Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates
எது பெண்ணுரிமை பெண் சுதந்திரம் நாம் (ஆண்கள்) வழங்குகிற எதுவுமே அவர்களுக்கு சலுகை என எண்ணிக்கொள்கிறோம்! கல்வி அளித்திருக்கிறோம் வேலைக்கு செல்ல அனுமதித்திருக்கிறோம் அழகாக உடையணிய தடையேதுமில்லை அடுக்கிக்கொண்டே போகிறார்கள் இதுவல்ல!
நீங்கள் செய்கிற செயல்களில் உங்களுக்கு எப்படி உரிமையிருக்கிறதோ யாரும் தலையிட கூடாதென நினைக்கிறீரோ.. என்னிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்கிறீரோ
அதேபோல் பெண்கள் தங்கள் விடயங்களில் சுயமாக சிந்திக்க முடிவெடுக்க உரிமையை வழங்கியிருக்கிறீரா .. நான் உள்பட எவருமே சரியாக நடந்துக்கொண்டிருக்கிறோமா.. முன்பெல்லாம் கலந்தாலோசிப்பதையே தவிர்த்தவன்தான் நானும்.. இப்போதெல்லாம்
அவரின்(இணையரின்)கருத்தை முதலில் கேட்கிறேன் .. என்னிடம் சொல்லியோ ஆகவேண்டுமென்றெல்லாம் இல்லை தகவலாக வேண்டுமானால் சொல் அவ்வளவு தான் ,எனது கருத்தை சொன்னாலும் முடிவு உனதாக இருக்கவேண்டுமென சொல்லியிருக்கிறேன்
அதையே என் மகளிடம் சொன்னேன்.. உன் அறிவு சொல்வதை கேள்.. தடுமாறும் போது ஆலோசனைகளை கேள் .. எதையும் உடன் ஏற்றுக்கொள்ளாதே.. உன் அறிவேற்காதவரை.. இப்படி சொல்லி வளர்க்கிறேன்..சின்ன சின்ன விசயங்களில் கூட அவர்களின் ஆசைகளை மறுக்கிறோம்
இப்படிதான் உடையணிய வேண்டும்.. இதைதான் செய்யவேண்டுமென.. எப்போது சரிநிகர் என்று நினைக்கிறோமோ அப்போதுதான் நாம் நாமாவோம்.. .. பேஷன் டெக்னாலஜி படிக்கணும் படி எனக்கு நல்லா டிராயிங் வரும் அதையே செய்.. என்ன படிக்கவேண்டுமென நீதான் தீர்மானிக்கவேண்டும்..ஒன்றை மட்டும்தான் சொன்னேன்.. நம் வீட்டிலேயே ரோல்மாடல் உண்டு
என் சகோதரியின் மகள்.. கடும் எதிர்ப்பிற்கிடையே தொடர்ந்து படித்து இன்று நீதிபதியாகி இருக்கிறார் பார்.. முயற்சி செய் எதில் உன்னால் மிளிர முடியுமோ அதை தேர்வு செய்.. இதைதான் என் மகளிடம் சொன்னேன்
பெண்களுக்கு நாம் தரும் சலுகைகளை அவர்களின் உரிமையாக கருதுகிறோம் அப்படியல்ல.. சிறிய விடயங்களில் கூட நாம் காட்டும் கடுமை அவர்களின் உரிமைக்கு எதிரானதாகும்.
விட்டுகொடுக்கிறேன் என்பதெல்லாம் ஒருவகை ஏமாற்று.. மதமும் அரசும் பெண்களுக்கு செய்த தீங்கைவிட குடும்பமும் சமூகமும் செய்தது அதிகம்
மதம் அவர்களை இரண்டாம்தரத்தில் அல்லது கீழ் வைத்ததென்றால் அதைவிட சற்று அதிகமாய் இந்த சமூகம் சுற்றம் குடும்பம்
சொற்களால் காயப்படுத்துகிறது.. பாமரர்கள் மட்டுமல்ல நன்கு படித்தவர்களிடம் கூட இந்த இனம்காணாத #திமிர் இருக்கிறது.. பெரியாரை படித்தவர்கள்.. அல்லது புரிந்தவர்களிடம் இந்த சமஉரிமை வழங்கல் சிறியளவில் தென்படலாம்
ஜெயலலிதா செய்த ஊழல் மூலம் பயனடைந்தவர் யார்? ஜெயலலிதா செய்திருக்கும் ஊழலைப் பார்த்தால் தோண்டி எடுத்து தண்டனை கொடுத்தாலும் தகும் போல! 3 லட்சம் கோடி என்பது தமிழகத்தின் தற்போதைய கடன் சுமையில் முக்கால்வாசி இது வருமான இழப்பு எல்லாம் அல்ல. பச்சைத் திருட்டு பச்சை ஊழல்
வெள்ளை நிற உயர்ஜாதிப் பெண்மணி
ஜெயலலிதா செய்த ஊழல் மூலம் பயனடைந்தவர் யார்?
