Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

என்னை மன்னித்து விடு மகளே ஆஷீபா

என்னை மன்னித்து விடு மகளே ஆஷீபா

என்னை மன்னித்து விடு மகளே ஆஷீபா !! கொடும்பாவிகள் சூழ்ந்த இந்த தேசத்தில் நீ பிறந்திருக்க கூடாது. மனிதன் என்ற போர்வையில் வாழும் ஒரு சில கொடிய மிருகங்கள் உண்னை வேட்டையாடிய போது அதை தடுக்க இயலாது கையாலாகாத நிலையில் உள்ள நானும் இந்த தேசத்தில் பிறந்ததற்கு வெட்கித் தலை குனிகின்றேன்.
முதன் முதலாக கொஞ்சம் கடுமையான சொற்களோடு கூடிய பதிவை இங்கே இடுவதற்கு உண்மையிலேயே வருந்துகிறேன்! மிகுந்த மனவேதனையோடு, கண்களில் கண்ணீர் நிறைந்த நிலையில் இந்த பதிவை இங்கு பதிவு செய்கிறேன் 

என்னை மன்னித்து விடு மகளே ஆஷீபா !! கொடும்பாவிகள் சூழ்ந்த இந்த தேசத்தில் நீ பிறந்திருக்க கூடாது. மனிதன் என்ற போர்வையில் வாழும் ஒரு சில கொடிய மிருகங்கள் உண்னை வேட்டையாடிய போது அதை தடுக்க இயலாது கையாலாகாத நிலையில் உள்ள நானும் இந்த தேசத்தில் பிறந்ததற்கு வெட்கித் தலை குனிகின்றேன்

மகளே ஆஷீபா!

மகளே ஆஷீபா! குழந்தையும் தெய்வமும் ஒன்று என கூறுவார்கள்.
இனிமேல் இந்த வார்த்தைக்கே மதிப்பு இல்லையடா என் செல்லமே! எதனாலும் மறக்க முடியாத கடும் துயரமாக போய் விட்டாயடி. குழந்தைகள் கூட வாழத் தகுதியற்ற மண்ணாக போனதடி என் தேசம். குருதி குடிக்கும் ஓநாய்களும், காம வெறிகொண்டு அலையும் சாத்தான்களும் வாழும் தேசத்தில் வந்து ஏனடி பிறந்தாய்! தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுளே! பிஞ்சென்றும் பாராமல் உன் கண் முன்னே வைத்து அயோக்கிய கொடிய மிருகங்களால் இந்த பிஞ்சை வேட்டையாடும் போது நீ எங்கே இருந்தாய்?
மகளே ஆஷீபா! உன்னிடம் மன்னிப்புக் கேட்க கூட மனம் கூசுகிறது. எதற்கெடுத்தாலும் சாதி, மதம், கலாச்சாரம் என்று வாய் கிழிய பேசும் இந்த தேசத்தில் தான் இன்று நீ வேட்டையாட பட்டிருக்கிறாய். என் மகளை கொன்ற மிருகங்களே! உங்களின் காம பசியை தீர்த்துக்கொள்வதற்கு பால் மனம் மாறாத இந்த எட்டு வயது தேவதை என்ன பாவம் செய்தாலடா? மிருகங்களே இனி நீங்கள் பெற்ற பிள்ளைகளின் அருகில் போக கூட அருகதை இல்லையடா உங்களுக்கு. மனிதம் கொன்று மதம் வளர்த்து என்ன பயன் முட்டாள்களே! சாதி மதம் என்று நீங்கள் சாதித்தது என்ன? எட்டு வயது தேவதையை நாசம் செய்வது தான் உங்கள் வேலை என்றால் உங்கள் தலையை அறுத்து எறிந்தால் கூட தப்பில்லையடா. என் செல்ல மகள் ஆஷிபாவை கொன்று இன்று என் இந்திய தேசத்தை கலங்கப்படுத்திவிட்டீர்களடா! இதற்கு பரிகாரமாய்
உங்களின் குருதிகள் இந்த இந்திய தேசம் முழுவதும் ஓடப்பட வேண்டுமடா! இந்திய தேசமே! இந்திய தேசமே! அயோக்கிய மிருகங்களால் சிதைக்கப்பட்ட என் மகள் ஆஷிபாவற்கு என்ன நீதி கொடுக்க முடியும் உங்களால்?
எங்கே நீதி! எங்கே மனிதம்!! மனிதம் மறித்த காட்டுமிராண்டிகளின் தேசமாக மாறிவருகிறதோ என் தேசம்? நீதிக்காக முறையிடும் வாசல்கள் அனைத்திலும் ஓநாய்கள் காவல் நிற்கும் சூழலில் அநீதிகள் அகங்காரம் கொண்டு இப்படி தான் சிரிக்கும். 8 வயது சிறுமியை 7 நாள்கள் தொடர் கற்பழிப்பு செய்து தலையில் கல்லை போட்டு கொள்ளும் கொடூர அரக்கர்களின் மத்தியில் தான் நாம் வாழ்கின்றோமா என்று நினைக்கும் போது உடம்பெல்லாம் கூசுகிறது. பச்சிளம் குழந்தையின் உயிரும், உடலும் துடிதுடித்து, கதறி, கண்ணீர்விட்டு, கேட்பாரற்று தெருவில் வீசியெறியப்பட்டதை பார்த்தும். வாய்மூடி, செவிதாழ்த்தி நகர முற்படும் சாதாரன மானுட பிறவியாக நாங்கள் இருப்பதை நினைத்து வெட்கித் தலை குனிகிறேன்.
அந்த கொடிய மிருகங்கள் இத்தகைய குற்றத்தை செய்து விட்டு கூறிய பதில் தான் வியப்பாக உள்ளது. எங்கள் மதத்தின் மீது பயம் வரவே இத்தகைய செயலை செய்தோம் என்று. மிருகங்களே! கடவுளின் பெயரை சொல்வதற்கு கூட உங்களுக்கு அருகதை இல்லை. மதத்தின் பெயரால் நீங்கள் செய்த இது போன்ற கொடூரங்கள் உண்மையிலேயே வெறுக்கத்தக்க ஒன்று. மிருகங்கள் உணவுக்காக மட்டுமே வேட்டையாடும். மற்ற மிருகங்களை புணர்ததாகவோ அல்லது இதுபோல் குழந்தைகளை புணர்ததாகவோ அவைகள் நடந்துகொண்டதிற்கு உதாரணம் காட்டமுடியுமா? அப்படியென்றால் நீங்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள். தெய்வம் குடியிருக்கும் கோயிலின் கருவறைக்குள் வைத்து நீங்கள் செய்த இத்தகைய கொடூரத்தை 8நாளாக சாட்சியாக நின்ற உன் நம்பிக்கையை எப்படி பார்ப்பது..? உங்களை போன்ற ஓநாய்கள் செய்யும் இழி செயலுக்கு கடவுள் பெயரை சொல்வதே பாவமடா! இனி நீங்கள் மனித இனம் அல்ல. உணவு உண்பதற்கு கூட தகுதியற்றவர்களடா நீங்கள்!
ஊடகங்களே ! எதற்காக இந்த மௌனம்? நிர்பயாவுக்காக எழுந்த குரல்கள் ஏன் என் மகள்ஆஷிஃபாவிற்காக எழ வில்லை. ? ஒவியாவிற்காக கூவிய நீங்கள் ஏன் என் மகள் ஆஷிபாவிற்காக வாய் திறக்க தயங்குகிறார்கள்? நாட்டை ஆளும் ஆட்சியாளர்களே! உங்களின் பெண் அமைச்சர்களாவது இந்த நிகழ்வை பற்றி வாய் திறக்க வில்லையே ஏன்? தப்பு செய்தவர் உங்கள் கட்சிகாரர் என்பதாலா? மாதர் சங்கங்களே! பீப் பாடலுக்காக போராடிய நீங்கள் ஏன் என் மகள் ஆஷிபாவிற்காக போராட முன்வரவில்லை? ஏன் வன்புணர்வு செய்யப்பட்டது முஸ்லிம் சிறுமி என்பதனாலா! மதங்களையும் , அரசியலையும் விடுத்துப் பார்த்தாலும் மன்னிக்க முடியாத குற்றமாகும் இந்த செயல். இத்தகைய கொடிய செயலுக்கு பிறகும் மௌனம் காக்கும் உங்களை போன்றவர்களின் இத்தகைய இழிவான கொடிய அரசியல் நஞ்சை விட கொடியது.
களே ஆஷிபா! உன்னை காப்பாற்ற துப்பில்லாத கோடி அண்ணன்களில் ஒருவனாக உன் நிலை கண்டு தமிழ் மண்ணில் இருந்து சிந்துகிறது என் கண்ணீர். என்னை மன்னித்து விடு.
எனது வரிகள் வலித்திருந்தால் மன்னித்து விடுங்கள்!
கண்ணீர் விழிகளோடும் , தீராத கோவத்தோடும்….
#justceForAsifa
முகம்மது ரிபாய்தீன் சேக் 

