Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

இந்தியாவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தீவிரவாதியை பிணையில் நேற்று விடிவித்துள்ளார்

இந்தியாவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தீவிரவாதியை பிணையில் நேற்று விடிவித்துள்ளார்

8 மாத சிறைக்குப் பின் நேற்று உ.பி மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் இந்தியாவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தீவிரவாதியை பிணையில் நேற்று விடிவித்துள்ளார். தீவிரவாதி என்று சொன்ன பின் அவர் ஒரு இஸ்லாமியர் என்று சொல்லத் தேவையில்லை.
@Dr.kafeel khan கோரக்பூர் அரசு மருத்துவமனையில் பணி புரிந்தவர். மருத்துவமனைக்கு ஆக்சீஜன் வழங்கும் நிறுவனத்திற்கு உ.பி அரசு பணம் செலுத்தாத்தால் சில மாத நோட்டீசிற்கு பின் அந்த நிறுவனம் supply ஐ நிறுத்தியது. அதில் 60கும் மேற்பட்ட குழந்தைகள் உயிர் இழந்தனர்.

இதில் Dr. Khan னின் பங்கு, தன் சொந்த பணத்தில் oxygen cylinderகளை வாங்கி பல குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றியுள்ளார். அதற்காகவே பல பொய் குற்றசாட்டுகளின் பெயரில் தண்டனைக்கு உள்ளானார்.
நேற்று அவர் பிணையில் வெளி வரும் போது பொது மக்கள் பலரும் அவரை வரவேற்க காத்துக்கொண்டிருந்தார்கள். கைகளில் ‘#Dr_Kafeel_Khan_our_hero‘ என்ற பதாதைகளுடன். அதில் எத்தனை பேர் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் அத்தனை பேரும் மனிதர்கள்.
ராம ராஜ்ஜிய சோற்றுப் பானையின் ஒரு சோறு, Dr.Kafeel Khanனின் கைது.
நான் செய்த தவறு இறக்கும் குழந்தைகளை காப்பற்றினேன் ( உடனே நான் ஒரு இஸ்லாமியன் என்பதை அறிந்த உ பி பிஜேபி அரசு என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் 6 மாத சிறை தண்டனை கொடுத்தது உள்ளே பல்வேறு மன ரீதியிலான துன்புறுத்தல் இன்னும் பல ,,,,,,,,

கடைசியாக நிருபர்களை பார்த்து மருத்துவர் கபீல் கூறிய வார்த்தை ( நான் எதற்கு கைது செய்ய பட்டேன் என்பது இதுவரை எனக்கு தெரியவில்லை !

இந்தியாவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தீவிரவாதியை பிணையில் நேற்று விடிவித்துள்ளார் By Sumathi Vijayakumar

ஹெச் ராஜாவின் சந்திப்பை புறக்கணித்த பத்திரிக்கையாளர்கள்

ஹெச் ராஜாவின் சந்திப்பை புறக்கணித்த பத்திரிக்கையாளர்கள்

ஹெச்.ராஜாவின் சந்திப்பை புறக்கணித்த பத்திரிக்கையாளர்கள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுவருவதால் அவரையும், பத்திரிகையாளர்கள் பற்றி இழிவுக் கருத்துரைத்த எஸ்.வி.சேகரையும் புறக்கணிப்பது என்று மாவட்ட அளவில் பத்திரிகையாளர்கள் பலர் முடிவெடுத்திருந்த நிலையில்
இன்று நாகர்கோவில் சென்ற ஹெச்.ராஜா பிரஸ் மீட் அழைப்பு விடுக்க அதனை அனைத்து பத்திரிக்கையாளர்களும் சொல்லி வைத்தார் போல் புறக்கணித்து விட்டார்களாம் சிலர் அவரை டிவிட்டரிலேயே பிர்ஸ் மீட்ட வச்சிக்க சொல்லுங்கன்னு சொல்லிட்டாங்களாம் இதனால் கடுப்பான ஹெச்.ராஜ பிரஸ் மீட்ட கேன்சல் செய்துவிட்டாராம்.

ஹெச் ராஜாவின் சந்திப்பை
ஹெச் ராஜாவின் சந்திப்பை சந்திப்பை புறக்கணித்த பத்திரிக்கையாளர்கள

உயர்கல்வியில் பாலியல் தொந்தரவுகள்

உயர்கல்வியில்  பாலியல் தொந்தரவுகள் 

உயர்கல்வியில்  பாலியல் தொந்தரவுகள் பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன் போகிற போக்கில் ஒன்றை சொல்லிவிட்டுப்போனார்.. உயர்கல்வியில் இதுபோன்ற பாலியல் தொந்தரவுகள் குறித்து கேள்விபட்டிருக்கிறோம் இப்போது இளங்கலை பயில வரும் மாணவிகள் குறிவைக்கபடுகிறார்கள்.. என்றார் ..
ஆம் .. உயர்கல்வி பிஎச்டி போன்ற ஆய்வுகள் குறித்த கல்விக்கு வழிகாட்டுதல் என உயர்அதிகாரிகள் பேராசாரியர்களை நியமிக்கபடுவார்கள் அவரை வேண்டாமென சொல்லவேண்டுமெனில் அவரிடமே பரிந்துரையை பெற வேண்டுமென விதிகள் .. நிறைய பெண்களை பாதியிலேயே விட்டுவிட்டு போக செய்திருக்கிறது சில உன்னதமானவர்கள் கல்வித்துறையில் உண்டு .. மறுப்பதற்கில்லை.. மாறாக குறிபிபாக 15 ஆண்டுகளில் தான் இதுபோன்ற பாலியல் தொந்தரவுகள் வருவதாத செய்திகள் சொல்கிறது.. அதற்கான காரணம் தகுதி அடிப்படையிலான துணைவேந்தர் நியமனங்கள் நடைபெறுவதில்லை.. கல்வித்துறையில் அரசியலை அதீதமாக உட்புகுத்தியது எம்ஜிஆரென்றாலும் அது ஒரு வரம்பிற்குள் இருந்தது ஆனால் ஜெயலலிதா காலகட்டத்தில்தான்… சசிகலா உறவினர்களின் அன்பிற்கு பாத்திரமானவர்கள் நிரம்பபட்டார்கள்

உயர்கல்வியில்  பாலியல் தொந்தரவுகள் 

இப்போது பிடியாகியிருக்கிற நிர்மலா சொல்லும் சேதிகள் அதிர்வலையை தரலாம் 15 ஆண்டுகால செய்தியை ஒரிரு நாளில் சொல்லிவிட முடியாதுதான் நீண்ட விசாரணை தேவைபடும் அது காலதாமத்திற்கு வழிவகைசெய்யும் .. ஆனாலும் எம் பிள்ளைகள் இளங்கலை பட்டபடிப்பிற்கு கூட போராட வேண்டியிருக்குமென்கிற நிலை கொடூரமானது இதன் பின்னணியில் எந்த சக்தியெல்லாம் இருக்கிறதென்பதையும் அதன் வேர் எதுவரை பாய்ந்திருக்கிறதென்பதும் வெளிவரவேண்டும்..
பயமின்றி எம் குழந்தை கல்லூரிகளிலே பயிலும் சூழல் உருவாக வேண்டும்.. எத்தனை உயர்ந்தவராக இருந்தாலும் அவரை இனங்காண வேண்டும்.. இந்த Sex scandal எத்தனை பேர் தொடர்புடையவர் நிர்மலாவை யார் பணித்தார்கள் யாருக்காக இந்த வேலையை செய்ய சொன்னார்.. அவர் யார் எந்த கல்வி தகுதியோடு அவர் வலம் வருகிறார்.. என்பதையெல்லாம் வெளிகொணரவேண்டும் .. நிறைய நிர்மலாக்கள் உலவுகிறார்கள் வெளியே,தெரியாமல் அவர்களையெல்லாம் இந்த சமூகத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்

நிர்மலாக்கள் உலவுகிறார்கள்

நிற்க.. ஒழுக்க விழுமியங்களை காற்றில் பறக்கவிட்டு .. தங்களின் பதவிக்காக பெண்களை பகடையாக பயன்படுத்து ஆண் நிர்மலாக்களும் நிறைய காணலாம் .. பெண்களை அவர்களின் பொருளாதாரத்தை .. அவர்கள் உயர்கல்வி ஆசையை வைத்து பாலியல் தொந்தரவு செய்யும் ஆண் நிர்மலாக்கள் நிறைய உண்டு.. அதைவிட கொடூரம் அதை நியாயபடுத்துகிற கேடுகெட்ட ஜென்மங்கள்..
இதோ இப்போது கூட எஸ்.வி.சேகரெனும் அரை கிறுக்கன் கவர்னர் பெண் நிருபர் லட்சுமி சுப்ரமணியனின் கன்னத்தை தடவியதை நியாயபடுத்துகிறான்.. கவர்னர் இவளை தொட்டதற்கு அவர் தான் கையை கழுவ வேண்டுமென கூறுகிறான் அதோடு நிற்காமல் பத்திரிக்கை துறையில் ரிப்போர்டராக நிறைய படுக்கையை பகிர்ந்து கொள்ளவேண்டுமென கூறுகிறான் .. உயர்பதவியை அடைய வீட்டுப்பெண்களை பகடைகளாக்கும் வித்தைகள் அறிந்தவர் போலும்.. ஒரு சராசரி நேர்மை கூட இல்லாமல் தன் அண்ணி தலைமை செயலரென்பதால் தாறுமாறாக பேசுவதும் .. பின் இடுகையை நீக்குவதும் இவருக்கு பழக்கம்.. நிர்மலாவைவிட மிக மோசமானவர்கள் அவரை காப்பாற்ற துடிக்கும் சேகர் வகையறாக்கள்..
பாவம் என்செய்ய!
அவர்களுக்கு தெரிந்தது அது ஓன்றுதானே..
ஆலஞ்சியார்

நிர்மலா தேவி பேச்சில் மயக்கம்தரும் வித்தையறிந்தவர்

நிர்மலா தேவி பேச்சில் மயக்கம்தரும் வித்தையறிந்தவர்

நிர்மலா தேவி பேச்சில் மயக்கம்தரும் வித்தையறிந்தவர் செய்யும் தொழிலை மிக நேர்த்தியாக செய்கிறார் அதற்கு அவர் அணிந்திருக்கும் ஆடை நம்மை வெட்கபடவைக்கிறது ஆசிரியர் பணியை அறப்பணியாக எண்ணுதல் வேண்டுமென்ற உயர்நோக்கு சிதைந்துப்போனது.. கல்விநிலையங்களில் பாலியல் தொந்தரவுகள் சமீபகாலங்களில் அதிகமாகுதல் அச்சம் தருகிறது.. குறிப்பாக பெண்கள் அதிகமாக உயர்கல்வியை நாடுகிற காலக்கட்டத்தில் நிர்மலா போன்றவர்களின் சேவைகள்..?.. குறிப்பாக பெண் குழந்தைகளை கல்லூரிக்கு அனுப்பும் நடுத்தர குடும்பங்கள் .. இதுவரை கல்லூரியை அறியாத சமூகங்கள் அச்சம்பட நேரிடும் இது ஒருவகையில் ஒரு சாராருக்கு பயன்தரகூடும் என்பதால் பாஜக நேரடியாகவே இவ்விடயத்தில் களமிறங்குகிறதோ என எண்ணதோன்றுகிறது
எச்.ராசா அலுவல் நிமித்தமாக மாணவிகளை அணுகியதாக சொல்லும் போதே சந்தேகம் வருகிறது .. உயர்பதவியில் உள்ளவர்கள் இதில் சம்பந்தபட்டிருப்பதாக அவரே கவர்னர் லெவல் (நிலை) கவர்னர் தாத்தா இல்லையென்கிற போது சந்தேகம் வலுக்கிறது

பாஜக கட்சியில் மகளிர் அணி என்பதே உயர்ஜாதி கறவைகளென்ற பெயர் பரவலாக பேசபடுகிறது  பாஜகவின் கவர்னர் லெவல் என்பது ஒருவகை மிரட்டலென்றே படுகிறது
Sex scandal செக்ஸ் ஊழலென்பது அதுவும் உயர்வகைகளை பயன்படுத்தி காய் நகர்த்தியது எம்ஜிஆர் காலத்தில் தான் தொடங்கியது

குயில் மயில் என்று பெயரிட்டு சித்ராக்களும் மணியன் வகையறாவையும் களமிருக்கினார் அந்த சினிமா பொறுக்கி வடநாட்டியிலிருந்து வரும் அமைச்சர் கவர்னர் அதிகாரிகளென குளிரவைத்து அனுப்பியதெல்லாம் பழைய செய்திகள் செல்வி. ஜெயலலிதா ஆட்சியில் கூட Sex scandal நடந்தது அதுவும் இதே நிலையில் தான் 
எம்ஜிஆர் ஆட்சியின் போது மாணவிகளை குறிவைத்து நகர்த்தபடவில்லை காரணம் பெரிய பொருளாதாரத்தை கொண்டவர்கள் மட்டுமே கல்லூரிகளுக்கு வந்தார்கள் ஆனால் இப்போது நடுத்தர மற்றும் சாமானியன் வீட்டுப்பிள்ளைகள் கல்லூரிகளுக்கு வருவது அதிகரித்துள்ள சூழலில் அதை குறிவைத்து பணம், வேலைவாய்ப்பென ஆசைக்காட்டி வலைவீசுகிறார்கள்

எடப்பாடி அரசு என்ன செய்கிறது?

அவசர அவசரமாக கவர்னர் தலையிடுவதிலிருந்தே சந்தேகம் வலுக்கிறது எடப்பாடி அரசு என்ன செய்கிறது அவர்களின் கைகள் கட்டபட்டிருக்கிறதா யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் நிர்மலா யாருக்காக இந்த வேலையை செய்தார் எத்தனை காலம் இது நடக்கிறது .. பாஜக இதில் அவசரமாக நிர்மலாவிற்கு ஆதரவு தருவதின் பின்னணி என்ன.. பாஜக அதிகார மையத்தில் நிர்மலாவின் பங்கென்ன.. நிர்மலாவின் புறமிருந்து இயக்குவது யார்.. நிறைய கேள்விகள் .. ஆளுநர் செயலாளரின் நெருங்கிய கூட்டாளி சந்தானத்தை விசாரணை அதிகாரியாக அமைத்ததின் நோக்கமென்ன ..
நிர்மலாவின் கைப்பேசியில் கடந்த சில மாதங்களாக யாருடன் பேசினாரென்ற விபரங்களை வெளியே கொண்டுவந்தால் உண்மை வெளிவரும்..
கவர்னர் எனக்கு உன் தாத்தா என்பதெல்லாம் மடைமாற்றும் முயற்சி அவர் பதறுவதும் கோபபடுவதும் தெரிகிறது..
இதற்கெல்லாம் விடை தெரியவேண்டுமெனில் கவர்னர் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும்
..
லட்சுமி சுப்ரமணியனின் கன்னத்தை தடவியது தனக்கு அருவருப்பாக இருப்பதாக அந்த பெண்மணி சொல்வதிலிருந்தே கவர்னரின் யோக்கியதை புரிகிறது ..
You are wrong என்ற சொல் உண்மையைச் சொல்கிறது கவர்னரே.. யார் மீது குற்றசாட்டோ அவரே விசாரணை கமிஷன் அமைப்பாராம் .. விசாரணை முடிவு அவரிடமே போகுமாம்.. அதன் மீது அவரே முடிவெடுப்பாராம் 

