சென்னைக்கு 2வது விமான நிலையம் ரியல் எஸ்டேட் உச்சத்தை தொட போகும் பகுதி திருவள்ளூர் மாவட்டம் ஜாக்பாட்!
சென்னையில் 2 ஆவது விமான நிலையத்திற்காக பன்னூர், பரந்தூர் ஆகிய இரண்டு தளங்களை இந்திய விமான நிலைய ஆணையம் தேர்ந்தெடுத்துள்ளது. பன்னூர் அல்லது பாரந்தூரில் சென்னையின் 2 ஆவது விமான நிலையம்.
நேற்று போபால் சென்னை – போபால் நேரடி விமான சேவையை, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதித்ராதிய சிந்தியா, இணை அமைச்சர் விகே சிங் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதன் தொடக்க விழாவில் உரையாற்றிய மத்திய அமைச்சர் ஜோதித்ராதித்ய சிந்தியா,
“அடுத்ததாக சென்னைக்கும் இரண்டாவது விமான நிலையத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டு உள்ளோம். இதற்காக 4 இடங்களை மாநில அரசு பரிந்துரைத்துள்ளது. அந்த 4 தளங்களிலிருந்து, நாங்கள் பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய 2 தளங்களைத் தேர்ந்தெடுத்து, மாநில அரசின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். சரியான இடம் இறுதி செய்யப்பட்ட பின் இரண்டாவது விமான நிலையப் பணிகள் விரைந்து முடிப்போம்.” என தெரிவித்தார்.
|