வருண் காந்தியின் புகைப்படங்கள்பற்றிப் பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவுக்கு இது புதிதல்ல. குஷ்வந்த் சிங்கின் சுயசரிதையில் இதைப்போலவே இன்னொரு விஷயத்தை எழுதியிருப்பார்.
1111 269449-varungandhi2
மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, நேருவின் காலத்திலிருந்து காங்கிரஸில் அமைச்சராக இருந்துவந்த ஜெகஜீவன்ராம் துணைப்பிரதமராக இருந்தார். அப்போது ஜெகஜீவன் ராமின் 40 வயது மகனும் ஒரு கல்லூரி மாணவியும் அந்தரங்கமாகப் பல் காமசூத்ரா பொசிஷன்களில் எடுத்துக்கொண்ட ஃபோட்டோக்கள் குஷ்வந்த் சிங்கின் மேஜைக்கு வந்து சேர்கின்றன. அது, மேனகா காந்தி ஒரு பத்திரிக்கை துவங்கி நடத்திக்கொண்டிருந்த காலகட்டம். குஷ்வந்த் சிங்கே அப்பத்திரிக்கையின் பொறுப்புகளைக் கவனித்துக்கொண்டிருந்தார்.
இந்த ஃபோட்டோக்கள் இவருக்கு வந்த அன்று மாலை, ஜெகஜீவன்ராமிடமிருந்து இந்திராவுக்கு ஒரு தகவல் வருகிறது. ஃபோட்டோக்கள் பிரசுரிக்கப்படாமல் இருந்தால், மொரார்ஜியை விட்டுவிட்டு மீண்டும் காங்கிரஸுக்கே வந்துவிடுவதாக அவரது உறுதிமொழி. உடனே இந்திரா, முதலில் மொரார்ஜியை விட்டுவிட்டு வாருங்கள்; அதன்பின்பு ஃபோட்டோக்களைப் பிரசுரிக்காமல் விட்டுவிடுகிறேன் என்று பதில் அளிக்கிறார். இடையில், மேனகா காந்திக்கு அவசரம். ஃபோட்டோக்கள் வந்தே ஆக வேண்டும். அப்போதுதான் பத்திரிக்கை பிரபலம் ஆகும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்.
குஷ்வந்த் சிங், ஃபோட்டோக்களை இந்திராவின் ஆணைக்கிணங்க பிரசுரிக்கிறார். அத்தோடு ஜெகஜீவன்ராமின் முதல்வர் கனவு தகர்ந்து தவிடுபொடி ஆனது. இந்த ஃபோட்டோக்களில் எப்படியெல்லாம் டேப்களை உபயோகித்து உறுப்புகள் கஷ்டப்பட்டு மறைக்கப்பட்டன என்பதையும் குஷ்வந்த் விரிவாக விவரித்திருப்பார்.
குஷ்வந்த் சிங் இப்போது இருந்திருந்தால் கட்டாயம் இந்த இரண்டு சம்பவங்களைப்பற்றியும் ஒரு கட்டுரை எழுதிவிட்டு, இரண்டையுமே அவர் பாணியில் history repeats itself என நக்கலடித்திருப்பார் என்பதில் எனக்குத் துளிக்கூட சந்தேகம் இல்லை.
பாபு ஜெகஜீவன் ராமின் மகன் சம்ம்ந்தப்பட்ட அந்தரங்க ஃபோட்டோக்களைப் பற்றிய குஷ்வந்த் சிங்கின் நக்கல் இது.
‘If the kamasutra had 64 poses, these photos most definitely had at least ten of them’.
Truth, love and a little malice- khushwant singh.
Karundhel Rajesh