#கள்ளனிவன் 

உ பி யில் மீண்டும் ஒரு சிறுமி கற்பழிப்பு | தொடர்கதையாகும் கற்பழிப்பு

உ பி யில் மீண்டும் ஒரு சிறுமி கற்பழிப்பு | தொடர்கதையாகும் கற்பழிப்பு

உ பி யில் மீண்டும் ஒரு சிறுமி கற்பழிப்பு தொடர்கதையாகும் சிறுமிகளுக்கு நேரும் கொடூர செயல்   உபியில், 8 வயது சிறுமி, பலாத்காரம் செய்யபட்டு கொலை செய்யபட்டுள்ளார்.
சோனு என்ற 18 வயதுடைய காமுகன் கைது. குடிபோதையில் இந்த செயலை செய்துள்ளான்.
உபி மாநிலம் எடாப்பகுதியில், திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு தனது 8 வயது மகளுடன் ஒருவர் சென்றுள்ளார் நள்ளிரவில், இந்த சம்பவத்தை நிகழ்த்தி உள்ளான் அந்த கொடியவன்,
அவனுக்கு 18 வயது எண்டு முன்கூட்டியே அறிவித்துவிட்டார்கள், இனி அவனை சிறுவர் ஜெயிலில் போடுவார்களா? அல்லது தையல்மிசின் கொடுத்து அனுப்புவார்களா? என்று போக போக தெரியும்.
சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யபடுவதும், கொலை செய்யபடுவதும், நாட்டில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் அப்பட்டமாக அரங்கேறி வருகின்றன.
தண்டனை கடுமையாக்கபட்டால் ஒழிய இதற்கு தீர்வு கிடைக்காது. இது போன்ற வழக்குகளில் நீதிமன்றமும் அதிக கவனம் செலுத்தி வழக்கை உடனடியாக முடிக்க வழி வகைகள் செய்ய வேண்டும் 

Need to sell your Property 

தயவுசெய்து ஜனநாயகம் மற்றும் நாட்டை காப்பாற்றவும்

தயவுசெய்து ஜனநாயகம் மற்றும் நாட்டை காப்பாற்றவும்

தயவுசெய்து ஜனநாயகம் மற்றும் நாட்டை காப்பாற்றவும். பி ஜே பியின் நிதி அமைச்சர் யஸ்வந்த் சின்கா உருக்கம் 2014 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு நாங்கள் அனைவரும் மிகவும் கடினமாக உழைத்தோம். 2004-ல் ஆட்சிக்கு வந்தபின்னர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், பாராளுமன்றம் மற்றும் வெளியுலகுக்கு எதிராகப் போராடினோம், சிலர் தங்கள் மாநிலங்களில் அலுவலகத்தின் பலன்களை அனுபவித்தனர். 2014 தேர்தல்களின் முடிவுகள் குறித்து நாம் மகிழ்ச்சியடைந்தோம். முன்னோடியில்லாத வெற்றியை நமது நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய மற்றும் புகழ்பெற்ற அத்தியாயத்தின் தொடக்கத்தை குறிக்கும் என்று எதிர்பார்த்தோம். பிரதம மந்திரி மற்றும் அவரது வெற்றிகரமான குழுவை முழு நம்பிக்கையுடன் ஆதரித்தார். அரசாங்கம் இப்போது கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக பதவியில் முடிவடைந்துள்ளது, ஐந்து வரவு செலவுத் திட்டங்களை வழங்கியதுடன், முடிவுகளை காண்பதற்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தியது. அது முடிவில், மது கொள்கை மற்றும் நடவடிக்கைகள் நமது பி ஜே பி அரசு வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக தோன்றுகிறது

நமது அரசு இதற்கெல்லாம் உறுதுணையாக இருந்துள்ளது

உலகின் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரம் என்று அரசாங்கத்தால் பிரச்சார படுத்த பட்ட போதிலும், பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதார வளர்ச்சி நமது தேசத்தில் மிக மோசமாகி போனது . மிக வேகமாக வளர்ந்து இருக்க வேண்டிய பொருளாதாரம் நமது அரசின் தவறான பொருளாதார கொள்கையால் முடங்கிப்போனதோடு அல்லாமல் பணமதிப்பிழப்பு மற்றும் வர கடன் அதிகரித்த காரணத்தால் படித்த இல்;இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை விவசாயிகளின் தற்கொலை போன்ற கரணங்கள் மற்றும் தொழில் வளர்ச்சியின்மை போன்ற காரணங்களால் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக வீழ்ச்சி அடைந்தது அதோடு நாட்டில் தலைவிரித்தாடும் ஊழல் மற்றும் வங்கி மோசடிகள் போன்ற கரணங்கள் வளர தெரிந்தோ தெரியாமலோ நமது அரசு இதற்கெல்லாம் உறுதுணையாக இருந்துள்ளது

நமது அரசு ஜனநாயகத்தை நிலை நட்ட தவறி விட்டது

பெண்கள் முன்பை முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பாதுகாப்பற்றவர்களாக ஆகி போனார்கள் அனுதினமும் நடக்கின்ற கற்பழிப்புகள் மற்றும் பெண்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கல் நாள்தோறும் அதிகரித்த வண்ணமாகவே இருக்கிறது அதோடு இந்த மா பாதக செயலை செய்பவர்கள் நமது கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பது இன்னும் பேரதிர்ச்சியாக உள்ளது இதை விட கொடுமை என்னெவன்றால் இந்த தவறை செய்பவர்களை நமது கட்சியே காப்பாத்தி விடுகிறது இது தான் கொடுமையின் உச்சம்! இன்று சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்த பட்டவர்களுக்கு நமது அரசு ஜனநாயகத்தை நிலை நட்ட தவறி விட்டதுதயவுசெய்து ஜனநாயகம் மற்றும் நாட்டை காப்பாற்றவும். பி ஜே பியின் நிதி அமைச்சர் யஸ்வந்த் சின்கா உருக்கம்

பிரதம மந்திரியின் வெளி நட்டு சுற்று பயணம் கேலிக்குரியதாகி விட்டது

பிரதம மந்திரியின் வெளி நட்டு சுற்று பயணம் கேலிக்குரியதாகி விட்டது அதனால் நாட்டுக்கு எந்த பயனுமில்லை அதோடு இல்லாமல் நமது வெளியுறவு கொள்கையில் ஸ்திரத்தன்மை இல்லாமல் போய்விட்டது அதனோடு எல்லையில் நமது ராணுவ படை வீரர்கள் சிந்திய ரத்தம் வீணாகி விட்டது எல்லையில் பயமில்லாமல் பாக்கிஸ்தான் வாலாட்டி கொண்டு இருக்கிரது சீன நமது நிலங்களை ஆக்ரமித்து கொண்டு இருக்கிறது ஜம்மு ‘காஸ்மீர் அமைதி இலலாமல் எரிந்து கொண்டு இருக்கிறது காஸ்மீர் மக்கள் இது போல் முன் எப்போதும் துன்ப பட்டது இல்லை!

பிரதமர் நீங்கள் கேட்பது இல்லை பேசிக்கொண்டுதான் இருக்கிறீர்கள்

கட்சியில் உள்நாட்டு ஜனநாயகம் முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கிறது. நமது கட்சி கூட்டங்களில் கூட, கட்சியினர் தங்கள் கருத்துக்களை நேரடியாக வெளியிடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என
நமது கட்சியினர் நண்பர்கள் என்னிடம் கூறுகிறார்கள். மற்ற கட்சிக் கூட்டங்களில், தொடர்பு என்பது எப்போதும் அது ஒரு வழி. அவர்கள் பேசுகிறார்கள், கட்சி தலைமையின் கேட்கிறார்கள் ஆனால் நமது கட்சி தலைமையோ அல்லது பிரதமர் நீங்கள் கேட்பது இல்லை பேசிக்கொண்டுதான் இருக்கிறீர்கள்

ஜனநாயகத்தின் நிறுவனங்கள் தாமதப்படுத்தப்பட்டு, சிதைக்கப்பட்டன

கடந்த நான்கு ஆண்டுகளில் உருவான மிக முக்கியமான அச்சுறுத்தல் எவ்வாறாயினும் நமது ஜனநாயகம்தான். ஜனநாயகத்தின் நிறுவனங்கள் தாமதப்படுத்தப்பட்டு, சிதைக்கப்பட்டன. பாராளுமன்றம் ஒரு நகைச்சுவை அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களின் மூத்த தலைவர்களுடன் ஒருமுறை கூட உட்காரவில்லை, சரியான தீர்வைக் கண்டறிவதற்காக வரவிருக்கும் வரவுசெலவுத் திட்ட அமர்வு ஏற்பட்டது. பின்னர் அவர் மற்றவர்களிடம் குற்றம் சாட்டினார். மிக முக்கியமான வரவுசெலவுத் திட்டத்தின் முதலாவது பகுதி மிகச் சிறியதாக இருந்தது. எதிர்க்கட்சியை ஏற்றுக் கொள்ளவும், பாராளுமன்றம் செயல்படுவதை உறுதி செய்யவும் நாங்கள் எல்லோரும் கடுமையான அறிவுறுத்தல்களுக்கு ஆளானபோது, வாஜ்பாயின் ஆட்சியுடன் இதை நான் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். எதிர்க்கட்சி விரும்பிய எந்த ஆட்சியின் கீழும் ஒத்திவைப்பு இயக்கங்கள், நம்பிக்கையற்ற இயக்கங்கள் மற்றும் பிற விவாதங்கள் இருந்தன
உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர் மாநாட்டில் எங்களது ஜனநாயக வரலாற்றின் அறிவிப்புகளில் முன்னோடியில்லாத வகையில் இருந்தது. இது நமது நாட்டின் மிக உயர்ந்த நீதித் துறையை துன்புறுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள அழுகையை தெளிவாக வெளிப்படுத்தியது. நமது நாட்டில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று நீதிபதிகள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளனர்

எனவே எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு இருந்தால், நீங்கள் எங்கும் இருக்க முடியாது ஜெயிக்க முடியாது

இன்று, செய்தி ஊடகம் மற்றும் சமூக ஊடகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தேர்தல்களைப் அணுகுவது தான் , நம் கட்சியின் ஒரே நோக்கம், இப்போது அது தீவிரமாக அச்சுறுத்தப்படுகிறது. அடுத்த லோக் சபா தேர்தலில் நமது கட்சியினர் எப்படி வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியாது ஆனால் எனது முந்தைய அனுபவம் எந்த வழிகாட்டியாக அணுகு முறையாக இருந்தாலும் பிரதமர்நீங்களோ நானோ அல்லது நமது கட்சியினரே நாம் அடுத்த பாராளமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது வெகு தொலைவில் உள்ளது . கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 31 சதவீத வாக்குகளைப் பெற்றது. 69 சதவிகிதம் அதற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எனவே எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு இருந்தால், நீங்கள் எங்கும் இருக்க முடியாது ஜெயிக்க முடியாது

எதிர்காலம் நம்மை மன்னிக்காது

இன்றைய தேசத்தின் நிலைமை நீங்கள் கொடுத்த வாக்குறுதியை கேலி செய்கிறது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேட்ற படவில்லை அதோடு பிற்படுத்த பட்டோருக்கான உரிமைகள் நமது கட்சியில் கேள்விக்குறியாகி இருக்கிறது முற்றிலும் நமது கட்சியில் ஜன நாயகம் என்பது இல்லை கட்சியின் குறைந்தபட்சம் ஐந்து தாழ்த்தப்பட்ட ஜாதிக் கட்சியினர் சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை வழங்குவதற்காக அரசாங்கத்துடன் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன் அதோடு நமது கட்சியில் மூத்த உறுப்பினர்கள் மதிகபட வேண்டும் கட்சிக்காக அவர்களது தியாகம் என்றுமே நினைவில் கொள்ள வேண்டியது அவர்களது அத்தியாகத்தை எதிர்கால தலைமுறையினர் போற்ற நாம் பாதுகாக்க வேண்டும் இல்லையென்றால் அல்லது நமது நடவடிக்கை இது போன்றே தொடருமென்றால் எதிர்காலம் நம்மை மன்னிக்காது
நமது அரசின் சில சிறிய வெற்றிகள் இருக்கிறது அதில் ஆனால் நமது மிகப்பெரிய தோல்விகள் தவறுகள் அவற்றையெல்லாம் மறைத்து விடுகிறது இந்த கடிதத்தில் நான் எழுப்பியுள்ள பிரச்சினைகளுக்கு நீங்கள் தீவிர கவனம் செலுத்துவீர்கள் என நம்புகிறேன். தயவுசெய்து ஜனநாயகம் மற்றும் நாட்டை காப்பாற்றவும்.
தயவுசெய்து ஜனநாயகம் மற்றும் நாட்டை காப்பாற்றவும். பி ஜே பியின் நிதி அமைச்சர் யஸ்வந்த் சின்கா உருக்கம் தகவலை உறுதி செய்ய

கற்பழிக்க பட்டு நிர்முலமாக்கி கொல்லப்பட்ட அந்த குழந்தையை அனுதாபத்தால் கூட தேடாமல், ஆபாசத்தளங்களில் தேடிய ஒரு அவலம்

கற்பழிக்க பட்டு நிர்முலமாக்கி கொல்லப்பட்ட அந்த குழந்தையை அனுதாபத்தால் கூட தேடாமல், ஆபாசத்தளங்களில் தேடிய ஒரு அவலம்

அந்த குழந்தையை அனுதாபத்தால் கூட தேடாமல், ஆபாசத்தளங்களில் தேடிய ஒரு அவலம்   சிறுமி ஆசிபாவை ஆபாச வலைத்தளத்தில் தேடிய கொடுமை, உலகமே இன்று சிறுமி ஆசிபா விற்க்காக கண்ணீர் வடித்து கொண்டு இருக்கும் போது ஒரு சிலர் ஆசிபாவின் விடியோவை ஆபாச இணையத்தளத்தில் தேடி இருக்கின்றார்கள் இன்று மனிதனின் அந்தரங்கம் இப்படி தான் இருக்கும் போலும் கற்பழிக்க பட்டு நிர்முலமாக்கி கொல்லப்பட்ட அந்த குழந்தையை அனுதாபத்தால் கூட தேடாமல், ஆபாசத்தளங்களில் தேடிய ஒரு அவலம் நமது கலாச்சார பூமியில் தான் நடந்தேறி இருக்கிறது அதை கவனித்த ஒருவர் முகநூலில் தனது வேதனையை இப்படி தெரிவித்து இருக்கின்றார்
இந்தியா பெண்களை கலாச்சாரம் வழி காக்கிறது என்று இனியும் ஒருவர் கூறினால்… உங்கள் கல்லறைகளில் உங்களை போன்று அயோக்கியன் இல்லை என்று பொறிக்கப்படும்.
தெருவில் துப்பட்டா வழி இனியும் கலாச்சாரத்தை கப்பற்றுகிறோம் என்று நீங்கள் கூக்குரல் எழுப்பினால்.. உங்கள் சந்ததி உங்களை எச்சை என்று அழைக்கும்.
“நான் அப்படி இல்லை யாரோ அப்படி செய்க்கிறார்கள் நான் நல்லவன் கலாச்சாரத்தை காப்பவன்” என்று நீங்கள் நழுவி …தெருவில் நடக்கும் பெண்களுக்கு கலாச்சார அறிவுரைகள் கூறினால்… நீங்கள் கேடுகெட்ட பொறிக்கிகள் என்று மானுடம் வரும் காலங்களில் பேசும்.