நடிகர் பிரகாஷ் ராஜ் பி ஜே பி யினர்களால் தாக்க படும் அபாயம் வீடியோ காட்சி

நடிகர் பிரகாஷ் ராஜ் பி ஜே பி யினர்களால் தாக்க படும் அபாயம் வீடியோ காட்சி

நடிகர் பிரகாஷ் ராஜ்  பி ஜே பி யினர்களால் ராஜ் தாக்க படும் அபாயம், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது காரை வழிமறித்து பி ஜே பி யினர் தாக்க முற்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்! அதோடு இல்லாமல் பி ஜே பி யினர்களுக்கு பேச்சு வார்த்தையில் நம்பிக்கை இல்லை அவர்கள் குணம் இப்படி தான் இது ஒரு நகைச்சுவை காட்சி போல் உள்ளது என்று தெரிவித்து உள்ளார்

வீடியோ காட்சி

பிரகாஷ்ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ்

இங்கே வீடியோ காட்சி கொடுக்க பட்டுள்ளது பார்க்கவும்

பிரகாஷ்ராஜ் மீது பாஜவினர் தாக்குதல் முயற்சி…

காரை வழிமறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பாஜகவினர் தாக்குதல் முயற்சி…வீடியோ | https://youtu.be/s0P7q0PlINg

Posted by News18 Tamil Nadu on Friday, 13 April 2018

இந்துத்வா ராமராஜ்யம் பார்ப்பன ஆட்சி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்

இந்துத்வா ராமராஜ்யம் பார்ப்பன ஆட்சி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்

  • இராம ராஜ்ஜியம் நடந்துட்டு இருக்குது மற்ற எல்லாரையும் விட வசதியாகவும்,சகல சௌபாக்கியங்களோடும் வாழ்ந்துட்டு இருந்த பார்ப்பனர்கள்ல ஒருத்தர் பதறியடிச்சிட்டு வந்து ராமன் முன்னாடி நிக்குறாப்புல

பார்ப்பனரோட கோலத்த பாத்த ராம பிரானும் என்னாச்சோ,ஏதாச்சோனு
கதிகலங்கி துள்ளி குதிச்சி ஓடோடி வந்து விசாரிக்கிறாப்புல!

நம்ம அக்ரஹாரத்துல ஒரு குழந்தை இறந்து விட்டது ராமா!,அதுக்கு காரணம் சூத்திரனான சம்பூகன் கடவுளை நோக்கி தவம் இருக்குறதுதான்!”னு பார்பனன் சொல்ல,வெகுண்டெழுந்த ராமன் நாரதர கூப்புட்டு கருத்து கேக்குறாப்புல.”அய்யகோ அபச்சாரம்,
அபச்சாரம் எல்லாம் வல்ல ராம பிரானின் ஆட்சியில் ஒரு தேவடியாப் பய (சூத்திரன்) தவம் இருப்பதா?
,அவனுக்கு மரண தண்டனையை விட குறைவாக எதையும் அளித்து விட வேண்டாம்!”னு நாரதன் கொளுத்தி போட மறு பேச்சி பேசாத ராமன் நேரா போயி சம்பூகனோட தலைய ஒரே வெட்டா வெட்டி பார்ப்பனனோட காயத்துக்கு மருந்து போட்ட அடுத்த நொடி செத்துப்போன அந்த குழந்தை உயிரோட வந்துடிச்சி
இந்த நல்ல காரியத்த செஞ்ச ராமன் சார்வாள தேவர்கள் வானத்துல இருந்து மலர் தூவி பாராட்டுனாங்கனு நான் சொல்லல வால்மீகி ராமாயணம் சொல்லுது!.

