Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

இதெல்லாம் பாஜக வுக்கு சகஜமப்பா

தினமணி பத்திரிகையின் கார்ட்டூனிஸ்ட் மதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நிலைகெட்ட மனிதரென்றும், தீவிரவாத பிரச்சனை தீரும் வரை அண்டை நாட்டிலேயே இருக்கட்டும் என்றும் தினமணியில் கார்ட்டூன் என்கிற பெயரில் ஒரு நாலாந்திர தாக்குதலை தொடுத்துள்ளார். இதேபோன்று வேறுசிலரும் கூட இத்தகைய பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த சொன்னதற்காகத்தான் இத்தனை வன்மத்தோடும், அநாகரிகத்தோடும் இப்படி எழுதுகின்றனர்.
பாஜக உடைத்தால் மண் சட்டி
———————————
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு முன்னர் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்ததேயில்லையா? இன்னும் சொல்லப்போனால் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பாஜக பாகிஸ்தானுடன் போர் தொடுப்பதன் மூலம் தான் அதற்கு புத்தி கற்றுக் கொடுக்க முடியும் என்று பேசி வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பேச்சுவார்த்தை என்பதை அவர்கள் தங்களது கொள்கை என அறிவித்தார்கள். ஒருகட்டத்தில் வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கே போய் வந்தார் வாஜ்பாய். ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்டு எல்லா பிரச்சனை பற்றியும் பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவு செய்தார்கள். 2004ஆம் ஆண்டில் முஷாரப்போடு ஆக்ராவில் பேச்சுவார்த்தை நடத்தி கிட்டத்தட்ட ஒரு ஒப்பந்தம் வரும் நிலையில் இருந்தது. வாஜ்பாய் காலத்தில் ‘ஆபரேசன் பராக்கிரமா’ என்று சொல்லி ஏறத்தாழ ஓராண்டிற்கு எல்லை முழுவதும் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு போதும் போர் நடைபெறவில்லை.கார்கில் போருக்கு பின்னரும் கூட இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதையெல்லாம் இவர்கள் ராஜதந்திரம் என்று பேசிக் கொண்டார்கள். எனவே எந்தவொரு அரசாங்கத்தின் முதல் முன்னுரிமையாகவும், கடைசி முன்னுரிமையாகவும் பேச்சுவார்த்தை என்பதுதான் இருந்திருக்கிறது. ஆனால், பாஜக ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒன்று பேசுவதையும், எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்று பேசுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது. பாஜகவின் ஆதரவாளர்களுக்கும் இது பொருந்தும். பாஜக பேச்சுவார்த்தை நடத்தினால் அது ராஜதந்திரம், தேசபக்தி. அதே விஷயத்தை மற்றவர்கள் முன்மொழிந்தால் அது தேசத் துரோகம். இது தான் அவர்களின் வரையறையாக உள்ளது.
*
‘சேலை டிப்ளமசி’
___________________
முந்தைய பாஜக ஆட்சிக் காலத்தில் தான் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்தது. 2014ல் மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தனது முடிசூட்டு விழாவிற்கு பாகிஸ்தான் பிரதமரை அழைத்திருந்தார். இதற்கு முன் யாரும் செய்யாதது இது என்றும், இது பாகிஸ்தான் குறித்த இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரப்போகிறது என்றும் பாஜக ஆதரவாளர்கள் பீற்றிக் கொண்டு அலைந்தார்கள்.2015 ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் போயிருந்த மோடி ஏதோ அடுத்த வீட்டை எட்டிப்பார்ப்பதைப்போல திடீரென பாகிஸ்தானுக்கு சென்றார். நவாஸ் ஷெரீப்பிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லப்போனதாக பத்திரிகைகள் கொண்டாடின. இவர் அவரைக் கட்டிப்பிடிக்க, அவர் இவருடைய தாயாருக்கு சேலை பரிசளிக்க, இந்தியாவின் ஊடகங்கள் காஷ்மீர் பிரச்சனை, எல்லை தாண்டிய பயங்கரவாதம், தீவிரவாத பிரச்சனை, பயங்கரவாத பிரச்சனை அத்தனையும் முடிவுக்கு வந்துவிடும் என்பது போல எழுதித்தள்ளினார்கள்.பாகிஸ்தானுக்கு இந்தியப் பிரதமர் போவதற்கு முன்பாக 2014ம் ஆண்டு ஜூலை தொடங்கி 2015 டிசம்பர் வரை எல்லையில் தீவிரவாதிகளாலும், பாகிஸ்தான் படையினராலும் 32 ராணுவ வீரர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இத்தனைக்கும் பிறகு தான், பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு வாழ்த்துச் சொல்வதற்காக ஆப்கானிஸ்தானிலிருந்து அப்படியே பறந்து சென்று கட்டிப்பிடித்து வந்தார். நவாஸ் ஷெரீப், மோடியின் தாயாருக்கு சேலை பரிசாக கொடுத்தனுப்பியதை இந்திய பத்திரிகைகள் கொண்டாடி மகிழ்ந்தன. அந்த சேலைதான் சமாதானக் கொடி என்பது போல மதி போன்றவர்கள் பீற்றினார்கள்.
*
பயங்கரவாதிகளோடு கொஞ்சியது யார்?
________________________________________________
ஒரு நாட்டோடு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று சொன்னாலே அடுத்த நாட்டிற்கு போ என்று சொல்லும் மோடி வகையறா, எல்லைக்கப்பால் இருந்து தீவிரவாதிகளாலும், ராணுவத்தினராலும், நமது வீரர்கள். நமது பொதுமக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த இந்த காலத்தில்தான் மோடி பாகிஸ்தானுக்கு போனார் என்பதை மறந்து விடுகிறது. இதை இதர கட்சிகள் யாரும் கேள்வி கேட்கவில்லை.இதற்கிடையே மோடி அரசாங்கம் பதவியேற்ற பிறகு, 2 மாத காலத்திற்குள் வேத் பிரதாப் வைத்திக் என்பவர் லாகூருக்கு சென்று ஜூலை மாதம் 2ம் தேதியன்று ஜமாத் – உத் தவாவின் தலைவரை சந்தித்தார். மேற்படி வேத் பிரதாப் வைத்திக் ஆர்எஸ்எஸ்க்கும் பிஜேபிக்கும் மிகவும் நெருக்கமானவர். இந்தியாவின் தேசியப்பாதுகாப்பு ஆலோசகராக உள்ள அஜித்தோவல், பிரதமரின் தலைமை செயலாளராக உள்ள நிருபேந்திர மிஸ்ரா, கூடுதல் தலைமை செயலாளராக உள்ள பி.கே மிஸ்ரா, வேத் பிரதாப் வைத்திக், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தத்துவவாதிகளில் ஒருவராக இருக்கும் குருமூர்த்தி- இவர்கள் அனைவரும் விவேகானந்தா இன்டர்நேசனல் டிரஸ்ட் என்கிற ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பின் இயக்குநர்கள். எனவே, இவர்களுக்கு இடையே உள்ள பிணைப்பு என்ன என்பது விளங்கும்.
வைத்திக்கும் ஹபிசும்
————————–
லாகூரில் வைத்திக் சந்தித்த ஹபிஸ் சையது யாரென்று புரிந்து கொள்வது மிக முக்கியமானது. 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மும்பையில் 12 இடத்தில் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதல் 4 நாட்கள் நீடித்தது. சில இடங்களில் துப்பாக்கிச்சூடு; சில இடங்களில் குண்டு வெடிப்புகளும் நடைபெற்றன. இந்த தாக்குதல்களில் 164 பேர் கொல்லப்பட்டார்கள். குறைந்தபட்சம் 308 பேர் காயமடைந்தார்கள். இந்த தாக்குதலை திட்டமிட்டுக் கொடுத்த தீவிரவாதிதான் ஹபிஸ் சையது. இந்த ஹபிஸ் சையதைத்தான் வேத் பிரதாப் வைத்திக் சந்தித்தார். இந்த சந்திப்பை ஆர்எஸ்எஸ்-ன் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமார் வரவேற்றார். வைத்திக் ஒரு தேசபக்தர் என்றும், அவர் மிகச்சிறந்த விழுமியங்களைக் கொண்டவர் என்றும், இந்தியாவின் நன்மைக்காகத்தான் அவர் ஹபிஸ் சையத்தை சந்தித்திருப்பார் என்றும் ஆர்எஸ்எஸ் கூறியது. அதாவது ஏற்கனவே தீவிரவாத நடவடிக்கையை கட்டமைத்து விட்டு, பல இந்தியர்களை கொன்றவர்களோடு ஆர்எஸ்எஸ்க்கு நெருக்கமானவர் சந்தித்தால் அதை தேசபக்த செயலாக அவர்கள் பேசுவார்கள். அது இந்தியாவுக்கு உதவும் என்று கருதுவார்கள். அதை நாடே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று சீத்தாராம் யெச்சூரி சொன்னால் அவர் அடுத்த நாட்டுக்கு போக வேண்டும் என்று தினமணி மதி ‘ஃபட்வா’ போடுகிறார். ஒரு கட்சியின் தலைவரைப் பற்றி விமர்சிக்கும் போது இருக்க வேண்டிய நாகரிகமோ, ஒரு பத்திரிகையின் கார்ட்டூனிஸ்டுக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச நாகரிகமோ இன்றி, மதி இப்படிப் பேசுகிறார்.
