Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

தினத்தந்தி தினமலரின் பொய் முகம் பாரீர்

தினத்தந்தி தினமலரின் , தினகரன் உட்பட சில நாளிதழ்கள் மீது காவல்துறை இணை இயக்குனர் திரு. திரிபாதி (ADGP) அவர்களை சந்தித்து புகார் அளித்தோம் …
சமீபத்தில் மதுரையை சேர்ந்த அப்பாஸ் அலி , சம்சுன் கறீம் ராஜா , சுலைமான் ஆகியோரை தேசிய புலனாய்வு ஏஜென்சி IPC mysore PS Case No 63/2016 under section 120 b , 121,121a UAPA சட்டத்தின் படி கைது செய்வதாக கூறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மைசூர் அழைத்து சென்றுள்ளனர் …
ஆனால் தினமலர் , தினதந்தி , தினகரன் போன்ற ஊடகங்கள் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 22 தலைவர்களை கொல்ல சதி என்று தலைப்பு செய்தியும் , அல்-குவைதா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் முஸ்லீம்களுக்கு எதிரான தவறான செய்தி வெளியிட்டு முஸ்லீம்களை வன்கொடுமை செய்கின்றனர் ..

ஆகையினால் இந்த நபர்களின் மீது எந்த வகையான குற்றச்சாட்டு என்கிற உண்மை தன்மை காவல்துறை தெரிந்து இருந்தும் ஊடகங்களில் வரும் பொய் செய்தியால் இரண்டு சமூக மக்களுக்கும் இருந்து வரும் இனக்கத்தை கெடுக்கும் தினமலர் ,தினதந்தி, தினகரன், தின இதழ்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக இணை இயக்குனரிடம் மனு கொடுத்தோம் …
எங்களின் மனுவை பெற்றுக்கொண்ட இணை இயக்குனர் நாங்கள் (போலீஸ்) ஊடகத்திற்க்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முடியாது நீங்க நீதி மன்றத்தில் வழக்கு தொடுங்கள் , அல்லது பிரஸ் கவுன்சிலில் புகார் கொடுங்கள் என்றார் மிக விரைவில் இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம் இன்ஷாஅல்லாஹ் ..
ரசூல் மைதீன்
தலைமை நிலையச்செயலாளர்
அப்ரோஸ் பாஷா
தென்சென்னை மாவட்ட தலைவர்
முஹம்மது யூசுப்
வடசென்னை மாவட்ட தொண்டரணி தலைவர்
உத்தமபாளையம் சித்திக் ஆகியோர் உடனிருந்தனர் உடன்
அனபுடன்
தடா ஜெ.அப்துல் ரஹிம்
இந்திய தேசிய லீக் கட்சி
மாநில தலைவர்
தினத்தந்தி தினமலரின் பொய் முகம் பாரீர்

ஒரு அடிமுட்டாளை – பொறுக்கியை ஏன் அமெரிக்கர்கள் தங்கள் அதிபராகத் தெரிவு செய்தனர்?