இந்திய வைர வியாபரத்தையே ஆட்டிப்பார்த்திருக்கும் ஜெயலலிதா செய்த ஊழல் ஆனால் கவலைப்படாதீர்கள். கண்டெய்னர் விவகாரம் போல இதுவும் இரண்டொரு தினங்களில் காணாமல் போகும். அல்லது, “தள்ளாத வயதில் ஜெயலலிதா ஓடி ஆடி சிறுகச் சிறுகச் சேர்த்த 3 லட்சம் கோடியை திருடிய மன்னார்குடி மாஃபியா,” என செய்தி போடுவார்கள். அதைப் பார்த்தால் ஜெயலலிதா எனும் வெள்ளை நிற, உயர்ஜாதிப் பெண்மணி யின் மேல் உங்களுக்குப் பரிதாபம்தான் வரும். ஆனால் உண்மையில் யார் தெரியுமா பரிதாபத்துக்கு உரியவர்கள்?நீங்கள்தான்!!
பார்ப்பன ஊடகங்களின் பல்லாண்டுகால விஷமப் பிரச்சாரத்துக்கு பலியாகி, சிந்திக்கும் ஆற்றலையே இழந்துவிட்ட நீங்கள்தான் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள்!எடப்பாடி, ஓ.பி.எஸ்சை விட பெரிய அடிமைகள்!
மூன்று லட்சம் கோடி பணத்தை வைரமாக மாற்றிய ஜெயலலிதா
1950களிலேயே, அதாவது எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே காரும், பங்களாவும் வாங்கிய கலைஞரை, அரசியலால் சம்பாதித்தவர் என்றும், போயஸ் தோட்டம் ஜப்திக்கு வந்த சூழலில் அரசியலுக்கு வந்து சாகும்போது மூன்று லட்சம் கோடி பணத்தை வைரமாக மாற்றிய ஜெயலலிதா வை இரும்புப் பெண்மணி, மகாராணி என்றும் அவர்களால் உங்களை நம்ப வைக்க முடியும்.
பிரியாணிக்கடையில் ஒரு பொறுக்கி சோத்துக்காக போட்ட சண்டையை திமுக எனும் இயக்கத்தின் மேல் எழுதி உங்களை எல்லாம் பேச வைத்த அயோக்கியர்கள், பொள்ளாச்சியில் அதிமுக பெயரைச் சொல்லி மாணவிகளை ஆபாசப்படம் எடுத்து குரூரமாக சித்திரவதை செய்த ஆளுங்கட்சி கும்பலைப் பற்றி பேசவே மாட்டார்கள். நீங்களும் ஏதோ பக்கத்து ஊர் செய்தி போல கடந்துபோவீர்கள். ப்ரியாணியில் காட்டிய அக்கறையைக் கூட தமிழ் மாணவிகளின் மேல் காட்டமாட்டீர்கள்
நீட் தேர்வை விட உதயநிதி கிராமசபை கூட்டத்துக்கு வருவதுதான் நாட்டை நாசமாக்கும் பெரிய பிரச்சினை
நீட் தேர்வை விட உதயநிதி கிராமசபை கூட்டத்துக்கு வருவதுதான் நாட்டை நாசமாக்கும் பெரிய பிரச்சினை என அவர்களால் உங்களைப் பேச வைக்க முடியும்.
