ஒற்றுமையில்லா தமிழக முஸ்லீம்கள் இஸ்லாமிய அமைப்புகள்
ஒற்றுமையில்லா தமிழக முஸ்லீம்கள் இஸ்லாமிய அமைப்புகள் முஸ்லிம்கள் சமீபகாலமாக அதிகம் பேசப்படுகிற விசயமாகிப்போனார்கள்
முஸ்லிம்களிடத்தில் இரண்டு விடயங்கள் சுத்தமாக இல்லை ஒன்று ஒற்றுமை மற்றொன்று நன்றியுணர்வு
முஸ்லிம்கள் சமீபகாலமாக அதிகம் பேசப்படுகிற விசயமாகிப்போனார்கள்
முஸ்லிம்களிடத்தில் இரண்டு விடயங்கள் சுத்தமாக இல்லை ஒன்று ஒற்றுமை மற்றொன்று நன்றியுணர்வு
எனக்கு தெரிந்து 20 மேற்பட்ட அமைப்புகள் செயல்படுகின்றன
தமுமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஹைதர் அலி
நீக்கபட்டார் இன்னுமொரு அமைப்பு உருவாகலாம்
நீ சரியல்ல நானே சரி என்பதில் தொடங்கி தங்களுக்குள் தெருச்சண்டையிட்டுக் கொள்கிற சராசரியாக தான் அமைப்புகள்
எல்லாம் அமைப்புகளும் அரசியல் செய்கின்றன அரசியல் அறியாமலேயே
ஒரு சின்ன விடயம் கிடைத்தால் போதும் அதை நானே முன்னெடுப்பேன் என ஆளாளுக்கு வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கும் பலன் சூழியம்
இவர்களால் இஸ்லாமிய சமூகம் அடைந்த பயன் என்று சொல்லிக்கொள்ளும்படி இல்லை..
மாறாக சமூகம் அடைந்த பின்னடைவே அதிகம்
ஒற்றுமையில்லாமல் இருப்பதை அரசியல் கட்சிகள் திமுக உட்பட தங்கள் நலனுக்காக பயன்படுத்தும் அவலம்தான் நடக்கிறது
தமிழக முஸ்லிம்கள் அரசின் சலுகைகளைப் பெற லெப்பை என அரசில் பதிவு செய்துக்கொள்வார்கள்
மரைக்காயர் ராவுத்தர், போன்றவர்கள் கூட தங்களை லெப்பை என பள்ளிகளில் பதிவு செய்துக்கொள்வது வழக்கம்
(லெப்பை) பிரிவினர்களுக்கு மட்டுமே அரசு சலுகைகள் வழங்கியது ..
திராவிட ஆட்சி தமிழகத்தில் வந்த பிறகுதான் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் எல்லா பிரிவினரையும்
#BC ல் அதாவது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார்
ஒருவகையில் எல்லோரையும் ஒரே நிழலில் கொண்டுவந்தது கூட திராவிட ஆட்சிதான்
முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போதுமானதாக இல்லை இன்னும் நிறைய உரிமைகள் தரப்படாமலேயே இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை
என்றாலும் இதுவரை தமிழக முஸ்லிம்கள் அனுபவித்து வரும் எல்லா உரிமை (சலுகை) களும் இடஒதுக்கீடு உட்பட அனைத்தும் கலைஞர் செய்து தந்தது என்பதை..மறுக்கவோ மறைக்கவோ முடியாது
ன்னும் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு அல்லது வழங்கப்படாமல் இருக்கிறது என்பதும் கசப்பான உண்மை தான்
முஸ்லிம்கள் ஒற்றுமை இல்லாமல் அது சாத்தியப்படாது..
முஸ்லிகள் ஒற்றுமை என்பது இன்றைய சூழலில் சாத்தியப்படுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி ..???
தமிழகத்தில் மற்ற மதத்தவர்களுக்கு ஒன்றிரண்டு அமைப்புகள் தான் இருக்கிறது.
ஆனால் அவையாவும் பிரச்சனைகளை உருவாக்குவதே இல்லை மாறாக மதப்பிரச்சனைகளில் தங்கள் வேற்றுமையை மறக்கிறார்கள்
தாய்சபை என அழைக்கப்படும் முஸ்லிம்லீக்கில் கூட இவர்கள் இணைய மாட்டார்கள்
காரணம் தலைமையை குறைச்சொல்வார்கள் இஸ்லாத்திற்கு முரணான விடயங்களை முன்னெடுக்கிறதென்பார்கள்
தங்களுக்குள் உள்ள கருத்துவேறுபாடுகளை கலையாதவரை
இங்கே யார் பெரியவன் என்கிற.
யார் தலைவர் என்கிற நிலை மாறாத வரை..
எதுவும்
#சாத்தியமில்லை ஆலஞ்சியார்