பூஜை அறையில் விநாயகர் சிலை வைக்கும் முறை
வீட்டின் பூஜை அறையில் விநாயகருக்கு முக்கிய இடம் உண்டு விநாயகர் சிலை, படங்கள் இல்லாத பூஜை அறைகளை பார்க்க முடியாது
எனினும் வீட்டில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது. குறிப்பாக எல்லா திசையிலும் வைத்து வழிபடக்கூடாது
வடகிழக்கு மூலையில் விநாயகர் சிலையை வைப்பது சிறப்பானதாகும் மேலும் விநாயகரின் தும்பிக்கை இடது பக்கமாக திரும்பி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்
விநாயகர் சிலையின் பின்புறம் வீட்டில் உள்ள எந்த அறையையும் பார்த்தபடி இருக்கக் கூடாது. ஏனெனில் சிலையின் பின்புறம் வறுமையை குறிக்கும்
அதனால் விநாயகர் சிலையின் பின்புறம் வீட்டிற்கு வெளிப்பக்கம் பார்த்தவாறு இருக்க வேண்டும். விநாயகர் சிலை வெள்ளி போன்ற உலோகத்தால் ஆனது என்றால் அதனை வட கிழக்கு அல்லது தென் மேற்கு திசையில் வைக்கலாம். அறையின் தென் திசையில் விநாயகர் சிலையை வைக்கக் கூடாது
வீட்டின் கிழக்கு அல்லது மேற்கு திசையில் வைத்து வழிபடலாம். கழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள சுவற்றை நோக்கியும் விநாயகர் சிலையை வைக்க கூடாது.
Find your dream property in Chennai
Find business in your location