடனடியாக அதிமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், மீறி நுழைந்தால் தமிழகத்தின் எல்லையிலேயே அவர்களை கைது செய்து உத்தரபிரதேசத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்
மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும் உச்சநீதிமன்றத்திற்கு மதிப்பளித்து இது போன்ற சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் யாத்திரைகள் நடத்தும் இந்துத்துவா அமைப்புகளை எச்சரித்து அரசியல் சட்டப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்
 
M. K. Stalin

எம் ஜி ஆர் ஆட்சியின் போது கருணாநிதி சொன்னது நான் தான் ஆண்டவன் கலைஞர்

எம் ஜி ஆர் ஆட்சியின் போது கருணாநிதி சொன்னது நான் தான் ஆண்டவன் கலைஞர்

எம் ஜி ஆர் ஆட்சியின் போது கருணாநிதி சொன்னது நான் தான் ஆண்டவன் கலைஞர்
நான் சபாநாயகரா இருந்தப்ப எதிர்க்கட்சி வரிசையில தி.மு.க காரங்க உட்கார்ந்திருந்தாங்க
துரைமுருகனும் இன்னும் சில தி.மு.க. உறுப்பினர் களும் எழுந்து அவையை நடத்த முடியாத அளவுக்குக் கூச்சல் போட்டாங்க  நானும் எவ்வளவோ அடக்கிப் பார்த்தேன்

நான் தான் ஆண்டவன் கருணாநிதி

யாரும் அடங்கவே இல்ல  ‘எப்படியோ போங்க! இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பத்தணும்’னு சொல்லிட்டு அமைதியாயிட்டேன்,
அதுக்குப் பிறகு கருணாநிதி எழுந்து எல்லோரையும் அமைதிப்படுத்தி உட்கார வச்சாரு  அவுங்க எல்லோரும் அமைதியான பின்னாடி கலைஞர்,
இவுங்களை எல்லாம் ஆண்டவன் தான் காப்பத்த முடியும்னு நீங்க சொன்னீங்க  அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன்
ஏன்னா இதுக்கு முன்னாடி ஆண்டவன் நான்தானே’னு சொல்ல, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். உட்பட எல்லோ ருமே சிரிச்சிட்டோம்’’
இப்படி கரகரத்த குரலில் நினைவுகளை அசை போட்டார் முன்னாள் அமைச்சரும் சபாநாயகருமான க.ராஜாராம் சட்டசபை தலைவரின் நகைச்சுவை பகுதி
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

தமிழனும் ஜாதியும் சாதி பெயர் இல்லாத தமிழன்

தமிழனும் ஜாதியும் சாதி பெயர் இல்லாத தமிழன்

தமிழனும் ஜாதியும் சாதி பெயர் இல்லாத தமிழன்
நேற்று ஆப்பிரிக்க நாட்டில் கென்யாவில் இருந்து ஒரு தமிழர் பேசினார்
அவர் மெய்சிலிர்க்க சொன்ன ஒரு செய்தி என்னவென்றால்

பெரியார் நாத்திகம்
பெரியார் நாத்திகம்

இந்தியர்கள் என்று இங்கே யாரை சந்தித்தாலும் அவர்கள் என் பெயரைக் கேட்டு விட்டு  ஆர்வமாகப் பார்ப்பார்கள்  நான் பெயரைச் சொன்னவுடன் அவ்வளவுதானா சர்நேம் பின்னொட்டுப் பெயர் என்ன என்று கேட்பார்கள்

