ஆசிபா குடும்பம் கத்துவாவை விட்டு வெளியேறியது
ஆசிபா குடும்பம் கத்துவாவை விட்டு வெளியேறியது மனுவாத சங் பரிவாரிகள் தாங்கள் நினைத்ததை சாதித்து விட்டார்கள். ஆசிபா
வின் குடும்பமும் மேலும்17பேரும் கத்துவாவின் ரசனா கிராமத்தை விட்டு வெளியேறி 110 கி மீட்டரை 9 நாட்களில் கடந்து உத்தம்பூருக்கு அருகில் உள்ள ரவுண்டோமெயில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். 100 ஆடுமாடுகளையும் 15 குதிரைகளையும் மேய்த்துக் கொண்டே வந்திருக்கிறார்கள்
ஆசிபாவின் தந்தை அஜ்மத் கூறினார் எங்களுடைய ஆடுமாடுகளையும் வீடுகளையும் எரிப்போம் என்று மிரட்டினார்கள்
எங்களது ஆடுமாடுகள் செத்தால் நாங்களும் சாக வேண்டியதுதான் எங்களுக்கு
வாழ வேறு வழியில்லை ஏற்கெனவே எங்களது அருமைக் குழந்தையை பறிகொ
டுத்துவிட்டோம் மீண்டும் கத்துவா திரும்பமாட்டோம் இதற்கு இன்னொருகாரணம்
இவரின் இன்னொரு மகளின் பாதுகாப்பு பற்றிய கவலை அந்த மகள் ஆசிபாவை
விட சில ஆண்டுகள் மூத்தவள் (டிஒஐ ஏடு)அந்தப் பகுதியிலிருந்து முஸ்லிம்களை
அச்சுறுத்தி விரட்ட வேண்டும் என்றுதான் ஆசிபாவிற்கு அந்த கொடூரத்தை செய்தி
ருக்கிறார்கள் சங்பரிவாரிகள் என்பது உறுதியாகிறது ஆக இந்த அக்கிரமத்திற்கு
மூலகாரணம் மதவெறியே