இந்துத்வா கடவுளுக்கு கண்ணில்லையா

இன்னைக்கு ஆஸிஃபாங்குற 8 வயசு இஸ்லாமிய குழந்தை கோயில் கருவறைக்குள்ளயே ராமனுக்கு பிறந்தவனுங்களால துள்ள,துடிக்க வண்புணர்வுக்குள்ளாகி கொல செய்யப்பட்ட செய்தி கெடச்சதும் தோழர்கள் சிலபேரு  கடவுளுக்கு கண்ணில்லையா!? கடவுள் என்ன வெளக்கு புடிச்சாரா னு கேக்குறதெல்லாம் பாத்து சிரிக்கவா, அழவானு தெரியல
ஏன்னா சூத்திரன் சம்பூகன கழுத்தறுத்த கடவுள்,சூர்பணகையின் முலைகளையும்,மூக்கையும் அறுத்த கடவுள்,சூத்திர ஆஸிஃபா வன்புணர்வுக்கு உள்ளாகும் போது மட்டும் ஓடோடி வந்து காப்பாத்திருவாரா
இல்லவே இல்ல நீங்க சொன்ன மாதிரியே வெளக்கு தான் புடிச்சிருப்பாரு.
இந்துத்துவாவும்,இந்து மதமும் ஒன்றா?
இந்துத்துவாவும்,இந்து மதமும் ஒன்றல்ல வேறு,வேறுனு ரெமிலா தாப்பர்ங்குற வரலாற்று ஆராய்ச்சியாளர் சொல்றாங்க
இத எப்படி புரிஞ்சிக்கிறது ரெம்ப சிம்பிள் இந்து+தத்துவம்=இந்துத்துவம்.அதாவது இந்த இந்துத்துவம் என்பது ஒரு “வாழ்க்கை நெறி”.இந்த சமூக அமைப்புல யாரு,எங்க & எப்படி இருக்கனுங்குறத ஒருத்தரோட பிறப்பின் அடிப்படையில தீர்மானிக்கிற “வாழ்க்கை நெறி!
இது இன்னா பண்ணுதுனா மனிதர்களுக்குள்ள பிரிவினைய உண்டாக்கி எல்லாரையும் தனித்தனியா ஒக்கார வைக்குது.அப்படி ஒக்கார வைக்கும் போது வட்ட மேசை மாநாடு போல சமமா ஒக்கார வைக்காம,ரொம்ப கவனமா ஏணிப்படி வரிசையில ஒருத்தர மேலயும்,இன்னொருத்தர கீழயும் ஒக்கார வைக்கிறதுதான் இதோட ஸ்பெஷல்!
எல்லாம் சரிதான் ஆனா “நான் ஏன் கீழ ஒக்காரனும்..!?”னு ஒரு கேள்வி வருதுல்ல அது ரொம்ப டேஞ்சரான கேள்வி மட்டும் இல்ல இந்த இந்துத்துவ ஏணியடுக்கையே நிலைகுலைய வைக்கிற கேள்வியும் கூட
அப்போ அந்த கேள்வி வராம இருக்க என்ன செய்யனும்னா “இந்து தத்துவம்” புனித முலாம் பூசப்படனும் இந்த அண்ட சராசரங்கள்லயே கேள்விக்கு அப்பாற்பட்டு புனிதமா இருக்குறது ஒன்னே ஒன்னுதான் அது கடவுள்
புனிதமான கடவுளையும்,கடவுளின் வார்த்தைகளையும் சந்தேகப்படுறதோ,இல்ல கேள்விக்குட்படுத்துறதோ தெய்வ குத்தம் மட்டும் இல்ல தண்டனைக்குரிய குற்றமும் ஆகும்.ஆக மும்மூர்த்திகளாலும்,முப்பத்து முக்கோடி தேவர்களாலும் சூழப்பட்ட இந்து மதம்;இந்து தத்துவத்துக்கு ஒரு தெய்வீக கோட்டிங் குடுத்து புனிதமாக்குது
“நால்வகை வர்ணங்களையும் நானே உருவாக்கினேன்”னு பகவான் விஷ்ணுவின் அவதாராமன கண்ணன் அர்ஜூனனுக்கு கீதா உபதேசம் பண்ணுறப்ப “ஏன்டா சாதிய உருவாக்குன..!?”னு அர்ஜூனனே கேக்காத போது அற்ப பதறான மனுசன் எப்படி கேப்பான்.
நான் மேல சொன்ன இந்துத்துவத்துக்கும்,இந்து மதத்துக்கும் உள்ள வித்தியாசத்த புரிஞ்சிகிட்டாதான் “இந்து மதத்துல சாதி இருக்குனுதானே கிறிஸ்தவனா மதம் மாறுன அங்கிட்டு மட்டும் சாதி இல்லியா!?”னு கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியும்.சாதி இந்து மதத்துல இல்ல,இந்து தத்துவத்துல இருக்குது.அந்த தத்துவம் தான் இந்த சமூக கட்டமைப்பா இருக்குது.அதனாலதான் என்னால “மதம்” மாற முடியுதே தவிர “சாதி” மாற முடியிறது இல்ல!.”சாதி” தான் “சமூகம்” என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்னு கவிஞர்.பழனி பாரதி சொன்ன வார்த்தையோட அர்த்தம் 100 சதவிகிதம் உண்மையானது.
யார் இந்து எச்ச ராஜா சொல்ற மாதிரி யாரெல்லாம் மாட்டுக்கறி திங்குறாங்களோ அவங்களாம் இந்து கெடையாது,யாரெல்லாம் புரட்டாசி மாசம் விரதம் இருக்கலயோ அவங்களாம் இந்து கெடையாதுனு அடிச்சி விடுறானுங்க
யார் இந்து..!? சொல்றா மொதல்லனு சொன்னா;யாரெல்லாம் இந்து இல்லனு லிஸ்ட்டு போடுறானுங்க!எச்ச ராஜாக்கள சொல்லி குத்தமில்ல ஏன்னா இந்திய அரசியலமைப்பு சாசனமே இன்னா சொல்லுதுனா “யாரெல்லாம் கிறிஸ்தவர்கள் இல்லையோ,யாரெல்லாம் இஸ்லாமியர் இல்லையோ,யாரெல்லாம் சீக்கியர் இல்லையோ அவர்கள் அனைவரும் இந்துக்கள்”னு சொல்லுது
இது எப்படி இருக்குதுனா பொறுக்கி பய சுப்பிரமணியனாண்ட போயி “ஒன்னோட அப்பன் பேரு இன்னாடா..!?”னு கேட்டா “எவன் மோடிக்கு அப்பன் இல்லயோ,எவன் பொரி உருண்டையோட அப்பன் இல்லயோ,எவன் தமிழிசைக்கு அப்பன் இல்லயோ அவன்தான் என்னோட அப்பன்”னு சொல்றாப்புல இருக்குது
யார் இந்து..!? என்கிற கேள்விக்கு வெளக்கம் குடுக்க வழியில்லாத வெக்கங்கெட்ட பயலுங்க யாரெல்லாம் இந்து இல்லனு மட்டும் நீட்டி மொழங்குறானுங்கனா ஒன்னு மட்டும் தெளிவா புரியுது “இந்து” என்பதே ஒரு ஏமாற்று சொல்!