டொனால்ட் ட்ரம்ப்

னநாயகத்தின் பக்தர்கள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் தெருவில் இறங்கிப் போராடி வருகின்றனர். இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த மாபெரும் தோல்வி என்கின்றனர் அமெரிக்கத் தெருக்களில் பேரணியாகச் செல்லும் மக்கள். அமெரிக்க முதலாளித்துவ பத்திரிகைகளோ திகைப்பில் ஆழ்ந்துள்ளன – நடந்து முடிந்த சம்பவங்களை நம்ப முடியாபமல் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.
உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அதற்கெல்லாம் பொருள் விளக்கம் சொல்லும் அமெரிக்க அறிவுஜீவிகள் சொந்த நாட்டில் நடந்து முடிந்துள்ளவற்றுக்கு என்ன சொல்வதெனத் தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். எதிர்காலத்தில் நிலைமையை எப்படிச் சமாளிப்பது, எந்தவிதமாக தங்களது நலன்களைக் காத்துக் கொள்வது என முதலாளி வர்க்கம் ஆலோசிக்கத் துவங்கி விட்டது. அமெரிக்காவின் அண்டை நாடுகள் வேறுவழியின்றி ’பொறுத்திருந்து’ பார்க்கப் போவதாக அறிவித்துள்ளன. தேர்தல் கருத்துக்கணிப்புப் புலிகளோ தங்கள் தலைகளை பூமிக்குள் புதைத்து விட்டு ஆசன வாயால் முனகிக் கொண்டுள்ளனர்
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்றுள்ளார்.
முதலாளித்துவ பத்திரிகைகள் நம்பமுடியாத ஒன்று நடந்தேறி விட்டது போல புலம்பி வருகின்றன. அமெரிக்க ஜனநாயகத்தின் பக்தர்களோ ஒரு சுபயோக சுபதினத்தில் உலக ஜனநாயகத்தின் கருவறையை முதன்முறையாக திறந்து பார்த்ததைப் போலவும், அது உண்மையில் விபச்சார விடுதியின் அறையாக இருப்பதை அப்போது தான் கண்டுபிடித்தவர்களைப் போலவும் வாயடைத்துப் போய் நிற்கின்றனர். டிரம்பின் வெற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஒரு அடிமுட்டாளை – பொறுக்கியை – ஊரறிந்த அயோக்கியனை – புளுகனை – ஏமாற்றுக்காரனை – பெண் பித்தனை ஏன் அமெரிக்கர்கள் தங்கள் அதிபராகத் தெரிவு செய்தனர்?
முதலில் இந்தத் தேர்தல் நல்லவற்றுக்கும் தீயவற்றிற்கும் இடையே நடந்த மோதல் அல்ல. கேவலத்திற்கும் கழிசடைக்கும் இடையே நடந்த போட்டி – இதில் கழிசடை வென்றுள்ளது. பல ஜனநாயக காதலர்கள் முன்னிறுத்தியதற்கு நேர் எதிரான பிம்பம் கொண்டவர் ஹிலாரி கிளிண்டன். குறிப்பாக விக்கிலீக்ஸ் பகிரங்கப்படுத்திய மின்னஞ்சல்கள் ஹிலாரி எந்தளவுக்குப் போர் வெறி கொண்டவர் என்பதையும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தோற்றத்தில் நேரடியாக பங்குடையவர் என்பதையும் அம்பலப்படுத்தின.
பெருவாரியான வெள்ளையின தொழிலாளிகள் டிரம்புக்கு வாக்களித்தோடு, அமெரிக்காவின் மத்திய பகுதி மொத்தமும் அவரை ஆதரித்திருப்பது தற்போது தெளிவாகியுள்ளது. இவர்களில் கணிசமானவர்கள் படிப்பறிவில்லாதவர்கள், இனவெறியர்கள் என்பதையும் அமெரிக்க ஊடகங்கள் தற்போது பீறாய்ந்து வருகின்றன. குடியரசுக் கட்சி சார்பாக அதிபர் வேட்பாளராவதற்கான போட்டியின் போது நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் வெள்ளை இனத்தவர்களின் குரலை ஓங்கி ஒலித்தார் டிரம்ப்.
தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து வந்த சமயத்திலேயே குடியரசுக் கட்சியில் பெருவாரியாக தங்களை இணைத்துக் கொண்டு டிரம்புக்கு ஆதரவான பிரச்சாரங்களை நடத்தி வந்தனர், கூ கிளக்ஸ் கிளான் என்கிற வெள்ளை நிறவெறி அமைப்பின் உறுப்பினர்கள். எட்டாண்டுகளாக நடக்கும் கருப்பினத்தைச் சேர்ந்த ஒபாமாவின் ஆட்சி, அதிகரித்து வரும் எல்.ஜி.பி.டி உரிமைகள் குறித்த விவாதங்கள் உள்ளிட்டவைகளோடு அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபராக முன்னிறுத்தப்பட்ட ஹிலாரி கிளிண்டன் என அனைத்தும் ஒன்று சேர்ந்து வெள்ளை இனவெறியர்களை மொத்தமாக டிரம்பின் பின் அணிதிரட்டியது. டிரம்ப் வென்றதை அடுத்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் அவரை அதிபராக ஏற்க மறுத்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், கூ கிளக்ஸ் கிளான் வெற்றிப் பேரணிகளை நடத்தி வருகின்றது.

டொனால்ட் ட்ரம்ப் எதிரான மக்களின் போராட்டம்.

டொனால்ட் டிரம்புக்கு  எதிரான அமெரிக்கர்கள் போராட்டம்.