தூத்துக்குடியில் அத்தனை பேரின் உயிர் சேதத்தை விட ஸ்டாலின் ஒரு பழமொழியை தவறாகச் சொல்வதுதான் மிகப்பெரிய மனித உரிமைப் பிரச்சினை என அவர்களால் உங்களை நம்ப வைக்க முடியும். ஊழலில் தண்டனை பெற்ற லாலு பிரசாத்தான் அயோக்கியர். ஜெ பரிசுத்த ஆத்மா என அவர்களால்தான் உங்களை நம்ப வைக்க முடியும். ரஃபேல் ஊழல் ஏதோ அண்டை நாட்டுப் பிரச்சினை போல, அந்த ஊழல் பற்றிய செய்தி எல்லாம் உங்கள் காதுகளை அண்டாமலேயே செய்துவிட அவர்களால் முடியும்
அவர்களால் எதுவும் முடியும். உங்களை எப்படியும் ஆட்டுவிக்க முடியும். அட்டையைப் போல் உங்கள் ரத்தத்தை உறிஞ்சிவிட்டு, மேலே இருக்கும் மின்விசிறியைக் காட்டி, உங்கள் ரத்தம் வற்றிப்போக அதுதான் காரணம் எனச் சொன்னாலும் மனதார நம்புவீர்கள். பாவம் நீங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்!!
நாங்கள் மைனாரிட்டிகள்தான் எங்களுக்கு ஜனநாயகம் என்பது ஒவ்வொருமுறையும் பெரும் போராட்டம்தான் பெரும்பாலும் ஏமாற்றம்தான். 1991லும், 2001யிலும், 2016யிலும் ஏன் திமுகவைத் தோற்கடித்தீர்கள்? பதில் சொல்லுங்களேன். அப்போதைக்கு ஏதாவது பரப்பி இருப்பார்கள். அவர்கள் ஆட்டுவித்தபடி ஆடியிருப்பீர்கள்.
கலைஞர் கட்டிய எல்லாவற்றுக்கும் எம்.ஜி.ஆர் பெயரை வைக்க அதிமுகவினர் துடிக்கிறார்களே. ஏன்? 13 ஆண்டுகால தொடர் ஆட்சிகாலத்தில் எம்.ஜி.ஆர் ஒன்றுமே கட்டவில்லையா? இல்லை! ஒன்றுமே கட்டவில்லை. அதனால்தான் அடுத்தவன் குழந்தைக்கு இனிஷியல் போட்டுத் தனதாக்கத் துடிக்கிறார்கள். ஆனாலும் எவனாவது மேடையில் நின்று, “புரட்சித்தலைவர் ஆட்சி அமைப்பேன்,” என்றால் உடனே கைதட்டுவீர்கள்!! கலைஞர் நல்லாட்சி செய்தார் என அலுவலகத்திலோ, பொது இடங்களிலோ யாராவது பேசினால் சிரிப்பீர்கள். கிண்டல் செய்வீர்கள். ஏன் எம்.ஜி.ஆருக்கு கைதட்டுகிறீகள்? ஏன் கலைஞரைப் புகழ்ந்தால் நக்கல் அடிக்கிறீர்கள்? என்ன கணக்கு அது? உங்களுக்கு எப்படித் தெரியும் பாவம்!! உங்களை அப்படியே பழக்கப்படுத்திவிட்டார்கள்.
நாங்கள் யாரையும் புனிதப்படுத்தவில்லை. நாங்களும், எங்கள் தலைமுறையும் யாரால் நன்றாக இருக்கிறோம் எனப் பார்க்கிறோம். புள்ளிவிவரங்கள், தகவல்கள் கொட்டிக் கிடக்கிறது.
யார் எங்கள் தலைவர் என்பதை அதை வைத்து தேர்ந்தெடுக்கிறோம். அன்று அண்ணா, பின்னர் கலைஞர், இன்று ஸ்டாலின். இந்தத் தேர்வு கூட பச்சை சுயநலம்தான். எங்களுக்கு நல்லது நடக்க வேண்டும். எங்கள் தலைமுறை நீட்டுக்கு பலியாகக் கூடாது.
மதவெறிக்கு ஆளாகக் கூடாது. கல்வியுரிமையோடு வாழ வேண்டும். தென்னக ரயில்வேயில் இந்திக்காரர்களை பணியமர்த்தி உள்ளார்களே, அது எல்லாம் நம் அண்ணன், தம்பிகளுக்கு, அக்காள், தங்கைகளுக்குப் போக வேண்டிய இடம் தானே! அதை எல்லாம் திரும்பப் பெற வேண்டும். அவ்வளவுதான்.
இதையெல்லாம் யார் செய்வார்களோ, யார் ஆட்சியில் இதெல்லாம் இல்லாமல் இருந்தது என வரலாறு எங்களுக்கு கைகாட்டுகிறதோ, புள்ளிவிவரங்கள் கைகாட்டுகிறதோ அவர்கள்தான் எங்கள் தலைவர்கள்.