யார் இந்தியன்?

இந்தியாவுல காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரைக்கும் மொத்தம் 29 மாநிலங்கள் + 7 யூனியன் பிரதேசங்கள் இருக்குது.காஷ்மீர்ல வாழுறவன் தன்ன காஷ்மீரினும்,அஸ்ஸாம்ல வாழுறவன் தன்ன அசாமினும்,தமிழ்நாட்டுல வாழுறவன் தன்ன தமிழன்னும் சொல்லிக்கிறான்
இந்த 29 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் ஒன்னா சேந்ததுதான் இந்தியா.மொழி வாரியா பிரிக்கப்பட்ட இந்த 29 மாநிலங்களும்,29 தேசிய இனங்கள்னு வெச்சிக்கலாம்.இப்போ இன்னா டவுட்டுனா பார்ப்பனர்கள் இதுல எந்த தேசிய இனத்த சார்ந்தவங்க?
பதில்:இவங்க எந்த தேசிய இனத்துகூடவும் சேரமாட்டாங்க.அண்ணன் சீமான் வேணும்னா தமிழ் பேசுற பார்ப்பனர்கள் தமிழர்கள்னும்,மலையாளம் பேசுற பார்ப்பனர்கள் மலையாளினும் சொல்லலாம்
ஆனா எந்த பார்ப்பனனும் தன்ன தமிழனாகவும்,கன்னடனாகவும்,
குஜராத்தியாகவும் அடையாளப்படுத்திக்க மாட்டான் காரணம் “ஆரியன்” என்கிற உயர்ந்த! அடையாளத்த விட்டுக்கொடுக்க எந்த பார்ப்பனரும் தயார் நிலையில் இல்லை
அப்போ ஆரியர்கள் எந்த தேசிய இனத்த சார்ந்தவங்க ஆடு,மாடு மேய்ச்சிட்டு வந்தவனெல்லாம் தேசிய இனத்த பத்தி பேசுனான்னா அத கேட்டுட்டு ஆமாஞ்சாமி போடுறதுக்கு நாம என்ன எடப்பாடி பழனிச்சாமியா!
ஆரியர்கள்னு சொல்றதோட அர்த்தமே “வெளியிலிருந்து வந்தவர்கள்”தான்.இப்படி எங்கிட்டோ இருந்து வந்தவனுக்கு ஒரு அடையாளம் தேவப்படுது ஆரியன்னு சொன்னா அடிப்பான் அதே நேரம் “இந்தியன்”னு சொன்னா தலையில தூக்கி வைக்கிறான்
ஆக “இந்தியன்” என்கிற அடையாளத்த தனதாக்கிட்டு தன்ன எதிர்க்கிறவங்க எல்லாரையும் “ஆண்டி இந்தியன்” ஆக்கி அழகு பாக்குறதுதான் ஆரிய சூழ்ச்சி.
இந்தியா மேல அம்புட்டு பாசம் இருக்குற பன்னாட “பாரதிய ஜனதா பார்ட்டி”ங்குற பேர மாத்தி “இந்திய ஜனதா பார்ட்டி”னு வைக்கலாமே!,
அட ஆறு மாசத்துக்கு ஒருக்கா புள்ள பெக்குற நம்ம “பாரத் மாதா”வ “இந்திய மாதா”னு சொல்லிக்கலாமா..!?.தியேட்டர்ல தேசிய கீதம் போடுறப்ப எழுந்து நிக்க சொல்லி சட்டம் போட்டு நாட்டுப்பற்ற காட்டுறவங்க ஏன்யா BJP கட்சி ஆபிஸ்ல மூவர்ண கொடிக்கு பதிலா காவிக்கொடியும்,RSS ஷாக்காவுல ஜன கன மனவுக்கு பதிலா வந்தே மாதரமும் பாடுறீங்க
ஜெய் ஹிந்த் சொல்லலனா தலைய வெட்டுவோம்,பாரத் மாத்தாக்கீ ஜெ சொல்லாதவங்கலாம் பாக்கிஸ்தான் போக சொல்றதுக்கு முன்னாடி இது எங்க நாடு நீங்க மொதல்ல வெளிய போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா

வரும் ஆனா வராதுனு என்னத்த கண்ணையா இழுத்தாப்புல இழுக்காதீங்க

இந்தியா-வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடாம் அடேய் ஒன்னு வேற்றுமையா இருக்கனும்,இல்ல ஒற்றுமையா இருக்கனும் அதென்ன வேற்றுமையில் ஒற்றுமை வரும் ஆனா வராதுனு என்னத்த கண்ணையா இழுத்தாப்புல இழுக்காதீங்க!
தேசிய இனங்களோட ஒற்றுமைய தேசிய இனங்களே விரும்பினாலும் கூட இந்திய(ஆரிய) தேசியம் அத ஒத்துக்காது.தமிழ்நாட்டுக்கு கர்நாடாகா கூட தண்ணி பிரச்சனனா,கர்நாடகாவுக்கும்
மகராஷ்டிராவுக்கும் எல்ல பிரச்சனை மகராஷ்டிராவுக்கும்,
குஜராத்துக்கும் கரண்டு பிரச்சனை
இப்படி எல்லா தேசிய இனங்களுக்கும் அண்டை மாநிலங்களோடு எதாவது பிரச்சனைய உண்டாக்கிட்டே இருக்குறது.அந்த பிரச்சனைகள ஊதி பெருசாக்கி கலவரங்கள மூட்டி விட்டு அரசியல்,பொருளாதார ஆதாயமடையிறது

இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் தலித்துகளையும் மத விரோதிகளாக சித்தரிக்கிறது