சாதியைத்தேடியவன் விலகிச்சென்றுவிடுவான்

எனக்கு பின்னொட்டுப் பெயர் இல்லை என்று சொன்ன உடனே ஒரு பரபரப்புடன் வேறு சில கேள்விகளைக் கேட்டு என் பரம்பரையை துப்பறிவார்கள் கடைசியில் ஏன் உங்கள் மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து வருபவர்கள் எல்லாம் இப்படியே சொல்கிறீர்கள் என்று ஒரு எரிச்சலுடன் கேட்பார்கள்  என்ன எரிச்சல்  என் சாதி என்ன என்று தெரிந்து கொள்ள முடியாத எரிச்சல் தான். அவர்களுக்குத்தான் மனிதரை மனிதராக இந்தியராகப் பார்த்துப் பழக்கம் இல்லையே
அந்த சின்னத்தனமான முயற்சி வெற்றி பெற முடியாததால் ஏற்படும் கோபத்தை பார்த்து நான் சிரித்து கொண்டே சொல்வேன்  உங்கள் அத்தனை மாநிலத்திலும் இல்லாத ஒரு இயக்கம் எங்கள் நாட்டில் 1912 இல் பிறந்துவிட்டது. உன்பெயரைத்தவிர சாதிகளால் அடையாளப்படுத்திக் கொள்வது கேவலம் என்று எங்களை உணரவைத்த ஒரு தலைவர் இருந்தார்.அவர் பெயர் பெரியார் என்று சொல்வேன்
அதன்பின் சாதியைத்தேடியவன் விலகிச்சென்றுவிடுவான் மனிதனை தமிழனை இந்தியனை தேடியவர்கள் நண்பராகி விடுவார்கள் என்றார்
அடுத்த நாள் இந்த விளம்பரம் பார்த்தேன்
மருத்துவர்.இராமதாசு அய்யா அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய போது நிறைய பயிற்சி வகுப்புகள் நடத்தினார் அந்த பயிற்சி வகுப்புகளில் திராவிட அரசியல் கட்சிகள் செய்யத்தவறிய கொள்கைத்திட்டங்களைப் பற்றிய வகுப்புகள் அதிகமாக இருக்கும் நானும் சில வகுப்புகள் எடுத்தேன்
தேர்தல் அரசியல் யாரை எங்கு கொண்டு போய் நிறுத்தும் என்று புரியாமல் போனது ஒருபுறம் இருக்கட்டும். தமிழ் நாட்டை ஒரு நூற்றாண்டு பின்னால் தள்ளும் இந்த வேலையை அவர் முன்னெடுத்திருப்பது அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது

தமிழனும் ஜாதியும் சாதி பெயர் இல்லாத தமிழன்
தமிழனும் ஜாதியும் சாதி பெயர் இல்லாத தமிழன்

தி மு க வில் ப ஜ க வை சேர்ந்தவர்களுக்கு பதவி!

 தி மு க வில் ப ஜ க வை சேர்ந்தவர்களுக்கு பதவி!

திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் சிலர் பதவி அளிக்கபட்டது விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது பாஜகவின் விசுவாசியாக அறியபடுபவர் பொறுப்பு வழங்கியிருப்பதை மீளாய்வு/ மறுபரிசீலனை செய்திடல் வேண்டும் அவரை பரிந்துரைந்தவர் யார் எங்கிருந்து அழுத்தம் வந்ததென வெளிப்படையாக விவாதிக்கவேண்டும்
நண்பர் பழநிவேல் தியாகராஜன் மிக சரியாக செயல்படகூடியவர் ஆனால் உள்ளுர் அரசியலைப்பற்றிய ஆழ்ந்த அறிவு அவருக்கில்லை தொழில்நுட்ப அறிவு மட்டுமே,கட்சியை கரை சேர்க்குமென்கிற நிலைபாடு சரியானதல்ல.. எவ்வளவு திறமைகள் இருந்தாலும் சந்தேகத்திற்குரிய நபருக்கு வாய்ப்பு வழங்குவது கட்சிக்கு வளர்ச்சிக்கு நல்லதல்ல 
 தி மு க வில் ப ஜ க வை சேர்ந்தவர்களுக்கு பதவி!