விதை இன்று நான் விதைக்கிறேன் என் பிள்ளைகளுக்கு; நான் ஆசிபா என்ற குழந்தை யார், அவளுக்கு என்ன நேர்ந்தது, அதன்பிறகு இந்த அரிப்பேடுத்த, இந்திய கலாச்சார காவல் ஆண் சமூகம், அந்த குழந்தையை அனுதாபத்தால் கூட தேடாமல், ஆபாசத்தளங்களில் தேடியது என்றும், நீ சபிக்கப்பட்ட கேடுகெட்ட நாட்டில் பிறந்துளாய், இந்த கலாச்சாரம் என்பது ஒன்றுக்கும் உதவாத எச்ச hypocrisy எப்படியாவது அழித்துவிடு என்று சொல்லி வளர்ப்பேன்.
நதிகளுக்கு, தெய்வங்களுக்கு பெண்கள் பெயர் வைத்து, சொர்க்கபூமிபோல் அவர்களுக்கு அமைத்துதந்தோம் என்று சொல்லி, மாராப்பு முகர்ந்து பார்த்து சுயஇன்பம் கொண்ட ஆண்கள் உலாவந்த சமூகம் இது என்று எங்களை ஏளனம் செய்யட்டும் எங்கள் சந்ததிகள்
Thanks for Social Writter

ஆசிபா குடும்பம் கத்துவாவை விட்டு வெளியேறியது

 ஆசிபா குடும்பம் கத்துவாவை விட்டு வெளியேறியது

ஆசிபா குடும்பம் கத்துவாவை விட்டு வெளியேறியது மனுவாத சங் பரிவாரிகள் தாங்கள் நினைத்ததை சாதித்து விட்டார்கள். ஆசிபா
வின் குடும்பமும் மேலும்17பேரும் கத்துவாவின் ரசனா கிராமத்தை விட்டு வெளியேறி 110 கி மீட்டரை 9 நாட்களில் கடந்து உத்தம்பூருக்கு அருகில் உள்ள ரவுண்டோமெயில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். 100 ஆடுமாடுகளையும் 15 குதிரைகளையும் மேய்த்துக் கொண்டே வந்திருக்கிறார்கள்
ஆசிபாவின் தந்தை அஜ்மத் கூறினார்  எங்களுடைய ஆடுமாடுகளையும் வீடுகளையும் எரிப்போம் என்று மிரட்டினார்கள்
எங்களது ஆடுமாடுகள் செத்தால் நாங்களும் சாக வேண்டியதுதான் எங்களுக்கு
வாழ வேறு வழியில்லை  ஏற்கெனவே எங்களது அருமைக் குழந்தையை பறிகொ
டுத்துவிட்டோம் மீண்டும் கத்துவா திரும்பமாட்டோம் இதற்கு இன்னொருகாரணம்
இவரின் இன்னொரு மகளின் பாதுகாப்பு பற்றிய கவலை  அந்த மகள் ஆசிபாவை
விட சில ஆண்டுகள் மூத்தவள் (டிஒஐ ஏடு)அந்தப் பகுதியிலிருந்து முஸ்லிம்களை
அச்சுறுத்தி விரட்ட வேண்டும் என்றுதான் ஆசிபாவிற்கு அந்த கொடூரத்தை செய்தி
ருக்கிறார்கள் சங்பரிவாரிகள் என்பது உறுதியாகிறது ஆக இந்த அக்கிரமத்திற்கு
மூலகாரணம் மதவெறியே 

சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்க திராவிடம் அப்படி என்ன பெரிசா செய்தது

சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்க  திராவிடம் அப்படி என்ன பெரிசா செய்தது

திராவிடம் அப்படி என்ன பெரிசா செய்தது? அதிலும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்க அவர்கள் என்ன செய்தார்கள்? இப்போதும் அதே ஏற்றத்தாழ்வு இருக்கத்தானே செய்கிறது? என உண்மையான வருத்தத்தோடே கேட்டார். அவர் உயர்வகுப்பை சேர்ந்தவர் (ஆம் அதே தான் ஆனாலும் அவரது கேள்வியில் உண்மையான வேதனை இருந்தது  இன்று நண்பருடன் சிறு உரையாடல்
ரவா கிச்சடி சாப்பிட்டபடியே பேசினேன்.. சுருக்கமாக
“நீங்க இப்போ என்ன வேலை செய்கிறீர்கள்னு சொல்லமுடியுமா?” நான்
“சென்னையில் ஒரு கம்பெனியில் தலைமை எஞ்சினியர்” அவர் (இனி உரையாடலாக புரிந்துகொள்ளவும்)
“உங்களுடன் பணிபுரிவோர்….??.”
“பல தரப்பட்டவர்கள்.. பல இனத்தவர்..குலத்தவர்..”
“அவர்களோடு இணைந்து பணியாற்றுவது உங்களுக்கு சங்கடமாக இருக்கிறதா?”
“இல்லவே இல்லை.. அவர்களும் மனிதர்கள் தானே? அவர்களை வேறுபடுத்தி நான் பார்ப்பதில்லை. அவர்களோடு சகஜமாக பழகுகிறேன்.. அவ்வளவு ஏன்.. அவர்களோடு உணவை பகிர்ந்துகொள்ளுகிறேன்.. அவர்களது டிபன்பாக்ஸையே எடுத்து சாப்பிடுவேன்.. (வெஜிட்டேரியன் ஐட்டம்சாக இருந்தால் மட்டும்)”
“உங்களுக்கு எப்படி எல்லோரும் சமம் என்கிற உணர்வு வந்தது?”
“அது எனது கல்வியினால் வந்த மெச்சூரிட்டி”
“ஏன் வட மாநிலங்களில் கல்வி கற்றவர்களுக்கே கூட இந்த மெச்சூரிட்டி வரவில்லை?”
“…….”
“சரி அதை விடுங்கள். உங்களுக்கான தொழில்களை விட்டுவிட்டு நீங்கள் எஞ்சினியரிங் படிக்க விரும்பியதும்.. உங்களுடன் பணிபுரியும் அந்த ஒடுக்கப்பட்டோர் எஞ்சினியரிங் படித்து உங்களுக்கு சமமாக வந்திருப்பதையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?”
“இது சமுதாய வளர்ச்சியின் பரிணாம வெளிப்பாடு. சமூக வளர்ச்சியும் நாகரீகமும் வளர வளர நாங்களும் பிற துறைகளில் கால்பதித்து வென்றோம். அவர்களும் மெல்ல எல்லா துறைகளிலும் முன்னேறினர். இது கால மாற்றம். இதில் என்ன ஸ்பெஷல்?”
“இதே சமுதாய முன்னேற்றம்.. நாகரீக யுகம் வடக்கிலும் உள்ளதே? பிறகும் ஏன் ஒடுக்கப்பட்டவர்களால் அவர்கள் விரும்பிய கல்வியை படிக்க முடியவில்லை? தென்கோடியில் மட்டும் எப்படி அது சாத்தியமானது? அவர்களது வளர்ச்சி உங்களுக்கு எந்த உறுத்தலையும் தராத அளவுக்கு உங்களுக்கு மன முதிர்ச்சி வந்திருக்கிறது. ஆனால் உங்களை சார்ந்தவர்களுக்கு வடக்கில் உள்ளவர்களுக்கு ஏன் அந்த முதிர்ச்சி வரவில்லை?”
“இங்கு அடிப்படி கல்வியில் இருந்தே அந்த சமதர்மம் பாடமாக இருக்கிறது. வடக்கில் எப்படி என தெரியவில்லை”
“அது தான் திராவிடம் தந்த பெரும் மாற்றம்… ”
நான் முடித்துவிட்டேன்
உணவையும் உரையாடலையும்
அவர் என்னுடன் காரில் வரும்பொழுது நிறைய பேசினார். இப்போது அவருக்குள் நிறைய மாற்றங்கள் தெரிந்தது. உற்சாகமாக இருந்தார். திராவிட இயக்கம் பற்றி நிறைய படிக்கப்போவதாக சொன்னார். ஒரே நேரத்தில் சுதந்திரம் கிடைத்தும் தென் மாநிலங்களில் மட்டும் இந்த மெச்சூரிட்டியும் சகிப்புத்தன்மையும் எல்லோருக்குள்ளும் வந்திருப்பதன் தாத்பர்யத்தை விரிவாக தெரிந்துகொள்ள ஆசைப்படுவதாக சொன்னார். திராவிடம் சத்தமில்லாமல் மிக பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதை ஒப்புக்கொள்வதாக சொன்னார். இன்னும் இன்னும் நிறைய பேசினார்.. வழி நெடுக நீண்ட பயணத்தில்..
சந்தோஷமாக இருந்தது.
ஒரு சாதாரண உரையாடல் பத்து நிமிடத்துக்குள் இத்தனை மாற்றத்தை தரும் என நானே கூட நினைத்துப்பார்க்கவில்லை
ரவா கிச்சடி மிகவும் சக்திவாய்ந்தது !
Written by DonAdshok 

கொன்றது சரிதான் இனிமேலும் இப்படித்தான் கொல்வோம் இஸ்லாமிய சிறுமிகளை சவால் விடும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர்

கொன்றது சரிதான் இனிமேலும் இப்படித்தான் கொல்வோம் இஸ்லாமிய சிறுமிகளை சவால் விடும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர்

கொன்றது சரிதான் இனிமேலும் இப்படித்தான் கொல்வோம் இஸ்லாமிய சிறுமிகளை ஆசிபா வன் கொடுமை யை செய்தவர்களை கண்டித்து இந்திய தேசமெங்கும் கொந்தளித்து கொண்டு இருக்கும் கால கட்டத்தில் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் சிறுமியை கொன்றது சரிதான் இனிமேலும் இப்படித்தான் கொல்வோம் இஸ்லாமிய சிறுமிகளை என்று பகிரங்கமாக சவால் விடும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர்,
இன்று சமூக ஊடகத்தில் பரவலாக ஒரு வீடியோ பரவி வருகிறது அதில் ஒரு நபர் இப்படி பேசுகின்றார் இவர் இப்படி தைரியமாக பேசுவதற்கு எப்படி துணிவு வருகிரது அரசு என்ன செய்கிறது இதை எல்லோரும் செய்து வைரலாக பரவிவருகிறது! இது இந்திய ஜனநாயகத்தை அரசியல் சாசனத்தை கேள்விக்குறியாக்கும் ஒரு செயல் ஆகும் இது போல் நடப்பது ஒரு சம்பவம் அல்ல இதை அரசங்ககம் ஆரம்பத்திலே கிள்ளி ஏறிய வேண்டும்
ஆசிபாவிற்காக இந்திய தேசம் மட்டும் அல்ல உலகமே இன்று கண் கலங்கி கொண்டு இருக்கும் வேளையில் இப்படி ஒரு வீடியோ கட்சியை வெளியிடுகிறார்கள் என்றால் இவர்கள் எவளவு ஆபத்தானவர்கள் என்று மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் அரசு இதன் மேல் நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் இன்று சமூக ஊடகத்தில் ஆவேச படுகின்றனர்
 
 
https://www.facebook.com/mdshahwazakhtarmim/videos/903805889773502/?t=0

கொன்றது சரிதான் இனிமேலும் இப்படித்தான் கொல்வோம் இஸ்லாமிய சிறுமிகளை சவால் விடும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர்

 

மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் தொலைப்பேசி உரையாடல்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் தொலைப்பேசி உரையாடல்

சமூக ஊடகத்தில் இன்று பரவி வரும் ஒரு செய்தி என்னெவென்றால் பணத்திற்க்காக தவறான பாதைக்கு அழைக்கும் பேராசிரியர் திருமதி.நிர்மலதேவி அதை ஒரு மாணவி புத்திசாலித்தனமாக பதிவு செய்து சமூக ஊடகத்தில் பரவ விட்டு உலகமெங்கும் தெரிந்து இன்று அந்த நபர் அசிங்க பட்டுக்கொண்டு இருக்கிறார் இது போன்று செய்தால் தான் இவர்கள் திருந்துவார்கள் ஆகவே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட இது சரியான செயல் தான் என்று எல்லோரும் அந்த மாணவிகளை பாராட்டவே செய்கின்றார்கள்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, தேவாங்கர் கலைக்கல்லூரி, கணித பேராசிரியர் திருமதி நிர்மலதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் தொலைப்பேசி உரையாடல்
பல்கலைக் கழகத்தில் மதிப்பெண்ணுக்கு மதிப்பெண்ணும் கிடைக்குமாம் பணமும் கிடைக்குமாம்..
இந்த இழி பிறவியின் முகத்தை தோலுரித்த நம் தங்கைகளுக்கு வாழ்த்துக்கள்.. உங்களை மனதார நம்புகிறோம். நீங்கள் தவறு செய்து இருந்தால் இந்த உரையாடலை வெளியிட்டு இருக்க மாட்டீர்கள்.. உங்கள் குடும்ப உறுப்பினர்களாக உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம் தங்கைகளே..
(தங்கைகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்ட இடங்கள் பீப் ஒலியால் mute செய்யப் பட்டுள்ளது)
Aruppukottai Arts Collage

#ஆடியோ_ரிலீசு.. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, தேவாங்கர் கலைக்கல்லூரி, கணித பேராசிரியர் திருமதி.நிர்மலதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் தொலைப்பேசி உரையாடல். பல்கலைக் கழகத்தில் மதிப்பெண்ணுக்கு மதிப்பெண்ணும் கிடைக்குமாம்.. பணமும் கிடைக்குமாம்.. இந்த இழி பிறவியின் முகத்தை தோலுரித்த நம் தங்கைகளுக்கு வாழ்த்துக்கள்.. உங்களை மனதார நம்புகிறோம். நீங்கள் தவறு செய்து இருந்தால் இந்த உரையாடலை வெளியிட்டு இருக்க மாட்டீர்கள்.. உங்கள் குடும்ப உறுப்பினர்களாக உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம் தங்கைகளே.. (தங்கைகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்ட இடங்கள் பீப் ஒலியால் mute செய்யப் பட்டுள்ளது)#அரண்கள்

Posted by அருப்புக்கோட்டை அரண்கள் on Friday, 13 April 2018

ஒரு பக்கம் ரஜினி இன்னொரு பக்கம் நரேந்திர மோடி !

ஒரு பக்கம் ரஜினி இன்னொரு பக்கம் நரேந்திர மோடி !

ஒரு பக்கம் ரஜினி போட்டோ இன்னொரு பக்கம் நரேந்திர மோடி போட்டோ என்றால் நாம் தமிழ்நாட்டின் முடிவை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே கிடையாது” என்கிறார் ஆர்.எஸ்.எஸ்.குருமூர்த்தி.

தமிழ்நாட்டின் ‘முடிவு’ என்று எதை இவர்கள் தீர்மானிக்கிறார்கள் என்பதை தமிழர்கள் உணர்ந்து, விழிப்படைந்து விட்டதால், “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்கக்கோரிய போராட்டம் மக்கள் போராட்டமாக மாறி உள்ளது.
இந்த போராட்டத்தின் தீவிரத்தை உணராது தமிழகத்திற்கு வந்த மோடிக்கு காட்டப்பட்ட கருப்பு கொடியும் ரஜினியின் அரசியல் வரவை தள்ளிப் போட்டு வைத்திருக்கிறது. 

“ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார்?” என்று பரபரப்பாக விவாதிக்கப்பட்ட ஒரு காலம் முடிந்துவிட்டது.
“ரஜினி அரசியல் கட்சி தொடங்கப் போவதை தள்ளிப் போட்டுள்ளார்” என்ற செய்தி பரபரப்பாக விவாதிக்கப்படாமல்,
“நீ வந்தால் என்ன? வராவிட்டால் எனக்கென்ன?” என்று தமிழர்களால் அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறது.
சமீப கால நிகழ்வுகளை கவனிக்கும் பொழுது, மாற்று அரசியலை நோக்கி தமிழ் மக்களே நகர ஆரம்பித்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது.
இதில் ஒரு பக்கம் ரஜினி இன்னொரு பக்கம் நரேந்திர மோடி நேரடியாக மக்கள் களத்தில் நின்றால் அம்மணமாக்கப்படுவார்கள் என்பதே இன்றைய தமிழக அரசியலுக்கு கிடைத்துள்ள வெற்றி!
©Yuma JAHARO [தமிழச்சி]
14/04/2018
#அரசியல் | #ரஜினி | #மோடி | #ஆர்எஸ்எஸ் | #குருமூர்த்தி | #காவிரி_மேலாண்மை_வாரியம் |

https://www.facebook.com/YumaJaharo/videos/1630546460377237/?t=17

என்னை மன்னித்து விடு மகளே ஆஷீபா

என்னை மன்னித்து விடு மகளே ஆஷீபா

என்னை மன்னித்து விடு மகளே ஆஷீபா !! கொடும்பாவிகள் சூழ்ந்த இந்த தேசத்தில் நீ பிறந்திருக்க கூடாது. மனிதன் என்ற போர்வையில் வாழும் ஒரு சில கொடிய மிருகங்கள் உண்னை வேட்டையாடிய போது அதை தடுக்க இயலாது கையாலாகாத நிலையில் உள்ள நானும் இந்த தேசத்தில் பிறந்ததற்கு வெட்கித் தலை குனிகின்றேன்.
முதன் முதலாக கொஞ்சம் கடுமையான சொற்களோடு கூடிய பதிவை இங்கே இடுவதற்கு உண்மையிலேயே வருந்துகிறேன்! மிகுந்த மனவேதனையோடு, கண்களில் கண்ணீர் நிறைந்த நிலையில் இந்த பதிவை இங்கு பதிவு செய்கிறேன் 

என்னை மன்னித்து விடு மகளே ஆஷீபா !! கொடும்பாவிகள் சூழ்ந்த இந்த தேசத்தில் நீ பிறந்திருக்க கூடாது. மனிதன் என்ற போர்வையில் வாழும் ஒரு சில கொடிய மிருகங்கள் உண்னை வேட்டையாடிய போது அதை தடுக்க இயலாது கையாலாகாத நிலையில் உள்ள நானும் இந்த தேசத்தில் பிறந்ததற்கு வெட்கித் தலை குனிகின்றேன்

மகளே ஆஷீபா!

