இந்தியாவில் முதல் பிரதமர் நாத்திகனாக வந்ததில் பெரும் நல்லது நடந்தது
விடுதலை இந்தியாவில் முதல் பிரதமர் நாத்திகனாக வந்ததில் பெரும் நல்லது நடந்தது
ஆர்எஸ்எஸ் ஆசைபட்ட படேல் வந்திருந்தால் இந்தியாவின் நிலை.. வளர்ச்சி கேள்விக்குறியாகியிருக்கும் ..
சாதி மத மோதல்களும் கல்வியின்மையால் நாடு பின்தங்கிய நிலையில் இருக்கும்
ஆம்
SAILக்கு பதிலாக சிலையும் IITக்கு பதிலாக கோவிலும் நேரு கட்டியிருந்தால் இந்தியா வளர்ந்த நாடாக மாறியிருக்குமா? – டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ..
நாட்டில் மதம் பேசிகிறவர்கள் சாதிய சிந்தனையாளர்களால் நடுநிலையோடு செயல்பட முடியாது .. எதாவதொரு சூழலில் தான் சார்ந்த மத சாதிக்கு கீழ்படிய வேண்டிவரும்,.. அதை நியாயபடுத்த மேலும் மேலும் தவறான வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டிவரும் .. தமிழகத்தில் காங்கிரஸ் முதல்வர்களில் காமராஜர் தவிர்த்து எல்லோருமே ஏதோவொருவகையில் தான் சார்ந்த சாதி பின்னணிக்கு கட்டுபட்டிருக்கிறார்கள் .. ராஜாஜியை கேட்கவே வேண்டாம் போதிய நிதி இல்லையென்று 6000 பள்ளிகளை மூடியவர் வேத பாடம் படிக்க 12 லட்சத்தை ஒதுக்கி சமஸ்கிருதத்தை வளர்க்க பாடுபட்டார் .. பெரியாரின் நிழலில் காமராஜர் செயல்பட்டதால் தான் இடைநிலைக் கல்வி எல்லோருக்கும் கிடைத்தது .. தொடர்ந்து வந்த பக்தவச்சலம் பெரிதாக மாற்றம் நிகழ்த்த முடியாமல் போனாலும் இருப்பதை களைய முடியவில்லை ..
..
திராவிட ஆட்சி வந்த பிறகுதான் அண்ணாவும் ..தொடர்ந்து கலைஞர் பெருமகனும் சாதி மதத்தை விடுத்த சமூகநீதியை எல்லோருக்குமான உரிமையை நிலைநாட்டுவதிலே பெரும்பங்காற்றினர்.. பேரருளானன் கலைஞர் ..கல்வியில் செய்த புரட்சி ஒடுக்கபட்ட மக்களுக்கும் பின்தங்கிய சமூகத்திற்கு பேருதவியை செய்தது உயர்க்கல்வி என்பதே பார்பனர்களுக்கானதென்ற பிம்பத்தை உடைத்து அனைவரும் உயரத்தை தொட முடியுமென்றாக்கியது .. வேலைவாய்ப்பில் உயர் சமூகத்தோடு போட்டியிட தகுதியுடையவனாக்கியது கிராமபுற மாணவர்களின் கல்வி தரம் உயர்ந்தது ..
இந்திய மாநிலங்களில் இன்றும் கல்வியில் வேலைவாய்ப்பில் தமிழகம் தன்னிகரற்ற இடத்தை அடைந்திருக்கெதன்றால் .. இந்த நாத்திகர்கள் Atheist செய்த பெருந்தொண்டே காரணம் ..
..
மதம் மனிதனை சுயநலக்காரனாக ஒருவித போதையுடையவனாக .. நான்தான் பெரியவன் தன்சாதி தான் உயர்ந்ததென்ற எண்ணம் கொண்டவனாக சிநிதிக்கவிடாமல் பேதையாகவே வைத்திருக்கும் .. அவன் மதத்தின் சாதியின் கட்டுபாட்டியிலிருந்து மீண்டு வரவே முடியாது எதையும் பகுத்தாயவிடாது.. பக்தி பயம் என ஒருவித தாழ்வை ஊட்டி வழிகெடுக்கும் .. பொதுவாழ்வில் வருகிறவர்கள் குறைந்தபட்ச தகுதியாக மதம் மறுத்த சாதி சிந்தனையற்றவர்களாக இருந்தால் நல்லதொரு சமுதாயத்தை படைக்கலாம் ..
கேஜ்ரிவால் சொன்னதைப்போல நேரு நாத்திகராக இருந்ததால் நாடு தப்பித்தது
..