தளபதியின் விமர்சனம்-சமூகநீதியும் சமதர்மமும்


எடப்பாடி அரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது  ஓட்டை பானையில் சமையல் செய்ய முடியாதென்ற தளபதியின் விமர்சனம் இதைவிட சொல்லிவிட முடியாது  ஆந்திர சந்திரபாபு நாயுடு .. எங்களை எடப்பாடி என்று நினைத்தீர்களா என்றபோது உண்மையில் வெட்கபட நேர்ந்தது இந்த அவல ஆட்சி இனியும் தொடர்வது தமிழக மக்கள் மானத்திற்கு விடபடும் சவால் அவமானகரமான ஒரு ஆட்சியை இனியும் வைத்திருக்கவேண்டுமா
அதிமுக எனும் அழுக்கை துடைத்தெறிய வேண்டியது காலத்தின் கட்டாயம்

திருடி என்று நீதிமன்றங்கள் உறுதியிட்டு ஜெயலலிதாவின் படத்தோடு கட்சிகள் தோன்றுவதும் ஜெயலலிதா நினைவகம் அமைப்பதற்கு மக்களி வரிப்பணம் செலவு செய்வதும் கிரிமினலை ஊடகங்கள் உயர்த்தி பிடிப்பதை தடுப்பதற்கும்
மெல்ல மெல்ல படரும் பழமைவாத பாசிசத்தை துடைத்தெறியவும். கொஞ்சம் கொஞ்சமாய் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் பறிக்கபடுவதை தடுப்பதற்கும் (obc உயர்கல்வி இடஒதுக்கீட்டை திரும்ப பெற) தமிழனின் வரலாற்று சுவடுகளை மண்ணுக்குள் புதைக்கும் கொடுஞ்செயலை தடுத்து நிறுத்திடவும் (கீழடி)
சமூகநீதியும் சமதர்மமும் நிலைநாட்டவும் நல்லதொரு விடியலை நோக்கி காத்திருக்கிறார்கள் மக்கள்,
 

குடும்ப அங்கத்தினர் தலையீடு

 
இவ்வேளையில் திமுகவிற்குள் புகுத்தப்படும் புல்லுறுவிகளை இனம் கண்டு விரட்டியடிக்கவேண்டும்.. சின்ன விடயம்தானே காலபோக்கில் சரி ஆகிவிடுமென மெத்தனமாய் இருப்போமேயாயின் அது இயக்கத்தை பலவீனபடுத்தும் அதைதான் எம் இனபகைவர்கள் விரும்புகிறார்கள்.. காலத்தின் தேவை கருதி .. எதிலும் எச்சரிக்கை உணர்வோடு செயல்படவேண்டிய தருணம் இது..
உட்கட்சி பகை  குடும்ப அங்கத்தினர் தலையீடு கொள்கையறியாதவர்களுக்கு பதவி .. குழிபறித்தல் யாரை எங்கே வைப்பதன்று அறியாமல் வளர்த்துவிடுவது இவையெல்லாம் இயக்கத்திற்கு ஊனத்தை தரும்..
விழிப்புணர்வோடு.. கொள்கை உறுதியாளர்களை அரவணைத்து இடம்தரும் விசமிகளை இனம்கண்டு எச்சரித்து விலக்கிவைத்து முழுவீச்சோடு தளபதியை அரியயணை ஏற்ற உறுதிபூண்டு செயல்படுவோம்..
மாபெரும் இயக்கத்தில் நடக்கும் சிறிய தவறுகளை .. நலம்விரும்பிகளும் நல்மனம் படைத்தோரும் கொள்கையாளர்களும் கவனத்திற்கு கொண்டுவருவது .. சிறந்த ஜனநாயகத்தை வளர்க்க காக்க உதவும்..
சீர்செய்வோம்..
Aalanci Spm
ஆலஞ்சியார்
Search Chennai Property 

மும்பையில் நடந்த விவசாயிகளின் பேரணி ஓடி வந்து உதவிய இஸ்லாமிய பொதுமக்கள்

மும்பையில் நடந்த விவசாயிகளின் பேரணி

ஓடி வந்து உதவிய இஸ்லாமிய பொதுமக்கள் 

மும்பையில் நடந்த விவசாயிகளின் பேரணி ஒரு பி ஜ க மூத்த அமைச்சர் விவசாயிகளை தீவிவாதிகள் என்றதும் அண்மையில் மிக வருந்தத்தக்க ஒரு நிகழ்வாகும்

