பொம்மி நாயக்கன்பட்டியில் ந டந்தது என்ன?
பொம்மி நாயக்கன்பட்டியில் ந
குழாய்ச் சண்டை, வாய்க்கால் வரப்புச்சண்டை,திருவிழாச்சண்டை
பொம்மிநாயக்கன் பட்டியைப் பொறுத்தவரையில், குழாய்ச் சண்டை, வாய்க்கால் வரப்புச்சண்டை,திருவிழாச்சண்டை என்று எது நடந்தாலும் அது தலித்_ இசுலாமியர் பிரச்சினைதான் இப்படி இருக்கும் சூழலில் இந்த முட்டல் மோதல்கள் அடிக்கடி நடப்பவை தான் அதை அவர்களுக்குள்ளாகவே பேசித்தீர்த்துக்கொள்வார்கள், ஆனால் தற்போது இந்தப்பிரச்சினை இவ்வளவு பூதாகரமாக வெடிக்கக் காரணம் என்ன? இதன் பின்னனியில் யார் இருக்கிறார்கள் என்று ஆராய்ந்ததில் புலப்பட்ட உண்மை என்னவெனில்
காலம் காலமாக மாரியம்மன்,காளியம்மன் போன்று தெய்வங்களை வணங்கி வந்த மக்களிடம் புதிதாக இந்தவருடம் தெற்குத்தெருவைச்சார்ந்த ஸ்டிக்கர்கடை ராதாகிருஷ்ணன் என்பவர் பிஜேபியில் பொறுப்பாளராக உள்ளார், இவர் விநாயகர் சதூர்த்தி விழாவைத் துவங்கி உள்ளார், இதைப்பார்த்த ஊர்த்தலைவர் விஜயராமன் ( ஓய்வு பெற்ற காவல் சார்பு ஆய்வாளர்) இந்திராக்காலணியிலும் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதூர்த்தி கொண்டாடி உள்ளார். சரி இதுக்கும் கலவரத்துக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா?
விநாயகர் சதூர்த்தி
வடமாநிலங்களில் மட்டுமே நடந்துகொண்டிருந்த விநாயகர் சதூர்த்தி மெல்ல மெல்ல சென்னையில் ஊடுருவியது, தற்போது தென்மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களிலும் பரவி பாரம்பரிய குலதெய்வ வழிபாட்டை மழுங்கடிக்கச்செய்யும் வேலையை நூதனமாகப் புகுத்தப்பார்க்கிறார்கள் இதன் மூலம் சங்பரிவார்கள் சேரிக்குள் நுழைந்து விட்டார்கள் என்று சொல்லவருகிறேன். சரி விசயத்துக்கு வருவோம்…
பொம்மிநாயக்கன் பட்டியில் தலித்_ இசுலாமியர் கலவரம்
எங்களுக்குள் பாதை,சுடுகாடு பிரச்சினை உள்ளது அதை நாங்களே பேசித்தீர்த்துக்கொள்வோம் இதைப் பயன்படுத்தி சங்பரிவார்கள் ஊடுருவுவதை விடுதலைச்சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறோம்
மேலும் RSS,BJP யின் நரித்தனம், பாதிக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களை ஏற்கனவே ராதாகிருஷ்ணன் இருக்கிற தைரியத்தில் தலித் இசுலாமியர்களுக்கிடையே பிரச்சினையை ஊதிப்பெரியதாக்க முனைகிறார்கள் உங்கள் எண்ணம் நிறைவேற ஒருபோதும் விடுதலைச்சிறுத்தைகள் அனுமதிக்கமாட்டோம்.
தியாகத்தலைவர்
இந்தப் பிரச்சினையில் எமது #தியாகத்தலைவர் அவர்கள் மாவட்டக்கண்காணிப்பாளர் அவர்களிடம் பேசி எங்க மக்களை ஊருக்குள் அனுமதியுங்கள், சுமுகமான சூழல் உருவாக வழிசெய்யுங்கள் நாளை ஒரு குழு உங்களை சந்திக்க வருவார்கள்.ஒத்துழைப்புத்தாருங்கள் என்று கூறினார்.அதன் அடிப்படையில் இன்று நாங்கள் மாவட்டக்கண்காணிப்பாளரைச் சந்திக்க இருக்கிறோம்.இன்று scst அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பகுதிக்கு வர இருக்கிறார்கள் இதுவும் எமது தியாகத்தலைவர் தலையீட்டால்தான் சாத்தியமானது…
இசுலாமியர்களே ! உங்கள் தொப்புள்கொடி உறவுகள் தான் நாங்கள்.உங்களோடு வேறெந்த சாதிக்காரனும்
இணங்கிப்போகமாட்டான்.மேலும் நமக்குள் பிளவு ஏற்படுத்துவதுதான் சங்பரிவாரின் வேலை.எல்லாசாதிக்கார்ரும் பிரிந்து கிடக்கிறார்கள் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டார்கள்,பார்ப்பனியத்துக்கு சிம்மசொப்பனமாய் விளங்குவது இசுலாமியர்களும்,சிறுத்தைகளும் தான், எனவே தான் நமக்குள் மோதல்களை உருவாக்க புழுகுமூட்டையோடு வருகிறான் நாம் எச்சரிக்கையோடு செயல்படாவிட்டால் விழைவு மிக மோசமாக ஆகிவிடும்,பார்ப்பனியத்துக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக நாம் ஒற்றுமையை வலுப்படுத்துவோம்.
#எரிபடும்சேரிகளிலும்மிதிபடும்மசூதிகளிலும்புறப்படும்_விடுதலைச்சூறாவளி
என்ற எமது தலைவர் கூற்றுக்கிணங்க தலித் இசுலாமியர் ஒற்றுமை வலுப்படுத்த கரம் கோர்ப்போம்
(குறிப்பு::: இந்தக்கலவரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை சும்மா பொய்யான தகவல்களை யாரும் பரப்பவேண்டாம்)
பொம்மிநாயக்கன்பட்டியில்ந