ஆனால், உங்கள் அனைவரையும் முழுதாக மாற்ற முடியுமா, காலம்காலமாக பார்ப்பன விஷம் உங்களின் மேல் திணித்த கருத்துக்களைத் தாண்டி உங்களை சுதந்திரமாக சிந்திக்க வைக்க முடியுமா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் அதற்கானப் போராட்டத்தை நாங்கள் கைவிடப் போவதே இல்லை. கைவிடப் போவதே இல்லை.
உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் பாகிஸ்தான் பாராளுமன்றம் பற்றி !
உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் பாகிஸ்தான் பாராளுமன்றம் பற்றி !
இப்படித்தான் பாகிஸ்தானின் பாராளுமன்றத்தில் ஒரு சுவார்சியம்….
பாகிஸ்தான் பாராளுமன்றம் எந்த அளவு உண்மையானதாகவும் மிகவும் சக்தி உள்ளதாகவும் இருக்கிறது என்பதற்கு இந்த வீடியோ உங்களுக்கு சர்பனமாகட்டும்
பாராளுமன்றத்தில் பொய்யான தேவையற்ற விதண்டாவாத பேச்சுகளை பேசக்கூடிய MP க்கள் அமைச்சர்களை தேவையற்ற விந்தாவாதம் பேசியதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட நிமிடத்துக்குள் அவர்களை அந்த பாராளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றும் காட்சி இது அந்த நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் ஒரு வினாடியில் பாராளுமன்றம் உறுப்பினரை அந்த இடத்தில் இருந்து வெளியேற்றும் அதிகாரத்துடன் பாதுகாப்பு துறைக்கு உத்தரவு இடுகின்றார் …
இதுவே இந்தியா இலங்கை போன்ற நாட்டு பாராளு மன்றமாக இருந்தால் எப்படிஇருந்திருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்
இலங்கை பாராளுமன்றத்தில் அன்மையில் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் உங்களுக்கு தெரியும் மிளகாய்த்தூள் அடித்தல் கதிரையை உடைத்தல் மற்றும் சபாநாயகரை கொலை தாக்க ஏத்தணித்தல் போன்ற மிக மோசமான காரியங்கள் அரங்கேறின
ஆனால் பாகிஸ்தானை பொருத்தமட்டில் கட்டுப்பாடும் கட்டுக்கோப்பும் உள்ள ஒரு பாராளுமன்றமாக இயங்குகின்றது அங்கே இனவாதம் மதவாதம் பிரதேசவாதம் என்ற எந்த விதமான வாதங்களையும் யாரும் பேச முடியாது
அதனால் தான் அண்மையில் பஞ்சாபில் ஒரு முஸ்லிம் அமைச்சர் ஹிந்துக்களுக்கு எதிராக பேசிய பொழுது அவரை அந்த தொகுதியில் இருந்து பிரதமர் இம்ரான்கான் பதவி நீக்க்கம் செய்தார்
இந்தியாவை பொருத்தமட்டில் இனவாதத்தையும் மதவாதத்தையும் தினம்தினம் பேசி சிறுபான்மை இனத்தை ஷீந்தும் செயல் சர்வசாதரணம் எத்தனையோ ஹிந்து தீவிரவாதிகள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு அப்பாவி முஸ்லிம்களையும் அப்பாவி சிறுபான்மை மக்களையும் அடித்து அவர்களைத் துன்புறுத்தி கொலை செய்து வருவதை முழு உலகமும் அறியக்கூடியதாக இருக்கின்றது.
உண்மையிலேயே இந்தியா ஜனநாயக நாடு என்று தன்னை அழைத்துக் கொண்டாலும் உண்மையில் இந்தியாவில் ஜனநாயகமும் மக்கள் பாதுகாப்பு மக்கள் சுதந்திரமும் எதுவுமில்லை
அவர்களிடத்தில் இருக்கின்ற நிலைப்பாடு இனவாதம் இனத்துவேஷம் மதத் துவேஷம் இவைகள் தான் இவர்களின் உள்ளத்தில் அடங்கியிருக்கின்றது அதனால்தான் அப்பாவி காஷ்மீர் மக்களை அடித்து அவர்களைத் துன்புறுத்தி அவர்கள் மனதை புண்படுத்தி அவர்களை கொலை செய்கின்றார்கள்
அதுமட்டுமில்லை இந்திய இராணுவம் அப்பாவி காஷ்மீர் பெண்களை கற்பழித்து கொலை செய்கின்றார்கள் இந்தியா இராணுவத்தின் கட்டுப்பாடற்ற மிருகத்தமான செயலை முழு உலகமும் கண்டித்து வருகின்றனர்
இந்த ட்வீட்களுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை’’ எனத் தெரிவித்துள்ளார் பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்கவும் நாடாளுமன்றப் பிரசாரத்துக்காகவும் பிரதமர் மோடி காஞ்சிபுரம் வந்திருந்தார். எப்போதும் போல இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வண்ணம் நெட்டிசன்கள் #GoBackModi, #GoBackSadistModi போன்ற பல ஹேஷ்டேக்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகின. இவற்றில் பல பாகிஸ்தானிலிருந்து பதிவிடப்பட்டன எனச் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் எலியட் ஆல்டர்சன் என்ற புனைபெயர் கொண்டிருக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் மற்றும் பிரபல ஹேக்கர் அப்படி நடந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். ஆதார் தகவல் லீக் ஆன சர்ச்சையை வெளிக்கொண்டு வந்தவர் இவர்தான்.