மகளே ஆஷீபா! குழந்தையும் தெய்வமும் ஒன்று என கூறுவார்கள்.
இனிமேல் இந்த வார்த்தைக்கே மதிப்பு இல்லையடா என் செல்லமே! எதனாலும் மறக்க முடியாத கடும் துயரமாக போய் விட்டாயடி. குழந்தைகள் கூட வாழத் தகுதியற்ற மண்ணாக போனதடி என் தேசம். குருதி குடிக்கும் ஓநாய்களும், காம வெறிகொண்டு அலையும் சாத்தான்களும் வாழும் தேசத்தில் வந்து ஏனடி பிறந்தாய்! தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுளே! பிஞ்சென்றும் பாராமல் உன் கண் முன்னே வைத்து அயோக்கிய கொடிய மிருகங்களால் இந்த பிஞ்சை வேட்டையாடும் போது நீ எங்கே இருந்தாய்?
மகளே ஆஷீபா! உன்னிடம் மன்னிப்புக் கேட்க கூட மனம் கூசுகிறது. எதற்கெடுத்தாலும் சாதி, மதம், கலாச்சாரம் என்று வாய் கிழிய பேசும் இந்த தேசத்தில் தான் இன்று நீ வேட்டையாட பட்டிருக்கிறாய். என் மகளை கொன்ற மிருகங்களே! உங்களின் காம பசியை தீர்த்துக்கொள்வதற்கு பால் மனம் மாறாத இந்த எட்டு வயது தேவதை என்ன பாவம் செய்தாலடா? மிருகங்களே இனி நீங்கள் பெற்ற பிள்ளைகளின் அருகில் போக கூட அருகதை இல்லையடா உங்களுக்கு. மனிதம் கொன்று மதம் வளர்த்து என்ன பயன் முட்டாள்களே! சாதி மதம் என்று நீங்கள் சாதித்தது என்ன? எட்டு வயது தேவதையை நாசம் செய்வது தான் உங்கள் வேலை என்றால் உங்கள் தலையை அறுத்து எறிந்தால் கூட தப்பில்லையடா. என் செல்ல மகள் ஆஷிபாவை கொன்று இன்று என் இந்திய தேசத்தை கலங்கப்படுத்திவிட்டீர்களடா! இதற்கு பரிகாரமாய்
உங்களின் குருதிகள் இந்த இந்திய தேசம் முழுவதும் ஓடப்பட வேண்டுமடா! இந்திய தேசமே! இந்திய தேசமே! அயோக்கிய மிருகங்களால் சிதைக்கப்பட்ட என் மகள் ஆஷிபாவற்கு என்ன நீதி கொடுக்க முடியும் உங்களால்?
எங்கே நீதி! எங்கே மனிதம்!! மனிதம் மறித்த காட்டுமிராண்டிகளின் தேசமாக மாறிவருகிறதோ என் தேசம்? நீதிக்காக முறையிடும் வாசல்கள் அனைத்திலும் ஓநாய்கள் காவல் நிற்கும் சூழலில் அநீதிகள் அகங்காரம் கொண்டு இப்படி தான் சிரிக்கும். 8 வயது சிறுமியை 7 நாள்கள் தொடர் கற்பழிப்பு செய்து தலையில் கல்லை போட்டு கொள்ளும் கொடூர அரக்கர்களின் மத்தியில் தான் நாம் வாழ்கின்றோமா என்று நினைக்கும் போது உடம்பெல்லாம் கூசுகிறது. பச்சிளம் குழந்தையின் உயிரும், உடலும் துடிதுடித்து, கதறி, கண்ணீர்விட்டு, கேட்பாரற்று தெருவில் வீசியெறியப்பட்டதை பார்த்தும். வாய்மூடி, செவிதாழ்த்தி நகர முற்படும் சாதாரன மானுட பிறவியாக நாங்கள் இருப்பதை நினைத்து வெட்கித் தலை குனிகிறேன்.
அந்த கொடிய மிருகங்கள் இத்தகைய குற்றத்தை செய்து விட்டு கூறிய பதில் தான் வியப்பாக உள்ளது. எங்கள் மதத்தின் மீது பயம் வரவே இத்தகைய செயலை செய்தோம் என்று. மிருகங்களே! கடவுளின் பெயரை சொல்வதற்கு கூட உங்களுக்கு அருகதை இல்லை. மதத்தின் பெயரால் நீங்கள் செய்த இது போன்ற கொடூரங்கள் உண்மையிலேயே வெறுக்கத்தக்க ஒன்று. மிருகங்கள் உணவுக்காக மட்டுமே வேட்டையாடும். மற்ற மிருகங்களை புணர்ததாகவோ அல்லது இதுபோல் குழந்தைகளை புணர்ததாகவோ அவைகள் நடந்துகொண்டதிற்கு உதாரணம் காட்டமுடியுமா? அப்படியென்றால் நீங்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள். தெய்வம் குடியிருக்கும் கோயிலின் கருவறைக்குள் வைத்து நீங்கள் செய்த இத்தகைய கொடூரத்தை 8நாளாக சாட்சியாக நின்ற உன் நம்பிக்கையை எப்படி பார்ப்பது..? உங்களை போன்ற ஓநாய்கள் செய்யும் இழி செயலுக்கு கடவுள் பெயரை சொல்வதே பாவமடா! இனி நீங்கள் மனித இனம் அல்ல. உணவு உண்பதற்கு கூட தகுதியற்றவர்களடா நீங்கள்!
ஊடகங்களே ! எதற்காக இந்த மௌனம்? நிர்பயாவுக்காக எழுந்த குரல்கள் ஏன் என் மகள்ஆஷிஃபாவிற்காக எழ வில்லை. ? ஒவியாவிற்காக கூவிய நீங்கள் ஏன் என் மகள் ஆஷிபாவிற்காக வாய் திறக்க தயங்குகிறார்கள்? நாட்டை ஆளும் ஆட்சியாளர்களே! உங்களின் பெண் அமைச்சர்களாவது இந்த நிகழ்வை பற்றி வாய் திறக்க வில்லையே ஏன்? தப்பு செய்தவர் உங்கள் கட்சிகாரர் என்பதாலா? மாதர் சங்கங்களே! பீப் பாடலுக்காக போராடிய நீங்கள் ஏன் என் மகள் ஆஷிபாவிற்காக போராட முன்வரவில்லை? ஏன் வன்புணர்வு செய்யப்பட்டது முஸ்லிம் சிறுமி என்பதனாலா! மதங்களையும் , அரசியலையும் விடுத்துப் பார்த்தாலும் மன்னிக்க முடியாத குற்றமாகும் இந்த செயல். இத்தகைய கொடிய செயலுக்கு பிறகும் மௌனம் காக்கும் உங்களை போன்றவர்களின் இத்தகைய இழிவான கொடிய அரசியல் நஞ்சை விட கொடியது.
களே ஆஷிபா! உன்னை காப்பாற்ற துப்பில்லாத கோடி அண்ணன்களில் ஒருவனாக உன் நிலை கண்டு தமிழ் மண்ணில் இருந்து சிந்துகிறது என் கண்ணீர். என்னை மன்னித்து விடு.
எனது வரிகள் வலித்திருந்தால் மன்னித்து விடுங்கள்!
கண்ணீர் விழிகளோடும் , தீராத கோவத்தோடும்….
#justceForAsifa
முகம்மது ரிபாய்தீன் சேக் 

நடிகர் பிரகாஷ் ராஜ் பி ஜே பி யினர்களால் தாக்க படும் அபாயம் வீடியோ காட்சி

நடிகர் பிரகாஷ் ராஜ் பி ஜே பி யினர்களால் தாக்க படும் அபாயம் வீடியோ காட்சி

நடிகர் பிரகாஷ் ராஜ்  பி ஜே பி யினர்களால் ராஜ் தாக்க படும் அபாயம், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது காரை வழிமறித்து பி ஜே பி யினர் தாக்க முற்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்! அதோடு இல்லாமல் பி ஜே பி யினர்களுக்கு பேச்சு வார்த்தையில் நம்பிக்கை இல்லை அவர்கள் குணம் இப்படி தான் இது ஒரு நகைச்சுவை காட்சி போல் உள்ளது என்று தெரிவித்து உள்ளார்

வீடியோ காட்சி

பிரகாஷ்ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ்

இங்கே வீடியோ காட்சி கொடுக்க பட்டுள்ளது பார்க்கவும்

பிரகாஷ்ராஜ் மீது பாஜவினர் தாக்குதல் முயற்சி…

காரை வழிமறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பாஜகவினர் தாக்குதல் முயற்சி…வீடியோ | https://youtu.be/s0P7q0PlINg

Posted by News18 Tamil Nadu on Friday, 13 April 2018

இந்துத்வா ராமராஜ்யம் பார்ப்பன ஆட்சி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்

இந்துத்வா ராமராஜ்யம் பார்ப்பன ஆட்சி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்

  • இராம ராஜ்ஜியம் நடந்துட்டு இருக்குது மற்ற எல்லாரையும் விட வசதியாகவும்,சகல சௌபாக்கியங்களோடும் வாழ்ந்துட்டு இருந்த பார்ப்பனர்கள்ல ஒருத்தர் பதறியடிச்சிட்டு வந்து ராமன் முன்னாடி நிக்குறாப்புல

பார்ப்பனரோட கோலத்த பாத்த ராம பிரானும் என்னாச்சோ,ஏதாச்சோனு
கதிகலங்கி துள்ளி குதிச்சி ஓடோடி வந்து விசாரிக்கிறாப்புல!

நம்ம அக்ரஹாரத்துல ஒரு குழந்தை இறந்து விட்டது ராமா!,அதுக்கு காரணம் சூத்திரனான சம்பூகன் கடவுளை நோக்கி தவம் இருக்குறதுதான்!”னு பார்பனன் சொல்ல,வெகுண்டெழுந்த ராமன் நாரதர கூப்புட்டு கருத்து கேக்குறாப்புல.”அய்யகோ அபச்சாரம்,
அபச்சாரம் எல்லாம் வல்ல ராம பிரானின் ஆட்சியில் ஒரு தேவடியாப் பய (சூத்திரன்) தவம் இருப்பதா?
,அவனுக்கு மரண தண்டனையை விட குறைவாக எதையும் அளித்து விட வேண்டாம்!”னு நாரதன் கொளுத்தி போட மறு பேச்சி பேசாத ராமன் நேரா போயி சம்பூகனோட தலைய ஒரே வெட்டா வெட்டி பார்ப்பனனோட காயத்துக்கு மருந்து போட்ட அடுத்த நொடி செத்துப்போன அந்த குழந்தை உயிரோட வந்துடிச்சி
இந்த நல்ல காரியத்த செஞ்ச ராமன் சார்வாள தேவர்கள் வானத்துல இருந்து மலர் தூவி பாராட்டுனாங்கனு நான் சொல்லல வால்மீகி ராமாயணம் சொல்லுது!.

இந்துத்வா கடவுளுக்கு கண்ணில்லையா

இன்னைக்கு ஆஸிஃபாங்குற 8 வயசு இஸ்லாமிய குழந்தை கோயில் கருவறைக்குள்ளயே ராமனுக்கு பிறந்தவனுங்களால துள்ள,துடிக்க வண்புணர்வுக்குள்ளாகி கொல செய்யப்பட்ட செய்தி கெடச்சதும் தோழர்கள் சிலபேரு  கடவுளுக்கு கண்ணில்லையா!? கடவுள் என்ன வெளக்கு புடிச்சாரா னு கேக்குறதெல்லாம் பாத்து சிரிக்கவா, அழவானு தெரியல
ஏன்னா சூத்திரன் சம்பூகன கழுத்தறுத்த கடவுள்,சூர்பணகையின் முலைகளையும்,மூக்கையும் அறுத்த கடவுள்,சூத்திர ஆஸிஃபா வன்புணர்வுக்கு உள்ளாகும் போது மட்டும் ஓடோடி வந்து காப்பாத்திருவாரா
இல்லவே இல்ல நீங்க சொன்ன மாதிரியே வெளக்கு தான் புடிச்சிருப்பாரு.
இந்துத்துவாவும்,இந்து மதமும் ஒன்றா?
இந்துத்துவாவும்,இந்து மதமும் ஒன்றல்ல வேறு,வேறுனு ரெமிலா தாப்பர்ங்குற வரலாற்று ஆராய்ச்சியாளர் சொல்றாங்க
இத எப்படி புரிஞ்சிக்கிறது ரெம்ப சிம்பிள் இந்து+தத்துவம்=இந்துத்துவம்.அதாவது இந்த இந்துத்துவம் என்பது ஒரு “வாழ்க்கை நெறி”.இந்த சமூக அமைப்புல யாரு,எங்க & எப்படி இருக்கனுங்குறத ஒருத்தரோட பிறப்பின் அடிப்படையில தீர்மானிக்கிற “வாழ்க்கை நெறி!
இது இன்னா பண்ணுதுனா மனிதர்களுக்குள்ள பிரிவினைய உண்டாக்கி எல்லாரையும் தனித்தனியா ஒக்கார வைக்குது.அப்படி ஒக்கார வைக்கும் போது வட்ட மேசை மாநாடு போல சமமா ஒக்கார வைக்காம,ரொம்ப கவனமா ஏணிப்படி வரிசையில ஒருத்தர மேலயும்,இன்னொருத்தர கீழயும் ஒக்கார வைக்கிறதுதான் இதோட ஸ்பெஷல்!
எல்லாம் சரிதான் ஆனா “நான் ஏன் கீழ ஒக்காரனும்..!?”னு ஒரு கேள்வி வருதுல்ல அது ரொம்ப டேஞ்சரான கேள்வி மட்டும் இல்ல இந்த இந்துத்துவ ஏணியடுக்கையே நிலைகுலைய வைக்கிற கேள்வியும் கூட
அப்போ அந்த கேள்வி வராம இருக்க என்ன செய்யனும்னா “இந்து தத்துவம்” புனித முலாம் பூசப்படனும் இந்த அண்ட சராசரங்கள்லயே கேள்விக்கு அப்பாற்பட்டு புனிதமா இருக்குறது ஒன்னே ஒன்னுதான் அது கடவுள்
புனிதமான கடவுளையும்,கடவுளின் வார்த்தைகளையும் சந்தேகப்படுறதோ,இல்ல கேள்விக்குட்படுத்துறதோ தெய்வ குத்தம் மட்டும் இல்ல தண்டனைக்குரிய குற்றமும் ஆகும்.ஆக மும்மூர்த்திகளாலும்,முப்பத்து முக்கோடி தேவர்களாலும் சூழப்பட்ட இந்து மதம்;இந்து தத்துவத்துக்கு ஒரு தெய்வீக கோட்டிங் குடுத்து புனிதமாக்குது
“நால்வகை வர்ணங்களையும் நானே உருவாக்கினேன்”னு பகவான் விஷ்ணுவின் அவதாராமன கண்ணன் அர்ஜூனனுக்கு கீதா உபதேசம் பண்ணுறப்ப “ஏன்டா சாதிய உருவாக்குன..!?”னு அர்ஜூனனே கேக்காத போது அற்ப பதறான மனுசன் எப்படி கேப்பான்.
நான் மேல சொன்ன இந்துத்துவத்துக்கும்,இந்து மதத்துக்கும் உள்ள வித்தியாசத்த புரிஞ்சிகிட்டாதான் “இந்து மதத்துல சாதி இருக்குனுதானே கிறிஸ்தவனா மதம் மாறுன அங்கிட்டு மட்டும் சாதி இல்லியா!?”னு கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியும்.சாதி இந்து மதத்துல இல்ல,இந்து தத்துவத்துல இருக்குது.அந்த தத்துவம் தான் இந்த சமூக கட்டமைப்பா இருக்குது.அதனாலதான் என்னால “மதம்” மாற முடியுதே தவிர “சாதி” மாற முடியிறது இல்ல!.”சாதி” தான் “சமூகம்” என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்னு கவிஞர்.பழனி பாரதி சொன்ன வார்த்தையோட அர்த்தம் 100 சதவிகிதம் உண்மையானது.
யார் இந்து எச்ச ராஜா சொல்ற மாதிரி யாரெல்லாம் மாட்டுக்கறி திங்குறாங்களோ அவங்களாம் இந்து கெடையாது,யாரெல்லாம் புரட்டாசி மாசம் விரதம் இருக்கலயோ அவங்களாம் இந்து கெடையாதுனு அடிச்சி விடுறானுங்க
யார் இந்து..!? சொல்றா மொதல்லனு சொன்னா;யாரெல்லாம் இந்து இல்லனு லிஸ்ட்டு போடுறானுங்க!எச்ச ராஜாக்கள சொல்லி குத்தமில்ல ஏன்னா இந்திய அரசியலமைப்பு சாசனமே இன்னா சொல்லுதுனா “யாரெல்லாம் கிறிஸ்தவர்கள் இல்லையோ,யாரெல்லாம் இஸ்லாமியர் இல்லையோ,யாரெல்லாம் சீக்கியர் இல்லையோ அவர்கள் அனைவரும் இந்துக்கள்”னு சொல்லுது
இது எப்படி இருக்குதுனா பொறுக்கி பய சுப்பிரமணியனாண்ட போயி “ஒன்னோட அப்பன் பேரு இன்னாடா..!?”னு கேட்டா “எவன் மோடிக்கு அப்பன் இல்லயோ,எவன் பொரி உருண்டையோட அப்பன் இல்லயோ,எவன் தமிழிசைக்கு அப்பன் இல்லயோ அவன்தான் என்னோட அப்பன்”னு சொல்றாப்புல இருக்குது
யார் இந்து..!? என்கிற கேள்விக்கு வெளக்கம் குடுக்க வழியில்லாத வெக்கங்கெட்ட பயலுங்க யாரெல்லாம் இந்து இல்லனு மட்டும் நீட்டி மொழங்குறானுங்கனா ஒன்னு மட்டும் தெளிவா புரியுது “இந்து” என்பதே ஒரு ஏமாற்று சொல்!