எவன் அப்பன் ஊட்டு சொத்து எப்படி போனா நமக்கென்னனு இந்தியாவ பன்னாட்டு கம்பெனிகளுக்கு கூறு போட்டு விக்கிறது
உள்ளூர் விவசாயிகள அம்மனமா ஓடவிட்டு சாவடிக்கிறது,மீத்தேன்,ஹைட்ரோ கார்பன்,ஸ்டெர்லைட்னு வாழ்வாதாரங்கள அழிக்க புதுசு,புதுசா திட்டம் போடுறது.இவனுங்களோட மோசமான பொருளாதார கொள்கைகளால நாம சோத்துக்கு பிச்சையெடுக்குறப்ப எல்லாத்துக்கும் காரணம் பாகிஸ்தான்,சீனானு அடிச்சி விடுறது
பல்வேறு தேசிய இனங்களோட மொழி,வரலாறு,கல்வி,வேலைவாய்ப்பு எல்லாத்தையும் பறிச்சிட்டு இந்திய தேசியம் என்கிற ஒற்றை தேசியமாக மாற்ற முயல்வது,மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட போராடுறவங்கள தீவிரவாதி,பயங்கரவாதினு சொல்லி தனிமைப்படுத்துறது,

இந்துத்வா இந்து மத விரோதி

நீதி மன்றங்களையும்,காவல் துறையவும் தனது அடியாட்களாக பயன்படுத்துவது,இஸ்லாமியர்களையும்,
கிறிஸ்தவர்களையும்,தலித்துகளையும் இந்து மத விரோதிகளாக பத்திரிக்கை,மீடியா மூலமா சித்தரிக்கிறது,
தங்களோட மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்துகிற நேர்மையான பத்திரிகையாளர்களையும்,
எழுத்தாளர்களையும் சுட்டு கொல்றது,மக்களோட வரிப்பணத்த தூக்கி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுத்து வழியனுப்பி வைக்கிறது

முதலாளிகளுக்கு ஒரே ஆயுதம் இந்துத்துவா

போராட்ட குணமுள்ள மக்களை மூளைச்சலவை செய்ய கார்ப்பரேட் சாமியார்கள உருவாக்குறதுனு இவனுங்க அராஜகத்த அடுக்கிட்டே போகலாம்
இதையெல்லாம் தங்கு,தடையில்லாம செய்யிறதுக்கும்,தான் செய்யிறதெல்லாம் வளர்சிக்காகனு மக்கள நம்ப வைக்கிறதுக்காகவும் இவங்களாண்ட இருக்குற ஒரே ஆயுதம் இந்துத்துவா
கொஞ்சம் யோசிச்சி பாருங்க எங்கிருந்தோ வந்த ஒரு கூட்டம் நம்ம சொந்த மண்ணுல நம்மள சிறைபுடிச்சி வெச்சி,நம்ம சகோதரன மாட்டுக்கறி தின்னான்னு அடிச்சி கொன்னு,நம்ம சகோதரிய நீட் தேர்வுங்குற பேர்ல தூக்குல தொங்கவிட்டு,நாம பெத்த புள்ளைய பச்ச குழந்தனு கூட பாக்காம கற்பழிச்சி,நமக்கு சோறு போடுற விவசாயிய எலிக்கறி திங்க வெச்சி,நம்ம நெலத்த புடிங்கி பன்னாட்டு கம்பெனிக்கு குடுத்து நம்மள நாய விட கேவலமா நடத்துவான்
நாம கடவுள் காப்பாத்துவாரு,இயேசு வருவாரு,அல்லா கூப்புடுறாருனு இன்னும் எத்தன நாளைக்கு காத்திருக்க போறோம்.
சூப்பர் ஸ்டார்களும்,உலக நாயகர்களும்,ஜாதி கட்சி தலைவர்களும்,மத வியாபாரிகளும்,ஆமைக்கறி தின்றவர்களும், ஓட்டுப் பொறுக்கி அரசியல் வாதிகளும் நமக்காக நிச்சயம் போராட மாட்டார்கள்

இந்துத்துவா அடிமைத்தனத்துல இருந்து விடுதலை

ஏன்னா எல்லாரும் எனக்கு ஓட்டு போடு நான் அத பண்ணுறேன்,இத பண்ணுறேன்னுதான் சொல்றானுங்களே தவிர யாரும் ஒனக்கு இந்த கேடுகெட்ட அடிமைத்தனத்துல இருந்து விடுதலை வாங்கி தரேன்னு சொல்றது இல்ல!
இன்னைக்கு அண்ணல் பிறந்தநாள் “அடிமையிடம் சென்று நீ அடிமை என்று சொல்;தனது அடிமைத்தனத்தை உடைத்தெறிய போராடுவான்”னு சொல்லிருக்காப்புல.நானும் அதையேதான் சொல்றேன் இந்த பாழாப்போன இந்துத்துவா நம்மள 2000 வருசமா “அடிமை”யா வெச்சிருக்குது அதை உடைத்தெறிந்து…
“நான் யாருக்கும் அடிமை இல்லை
எனக்கு அடிமை யாரும் இல்லை” என்ற சமதர்ம சமூகம் படைக்க பாடுபடுவோம்.
Thanks by Writing ஏவின் மனோ

நான் ஏன்? மோடியை கலாய்க்கிறேன் மோடி மஸ்தான் அரசு

நான் ஏன்? மோடியை கலாய்க்கிறேன் மோடி மஸ்தான் அரசு

நான் ஏன்? மோடியை கலாய்க்கிறேன் மோடி மஸ்தான் அரசு  இந்த உலகிலேயே ஒன்னாம் நம்பர் பொய்யன் மோடி தான். சீமான் என்ன தான் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் சீமானால் மோடி மாதிரி வாயால் வடை சுடமுடியாது.
மோடியின் எதிர்ப்பாளர்களில் கூட சிலர் மோடியின் சிறந்த திட்டங்களில் ஒன்றாக சொல்வது ஏழை பெண்களுக்கு உதவும் செல்வமகள் திட்டம்.

மோடி மஸ்தான் அரசு முதலில் சொன்னது என்ன?
நான் ஏன்? மோடியை கலாய்க்கிறேன் மோடி மஸ்தான் அரசு 
நான் ஏன்? மோடியை கலாய்க்கிறேன் மோடி மஸ்தான் அரசு

செல்வமகள் திட்டத்துக்கு 9.2% வட்டி
2017 இல் சொன்னது எவ்ளவு?
8.5%
இந்த 2018 இல் செல்வமகள் சேமிப்பிற்கான வட்டி மேலும் குறைக்கப்படுமாம். இல்ல நான் தெரியாமல் தான் கேட்கிறேன். ஏழை முதல், பணக்காரன் வரை இந்தியாவில் உள்ள பலகோடி மக்கள் LIC யால் பயனடைந்து இருக்கிறார்கள். LIC யே இதை காட்டிலும் அதிக வட்டியை தரும் பொழுது என்னத்துக்கு இந்த தேவையில்லாத புது ஆணி.