இன்று ட்விட்டரில் இதுகுறித்து பல தகவல்களை அவர் தெரிவித்தார். அதில் #GoBackSadistModi மற்றும் அதற்குத் தொடர்புள்ள ட்வீட்களாக மொத்தம் 68,543 ட்வீட்கள் நேற்று மட்டும் ட்விட்டரில் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நேரங்களில் நிமிடத்திற்கு 250 ட்வீட்களும், ஒரு மணிநேரத்துக்கு 12,000 ட்வீட்களும் பதிவாகியுள்ளன. மேலும் இந்த பீக் ட்ரெண்ட்நேரத்தில் 41174 ட்வீட்கள் #GoBackSadistModi என்ற ஹேஷ்டேக்குடனும், 16818 ட்வீட்கள் பதிவாகியுள்ளன
மேலும் பல தகவல்களை தெரிவித்த அவர் உங்கள் கனவுகளை கலைத்ததற்கு மன்னித்துக்கொள்ளுங்கள்.ஆனால், இந்த ட்வீட்களுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை’’ எனத் தெரிவித்துள்ளார்
செருப்பை சாணியில் முக்கி பிரேமலதா சுதிஷ் விஜய பிரபாகரன் மூஞ்சியில் பளார் பளார் என அறைந்துள்ளார் ஒரு தேமுதிக நிர்வாகி.
“ஒரே நேரத்தில் அதிமுக, திமுக கட்சிகளுடன் பேசி தொண்டர்களின் உழைப்பை, ரத்தத்தை நல்ல விலைக்கு விற்க முயற்சித்தீர்கள்.. இனியாவது உங்களை நம்பியவர்களை அடகு வைத்து தேர்தல் கூட்டணி பேசாதீர்கள்.. உங்கள் நடிப்பை நம்பி ஏமாற தயாராய் இல்லை” என்று தேமுதிக நிர்வாகி ஒருவர் விஜயகாந்த்துக்கு பரபரப்பான ராஜினாமா கடிதம் ஒன்றினை எழுதி உள்ளார்.
விஜயகாந்த் சென்னை வந்ததில் இருந்தே அரசியல் பரபரப்பு ஆரம்பமானது. அதிலும் கடந்த 2 நாளாக இது இன்னும் அதிகமாகிவிட்டது. கூட்டணி என்று மறுபுறம், கூட்டணி வேண்டாம் என்று மறுபுறம் தேமுதிக நிர்வாகிகள் வலிறுத்துவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதனிடையே முக்கிய நிர்வாகி ஒருவர் ராஜினாமா என்ற செய்தி வெளியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.எல்லாத்துக்கும் காரணம் யார் தெரியுமா.. வேற யாருமல்ல.. விஜயகாந்த் மகன் வாய்தான்!விஜயகாந்த்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் விஜய் பவுல்ராஜா. இவர் விஜயகாந்துக்கு பரபரப்பான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் சொல்லி இருப்பதாவது:
வெட்கப்படுகிறேன் :
உங்களின் திரைப்பட நடிப்பை உண்மை என நம்பி ஏமாந்த லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். உங்களின் கொள்கையை நல்லது என நம்பி கடந்த 1999-ல் ரசிகர் மன்றத்தில் துவக்கி நேற்று வரை உங்களுடன் பயணித்ததை எண்ணி வெட்கப்படுகிறேன், வேதனை அடைகிறேன்.உழைப்புஅரசியலில் பிழைக்க வரவில்லை. உழைக்க வந்தேன் என அடிக்கடி கூறுவீர்கள். நேற்று உங்களின் உழைப்பை பார்த்த போது நீங்களும் ஒரு சராரி அரசியல் வியாதிதான் என்பதை நிரூபித்து விட்டீர்கள். ஒரே நேரத்தில் அதிமுக., திமுக கட்சிகளுடன் பேசி லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பை, ரத்தத்தை நல்ல விலைக்கு விற்க முயற்சித்தீர்கள். தொண்டர்களுக்கு நல்ல மதிப்பு கொடுத்தீர்கள்.
