தவ்ஹீத் ஜமாத்தும் பி ஜே மீது உள்ள குற்ற சாட்டும் இது தமிழச்சியின் பதிவு
தவ்ஹீத் ஜமாத்தும் பி ஜே மீது உள்ள குற்ற சாட்டும் இது தமிழச்சியின் பதிவு தவ்ஹீத் ஜமாஅத்’ இஸ்லாமிய அமைப்பின் தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீன் என்னும் பிஜே மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மை என்று நிருபிக்கப்பட்டதால் அந்த அமைப்பில் இருந்து சில தினங்களுக்கு முன் வெளியேற்றப்பட்டிருக்கிறார்
2017-இல் பிஜே, ஒரு பெண்ணுடன் நடத்திய சல்லாப உரையாடலை எனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட போது அது பொய் தகவல் என்றும் அதை நீக்குமாறும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்ததோடு, என்னை ஆபாசமாக திட்டித் தீர்த்தார்கள். அந்த ஆடியோ உரையாடல் 2018-இல் உண்மை என்று நிருபிக்கப்பட்டு அந்த அமைப்பின் உறுப்பினர்களே தங்கள் தலைவர் பிஜேயை தண்டித்திருக்கிறார்கள்.
பல விவாதங்கள் அவர்களோடு நடத்திய போதும் நான் எழுப்பிய குரான் குறித்த எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் நான் பயந்து ஓடியதாக புளுகித்தள்ளினர்.
2017 இல் பெரியாரிய தொண்டர் பாருக் இறைமறுப்பு கொள்கையாளர் என்பதற்காக சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட போது அச்சம்பவத்தை இவர்கள் நியாயப்படுத்தினர். ஒரு கட்டத்தில் கருப்பு தீவிரவாதிகள் என்று பெரியார் தொண்டர்களை இழிவுப்படுத்தினர். இவர்களை தமிழ்நாட்டிலுள்ள மற்ற இஸ்லாமிய அமைப்புகள் புறக்கணித்திருந்த போதும் பிஜேபியின் வாய் திறமைக்காக ஒரு கூட்டம் இருக்கவே செய்தது.
எந்த வாய் குறிப்பிட்ட இஸ்லாமிய மக்களை முட்டாள்களாக்கி அரசியல் செய்ததோ, அதே வாய் சல்லாப உரையாடல் ஆடியோவில் மாட்டிய போது பிஜே, “அது டப்பீங் குரல், அவன் நானில்லை” என்று சாதித்துக் கொண்டிருந்தார். கடைசியில் அனைத்தும் உண்மை என்று நிருபிக்கப்பட்ட பிறகு ‘தவ்ஹீத் ஜமாஅத்’ தலை குனிந்து நிற்கிறது.
காமுகர்கள் என்று காதலர்களை இழிவுபடுத்திய அதே பிஜே இன்று காமுகனாக இருந்ததற்காக தண்டிக்கப்படுகிறார்.
காதலும், காமமும் அருவெறுப்பானதும் சட்டக் குற்றத்திற்கும் உட்பட்டதல்ல. ஆனால் மதபோதகர்கள் கடுமையாக இவற்றை மக்கள் முன் விமர்சிக்கிறார்கள். மக்கள் முன் தங்களை மனித குணாம்சங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக நிருவிக் கொண்டு திரை மறைவில் செய்யும் கள்ளத்தனங்கள் தான் அருவெறுப்பானது அசிங்கமானது என்பதை நம்ப மறுக்கிறார்கள்.
இனி தவ்ஹீத் ஜமாஅத் தங்கள் வாய் ஜாலங்களை நிறுத்திக் கொள்வது அவர்களது நடத்தைக்கு அழகு!
எனது வாதங்கள்:
https://www.youtube.com/watch?v=wXAPf46-P5U
https://www.youtube.com/watch?v=GS8ZH1EH2YU
தவ்ஹீத் ஜமாஅத் – விவாத அழைப்பு :
https://mobile.facebook.com/ThouheedJamath/photos/a.340617859290568.86761.338454826173538/1134052829947063/?type=3
©Yuma JAHARO [தமிழச்சி]
15/05/2018
#தவ்ஹீத்_ஜமாஅத் | #இஸ்லாமிய_ஏகத்துவ_பிரச்சாரம் | #இஸ்லாம் | #TNTJ | #PJ | #onlinePJ |