*
அப்போ நாடாளுமன்றம் இப்போ உரி..!
_________________________________________________
_
கடந்த காலத்தில் மும்பை நகரத்தின் மீது தாக்குதல் நடந்த போது ‘இந்தியாவின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாத அரசு’ என்று காங்கிரஸ் கூட்டணி அரசை பாஜக, சங் பரிவார் அமைப்புகள் கடுமையாக குற்றம்சாட்டினர்.ஆனால் வாஜ்பாய் ஆட்சிப்பொறுப்பில் இருந்த போதுதான் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது; மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பதான்கோட் ராணுவ முகாம் மீதும், உரி ராணுவ முகாம் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டது. ஆனால் பாஜக இதுகுறித்து வரும் விமர்சனங்களைப் புறந்தள்ளுகிறது. ‘‘நம்முடைய வீரர்கள் இறந்திருக்கிறார்கள்; இந்த நேரத்தில் அரசாங்கத்தை விமர்சிப்பது தேச விரோதச்செயல்’’ என்று கட்டளை இடுகிறது.2008ம் ஆண்டு மும்பை தாக்குதலின்போது இப்படி அரசை விமர்சித்தவர்களை தேச விரோதிகள் என்று சொல்லலாமா? அப்படி ஒரு தேச விரோதியையா இந்தியாவின் பிரதமராக வைத்திருக்கிறோம்? எந்தவித நியாயமுமற்ற நிலையில், இந்தியாவுக்கு போர் வெறியை உருவாக்குவதன் மூலம் உள்நாட்டிற்குள் ஏற்பட்டிருக்கும் அதிருப்திகளை சமாளிப்பதற்காக இந்தியாவின் பெருமைகளையும், கவுரவத்தையும், பாதுகாப்பையும் அடமானம் வைக்கிற அரசாங்கமாக மோடி அரசாங்கம் இருக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை கொன்று விட்டதாகவும், இதற்கு முன்பு இப்படி எல்லாம் நடந்தது இல்லை என்றும் இவர்கள் கூறித் திரிகிறார்கள்.
இதெல்லாம் பாஜகவுக்கு சகஜமப்பா…!
———————————————-
மன்மோகன் சிங் காலத்தில் இதேபோன்று 3 முறை நடந்ததாக அப்போது ராணுவத்தில் இருந்த அதிகாரிகள் சொல்கிறார்கள். எல்லைக்கு அப்பால் இருந்து தாக்குதல் அதிகமாகிற இதுபோன்ற காலங்களில் இந்திய ராணுவம் கடந்த காலத்திலும் இத்தகைய பதிலடியை கொடுத்திருக்கிறது. ஆனால் இந்த காலத்தில் அத்தகைய பதிலடி கொடுக்கப்பட்டதா என்பதே கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.5-10-2016 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை எல்லைப்பகுதியில் போய் விசாரித்ததாகவும், லேசான தாக்குதல் நடந்தது என்றும், அரசாங்கம் சொல்வது போல அழிக்கப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை அத்தனை அதிகமாக இருக்காது என்றும் இதை பார்த்தவர்கள் சொன்னதாகவும் எழுதியுள்ளது. ஆனால், அரசாங்கம் இந்த தாக்குதல் பற்றிய எந்த ஒரு காணொலி காட்சியையும் வெளியிடவில்லை. ஐ.நா. பொதுச்செயலாளரின் ஊடக உதவியாளரும் இத்தகைய தாக்குதல் நடந்திருக்காது என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
*
பொய்யும், புரட்டும்
_____________________
இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் முழுவதும் ‘‘எல்லை தாண்டி எதிரிகளை அழித்த மாவீரன் மோடிக்கு வாக்களியுங்கள்’’ என்று வாசகங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது. இந்தியாவின் கவுரவமும், பெருமையும், பாதுகாப்பும் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை; உத்தரப்பிரதேச தேர்தல் ஒன்றே தனது நோக்கமென்று மோடி அரசாங்கம் செயல்படுகிறது.