உடல் நலம்:
உங்களுக்கு உடல் நலம் சரியில்லை என இறைவனின் பிரார்த்தனை செய்ததற்கு நீங்கள் நல்ல கைமாறு செய்தீர்கள்.பொது வாழ்வில் தொண்டனின் நலம், தமிழகத்தின் நலம் முன்னெடுத்து செல்ல வேண்டும். உங்களின் பொது வாழ்வு பதவி ஆசை என்ற நிலையில் உள்ளது. இனியாவது உங்களை நம்பியவர்களை அடகு வைத்து தேர்தல் கூட்டணி பேசாதீர்கள். அதுதான் நீங்கள் தமிழகத்திற்கு செய்யும் நன்மை.
மாபா பாண்டியராஜன்உங்களிடம் கேள்வி கேட்க உரிமை உண்டு என்பதால் கேட்கிறேன். அதிமுகவில் தேர்தல் பொறுப்புக்குழு தலைவராக மாபா. பாண்டியராஜன் இருந்தால் உங்களின் நிலை என்ன? திமுகவில் தேர்தல் பொறுப்புக்குழு தலைவராக ஈரோடு சந்திரகுமார் மற்றும் பி.எச். சேகர் இருந்திருந்தால் நீங்கள் தேர்தல் கூட்டணி குறித்து பேசி இருப்பீர்களா?
ராஜினாமா:
உங்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இனியும் உங்களின் நடிப்பை நம்பி ஏமாற தயாராய் இல்லாததால் தேமுதிகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவியையும் ராஜினாமா செய்கிறேன்” என்று எழுதியுள்ளார்.
பிளவுபடுமா?
இந்த கடிதத்தை விஜய் பவுல்ராஜ் தேமுதிக தலைமை அலுவலகத்தில் தந்துவிட்டு அதன் நகலையும் பத்திரிகையாளர்களிடம் வழங்கிவிட்டு சென்றிருக்கிறார்.
இவரை போலவே மேலும் சில தேமுதிக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் தேமுதிக மீண்டும் பிளவுப்படுமோ என்ற சந்தேகமும் வலுத்து வருகிறது.
காஷ்மீர் வியாபாரிகளை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கினர்
காஷ்மீர் வியாபாரிகளை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கினர் உத்தரபிரதேச மாநிலத்தில் தெருவோரத்தில் பழங்களை விற்றுக்கொண்டிருந்த காஷ்மீர் வியாபாரிகளை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கினர். தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரை லக்னோ போலீஸ் கைது செய்தது.
புல்மாவா தாக்குதலையடுத்து நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் காஷ்மீர் மாணவ- மாணவிகள் தாக்கப்பட்டனர். பஞ்சாப் மாநிலத்தில் பல மாணவ – மாணவிகள் குருத்வராக்களில் தஞ்சமடைந்தனர். நாட்டின் பிற பகுதிகளில் வாழும் காஷ்மீர் மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தெருவோரத்தில் பழங்களை விற்றுக்கொண்டிருந்த காஷ்மீரைச் சேர்ந்த மூன்று வியாபாரிகளை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடுமையாகத் தாக்கினர். இது குறித்து போலீஸுக்குத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் காஷ்மீர் வியாபாரிகளை மீட்டனர். இந்து அமைப்பினர் காவி உடை அணிந்துகொண்டு வியாபாரிகளைத் தாக்குவது போன்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகியது. நேற்று இந்தச் சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது.
தாக்குதலில் ஈடுபட்ட விஷ்வ இந்து தல் அமைப்பினைச் சேர்ந்த பஜ்ரங் சோன்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கொலை உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளன. மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா, காஷ்மீர் மக்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவின் பிற பகுதியைச் சேர்ந்தவர்கள் காஷ்மீர் மக்கள் மீது காட்டும் விரோதத்துக்கு இந்த வீடியோவே சாட்சி என்றும் ஒமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
லக்னோ தொகுதியிலிருந்து ராஜ்நாத்சிங் மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates