வீட்டின் வாசற்படி எப்படி அமைக்க வேண்டும்
புதுவீடு கட்டுபவர்கள் வாசற்படி எந்த பக்கம், எந்த பாகத்தில் வைக்க வேண்டும்?
வீட்டிற்கு நான்கு மூலைகள்.ஒரு சதுரமான வீட்டை கற்பனை செய்துக் கொள்ளவும்.அதில்,வட கிழக்கு மூலை ஈசானிய மூலை என்றும்,தென்கிழக்கு மூலை அக்னி மூலை என்றும்,தென்மேற்கு மூலை நிருதி மூலை என்றும்,வடமேற்கு மூலை வாயு மூலையென்றும் மனதில் கொள்ளவேண்டும்
வீட்டின் வாசற்படி எப்படி அமைக்க வேண்டும்
இதில் கிழக்கு பார்த்த வாசற்படி அமையும் வீடாக இருந்தால்,வட கிழக்கு தென்கிழக்கு மூலையான ஈசானிய மூலையிலிருந்து அக்னி மூலையை எத்தனை அடி என கணக்கிட்டுக் கொள்ளவேண்டும்.உதாரணமாக 27அடி எனக் கொள்வோம்.அதை ஒன்பது நவகிரகத்திற்காக ஒன்பது பாகமாக பிரிக்க வேண்டும்.அப்படி பிரித்தால் ஒரு பாகம் 3அடி வருமல்லவா?அதை கவனம் கொள்ளுங்கள்.
இப்போது 27அடியில்,3அடி வீதம் ஒவ்வொரு கிரகத்திற்கும் பிரிக்க வேண்டும். வாசற்படி அமைக்கும் கிழக்கு பக்கம் நோக்கி திரும்பி நின்றால்,இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்திற்கு,ஈசானிய மூலையிலிருந்து அக்னி மூலைக்கு,
சூரியன்,சந்திரன், செவ்வாய், புதன்,குரு,சுக்ரன்,சனி, ராகு,கேது.என வரிசையாக மூன்று மூன்று அடியாக ஒன்பது கிரகத்திற்கும் பிரிக்கவேண்டும்.
அதன்படி முதல்3அடி சூரியனுக்கும்,இரண்டாவது 3அடி(3To6)சந்திரனுக்கும்,
மூன்றுவது 3அடி(6-9)செவ்வாய்க்கும்,நான்காவது 3அடி(9-12)புதனுக்கும்,ஐந்தாவது 3அடி(12-15)குருவுக்கும்,ஆறாவது 3அடி(15-18)சுக்ரனுக்கும்,ஏழாவது 3அடி(18-21)சனிக்கும்,எட்டாவது 3அடி(21-24)ராகுவிற்கும்,ஒன்பதாவது 3அடி (24-27)கேதுவிற்குமாக 27அடிகளை பிரித்துக் கொள்ளவேண்டும்.இதில் எந்த கிரகத்தின் பகுதிக்குள் தலைவாசற்படி வைக்கலாம் என பார்ப்போம்.
இந்த ஒன்பது கிரகத்தினுடைய பகுதியில்,சூரிய பாகத்தில்(முதல் 3அடி) வாசற்படி வைத்தால்,ஆதாயம் குறைந்து,தாய்க்கும் பிள்ளைக்கும் மனசங்கடம் உண்டாகும்.
சந்திர பாகத்தில் வைத்தால் வளர்ச்சி உண்டாகும்.
செவ்வாய் பாகத்தில் வைத்தால் வம்பு,வழக்கு,கடன் உண்டாகும்,
புதன்,குரு பாகத்தில் வைத்தால் ஆதாயமும்,லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
சுக்ர பாகத்தில் வீடு,மாட்டுதொழுவம் வாசற்படி வைக்கலாம்.
சனி பாகம் வம்பு,வழக்கு,விபத்து உண்டாகும்.
ராகு கேது பகுதியும் மனை கைவிட்டு போகும்படி செய்துவிடும்.
ஆக,இவற்றுள் புதன்,குரு பாகமே வாசற்படி வைக்க உகந்தபாகமாகும்.
அதாவது 9வது அடியிலிருந்து 15வது அடிக்குள் தலைவாசற்படி அருகால் வைக்க வீடு சுபிட்சமாக இருக்கும்.வீட்டில் லட்சுமியும் அமைதியும் நிலவும்.குடும்பம் வளரும்.
வாசற்படிக்கு தேக்கு,வேங்கை மரம் உகந்தது.
தெரு வாசற்படி உயர்ந்தும் உடல்வாசற்படி தாழ்ந்தும் இருக்கக் கூடாது.வாசற்காலுக்கு இடது பக்கம் கதவு வைக்க வேண்டும்
Get Rich Property Online
Here is the Tamil
tips advises, from high skilled experienced
Experts-consultants, read and learn
Shasta articles and news on Tamil
Shasta, Chennai Tamil Nadu blog.