எப்படி வலித்திருக்குமோ உனக்கு சிறுமி ஆசிபாவிற்க்காக ஒரு தாய் எழுதிய கவிதை

எப்படி வலித்திருக்குமோ உனக்கு  சிறுமி ஆசிபாவிற்க்காக ஒரு தாய் எழுதிய கவிதை

என்னவெல்லாம்
செய்திருப்பார்களோ உன்னை
பன்றிக் கூட்டங்களின் பசிக்கு இரையாக்கப்பட்டிருக்கிறாய்
கொடூரர்களின் தொடுதலை
நீ உணர்ந்திருக்கமாட்டாய்
அவர்களை நீ அண்ணனென்றோ
அங்கிளென்றோ மட்டும் தான்
அழைத்திருக்க முடியும்                                                  
தின்பண்டங்களோ சாக்லெட்டோ
வாங்கித் தருவதாகக் கூறித் தான்
அழைத்துப் போயிருப்பார்கள்
உன் உடைகளை கழற்றும் போது கூட
உன்னால் யூகித்திருக்க முடியாது
குளித்து விட்டுப் போகலாமெனக் கூறியிருப்பார்கள் நீயும்
நம்பித் தொலைத்திருப்பாய்
உன் உறுப்புகளை தொடும் போது கூட
உன்னால் தடுத்திருக்க முடியாது
அதை தொடுதல் தவறென்றும்
நீ அறிந்திருக்க மாட்டாய்
ஆண் உறுப்பு அப்படி இருக்குமென்று
நீ பார்த்திருக்க வாய்ப்பில்லை மகளே
அதற்கு தாயும் தெரியாது
தங்கையும் தெரியாது
தன்னால் ஆனவரை
பெண் உறுப்புகளை சிதைத்துக் கொண்டிருப்பது தான் அதன் வேலை
குழந்தையோ மகளோ
என்றெல்லாம் நினைத்ததில்லை
முடிந்தவரை தன் இச்சைகளை
நம் மீது எச்சிலாய் உமிழ்ந்து
விட்டுத்தான் போவார்கள்
சில சமயம் திரும்பியும் வருவார்கள்
உன் கைகள் கட்டப்பட்டும்
கழுத்து நெறிக்கப்பட்டும்
கொடூர நகங்களால் கீறியும்
உன்னை நாசப்படுத்தியிருக்கலாம்
வலிக்கும் போது துடித்திருப்பாய்
காப்பாற்றி விடமாட்டார்களா
என்று கதறியிருப்பாய்
கடவுளின் காலடியில் கிடந்திருப்பாய்
காப்பாற்று என்றுகூட அழைத்திருப்பாய்
அவரும் உடந்தையென்று
உணர்ந்திருக்க மாட்டாய்
கால்களை முறித்திருப்பார்கள்
உறுப்புகளை சிதைத்திருப்பார்கள்
மூச்சு விடமுடியாமல் முணங்கி
மயங்கிக் கிடந்திருப்பாய்
அப்பாவை அழைத்திருப்பாய்
அம்மாவை நினைத்திருப்பாய்
தன்னிடத்திடத்திலும்
ஓட்டை இருந்திருப்பதைக் கூட
அன்று தான் உணர்ந்திருப்பாய்
நகர முடியாமல் செயலற்றுக் கிடந்திருப்பாய்
இரத்தம் வழிந்து கொண்டேயிருந்திருக்கும்
எப்படியும் எழுந்ததும் வீட்டிற்கு
ஓடிவிடலாமென நினைத்திருப்பாய்
அடுத்தடுத்த மிருகங்களும் உன்னை இரையாக்குமென்று நினைத்திருக்கமாட்டாய்
இதற்கு மேல் என்னால் முடியாதென்று
கெஞ்சியும் துடித்திருப்பாய்
ஆண் வர்கங்களையே
அறவே வெறுத்திருப்பாய்
அவர்கள் குறி கொண்ட மிருகங்களென்று
முற்றிலும் உணர்ந்திருப்பாய்
அப்போது கூட அப்பாவையும்
அண்ணனையும் அழைத்திருப்பாய்
எல்லாம் முடிந்திருக்கும்
எல்லாமும் சிதைந்திருக்கும்
கடவுள் காணொளி
செய்திருப்பார் கயவர்களை
காப்பாற்றிக் கொண்டிருப்பார்
இறுதியாகக் கூட
நம்பித் தொலைத்திருப்பாய்
அப்பா வந்ததும் அழைத்துப்போவாரென்று
மரணம் சம்பவித்தாயிற்று
குப்பையாய் நினைத்து
தூக்கியெறிந்து விட்டுப் போயிருப்பார்கள்
அடுத்தது யாரென்று அவர்கள்
தேடிக் கொண்டிருப்பார்கள்
போய் தொலைவோம் மகளே
நம்மை சதையாகவும் யோனியாகவுமே
பார்த்துத் தொலையும் ஆண்களுக்கு முன்னால் சதைப் பிண்டமாய்
வாழ்வதை விட மரணம் கொடிதல்ல
எங்களுக்கும் சேர்த்து
இடம் பிடித்து வை ஆசிபா
விரைவிலேயே நாங்களும்
வந்து சேர்வோம்
காப்பாற்ற துப்பில்லாத
ஆண்களோடு பெண்களாய்
வாழ்ந்து கொண்டிருப்பதை விட
சாவதே மேல் சாகடிக்கப்படுவதே மேல்
எப்படி வலித்திருக்குமோ உனக்கு? 
#வரிகள் #வலித்திருந்தால் #மன்னித்துவிடுங்கள்
#எங்கள் #வாழ்க்கையே
#வலித்துக் #கொண்டிருக்கிறது #உங்களால்
ஆஷிபாக்களின் தாயாக