யார் இந்தியன்?

இந்தியாவுல காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரைக்கும் மொத்தம் 29 மாநிலங்கள் + 7 யூனியன் பிரதேசங்கள் இருக்குது.காஷ்மீர்ல வாழுறவன் தன்ன காஷ்மீரினும்,அஸ்ஸாம்ல வாழுறவன் தன்ன அசாமினும்,தமிழ்நாட்டுல வாழுறவன் தன்ன தமிழன்னும் சொல்லிக்கிறான்
இந்த 29 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் ஒன்னா சேந்ததுதான் இந்தியா.மொழி வாரியா பிரிக்கப்பட்ட இந்த 29 மாநிலங்களும்,29 தேசிய இனங்கள்னு வெச்சிக்கலாம்.இப்போ இன்னா டவுட்டுனா பார்ப்பனர்கள் இதுல எந்த தேசிய இனத்த சார்ந்தவங்க?
பதில்:இவங்க எந்த தேசிய இனத்துகூடவும் சேரமாட்டாங்க.அண்ணன் சீமான் வேணும்னா தமிழ் பேசுற பார்ப்பனர்கள் தமிழர்கள்னும்,மலையாளம் பேசுற பார்ப்பனர்கள் மலையாளினும் சொல்லலாம்
ஆனா எந்த பார்ப்பனனும் தன்ன தமிழனாகவும்,கன்னடனாகவும்,
குஜராத்தியாகவும் அடையாளப்படுத்திக்க மாட்டான் காரணம் “ஆரியன்” என்கிற உயர்ந்த! அடையாளத்த விட்டுக்கொடுக்க எந்த பார்ப்பனரும் தயார் நிலையில் இல்லை
அப்போ ஆரியர்கள் எந்த தேசிய இனத்த சார்ந்தவங்க ஆடு,மாடு மேய்ச்சிட்டு வந்தவனெல்லாம் தேசிய இனத்த பத்தி பேசுனான்னா அத கேட்டுட்டு ஆமாஞ்சாமி போடுறதுக்கு நாம என்ன எடப்பாடி பழனிச்சாமியா!
ஆரியர்கள்னு சொல்றதோட அர்த்தமே “வெளியிலிருந்து வந்தவர்கள்”தான்.இப்படி எங்கிட்டோ இருந்து வந்தவனுக்கு ஒரு அடையாளம் தேவப்படுது ஆரியன்னு சொன்னா அடிப்பான் அதே நேரம் “இந்தியன்”னு சொன்னா தலையில தூக்கி வைக்கிறான்
ஆக “இந்தியன்” என்கிற அடையாளத்த தனதாக்கிட்டு தன்ன எதிர்க்கிறவங்க எல்லாரையும் “ஆண்டி இந்தியன்” ஆக்கி அழகு பாக்குறதுதான் ஆரிய சூழ்ச்சி.
இந்தியா மேல அம்புட்டு பாசம் இருக்குற பன்னாட “பாரதிய ஜனதா பார்ட்டி”ங்குற பேர மாத்தி “இந்திய ஜனதா பார்ட்டி”னு வைக்கலாமே!,
அட ஆறு மாசத்துக்கு ஒருக்கா புள்ள பெக்குற நம்ம “பாரத் மாதா”வ “இந்திய மாதா”னு சொல்லிக்கலாமா..!?.தியேட்டர்ல தேசிய கீதம் போடுறப்ப எழுந்து நிக்க சொல்லி சட்டம் போட்டு நாட்டுப்பற்ற காட்டுறவங்க ஏன்யா BJP கட்சி ஆபிஸ்ல மூவர்ண கொடிக்கு பதிலா காவிக்கொடியும்,RSS ஷாக்காவுல ஜன கன மனவுக்கு பதிலா வந்தே மாதரமும் பாடுறீங்க
ஜெய் ஹிந்த் சொல்லலனா தலைய வெட்டுவோம்,பாரத் மாத்தாக்கீ ஜெ சொல்லாதவங்கலாம் பாக்கிஸ்தான் போக சொல்றதுக்கு முன்னாடி இது எங்க நாடு நீங்க மொதல்ல வெளிய போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா

வரும் ஆனா வராதுனு என்னத்த கண்ணையா இழுத்தாப்புல இழுக்காதீங்க

இந்தியா-வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடாம் அடேய் ஒன்னு வேற்றுமையா இருக்கனும்,இல்ல ஒற்றுமையா இருக்கனும் அதென்ன வேற்றுமையில் ஒற்றுமை வரும் ஆனா வராதுனு என்னத்த கண்ணையா இழுத்தாப்புல இழுக்காதீங்க!
தேசிய இனங்களோட ஒற்றுமைய தேசிய இனங்களே விரும்பினாலும் கூட இந்திய(ஆரிய) தேசியம் அத ஒத்துக்காது.தமிழ்நாட்டுக்கு கர்நாடாகா கூட தண்ணி பிரச்சனனா,கர்நாடகாவுக்கும்
மகராஷ்டிராவுக்கும் எல்ல பிரச்சனை மகராஷ்டிராவுக்கும்,
குஜராத்துக்கும் கரண்டு பிரச்சனை
இப்படி எல்லா தேசிய இனங்களுக்கும் அண்டை மாநிலங்களோடு எதாவது பிரச்சனைய உண்டாக்கிட்டே இருக்குறது.அந்த பிரச்சனைகள ஊதி பெருசாக்கி கலவரங்கள மூட்டி விட்டு அரசியல்,பொருளாதார ஆதாயமடையிறது

இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் தலித்துகளையும் மத விரோதிகளாக சித்தரிக்கிறது

எவன் அப்பன் ஊட்டு சொத்து எப்படி போனா நமக்கென்னனு இந்தியாவ பன்னாட்டு கம்பெனிகளுக்கு கூறு போட்டு விக்கிறது
உள்ளூர் விவசாயிகள அம்மனமா ஓடவிட்டு சாவடிக்கிறது,மீத்தேன்,ஹைட்ரோ கார்பன்,ஸ்டெர்லைட்னு வாழ்வாதாரங்கள அழிக்க புதுசு,புதுசா திட்டம் போடுறது.இவனுங்களோட மோசமான பொருளாதார கொள்கைகளால நாம சோத்துக்கு பிச்சையெடுக்குறப்ப எல்லாத்துக்கும் காரணம் பாகிஸ்தான்,சீனானு அடிச்சி விடுறது
பல்வேறு தேசிய இனங்களோட மொழி,வரலாறு,கல்வி,வேலைவாய்ப்பு எல்லாத்தையும் பறிச்சிட்டு இந்திய தேசியம் என்கிற ஒற்றை தேசியமாக மாற்ற முயல்வது,மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட போராடுறவங்கள தீவிரவாதி,பயங்கரவாதினு சொல்லி தனிமைப்படுத்துறது,

இந்துத்வா இந்து மத விரோதி

நீதி மன்றங்களையும்,காவல் துறையவும் தனது அடியாட்களாக பயன்படுத்துவது,இஸ்லாமியர்களையும்,
கிறிஸ்தவர்களையும்,தலித்துகளையும் இந்து மத விரோதிகளாக பத்திரிக்கை,மீடியா மூலமா சித்தரிக்கிறது,
தங்களோட மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்துகிற நேர்மையான பத்திரிகையாளர்களையும்,
எழுத்தாளர்களையும் சுட்டு கொல்றது,மக்களோட வரிப்பணத்த தூக்கி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுத்து வழியனுப்பி வைக்கிறது

முதலாளிகளுக்கு ஒரே ஆயுதம் இந்துத்துவா

போராட்ட குணமுள்ள மக்களை மூளைச்சலவை செய்ய கார்ப்பரேட் சாமியார்கள உருவாக்குறதுனு இவனுங்க அராஜகத்த அடுக்கிட்டே போகலாம்
இதையெல்லாம் தங்கு,தடையில்லாம செய்யிறதுக்கும்,தான் செய்யிறதெல்லாம் வளர்சிக்காகனு மக்கள நம்ப வைக்கிறதுக்காகவும் இவங்களாண்ட இருக்குற ஒரே ஆயுதம் இந்துத்துவா
கொஞ்சம் யோசிச்சி பாருங்க எங்கிருந்தோ வந்த ஒரு கூட்டம் நம்ம சொந்த மண்ணுல நம்மள சிறைபுடிச்சி வெச்சி,நம்ம சகோதரன மாட்டுக்கறி தின்னான்னு அடிச்சி கொன்னு,நம்ம சகோதரிய நீட் தேர்வுங்குற பேர்ல தூக்குல தொங்கவிட்டு,நாம பெத்த புள்ளைய பச்ச குழந்தனு கூட பாக்காம கற்பழிச்சி,நமக்கு சோறு போடுற விவசாயிய எலிக்கறி திங்க வெச்சி,நம்ம நெலத்த புடிங்கி பன்னாட்டு கம்பெனிக்கு குடுத்து நம்மள நாய விட கேவலமா நடத்துவான்
நாம கடவுள் காப்பாத்துவாரு,இயேசு வருவாரு,அல்லா கூப்புடுறாருனு இன்னும் எத்தன நாளைக்கு காத்திருக்க போறோம்.
சூப்பர் ஸ்டார்களும்,உலக நாயகர்களும்,ஜாதி கட்சி தலைவர்களும்,மத வியாபாரிகளும்,ஆமைக்கறி தின்றவர்களும், ஓட்டுப் பொறுக்கி அரசியல் வாதிகளும் நமக்காக நிச்சயம் போராட மாட்டார்கள்

இந்துத்துவா அடிமைத்தனத்துல இருந்து விடுதலை

ஏன்னா எல்லாரும் எனக்கு ஓட்டு போடு நான் அத பண்ணுறேன்,இத பண்ணுறேன்னுதான் சொல்றானுங்களே தவிர யாரும் ஒனக்கு இந்த கேடுகெட்ட அடிமைத்தனத்துல இருந்து விடுதலை வாங்கி தரேன்னு சொல்றது இல்ல!
இன்னைக்கு அண்ணல் பிறந்தநாள் “அடிமையிடம் சென்று நீ அடிமை என்று சொல்;தனது அடிமைத்தனத்தை உடைத்தெறிய போராடுவான்”னு சொல்லிருக்காப்புல.நானும் அதையேதான் சொல்றேன் இந்த பாழாப்போன இந்துத்துவா நம்மள 2000 வருசமா “அடிமை”யா வெச்சிருக்குது அதை உடைத்தெறிந்து…
“நான் யாருக்கும் அடிமை இல்லை
எனக்கு அடிமை யாரும் இல்லை” என்ற சமதர்ம சமூகம் படைக்க பாடுபடுவோம்.
Thanks by Writing ஏவின் மனோ

நான் ஏன்? மோடியை கலாய்க்கிறேன் மோடி மஸ்தான் அரசு

நான் ஏன்? மோடியை கலாய்க்கிறேன் மோடி மஸ்தான் அரசு

நான் ஏன்? மோடியை கலாய்க்கிறேன் மோடி மஸ்தான் அரசு  இந்த உலகிலேயே ஒன்னாம் நம்பர் பொய்யன் மோடி தான். சீமான் என்ன தான் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் சீமானால் மோடி மாதிரி வாயால் வடை சுடமுடியாது.
மோடியின் எதிர்ப்பாளர்களில் கூட சிலர் மோடியின் சிறந்த திட்டங்களில் ஒன்றாக சொல்வது ஏழை பெண்களுக்கு உதவும் செல்வமகள் திட்டம்.

மோடி மஸ்தான் அரசு முதலில் சொன்னது என்ன?
நான் ஏன்? மோடியை கலாய்க்கிறேன் மோடி மஸ்தான் அரசு 
நான் ஏன்? மோடியை கலாய்க்கிறேன் மோடி மஸ்தான் அரசு

செல்வமகள் திட்டத்துக்கு 9.2% வட்டி
2017 இல் சொன்னது எவ்ளவு?
8.5%
இந்த 2018 இல் செல்வமகள் சேமிப்பிற்கான வட்டி மேலும் குறைக்கப்படுமாம். இல்ல நான் தெரியாமல் தான் கேட்கிறேன். ஏழை முதல், பணக்காரன் வரை இந்தியாவில் உள்ள பலகோடி மக்கள் LIC யால் பயனடைந்து இருக்கிறார்கள். LIC யே இதை காட்டிலும் அதிக வட்டியை தரும் பொழுது என்னத்துக்கு இந்த தேவையில்லாத புது ஆணி.