மும்பையில் நடந்த விவசாயிகளின் பேரணி
மும்பையில் நடந்த விவசாயிகளின் பேரணி
ஓடி வந்து உதவிய இஸ்லாமிய பொதுமக்கள்

இருந்தாலும் விவசாயிகள் மும்பை மக்களுக்குத் தொல்லை தரக் கூடாதென பின்னிரவில் நடந்து அதிகாலை வந்தடைந்த விவசாயிகள் எழுச்சிப் பேரணிநடை பயணத்தில் வந்த விவசாயிகளுக்குக்
காலை உணவையும் குடிநீரையும் தேநீரையும் பரிமாறி உபசரிப்பதற்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்த மும்பை முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் மற்றும் ஏனைய பொதுமக்கள் ஆவர்களுக்காக உதவிசெய்ததும் உணவு மற்றும் மருத்துவ உதவிசெய்ததும் விவசாயிகளுக்கு நம்பிக்கை தரக்கூடிய ஒரு செயலாகும்,
இந்த நல்லிணக்கத்தை ஒருபோதும் எவராலும் அசைக்க முடியாதது என்று பிரிவினையை உண்டு பண்ணுவோர் உணரும் நாள் வெகு தொலைவில்லை
மும்பையில் நடந்த விவசாயிகளின் பேரணி
மும்பையில் மருத்துவ உதவி

மருத்துவ உதவி
மும்பையில் நடந்த விவசாயிகளின் பேரணி
மும்பையில் நடந்த பேரணி

[banner id=”5049″ caption_position=”bottom” theme=”standard-yellow” height=”auto” width=”auto” show_caption=”1″ show_cta_button=”1″ use_image_tag=”1″]

அத்வானிக்கு மோதி 'மரியாதை' செலுத்தாதது பற்றிப் பல மீம்கள், ஸ்டேட்டஸ்கள்.

அத்வானிக்கு மோதி ‘மரியாதை’ செலுத்தாதது பற்றி பல மீம்கள், பல மீம்கள், ஸ்டேட்டஸ்கள். 

என்னமோ அத்வானி மனிதருள் மாணிக்கம் போலவும், அந்த ‘உயர்ந்த’ ஜீவனை மோதி மதிக்காதது போலவும் இப்போதைய kids, அத்வானியின் ரதயாத்திரை பற்றிப் படித்துப் பாருங்கள் மோதிக்கு அப்பர் அவர் என்று தெரியும். 
பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பின்னணியில் அத்வானியின் ரதயாத்திரையே இருந்தது இப்போது அத்வானிக்கு நேர்ந்தது பின்னால் மோதிக்கும் நேரலாம்~! இதையெல்லாம் நாம் கண்டுகொள்ளவே கூடாது

சீனியர் அம்மாவாசை அண்ட் ஜூனியர் அம்மாவாசைகளுக்குள் ஆயிரம் இருக்கும் 

அத்தனை சக்தி படைத்து, ‘வானளாவிய அதிகாரம்’ பெற்றிருந்த அத்வானியே இப்போது மோதியைப் பார்த்துக் கூழைக்கும்பிடு போடுகிறார் என்றால் அதுதான் சந்தர்ப்பவாத அரசியல்  மக்களிடம் செல்வாக்கு பெறாமல் இருந்து

சுயமரியாதை உள்ள தலைவன் இதைச் செய்யமாட்டான்

இனவாதத்தைத் தூண்டும் அத்தனை போலிகளுக்கும் இந்த நிலைதான்  யாரையெல்லாமோ பார்த்து கூழைக்கும்பிடு போடவேண்டி இருக்கும்  வண்டிகளின் டயர்களைப் பார்த்து விழுந்து கும்பிட்ட நிலைதான்
 
சுயமரியாதை உள்ள தலைவன் இதைச் செய்யமாட்டான்  அதுதான் நிஜமான மக்களின் தலைவர்களுக்கும், தன்னைத்தானே தலைவராக நினைத்துப் புளகாங்கிதம் அடைந்துகொண்டிருக்கும் போலிகளுக்கும் வித்தியாசம்.
பி.கு – the disclaimer was deleted, owing to the comments from friends.
Written By Karundhelrajesh

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left