சிறுமி ஆஸிபா வழக்கை எல்லா ஊடகங்களும் சரியான பார்வையிலேயே கொண்டு செல்கிறார்கள்

சிறுமி ஆஸிபா வழக்கை  எல்லா ஊடகங்களும் சரியான பார்வையிலேயே கொண்டு செல்கிறார்கள்

சிறுமி ஆஸிபா வழக்கை  எல்லா ஊடகங்களும் சரியான பார்வையிலேயே கொண்டு செல்கிறார்கள் தாமாகவே முன்வந்து சிறுமி ஆஸிபா வழக்கை முன்னெடுத்துள்ளது.
காஷ்மீரில் உள்ள பார்கவுன்சிலில் உள்ள காவிகள், இந்த வழக்கில் யாரும் வாதட கூடாது என்று முடிவெடுத்து அறிவித்து உள்ளனர். இதற்கும் உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதே போன்று இந்திய பார்கவுன்சிலும் , காஷ்மீர் பார்கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
எல்லா ஊடகங்களும் சரியான பார்வையிலேயே ஆஸிபா வழக்கை இந்த விஷயத்தை கொண்டு செல்கிறார்கள் குறிப்பாக வடநாட்டு ஆங்கில ஊடகங்கள்தான் முதலில் காவிகளின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டது.
ஆஸிபா வழக்கை
மனிதநேயம் என்ற அடிப்படையில் நமது தொப்புள் கொடி உறவுகளும் கண்டனத்தை பதிவு செய்ய தவறவில்லை.
காட்டுமிராண்டி குணம் கொண்ட காவிகளின் பதிவுகளை புறம் தள்ளுங்கள்.
நம்மை உசுப்பேத்தி குளிர்காய வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறும் வகையில் முஸ்லிம் முகநூல் போராளிகள் செயல்பாடுகள் அமையக்கூடாது.
இந்த செய்தியை எடுத்து செல்வதில் மட்டுமே நமது குறிக்கோளாக இருக்கவேண்டும்  அரசியல்வாதிகளை தரம் தாழ்ந்து விமர்சிக்க வேண்டாம். அதையே அவர்கள் ஆயுதமாக பயன் படுத்துவார்கள்
#JusticForAshifa
Hajadeen 

பாஜக கட்சியும் அதன் தலைவர்களும் சிறுமி ‘ஆசிபா விஷயத்தை மூடி மறைக்க முயலுகிறார்கள்

பாஜக கட்சியும் அதன் தலைவர்களும் சிறுமி ‘ஆசிபா விஷயத்தை மூடி மறைக்க முயலுகிறார்கள்

பிப்ரவரி 17 அன்று பலாத்காரம் செய்த கயவர்களுக்கு ஆதரவாக இந்து ஏக்தா மஞ்ச் என்கிற அமைப்பு ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் மூவர்ன கொடியுடன் ஊர்வலம் சென்று போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தை பாஜகவின் மாநில செயலாளர் உள்ளிட்ட மாநில தலைவர்கள் வழிநடத்தினார்கள்
கத்துவா மாவட்ட வழக்கறிஞர்கள் (பார் அசோசியேசன்) ஏப்ரல் 9 அன்று பல குழுக்களாக ஊர்வலம் நடத்தினார்கள். அந்த போராட்டங்களில், ஊர்வலங்களில் தவறாமல் மூவர்னக் கொடியை அசைத்தபடி ஒழித்தது “ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்” கோஷம்
கத்துவா வழக்கறிஞர்களின் கோரிக்கை சிபிஐ இதனை விசாரிக்க வேண்டும் என்பதே. மோடி ஆட்சியின் கீழ் சிபிஐ, வருமானவரி துறை மற்றும் இன்ன பிற துறைகள் வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்துள்ளது நாடு அறிந்ததே.
கடந்த மூன்று மாதங்களாக பாஜகவின் IT CELL இந்தியா முழுவதிலும் களமிறங்கி அசிபாவின் பலாத்காரத்தை கண்டிப்பது போலவும் அதே நேரத்தில் இந்த கயவர்களை காப்பாற்றும் செயலிலும் ஈடுபட்டது
அசிபா பலாத்காரத்தை கண்டித்தவர்கள் அனைவரையும் அவர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள், தீவிரவாதிகள் என்றும் பிரச்சாரம் செய்தனர். அசிபா பலாத்காரம் பற்றி விரிவாக எழுதிய ஊடகங்களை “தேசவிரோத ஊடகங்கள்” என்று பட்டமளித்தனர்.
பாஜக கட்சியும் அதன் தலைவர்களும் அதன் IT CELL-ம் ஏன் இத்தனை தூரம் சென்று இந்த விஷயத்தை மூடி மறைக்க முயலுகிறார்கள் என்று உங்கள் மனதில் கேள்வி எழலாம்