எப்படி வலித்திருக்குமோ உனக்கு சிறுமி ஆசிபாவிற்க்காக ஒரு தாய் எழுதிய கவிதை

எப்படி வலித்திருக்குமோ உனக்கு  சிறுமி ஆசிபாவிற்க்காக ஒரு தாய் எழுதிய கவிதை

என்னவெல்லாம்
செய்திருப்பார்களோ உன்னை
பன்றிக் கூட்டங்களின் பசிக்கு இரையாக்கப்பட்டிருக்கிறாய்
கொடூரர்களின் தொடுதலை
நீ உணர்ந்திருக்கமாட்டாய்
அவர்களை நீ அண்ணனென்றோ
அங்கிளென்றோ மட்டும் தான்
அழைத்திருக்க முடியும்                                                  
தின்பண்டங்களோ சாக்லெட்டோ
வாங்கித் தருவதாகக் கூறித் தான்
அழைத்துப் போயிருப்பார்கள்
உன் உடைகளை கழற்றும் போது கூட
உன்னால் யூகித்திருக்க முடியாது
குளித்து விட்டுப் போகலாமெனக் கூறியிருப்பார்கள் நீயும்
நம்பித் தொலைத்திருப்பாய்
உன் உறுப்புகளை தொடும் போது கூட
உன்னால் தடுத்திருக்க முடியாது
அதை தொடுதல் தவறென்றும்
நீ அறிந்திருக்க மாட்டாய்
ஆண் உறுப்பு அப்படி இருக்குமென்று
நீ பார்த்திருக்க வாய்ப்பில்லை மகளே
அதற்கு தாயும் தெரியாது
தங்கையும் தெரியாது
தன்னால் ஆனவரை
பெண் உறுப்புகளை சிதைத்துக் கொண்டிருப்பது தான் அதன் வேலை
குழந்தையோ மகளோ
என்றெல்லாம் நினைத்ததில்லை
முடிந்தவரை தன் இச்சைகளை
நம் மீது எச்சிலாய் உமிழ்ந்து
விட்டுத்தான் போவார்கள்
சில சமயம் திரும்பியும் வருவார்கள்
உன் கைகள் கட்டப்பட்டும்
கழுத்து நெறிக்கப்பட்டும்
கொடூர நகங்களால் கீறியும்
உன்னை நாசப்படுத்தியிருக்கலாம்
வலிக்கும் போது துடித்திருப்பாய்
காப்பாற்றி விடமாட்டார்களா
என்று கதறியிருப்பாய்
கடவுளின் காலடியில் கிடந்திருப்பாய்
காப்பாற்று என்றுகூட அழைத்திருப்பாய்
அவரும் உடந்தையென்று
உணர்ந்திருக்க மாட்டாய்
கால்களை முறித்திருப்பார்கள்
உறுப்புகளை சிதைத்திருப்பார்கள்
மூச்சு விடமுடியாமல் முணங்கி
மயங்கிக் கிடந்திருப்பாய்
அப்பாவை அழைத்திருப்பாய்
அம்மாவை நினைத்திருப்பாய்
தன்னிடத்திடத்திலும்
ஓட்டை இருந்திருப்பதைக் கூட
அன்று தான் உணர்ந்திருப்பாய்
நகர முடியாமல் செயலற்றுக் கிடந்திருப்பாய்
இரத்தம் வழிந்து கொண்டேயிருந்திருக்கும்
எப்படியும் எழுந்ததும் வீட்டிற்கு
ஓடிவிடலாமென நினைத்திருப்பாய்
அடுத்தடுத்த மிருகங்களும் உன்னை இரையாக்குமென்று நினைத்திருக்கமாட்டாய்
இதற்கு மேல் என்னால் முடியாதென்று
கெஞ்சியும் துடித்திருப்பாய்
ஆண் வர்கங்களையே
அறவே வெறுத்திருப்பாய்
அவர்கள் குறி கொண்ட மிருகங்களென்று
முற்றிலும் உணர்ந்திருப்பாய்
அப்போது கூட அப்பாவையும்
அண்ணனையும் அழைத்திருப்பாய்
எல்லாம் முடிந்திருக்கும்
எல்லாமும் சிதைந்திருக்கும்
கடவுள் காணொளி
செய்திருப்பார் கயவர்களை
காப்பாற்றிக் கொண்டிருப்பார்
இறுதியாகக் கூட
நம்பித் தொலைத்திருப்பாய்
அப்பா வந்ததும் அழைத்துப்போவாரென்று
மரணம் சம்பவித்தாயிற்று
குப்பையாய் நினைத்து
தூக்கியெறிந்து விட்டுப் போயிருப்பார்கள்
அடுத்தது யாரென்று அவர்கள்
தேடிக் கொண்டிருப்பார்கள்
போய் தொலைவோம் மகளே
நம்மை சதையாகவும் யோனியாகவுமே
பார்த்துத் தொலையும் ஆண்களுக்கு முன்னால் சதைப் பிண்டமாய்
வாழ்வதை விட மரணம் கொடிதல்ல
எங்களுக்கும் சேர்த்து
இடம் பிடித்து வை ஆசிபா
விரைவிலேயே நாங்களும்
வந்து சேர்வோம்
காப்பாற்ற துப்பில்லாத
ஆண்களோடு பெண்களாய்
வாழ்ந்து கொண்டிருப்பதை விட
சாவதே மேல் சாகடிக்கப்படுவதே மேல்
எப்படி வலித்திருக்குமோ உனக்கு? 
#வரிகள் #வலித்திருந்தால் #மன்னித்துவிடுங்கள்
#எங்கள் #வாழ்க்கையே
#வலித்துக் #கொண்டிருக்கிறது #உங்களால்
ஆஷிபாக்களின் தாயாக

சிறுமி ஆஸிபா வழக்கை எல்லா ஊடகங்களும் சரியான பார்வையிலேயே கொண்டு செல்கிறார்கள்

சிறுமி ஆஸிபா வழக்கை  எல்லா ஊடகங்களும் சரியான பார்வையிலேயே கொண்டு செல்கிறார்கள்

சிறுமி ஆஸிபா வழக்கை  எல்லா ஊடகங்களும் சரியான பார்வையிலேயே கொண்டு செல்கிறார்கள் தாமாகவே முன்வந்து சிறுமி ஆஸிபா வழக்கை முன்னெடுத்துள்ளது.
காஷ்மீரில் உள்ள பார்கவுன்சிலில் உள்ள காவிகள், இந்த வழக்கில் யாரும் வாதட கூடாது என்று முடிவெடுத்து அறிவித்து உள்ளனர். இதற்கும் உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதே போன்று இந்திய பார்கவுன்சிலும் , காஷ்மீர் பார்கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
எல்லா ஊடகங்களும் சரியான பார்வையிலேயே ஆஸிபா வழக்கை இந்த விஷயத்தை கொண்டு செல்கிறார்கள் குறிப்பாக வடநாட்டு ஆங்கில ஊடகங்கள்தான் முதலில் காவிகளின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டது.
ஆஸிபா வழக்கை
மனிதநேயம் என்ற அடிப்படையில் நமது தொப்புள் கொடி உறவுகளும் கண்டனத்தை பதிவு செய்ய தவறவில்லை.
காட்டுமிராண்டி குணம் கொண்ட காவிகளின் பதிவுகளை புறம் தள்ளுங்கள்.
நம்மை உசுப்பேத்தி குளிர்காய வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறும் வகையில் முஸ்லிம் முகநூல் போராளிகள் செயல்பாடுகள் அமையக்கூடாது.
இந்த செய்தியை எடுத்து செல்வதில் மட்டுமே நமது குறிக்கோளாக இருக்கவேண்டும்  அரசியல்வாதிகளை தரம் தாழ்ந்து விமர்சிக்க வேண்டாம். அதையே அவர்கள் ஆயுதமாக பயன் படுத்துவார்கள்
#JusticForAshifa
Hajadeen 

பாஜக கட்சியும் அதன் தலைவர்களும் சிறுமி ‘ஆசிபா விஷயத்தை மூடி மறைக்க முயலுகிறார்கள்

பாஜக கட்சியும் அதன் தலைவர்களும் சிறுமி ‘ஆசிபா விஷயத்தை மூடி மறைக்க முயலுகிறார்கள்

பிப்ரவரி 17 அன்று பலாத்காரம் செய்த கயவர்களுக்கு ஆதரவாக இந்து ஏக்தா மஞ்ச் என்கிற அமைப்பு ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் மூவர்ன கொடியுடன் ஊர்வலம் சென்று போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தை பாஜகவின் மாநில செயலாளர் உள்ளிட்ட மாநில தலைவர்கள் வழிநடத்தினார்கள்
கத்துவா மாவட்ட வழக்கறிஞர்கள் (பார் அசோசியேசன்) ஏப்ரல் 9 அன்று பல குழுக்களாக ஊர்வலம் நடத்தினார்கள். அந்த போராட்டங்களில், ஊர்வலங்களில் தவறாமல் மூவர்னக் கொடியை அசைத்தபடி ஒழித்தது “ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்” கோஷம்
கத்துவா வழக்கறிஞர்களின் கோரிக்கை சிபிஐ இதனை விசாரிக்க வேண்டும் என்பதே. மோடி ஆட்சியின் கீழ் சிபிஐ, வருமானவரி துறை மற்றும் இன்ன பிற துறைகள் வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்துள்ளது நாடு அறிந்ததே.
கடந்த மூன்று மாதங்களாக பாஜகவின் IT CELL இந்தியா முழுவதிலும் களமிறங்கி அசிபாவின் பலாத்காரத்தை கண்டிப்பது போலவும் அதே நேரத்தில் இந்த கயவர்களை காப்பாற்றும் செயலிலும் ஈடுபட்டது
அசிபா பலாத்காரத்தை கண்டித்தவர்கள் அனைவரையும் அவர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள், தீவிரவாதிகள் என்றும் பிரச்சாரம் செய்தனர். அசிபா பலாத்காரம் பற்றி விரிவாக எழுதிய ஊடகங்களை “தேசவிரோத ஊடகங்கள்” என்று பட்டமளித்தனர்.
பாஜக கட்சியும் அதன் தலைவர்களும் அதன் IT CELL-ம் ஏன் இத்தனை தூரம் சென்று இந்த விஷயத்தை மூடி மறைக்க முயலுகிறார்கள் என்று உங்கள் மனதில் கேள்வி எழலாம்

இந்த பலாத்காரத்தில் ஈடுப்பட்டவர்கள் எட்டு பேர்

இந்த பலாத்காரம் ஏன் இத்தனை துள்ளியமாக திட்டமிட்டு நடத்தப்பட்டது?? அசிபாவின் குடும்பத்தார் பக்கர்வால் சமூகத்தை சார்ந்தவர்கள். அந்த பள்ளதாக்கில் ஆடு மேய்ப்பது தான் பக்வர்வால் சமூகத்தின் தொழில் இந்த மேய்யசல் சமூகத்தை அந்த பகுதியில் இருந்து விரட்ட வேண்டும் என்பதே அங்குள்ள இந்து வெறியர்களின் நோக்கம்
இந்த கிராமத்தில் இருக்கும் இந்துக்கள் யாரும் இவர்களின் ஆடுகளுக்கு மேய்ய்சல் உரிமை அளிக்க கூடாது, ஏரிகள்-குளங்களில் கூட ஆடுகளை நீர் அருந்த அனுமதிக்க கூடாது என்பதாக பல கட்டுப்பாடுகளை சஞ்சி ராம் விதித்து வந்தார்
சஞ்சி ராம் இந்த கிராமத்தில் வசிக்கும் ஒரு ஓய்வு பெற்ற வருவாய் அதிகாரி இவர் தான் இந்த சமூகத்தை விரட்ட வேண்டும் என்றால் அவர்கள் அதிர்ச்சியாகும் படியாக ஒரு சம்பவம் நடைபெற வேண்டும் என்று திட்டமிடுகிறார்
அவரது உறவினரான கோவில் நிர்வாகியை அழைத்து ஒரு காவல்துறை அதிகாரியின் துணையுடம் இந்த கடத்தலில் ஈடுபடுகிறார் தொடர்ந்து ஒரு வாரம் அவளை மயக்க மருந்துகள் கொடுத்து சுயநினைவு வரும் பொழுதெல்லாம் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.
இந்த பலாத்காரம் நடைபெறுவதற்கு மூன்று தினங்கள் முன்னரே தீபக் மற்றும் விகரம் அருகாமையில் இருந்த ஒரு மருந்து கடைக்கு சென்று EPITIRIL 0.5mg மயக்க மருந்தை வாங்கினார்கள்
அசிபா கடத்தப்பட்டு ஒரு இந்து கோவிலில் வைத்து தான் தொடர்ந்து பல நாட்கள் பலாத்காரம் செய்யப்பட்டார், அந்த கோவிலை பராமரிக்கும் நிர்வாகி இந்த பலாத்காரத்தில் ஈடுபட்டார்.
மனு என்பவன் அசிபாவை அந்த கோவிலில் உள்ள தெய்வத்தின் சிலை முன்பே பலாத்காரம் செய்திருக்கிறான். இந்த வழக்கை விசாரித்து அசிபாவை தேடிச் சென்ற காவல்துறை அதிகாரி (SPO)யும் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்
உத்திர பிரதேசத்தின் மீரட் நகரத்தில் இயங்கும் விஷால் என்கிற ஹிந்த்துவா தொண்டர் ஜனவரி 12 அன்று அசிபாவை பலாத்காரம் செய்யவே ஜம்முவுக்கு வந்து சேர்ந்தார்
உணவேதும் கொடுக்காமல் வெறும் வயிற்றில் மூன்று மயக்க மாத்திரைகளை ஒரே நேரத்தில் கொடுத்து கொடுத்து தான் பலாத்காரம் செய்தார்கள்
கடைசியாக அசிபா மீது பெரிய பாறாங்கல்லை தூக்கிபோட்டு அவளை சிதைப்பதற்கு முன்னால், தான் ஒரு முறை புணர வேண்டும் என்று காவல்துறை அதிகாரி (SPO) கஜுரியா ( spo deepak khajuria) விருப்பட்டார், அவரது விருப்பமும் நிறைவேற்றப்பட்டது.
காவல்துறை அதிகாரி (SPO) பலாத்காரம் செய்தவுடன் முதலில் அவள் முதுகில் தனது கால்முட்டியை வைத்து அவளது முதுகெலும்பை உடைத்திருக்கிறார் தன் பின்னர் இரு முறை அவள் மீது பாறாங்கற்கள் வீசப்பட்டு அவள் இறந்துவிட்டாலா என்று உறுதி செய்தனர்

இந்த கொடூரச் செயலை செய்த எட்டு பேரும் இந்துக்கள்

இந்த விசாரனையை நடத்திய அதிகாரி ஆனந்த தத்தா, பின்னர் இவர்களிடம் மூன்று லட்சம் பணம் பெற்றுக் கொண்டு மொத்த சம்பவத்தையே மூடி மறைக்க முயன்றார்
அசிபா அணிந்திருந்த உடைகளில் இருந்த கறைகளை எல்லாம் நீக்க, அவளது உடைகளை எல்லாம் துவைத்து அசிபாவின் சடலத்திற்கு மாட்டிவிட்டார் விசாரனை அதிகாரி ஆனந்த தத்தா அவரை சேர்ந்த்து இந்த கொடூரச் செயலை செய்த எட்டு பேரும் இந்துக்கள்
அசிபாவின் சடலத்தை கூட அவள் வாழ்ந்த கிராமத்தில் அடக்கம் செய்ய இந்த வெறியகள் அனுமதிக்கவில்லை, அவளது கிராமத்தில் இருந்து 10 கிமி தொலைவில் மற்றொரு கிராமத்தில் தான் அவளது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அசிபாவை காணவில்லை என்று முதலில் அவளது பெற்றோர் காவ்ல நிலையத்தில் புகார் அளித்த போது, அங்கிருந்த காவல்துறை அதிகாரி உன் எட்டு வயது மகள் யாருடனாவது ஓடிப்போயிருப்பாள் என்று சொன்னானாம்
இவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை இன்னும் பல அதிர்ச்சியான விசயங்களை வெளிக் கொண்டுவந்ததுள்ளது.
அசிபாவின் வலியை நாம் எப்படி இந்த சமூகத்திற்கு கடத்தப் போகிறோம், இந்த வலியை எப்படி இந்த தேசம் உணரப் போகிறது.