தேசத்தின் பாதுகாப்பு நெருக்கடியில் இருக்கிறது. எனவே அரசு குறித்த எந்த விமர்சனத்தையும் வைக்காதீர்கள் என்று சொல்பவர் யாரும் தேசப் பாதுகாப்பு பிரச்சனையை வாக்குகளை பெறுவதற்கு பயன்படுத்தக் கூடாது என்று சொல்லவில்லை. உண்மையில், எல்லைக்கு அப்பால் பயங்கரவாதிகள் முகாமின் மீது இத்தகைய தாக்குதல் நடந்ததா? என்று கூட தெரியாத நிலையில் அத்தகைய தாக்குதல் நடந்து விட்டதாகவும், அதனாலேயே தீவிரவாதிகள் முறியடிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே மோடி பெரிய வீரர் என்றும், அதற்காகவே உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் சொல்வது வெட்கக்கேடானது. ராணுவத்தின் தியாகத்தை தங்களுடைய குறுகிய தேர்தல் வெற்றிக்காகப் பயன்படுத்துகிற மிகக் கேவலமான செயல்.இந்தப் பின்னணியில்தான் எல்லையில் தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சரிதான்; ஆனால் அதேசமயம் இதை ஒரு போராக மாற்றிவிடக்கூடாது என்று சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார். இந்த காலத்தில் பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் தன்னோடு தொடர்பு கொண்டதாகவும் இரண்டு தரப்பும் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார். இந்திய பாதுகாப்பு அமைச்சகமோ பிரதமர் அலுவலகமோ பாதுகாப்பு ஆலோசகரோ இந்த செய்தியை இந்த நிமிடம் வரை மறுக்கவுமில்லை, ஒப்புக்கொள்ளவுமில்லை.ஒருபக்கம் பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்துவதும், இன்னொரு பக்கம்அதைப்பற்றிய விவரங்களை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருப்பதும், அதேசமயம் இத்தகைய பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென்று சொல்லும்போது, சொல்பவர்களை தேசத்துரோகிகளைப் போல சித்தரிப்பதும், நேர்மையற்ற அணுகுமுறை. இத்தகைய அணுகுமுறையை ஆர்.எஸ்.எஸ்.சும், பாஜகவும் தங்கள் கொள்கையாகக் கொண்டுள்ளனர்.மதி ஏன் அதை கொண்டாடுகிறார் என்று தெரியவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கச் சொல்கிறது. அதனால் யெச்சூரி நிலைகெட்ட மனிதர்; அவர் வெளிநாடு போக வேண்டும், என்றெல்லாம் பேசுவது தேசநலனுக்கு உதவாது. வேண்டுமானால் மதிகள் ஆதரிக்கும் மோடிகளின் தேர்தல் வெற்றிக்கு அது உதவக்கூடும். ஆனால் இந்தியாவுக்கோ, இந்திய மக்களுக்கோ எந்த நன்மைகளையும் விளைவித்து விடாது.2008ம் ஆண்டு பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு முன்பு வரை பாரம்பரிய போர் முறையில் பாகிஸ்தான் இந்தியாவோடு மோத முடியாத நிலையிலேஇருந்தது. ஆனால் பொக்ரான் அணு சோதனைக்கு பிறகு பாகிஸ்தானும் தன் கையில் அணுகுண்டுகளை வைத்திருக்கிறது. இது 2008க்கு முன்னர் இந்தியாவுக்கு இருந்த போர் வலிமையை இல்லாமல் செய்துவிட்டது என்பதே உண்மை. மதி போன்றவர்கள் வாக்குகளை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஒரு கூட்டத்துக்கு துணை போவதன் மூலம் இந்தியாவுக்கு நன்மை ஏதும் செய்யவில்லை. அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் சேவை செய்து விட்டுப் போகட்டும், மாறாக, இந்திய மக்களின் வாழ்வோடும், இந்தியாவின் பாதுகாப்போடும் இந்திய மக்களின் உயிரோடும் விளையாடாமல் இருக்கட்டும்!
*
– தோழர் க.கனகராஜ்
மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
# தீக்கதிர், 6-10-2016
Image may contain: 1 person , text
இதெல்லாம் பாஜக வுக்கு சகஜமப்பா

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (1) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (1) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left