இந்த பலாத்காரத்தில் ஈடுப்பட்டவர்கள் எட்டு பேர்

இந்த பலாத்காரம் ஏன் இத்தனை துள்ளியமாக திட்டமிட்டு நடத்தப்பட்டது?? அசிபாவின் குடும்பத்தார் பக்கர்வால் சமூகத்தை சார்ந்தவர்கள். அந்த பள்ளதாக்கில் ஆடு மேய்ப்பது தான் பக்வர்வால் சமூகத்தின் தொழில் இந்த மேய்யசல் சமூகத்தை அந்த பகுதியில் இருந்து விரட்ட வேண்டும் என்பதே அங்குள்ள இந்து வெறியர்களின் நோக்கம்
இந்த கிராமத்தில் இருக்கும் இந்துக்கள் யாரும் இவர்களின் ஆடுகளுக்கு மேய்ய்சல் உரிமை அளிக்க கூடாது, ஏரிகள்-குளங்களில் கூட ஆடுகளை நீர் அருந்த அனுமதிக்க கூடாது என்பதாக பல கட்டுப்பாடுகளை சஞ்சி ராம் விதித்து வந்தார்
சஞ்சி ராம் இந்த கிராமத்தில் வசிக்கும் ஒரு ஓய்வு பெற்ற வருவாய் அதிகாரி இவர் தான் இந்த சமூகத்தை விரட்ட வேண்டும் என்றால் அவர்கள் அதிர்ச்சியாகும் படியாக ஒரு சம்பவம் நடைபெற வேண்டும் என்று திட்டமிடுகிறார்
அவரது உறவினரான கோவில் நிர்வாகியை அழைத்து ஒரு காவல்துறை அதிகாரியின் துணையுடம் இந்த கடத்தலில் ஈடுபடுகிறார் தொடர்ந்து ஒரு வாரம் அவளை மயக்க மருந்துகள் கொடுத்து சுயநினைவு வரும் பொழுதெல்லாம் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.
இந்த பலாத்காரம் நடைபெறுவதற்கு மூன்று தினங்கள் முன்னரே தீபக் மற்றும் விகரம் அருகாமையில் இருந்த ஒரு மருந்து கடைக்கு சென்று EPITIRIL 0.5mg மயக்க மருந்தை வாங்கினார்கள்
அசிபா கடத்தப்பட்டு ஒரு இந்து கோவிலில் வைத்து தான் தொடர்ந்து பல நாட்கள் பலாத்காரம் செய்யப்பட்டார், அந்த கோவிலை பராமரிக்கும் நிர்வாகி இந்த பலாத்காரத்தில் ஈடுபட்டார்.
மனு என்பவன் அசிபாவை அந்த கோவிலில் உள்ள தெய்வத்தின் சிலை முன்பே பலாத்காரம் செய்திருக்கிறான். இந்த வழக்கை விசாரித்து அசிபாவை தேடிச் சென்ற காவல்துறை அதிகாரி (SPO)யும் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்
உத்திர பிரதேசத்தின் மீரட் நகரத்தில் இயங்கும் விஷால் என்கிற ஹிந்த்துவா தொண்டர் ஜனவரி 12 அன்று அசிபாவை பலாத்காரம் செய்யவே ஜம்முவுக்கு வந்து சேர்ந்தார்
உணவேதும் கொடுக்காமல் வெறும் வயிற்றில் மூன்று மயக்க மாத்திரைகளை ஒரே நேரத்தில் கொடுத்து கொடுத்து தான் பலாத்காரம் செய்தார்கள்
கடைசியாக அசிபா மீது பெரிய பாறாங்கல்லை தூக்கிபோட்டு அவளை சிதைப்பதற்கு முன்னால், தான் ஒரு முறை புணர வேண்டும் என்று காவல்துறை அதிகாரி (SPO) கஜுரியா ( spo deepak khajuria) விருப்பட்டார், அவரது விருப்பமும் நிறைவேற்றப்பட்டது.
காவல்துறை அதிகாரி (SPO) பலாத்காரம் செய்தவுடன் முதலில் அவள் முதுகில் தனது கால்முட்டியை வைத்து அவளது முதுகெலும்பை உடைத்திருக்கிறார் தன் பின்னர் இரு முறை அவள் மீது பாறாங்கற்கள் வீசப்பட்டு அவள் இறந்துவிட்டாலா என்று உறுதி செய்தனர்

இந்த கொடூரச் செயலை செய்த எட்டு பேரும் இந்துக்கள்

இந்த விசாரனையை நடத்திய அதிகாரி ஆனந்த தத்தா, பின்னர் இவர்களிடம் மூன்று லட்சம் பணம் பெற்றுக் கொண்டு மொத்த சம்பவத்தையே மூடி மறைக்க முயன்றார்
அசிபா அணிந்திருந்த உடைகளில் இருந்த கறைகளை எல்லாம் நீக்க, அவளது உடைகளை எல்லாம் துவைத்து அசிபாவின் சடலத்திற்கு மாட்டிவிட்டார் விசாரனை அதிகாரி ஆனந்த தத்தா அவரை சேர்ந்த்து இந்த கொடூரச் செயலை செய்த எட்டு பேரும் இந்துக்கள்
அசிபாவின் சடலத்தை கூட அவள் வாழ்ந்த கிராமத்தில் அடக்கம் செய்ய இந்த வெறியகள் அனுமதிக்கவில்லை, அவளது கிராமத்தில் இருந்து 10 கிமி தொலைவில் மற்றொரு கிராமத்தில் தான் அவளது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அசிபாவை காணவில்லை என்று முதலில் அவளது பெற்றோர் காவ்ல நிலையத்தில் புகார் அளித்த போது, அங்கிருந்த காவல்துறை அதிகாரி உன் எட்டு வயது மகள் யாருடனாவது ஓடிப்போயிருப்பாள் என்று சொன்னானாம்
இவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை இன்னும் பல அதிர்ச்சியான விசயங்களை வெளிக் கொண்டுவந்ததுள்ளது.
அசிபாவின் வலியை நாம் எப்படி இந்த சமூகத்திற்கு கடத்தப் போகிறோம், இந்த வலியை எப்படி இந்த தேசம் உணரப் போகிறது.


பதிவை பகிர மட்டும் செய்யுங்கள், பதிவிடும் போது #justiceforasifa ஹேஷ்டேக்கை மீண்டும் ஒரு முறை பதிவிடுங்கள்
நன்றி : Muthu Krishnan
written BY PKB

எட்டு வயது பெண் குழந்தை ஆசிஃபாவின் கற்பழிப்பு

எட்டு வயது பெண் குழந்தை ஆசிஃபாவின் கற்பழிப்பு விவகாரத்தில் ஈடுபட்டவர்களுக்குத்தான் இதயம், இரக்கம், நியாயம், தர்மம், மனிதம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லையென்றால்..
இதில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், வக்கீல்கள் இவர்களுக்கும் இவை இல்லையெனும்போது பதைப்பு இரட்டிப்பாகிறது.
இது காமத்தின் விளைவாக நடந்ததல்ல..இன எதிர்ப்பால் எச்சரிக்கும் வெளிப்பாடாக சில கேவலமான ஜென்மங்களால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
ஆணவக் கொலை போல இது ஒரு ஆணவ கற்பழிப்பு. மதம் இனம் மொழி தாண்டி மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் கண்டிக்க வேண்டிய விவகாரம். வெட்கப்பட வேண்டிய விஷயம்.
தனக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளை ஒரு விபத்தில் பறிகொடுத்த பிறகு அந்தத் தம்பதி ஆசிஃபாவைத் தத்தெடுத்து வளர்த்திருக்கிறார்கள்.
காட்டுக்குள் குதிரை மே்ய்க்கப் போன அந்த பட்டாம்பூச்சியின் சிறகுகளைப் பிய்த்த கொடூரர்களை தண்டிக்காத அத்தனைக் கடவுள்களின் மீதும் கோபம் கொள்கிறது மனம்.
மதம் கடந்து அத்தனைக் குழந்தைகளும் கடவுளின் பிரதிநிதிகளாக, தேவதைகளாகப் பார்க்கப் படுவார்கள் என்கிற பழைய நம்பிக்கையில் இங்கு வந்து பிறந்துவிட்ட குட்டி தேவதையே..மன்னிப்பாயாக

சிறுமி ‘ஆசிபா
சிறுமி ‘ஆசிபா

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left