பதிவை பகிர மட்டும் செய்யுங்கள், பதிவிடும் போது #justiceforasifa ஹேஷ்டேக்கை மீண்டும் ஒரு முறை பதிவிடுங்கள்
நன்றி : Muthu Krishnan
written BY PKB

எட்டு வயது பெண் குழந்தை ஆசிஃபாவின் கற்பழிப்பு

எட்டு வயது பெண் குழந்தை ஆசிஃபாவின் கற்பழிப்பு விவகாரத்தில் ஈடுபட்டவர்களுக்குத்தான் இதயம், இரக்கம், நியாயம், தர்மம், மனிதம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லையென்றால்..
இதில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், வக்கீல்கள் இவர்களுக்கும் இவை இல்லையெனும்போது பதைப்பு இரட்டிப்பாகிறது.
இது காமத்தின் விளைவாக நடந்ததல்ல..இன எதிர்ப்பால் எச்சரிக்கும் வெளிப்பாடாக சில கேவலமான ஜென்மங்களால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
ஆணவக் கொலை போல இது ஒரு ஆணவ கற்பழிப்பு. மதம் இனம் மொழி தாண்டி மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் கண்டிக்க வேண்டிய விவகாரம். வெட்கப்பட வேண்டிய விஷயம்.
தனக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளை ஒரு விபத்தில் பறிகொடுத்த பிறகு அந்தத் தம்பதி ஆசிஃபாவைத் தத்தெடுத்து வளர்த்திருக்கிறார்கள்.
காட்டுக்குள் குதிரை மே்ய்க்கப் போன அந்த பட்டாம்பூச்சியின் சிறகுகளைப் பிய்த்த கொடூரர்களை தண்டிக்காத அத்தனைக் கடவுள்களின் மீதும் கோபம் கொள்கிறது மனம்.
மதம் கடந்து அத்தனைக் குழந்தைகளும் கடவுளின் பிரதிநிதிகளாக, தேவதைகளாகப் பார்க்கப் படுவார்கள் என்கிற பழைய நம்பிக்கையில் இங்கு வந்து பிறந்துவிட்ட குட்டி தேவதையே..மன்னிப்பாயாக

சிறுமி ‘ஆசிபா
சிறுமி ‘ஆசிபா

வேல்முருகன் மாதிரி டோல்கேட்ட அடிக்கணும் நாம் தமிழர் மாதிரி ஐ.பி.எல் ரசிகர அடிக்கணும்

 வேல்முருகன் மாதிரி டோல்கேட்ட அடிக்கணும்  நாம் தமிழர் மாதிரி ஐ.பி.எல் ரசிகர அடிக்கணும்

தி.மு.கவுக்கு சில அறிவாளிகள் புத்திமதி சொல்றாங்க வேல்முருகன் மாதிரி டோல்கேட்ட அடிக்கணும்  நாம் தமிழர் மாதிரி ஐ.பி.எல் ரசிகர அடிக்கணும்  பாம்பு உடுவன்னு சொல்லணும் டோல்கேட்டை அடிக்கலாம், ஐ.பி.எல்ல அடிக்கலாம், அப்புறம் அடுத்ததா என்ன செய்யறது… ஊர, நாட்ட கொளுத்தறதா ?கிறுக்குத்தனமா இல்லியா?
அந்தக் கட்சிகள் எல்லாம் முகம் தெரியாத அமைப்பு. கேஸ் போடணும்னா ஆள் தெரியாது. மிஞ்சிப் போனா, 10 பேர் பெயர் தான் தெரியும்.
தி.மு.க இது போல் போராடினால், சென்னையிலேயே 10,000 பேர் மீது வழக்கு போடும் அளவுக்கு முகம் அறிமுகமானவர்கள். அரசாங்கம் சும்மா இருக்குமா…
உதிரிக்கட்சி போராட்டம் பண்ணினா, அது ஆளுங்கட்சிக்கு மகிழ்ச்சி. காரணம், தி.மு.க போராட்டத்தின் மீதிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பும் உத்தி அது. அதனால் உதிரிக்கட்சிகள் ஆட்டத்தை ஆளுங்கட்சி கண்டும், காணததுமா இருக்கும். ஆனா தி.மு.கன்னா விடமாட்டான்.
கடந்த ரெண்டு வருடத்தில் தி.மு.க நிர்வாகிகள் மீது மாத்திரம், போராட்டங்களால் அஞ்சு கேஸ் விழுந்திருக்கும். அது கோர்ட்டு விசாரணைக்கு வந்தால், மாதம் அய்ந்து நாட்கள் கோர்ட்டுக்கு அலையணும். அப்படி அலைந்தால் மற்ற பணிகள் பாதிக்கப்படும்.
அவங்க குடும்பத்தில் இருக்கறவங்க, உனக்கு அரசியல் போதும், குடும்ப வேலைய பாருன்னு சொல்லிடுவாங்க.
அடுத்தக்கட்டம் குண்டாஸ் போட்டு திமுக நிர்வாகிகள முடக்கப் பார்ப்பாங்க.
குண்டாஸ் போட்டா, ஜெயில்ல இருந்தும், கேஸ்க்கு செலவு செய்தும் அசந்து போகணும்.

வேல்முருகன்
வேல்முருகன்

களத்தில் இருப்பவனுக்கு தான் யதார்த்தம் தெரியும். கொஞ்சம் புரிஞ்சு எழுதுங்க.
இதெல்லாம் தெரியாமலா தலைமை இருக்கும்…
அடுத்தது நடைபயணம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் எல்லாம் அவுட் டேட்டட் வழிமுறையாம்.
சாப்பிடறது, தூங்கறது எல்லாமும் தான் காலம்காலமா செய்றோம். அது அவுட் டேட்டட் ஆயிடுமா…
நடைபயணம், பொதுக்கூட்டம் எல்லாம், நாங்க உங்களுக்காகத் தான் போராடறோம்னு மக்களுக்கு தெரிவிப்பவை. மக்களை போராட்டத்தில் இணைய வைப்பவை. மக்கள் இணையாமல் எந்தப் போராட்டமும் வெற்றி பெறாது.
வன்முறைப் போராட்டங்கள் வெல்லாது என்பதற்கு சமீபகால உதாரணங்கள் நிறைய, விடுதலைப்புலிகள், அல்கயிதா என. உலகையே மிரட்டும் வகையில் எழுச்சிக் கண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இப்போது சீட்டுக்கட்டாக சரிந்துக் கொண்டிருக்கிறது.
வன்முறை, பட்டாசு போல. அந்த நேரத்தில் பயமுறுத்தும் வகையில் ஓங்கி ஒலி எழுப்பும், கண்ணைப் பறிக்கும் ஒளி எழுப்பும், பின் காட்சியை மறைக்கும் புகை கிளப்பும். ஆனால் கடைசியில் கரி தான் மிஞ்சும்.
அகிம்சை போராட்டங்கள் விளக்கு போல. அதிர வைக்காது, அலற வைக்காது, கண்ணைப் பறிக்காது. ஆனால் நின்று எரியும், மனதில் பதியும், வெளிச்சம் தரும். கரியாகாது, வழிகாட்டும்.
தொடர் போராட்டம், முழு அடைப்பு, ரயில் மறியல், சாலை மறியல், நடைபயணம், கருப்புக்கொடி, பொதுக்கூட்டம் என்ற தளபதி அவர்களின் பயணம் வெளிச்சம் தரும், வெற்றி பெறும்.
Sivashankar SS
# நடப்போம், குரல் கொடுப்போம், உரிமை மீட்டெடுப்போம் !

சிரியாவில் மீண்டும் பொதுமக்கள் மீது தாக்குதல் 3க்கும் மேற்பட்டோர்கொல்லப் பட்டனர்

சிரியாவில் மீண்டும் பொதுமக்கள் மீது தாக்குதல் 30 க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர்

சிரியாவில் உள்நாட்டு போர் சூழ்ந்த நிலையில் ஐ.எஸ். அமைப்பினர் போன்ற தீவிரவாத அமைப்புகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுவரை அங்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் வன்முறைக்கு பலியாகி உள்ளனர்

சிரியாவில் அதிபர் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.  இதில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அரசு ராணுவத்தினை பயன்படுத்தி வருகிறது

30 க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர்

இந்த நிலையில், டமாஸ்கஸ் அருகே கிழக்கு கூட்டா பகுதியில் அரசு வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது.  இதில் 8 குழந்தைகள் உள்பட பொதுமக்களில் 30 பேர் பலியாகி உள்ளனர்.  இதனை பிரிட்டனை சேர்ந்த சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது

Need to sell your Property 
 

மத கலவரம் எப்படி தூண்ட படுகிறது அரசியலுக்கு மதம் எவ்வாறு பயன் படுகிறது

மத கலவரம் எப்படி தூண்ட படுகிறது அரசியலுக்கு மதம் எவ்வாறு பயன் படுகிறது

மத கலவரம் எப்படி தூண்ட படுகிறது அரசியலுக்கு மதம் எவ்வாறு பயன் படுகிறது மத கலவரம் நடப்பது ஏன் மத கலவரம் நடப்பதால் யாருக்கு லாபம் என்று மிக தெளிவாக விளக்கும் சமூக அக்கறையுள்ள ஒரு காணொளி அவசியம் பாருங்கள் பகிருங்கள்

அரசியல் வாதிகள் மக்களின் அறியாமையை எப்படி பயன் படுத்துகின்றனர்

அரசியல் வாதிகள் மக்களின் அறியாமையை எப்படி பயன் படுத்துகின்றனர் எப்படி மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர் என்று விளக்கும் மக்கள் பார்க்க வேண்டிய ஒரு காணொளி, சமூக அக்கறையுடன் பகிர பட்டுள்ள இந்த காணொளி அரசியலில் மத உணர்வு எப்படி தூண்ட படுகிறது மற்றும் எப்படி ஒரு பார்முலாவாக உபயோகிக்க படுகிறது என்று உங்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பகிர்வு

இந்திய அரசியிலில் மதம் பி ஜே பி போன்ற காட்சிகளை எப்படி கையாள வேண்டும் அரசியல் காப்புணர்ச்சி

மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டிய அவசியம் அதோடு விழிப்புணர்வோடு இருக்கவேண்டிய தருணம் இது
https://www.facebook.com/1776591839309792/videos/1807438046225171/?t=6

வைகோ ஸ்டாலின் தற்போதைய நட்பு எப்படி உள்ளது

வைகோ ஸ்டாலின் தற்போதைய நட்பு எப்படி உள்ளது

வைகோ ஸ்டாலின் தற்போதைய நட்பு எப்படி உள்ளது என்பதை ரஜினி ரசிகர் ஒருவரின் அருமையான கருத்து
வைகோவை நம்பவைத்து கடைசியில் கழுத்தறுப்பார்கள், முதுகில் குத்திவிடுவார்கள் என்றே நம்பினேன்.
அதுவும் குறிப்பாக “ஸ்டாலினை” எதிர்த்துப் பிறந்தது தான் #மதிமுக என்பதால்

வைகோ ஸ்டாலின்

ஸ்டாலின் வஞ்சத்தோடு #வைகோவை பழிதீர்ப்பார் என்றே கருதினேன்
துரைமுருகனும், பழக்கடை அன்பழகனும் பேசிய பேச்சுகளைக் கேட்டபோது “இவர்கள் ஸ்டாலின் #உத்தரவின்றி இப்படி பேசியிருக்க மாட்டார்கள்” என்று நம்பினேன்
ஆனால் எனது அத்தனை எண்ணங்களையும் ஸ்டாலின் #தவிடுபொடியாக்கிவிட்டார்.
இன்றைய தேதியில் ரஜினி கட்சியை முறைப்படி அறிவிக்காத நிலையில்,
முழுமையாக அதிமுக #தினகரன் கைகளில் வராத நிலையில்
இருக்கின்ற இந்த 3 முதல்வர் வேட்பாளர்களில் அமைப்பு ரீதியாக முதலமைச்சர் பதவியைத் தொட்டுவிடும் தூரத்தில் மிகஅருகில் இருப்பவர் ஸ்டாலின் தான்
எனக்குப் பிடிக்காவிட்டாலும் கூட நாளை #காலையில் தேர்தல் வைத்தாலும்
முதலமைச்சராகத் தனிப்பெரும்பான்மை பெற மிக அதிக வாய்ப்புள்ளவர் ஸ்டாலின் தான்
அத்தகைய உயரத்தில் இருக்கும் ஸ்டாலின், வைகோ நடத்தும் நியூட்ரினோ எதிர்ப்பு நடை பயணத்தை தொடங்கி வைக்க மதுரை வருகிறார் என்றால்!
ஸ்டாலின் வைகோ மீது எத்தனை பெரிய #மரியாதை வைத்துள்ளார் என்பதை உணர முடிகிறது.
பொதுவாக ஸ்டாலின் ஒரு மேட்டிமை குணம் படைத்தவராகவே அறியப்படுகிறார். #அவரே தனது நிலையிலிருந்து வந்து, வைகோவின் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார் எனில்!
அவர் மனதில் உண்மையாகவே வைகோவை பெரிதாக #மதிக்கிறார் என்பதை உணர முடிகிறது
அதிமட்டுமல்லாமல் ஸ்டாலின் யாரையும் புகழமாட்டார்.
ஆனால் அந்த நிகழ்ச்சியில் “இந்த நடைபயணத்தால் வரலாற்றில் சகோதரர் வைகோ இடம் பெறுவார்
இதைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பு பெற்றதனால் என் பெயரும் இடம் பெறும்” என்று வைகோவை #உயர்த்தி பேசியிருக்கிறார்.
மேலும் அறிவாலயத்தில் தனது கார் #நிறுத்தும் இடத்தில் வைகோ காரை நிறுத்திக்கொள்ள ஸ்டாலின் அறிவாலய பணியாளர்களிடம் அறிவுருத்தியிருக்கிறார்
அதாவது தனக்கு #நிகராகத் திமுகவில் வைகோவுக்கு மரியாதை கொடுக்கிறார் ஸ்டாலின்
மற்றபடி அந்தக் கட்சியில் இதுநாள் வரையில் ஸ்டாலினை சுற்றி இருந்துகொண்டு ஜால்ரா தட்டிக்கொண்டு பிழைத்துக் கொண்டிருந்தவர்கள் வைகோவின் வரவால்
வைகோவுக்கு ஸ்டாலின் #முக்கியத்துவம் கொடுப்பதால் வயிற்றெரிச்சலில் புகைகிறார்கள்
ஆக வயிற்றெரிச்சலில் சில அல்லக்கைகள், எடுப்பு சோறுகள் பேசுவதற்கு பதில் அளிக்கையில் தேவை இல்லாமல், வைகோ மீது மரியாதை வைத்துள்ள ஸ்டாலினையும் விமர்சித்து நட்புடன், புரிதலுடன் கரம் கோர்த்துள்ள #இரு_தலைவர்களையும் சங்கடத்திற்கு ஆளாக்காமல் இருப்பதே நல்லது
பபி

அணைகளை கட்டியிருந்தால் நாம் யாரிடமும் கையேந்த தேவையில்லையே

அணைகளை கட்டியிருந்தால் நாம் யாரிடமும் கையேந்த தேவையில்லையே

அணைகளை கட்டியிருந்தால் நாம் யாரிடமும் கையேந்த தேவையில்லையே ஆற்றுநீர், மலைகளிலிருந்து இறங்கும் இடத்திலோ, நீர்பிடிப்பு இடங்கள் என்று இயற்கையாக நிலவமைப்பு இருக்கும் இடத்திலோதான் அணைகளை கட்டமுடியும். பெரிய அணைகள் கட்ட வேண்டும் என்றால், மலைதொடர்களுக்கு இடையே இயற்கையாக நிலப்பரப்பில் அதற்கான அமைப்பு இருக்க வேண்டும்
தமிழகத்தில் மேட்டூரை தாண்டினால், காவிரி பாயும் பகுதிகளில் அப்படியான பெரிய நிலபரப்பு கிடையாது.. சமவெளி பகுதிகளில் அணைகளை கட்டமுடியாது.. தமிழகத்தில் சமவெளிதான் அதிகம்.. வற்றாத ஆறுகளும் கிடையாது.. மழையளவும் சராசரிதான்
அதேபோல, கர்நாடகா எப்படி ஹேமாவதி, கபினி என சில காவிரி துணையாறுகளில் அணைகளை கட்டியதோ, அதே போல, தமிழகத்தில் உள்ள காவிரி துணையாறுகளான பவானியிலும், நொய்யலிலும், அமராவதியிலும் அணை கட்டியுள்ளது தமிழகம்..
மேலும், இந்த காவிரி பிரச்னை, வறட்சி பிரச்னை போன்றவைகள் வந்தாலே, பல அறிவாளிகள், தமிழகத்து உரிமைகள் பறிபோவதை குறித்து பேசாமல், இங்கே கடந்த ஐம்பது ஆண்டுகளாக அணைகளையே கட்டவில்லை என்ற பொய்யை பரப்புவார்கள்.. அவர்களுக்கான உண்மை

அணைகளை கட்டியிருந்தால்

தமிழ் நாட்டில் உள்ள அணைகள் பெரிய நீர்தேக்கங்கள் எண்ணிக்கை – 85
அரசர்கள் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை — 10
காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டவை
50 #ஆண்டுகால #திராவிட #கட்சிகள் #ஆட்சியின் #போது #கட்டப்பட்டவை — 61 (#திமுக – 30 , #அதிமுக – 31)

நன்றி : Prakash JP

 

காவேரிக்காக போராட்டம் மே 17 இயக்கம் உங்களை அலைக்கிறது

காவேரிக்காக போராட்டம் மே 17 இயக்கம் உங்களை அலைக்கிறது

காவேரிக்காக போராட்டம் மே 17 இயக்கம் உங்களை அலைக்கிறது திருமுருகன் காந்தி உங்களை அழைக்கிறார் காவேரிக்காக மீண்டும் ஒன்று கூடுவோம்
காவிரி உரிமை மீட்க சென்னையில்(தாம்பரத்தில்) ஒன்று கூடுவோம்! – #திருமுருகன் காந்தி #cauvery #cmb #thirumurugan#காவிரி
இடம் : ஏப்ரல் 7, சனி மாலை 5 மணி,
தாம்பரம் மார்க்கெட், பேருந்து நிலையம் அருகில் (சண்முகம் சாலை)
காவிரி 4000 ஆண்டுகளாக தமிழர் சொத்து!
70 ஆண்டு இந்திய அரசு காவிரியை தடுப்பதா?
உரிமையை முழங்கிட தாம்பரத்தில் கூடுவோம்!
ஏப்ரல் 7, சனி மாலை 5 மணி
தொடர்புக்கு: 9884072010

காவிரி உரிமை மீட்க சென்னையில்(தாம்பரத்தில்) ஒன்று கூடுவோம்! – #திருமுருகன் காந்தி #cauvery #cmb #thirumurugan #காவிரிஇடம் : ஏப்ரல் 7, சனி மாலை 5 மணி,தாம்பரம் மார்க்கெட், பேருந்து நிலையம் அருகில் (சண்முகம் சாலை)

Posted by I Support Thirumurugan Gandhi on Thursday, 5 April 2018

வீடு புகுந்து திருடும் காவலர்கள் | ரோந்து பணியா திருட்டு பணியா

வீடு புகுந்து திருடும் காவலர்கள் |ரோந்து பணியா  திருட்டு பணியா

வீடு புகுந்து திருடும் காவலர்கள் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ காட்சி ஒன்று உலவுகிறது எதோ ஒரு காரணத்திற்க்காக காவலர்கள் போல் சிலர் வீட்டுக்குள் நுழைகின்றனர் வீட்டின் கதவை தட்டு கின்றனர் வீட்டில் யாரும் இல்லையென்று தெரிந்தவுடன் வீட்டில் இருக்கும் பைக்கை தள்ளிக்கொண்டு செல்கின்றனர் என்ன நடந்தது திருட்டு போன்று தான் தெரிகிறது வீட்டின் உரிமையாளர் புகார் தெரிவித்தாரா என்ன விபரம் தெரியவில்லை இனிமேல் மக்கள் வெகு உஷாராக தான் இருக்க வேண்டும் போல் தெரிகிறது
கன்னியாகுமரி மாவட்ட இரணியல் காவல் நிலையத்தில் இரவில் நடைபெறுவது
ரோந்து பணியா  திருட்டு பணியா
உதவி ஆய்வாளர் பிச்சை தலைமையில் கோபி(SSI), பிரதீப்(HEAD CONSTABLE), வின்சென்ட்(HEAD CONSTABLE) இரவு 1 (ஒரு) மணிக்கு கண்டன்விளை ஐனேசி என்பவரது வீட்டின் கதவு பூட்டை உடைத்து பொருட்களை சேதப்படுத்தி வீட்டில் இருந்து பல்சர் பைக் திருடி செல்லும் அரிய சி.சி.டி.வி காட்சிகள்.
Thanks for Social Writter

வீடு புகுந்து திருடும் காவலர்கள் |ரோந்து பணியா  திருட்டு பணியா

 

Posted by Senthil Kumar Varatharajan on Tuesday, 3 April 2018

Posted by Senthil Kumar Varatharajan on Tuesday, 3 April 2018

வைத்தீஸ்வரி கொலையில் இருக்கும் மர்மம் காவல் துறையின் அலட்சியம்

 வைத்தீஸ்வரி கொலையில் இருக்கும் மர்மம் காவல் துறையின் அலட்சியம்

வைத்தீஸ்வரி கொலையில் இருக்கும் மர்மம்! காவல் துறையின் அலட்சியம், சகோதரி வைத்தீஸ்வரி வேலை பார்க்கும் கடை வழியாகதான் தினமும் பலமுறை சென்று வந்திருக்கிறேன் என்ற உணர்வே மனவலியை அதிகமாக்குகிறது
கிட்டத்தட்ட ஒரு நாளுக்கு மேலாக கடத்தி வைத்திருந்து வன்புணர்ச்சி செய்து, கொடூரமாக கொலை செய்துள்ளார்கள் என தெரியவருகிறது

வைத்தீஸ்வரியின் வாய் மற்றும் பிறப்புறுப்பில் பீர் பாட்டிலை உடைத்து சொருகியிருக்கிறார்கள்.
காலை வைத்தீஸ்வரியின் மரணத்தை அறிவித்த காட்சி ஊடகம், “16 வயது பெண் மரணம், கற்பழித்து கொல்லப்பட்டதாக பெற்றோர் புகார்” என்று செய்தி போடுகிறார்கள்.
நிர்வாண நிலையில் பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டு கிடக்கிற பெண்ணை, வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டவள் என ஒப்புக்கொள்ளவே, இந்த ஈனபுத்தி ஊடகங்கள் தயங்குகிறது என்றால் ஊடகங்களின் யோக்கியதை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
அப்புறம், காக்க காக்க, சாமி போன்ற படங்களை பார்த்தாவது சட்டம் ஒழுங்கின் காப்பிரைட்தாரர்கள் குறித்து நாம் சற்று ஆறுதலடைந்து கொள்வோமாக..
வைத்தீஸ்வரி கொலைக் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி நடக்கிறது, அலட்சியமாக இருந்துவிடாதீர்கள் என்று, யாரோ ஒரு மனசாட்சி உள்ள காவலர் சொன்ன செய்தியை கேட்டு விசிக நிர்வாகிகள் அடுத்தக்கட்ட நகர்வை முன்னெடுப்பதற்கு முன்பாகவே ஒத்திகைகள் கட்சிதமாக அரங்கேறிவிட்டதாக விசிக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.
காலை குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று பேரை, கிடப்பில் போட்டுவிட்டு, வைத்தீஸ்வரியை காதலித்த இளைஞனை கொலையாளியாக்கிட அனைத்து முயற்சிகளும் நடப்பதாக விசிக தரப்பும், பரதூர் கிராமவாசிகளும் தெரிவிக்கிறார்கள்..
வைத்தீஸ்வரியின் உடலில் நடத்தப்பட்டுள்ள வெறியாட்டங்களை, இவர்கள் கூறுவதைப்போல தனி நபர் செய்துவிடுவது சாத்தியமில்லை என்று மக்கள் அடித்து பேசுகிறார்கள்.
வைத்தீஸ்வரி கொலையில் ஏற்கனவே குற்றவாளிகளாக அடையாளம் காட்டப்பட்டவர்களில் ஒரு நபர், ஏற்கனவே கொலை வழக்குகளில் தொடர்புள்ள நபர் என தெரியவருகிறது
இதையடுத்து காவல்துறையை கண்டித்தும், பிணக்கூறாய்வு அறிக்கையின்படி செயல்படக்கோரியும் நாளை நடைபெறும் ஆர்பாட்டத்திற்கு திருமாவளவன் அவர்களும் சிதம்பரம் வரவிருப்பதால், வைத்தீஸ்வரி கொலை பிரச்சனை பரபரப்பை எட்டியுள்ளது.
தோழர்களிடம் நடந்தவற்றை கேட்டறிந்தபின், வைத்தீஸ்வரி வேலை பார்த்த கடை வழியாகவேதான் வந்தேன்.
தமது கடை ஊழியரான பதினாறு வயது சிறுமி படுகொலைக்கான எவ்வித சலனமும் இன்றி, அந்த ஐவுளிக்கடையில் வழக்கம் போலவே வியாபாரம் நடத்திக்கொண்டிருந்தார்கள்
பரதூர்வாசிகளும், விசிகவினரும் கூறுவதைப் போல, ‘வைத்தீஸ்வரியின் படுகொலையில் தொடர்புடைய கயவர்களை பிடிப்பதால், இரு சமூகங்களுக்கிடையே மோதல் வரும்’ என்ற உயரிய நோக்கத்திற்காகவெல்லாம் சம்மந்தமில்லாதவர்கள் தலையை உருட்ட முயலாமல், கொலைகாரர்கள் யாராக இருந்தாலும் காவல்துறையால் கைது செய்யப்படவேண்டும்.
பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் தீவிரமடைகிறதே தவிர குறைந்தபாடில்லை.
வெட்கக்கேடு..

இந்தியத் துணைக் கண்டத்துக்குள் ஆரிய ஊடுருவல் சமீபத்திய ஜீன் ஆய்வுகள் சொல்வதென்ன?

இந்தியத் துணைக் கண்டத்துக்குள் ஆரிய ஊடுருவல்: சமீபத்திய ஜீன் ஆய்வுகள் சொல்வதென்ன?

சமீபத்திய ஜீன் ஆய்வுகள் இந்தியத் துணைக்கண்டத்துள் மத்திய ஆசியாவிலிருந்து ஆரிய ஊடுருவல்நிகழ்ந்துள்ளதை நிறுவியுள்ளதை அறிவோம் உலகெங்கிலும் உள்ள 92 ஜீன் ஆய்வறிஞர்கள், இந்த ஆய்வுகள் என்னதான் சொல்கின்றன என்பதைச் சுருக்கமான ஒரு அறிக்கையாக இப்போது வெளியிட்டுள்ளனர்  அது குறித்த Scroll.in கட்டுரையை இங்கு பகிர்ந்துள்ளேன்,
இந்தக் கட்டுரையில் அந்த 92 வல்லுனர்களின் கட்டுரை மட்டுமல்லாமல் மேலும் இது தொடர்பான இரு கட்டுரைகளுக்கான இணைப்புகளும் தரப்பட்டுள்ளன  மொத்தத்தில் இந்த நான்கு கட்டுரைகளையும் ஆழமாகப் படித்தால் என்னதான் இப்போது ஜீன் ஆய்வு மூலம் நிறுவப்பட்டுள்ளது என்பது விளங்கும்

கட்டுரை மூலம் நாம் என்ன புரிந்து கொள்கிறோம்?

உண்மையில் புதிதாக ஒன்றும் இப்போது தெரிந்து விடவில்லை  சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் வில்லியம் ஜோன்ஸ் முதல் அறிஞர் கால்டுவெல் வரை மொழியியல் ரீதியாக என்ன சொன்னார்களோ அவற்றுக்கு ஜீன் அறிவியல் மூலம் இப்போது நிரூபணம் கிடத்துள்ளது அவ்வளவே
சரி இப்போது இந்தக் கட்டுரை மூலம் நாம் என்ன புரிந்து கொள்கிறோம்? சுருக்கமாகச் சொல்வதானால்

ஆரிய ஊடுருவல்
ஆரிய ஊடுருவல்

  1. ஏதோ ஒரு வகையில் ஆரியப் பரவல் இங்கு நடந்துள்ளது உறுதியாகிறது. ஸ்தெப்பி வெளி நாடோடி மேய்ச்சல் இனத்தவரின் (அதாவது ஆரியர்களின்) நுழைவின் ஊடாகத்தான் இந்தத் துணைக் கண்டத்தில் இந்தோ – ஐரோப்பிய மொழி (அதாவது மூல ஆரியம்) மற்றும் ஆரியப் பண்பாட்டின் பரவல் முதலியன நிகழ்ந்துள்ளனன.

2.இதே ஸ்தெப்பி வெளியினர்தான் மேற்குத் திசையில் நகர்ந்து ஐரோப்பாவிலும் பரவியவர்கள். அதனால்தான் இன்றைய ஆரியம் இந்தியத்துணைக் கண்டத்திலுள்ள இன்னொரு முக்கிய மொழிக் குடும்பமான திராவிடத்தைக் காட்டிலும் ஐரோப்பிய மொழிகளுக்கே நெருக்கமாக உள்ளது. அதாவது மத்திய ஆசிய ஸ்தெப்பி வெளியிலிருந்து இந்தியத் துணைக்கண்டத்தை நோக்கி வந்தவர்கள் இங்கே ஆரிய சமஸ்கிருதம் உருவாகவும், மத்திய ஆசியாவிலிருந்து மேற்கில் நகர்ந்தவர்கள் இன்றைய ஐரோபிய மொழிகள் உருவாவதற்கும் காரணமானார்கள்

  1. தவிரவும் இந்த ஸ்தெப்பி வெளியினரின் பரவலுக்கும் பிராமண சாதி மற்றும் பண்பாட்டுப் (priestly caste and culture) பரவலுக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என்பதும் இன்று உறுதியாகியுள்ளது. மொத்தமுள்ள இந்திய மக்கள் குழுக்களை 140 ஆகப் பிரித்தால் இவற்றில் 10 குழுக்களின் மூதாதையர் ஒப்பீட்டளவில் சிந்து வெளியைக் காட்டிலும் அதிக அளவில் ஸ்தெப்பி வெளியுடன் உறவுடையவர்களாகவே உள்ளனர். அதாவது ஆரிய ஜீன் கலப்புள்ளவர்களாக உள்ளனர்.

4. பொதுவாக மதச் சடங்குகளை நிறைவேற்றுபவர்களாக, அதாவது புரோகிதர்களாக, உள்ள குழாம்கள் ஸ்தெப்பி வெளியுடனேயே மூதாதை உறவு கொண்டவர்களாக உள்ளனர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் வைதீகத்தையும் வேதப் பண்பாட்டையும் பரப்புவதில் முக்கிய பங்கை இவர்களே (அதாவது புரோகிதம் செய்த ஆரியர்களே) வகித்திருக்க வேண்டும்

தென் ஆசிய வேட்டை இனப் பண்பாடு ஆரிய ஊடுருவல்

  1. தொடக்க கால ஈரானிய விவசாயிகள் சொல்லிக் கொள்ளும்படியாக தென் ஆசிய வேட்டை இனப் பண்பாட்டுடன் (அதாவது ஒருவகை மூல திராவிடப் பண்பாட்டுடன்) மூதாதை உறவு கொண்டிருக்கவில்லை என்பது ஜீன் ஆய்வில் தெரிய வருகிறது. இதிலிருந்து ஜீன் பரவல் என்பது வெளியிலிருந்து தென் ஆசியாவுக்குள் பரவியதுதானே தவிர தென் ஆசியாவிலிருந்து வெளியே பரவவில்லை என்பது அறிய வரு கிறது.

  2. கிமு 2000 வாக்கில் ஸ்தெப்பி வெளி மேய்ச்சல் நாடோடிகள்(அதாவது ஆரியர்கள்) தெற்குத் திசையில் இருந்த (இந்திய) துணைக் கண்டத்தை நோக்கி நகர்ந்தனர். இதனூடாக இந்தியத் துணைக்கண்டத்திலிருந்த சிந்துவெளி மக்களுடன் ஒரு கலப்பு நிகழ்ந்தது

7.அதன் பின் சிந்து வெளி மக்களின் ஒரு பகுதி மேலும் தெற்கு நோக்கி நகரத் தொடங்கியிருக்க வேண்டும். இதனூடாகத் தென் ஆசிய வேட்டை இன மக்களுடன் கலப்பு ஏற்பட்டு பூர்வீகத் தென்னிந்தியர் உருவாகி இருக்க வேண்டும்
8.தொடர்ந்த தென் ஆசியச் சமூக உருவாக்கம் என்பது பூர்விக வட இந்தியர்களுக்கும் பூர்வீகத் தென் இந்தியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலப்பின் ஊடாகவே அதன் பின் ஏற்பட்டிருக்க வேண்டும்

Marx Anthonisamy

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left