இது ஒருபுறம் இருக்க, அமெரிக்க வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் ஹிலாரி கிளிண்டனை ஸ்தாபனத்தின் (Establishment) பிரதிநிதியாக (ஆளும் வர்க்கத்தின் ஒட்டு மொத்தமாக) அடையாளம் கண்டனர். இதோடு சேர்த்து கடந்த எட்டாண்டு ஜனநாயக கட்சியின் ஆட்சியும், அதற்கு எதிரான அதிருப்தியையும் ஹிலாரி சுமக்க வேண்டியிருந்தது. இதனுடன் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தல்களும் இணைந்து கொள்ளவே, அவருடைய தோல்வி ஏறக்குறைய உறுதியானது.
இதற்கு நேர்மாறாக டொனால்ட் டிரம்ப்  அமைப்பு முறைக்கு எதிரானவராக அடையாளம் காணப்பட்டார். தேர்தல் பிரச்சாரங்களின் போது டிரம்ப் அடித்த வாய்ச்சவடால்களை ‘அறிவார்ந்த’ பத்திரிகையாளர்கள் முகம் சுழித்த போது மக்கள் முகம் மலர்ந்தனர். ஃபோர்ட் கார் கம்பெனித் தொழிற்சாலைக்கு அருகே நடந்த பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய டிரம்ப், “ஏய் போர்டு கம்பெனி முதலாளியே, இங்கேயிருந்து தொழிற்சாலையை மெக்சிகோவுக்கு மாற்றினால், அமெரிக்காவுக்குள் நுழையும் ஒவ்வொரு காருக்கும் வரியைப் போட்டுத் தீட்டி விடுவேனாக்கும்” என்று முழங்கிய போது கூடியிருந்த தொழிலாளர்கள் ஆர்ப்பரித்தனர். இதே போல் சீனாவில் உற்பத்தியாகும் ஆப்பிள் போன்களுக்கு வரியை உயர்த்தப் போவதாக டிரம்ப் அறிவித்து முதலாளிகளின் வயிற்றில் புளியைக் கரைத்தார் – மக்களோ அதை இரசித்தனர்.
அடுத்து, ஒபாமாவின் தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் அதன் வெளியுறவுக் கொள்கைகளை புதிய பிற்போக்குவாதிகளும் (Neo conservatives) தாரளவாத போர்வெறியர்களுமே (Liberal hawks) தீர்மானித்தனர். அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்குச் சேவை புரியும் இப்பிரிவினரால் ஆக்கிரமிக்கப்பட்ட சிந்தனைக் குழாம்களின் வழிகாட்டுதல் சிரியா உள்ளிட்ட போர்களையும், ரசியாவுடனான மோதல் போக்கையும் தீர்மானித்தன.
துவக்கத்திலிருந்தே ரசியாவுடன் மோதல் போக்கைக் கைவிடுவதைக் குறித்து பேசி வந்த டிரம்ப், சிரிய போர் அமெரிக்காவின் மிகப் பெரிய தவறு என விமர்சித்து வந்தார். தற்போது டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், அமெரிக்காவின் மத்திய கிழக்குக் கொள்கையிலோ, ரசியாவுக்கு எதிரான போக்கிலோ எதாவது மாற்றம் ஏற்படுவதற்கான அடிப்படை உள்ளதா? இல்லை. ஏனெனில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை என்பது அதன் ஏகாதிபத்திய பொருளாதார நலன்களை அடிப்படையாக கொண்டது. ஒரு நாட்டுடன் போர் வேண்டுமா வேண்டாமா என்பதை முதலாளிகளின் பிரதிநிதிகளால் கட்டுப்படுத்தப்படும் அமெரிக்க ஆளும் வர்க்கமே தீர்மானிக்கிறது – அதை அறிவிக்கும் உரிமை மட்டுமே அதிபருக்கு உண்டு.
எனினும், டிரம்ப் தனது பிரச்சாரங்களில் போர்களுக்கு எதிராகவும், அமெரிக்க பொருளாதார நலன்களுக்கு எதிராக (ரசியாவுடன் இணக்கமாகச் செல்வது) எப்படி பேசினார்? இது அமெரிக்க ஆளும் வர்க்கம் மற்றும் அதன் நலன்களை பிரதிபலிக்கும் அமெரிக்க அரசு கட்டமைப்புக்கும் எதிராதனாயிற்றே? அவர் ஏன் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள வேண்டும்? இங்கே தான் டிரம்பின் தனிப்பட்ட பண்புகள் முன்னுக்கு வருகின்றன.

விக்கிலீக்ஸ் பகிரங்கப்படுத்திய மின்னஞ்சல்கள் ஹிலாரி எந்தளவுக்குப் போர் வெறி கொண்டவர் என்பதையும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தோற்றத்தில் நேரடியாக பங்குடையவர் என்பதையும் அம்பலப்படுத்தின. நன்றி படம்: விக்கி லீக்ஸ்

விக்கிலீக்ஸ் பகிரங்கப்படுத்திய மின்னஞ்சல்கள் ஹிலாரி எந்தளவுக்குப் போர் வெறி கொண்டவர் என்பதையும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தோற்றத்தில் நேரடியாக பங்குடையவர் என்பதையும் அம்பலப்படுத்தின. நன்றி படம்: விக்கி லீக்ஸ்

டொனால்ட் டிரம்ப், ஹிலாரி கிளிண்டனைப் போல் ‘அனுபவம்’ வாய்ந்த அரசியல்வாதி அல்ல. பிறக்கும் போதே வாயில் வெள்ளிக் கரண்டியோடு பிறந்தவர். அவரது வாயிலிருந்து கரண்டியை உருவும் போது என்னவெல்லாம் வழிகிறதோ அதெல்லாம் கட்டளைகள். அந்தக் கட்டளைகளை நிறைவேற்றும் கடமை அந்தக் கட்டளைகளுக்கு உட்பட்ட அனைவருக்கும் உண்டு என நம்புகிறவர்.
தானே ஒரு பெருமுதலாளி என்பதால் , அந்த உலகத்தின் இருண்ட பக்கங்கள் டிரம்புக்கு தெள்ளத் தெளிவாகத் தெரியும். அரசாங்கத்தின் திரைமறைவு இயக்கம், அது எந்தளவுக்கு முதலாளிகளின் நலனோடு பிணைக்கப்பட்டுள்ளது, அரசுக்கு முதலாளிகள் அளிக்கும் உத்தரவுகள் கொள்கை முடிவுகளாக எவ்வாறு அமல் படுத்தப்படுகின்றது, இதில் மக்களுக்கு சொல்லப்படுவது எவை – சொல்லப்படாத உண்மைகள் எவை, போர்கள் ஏன் நடக்கின்றன – அதன் பின் உள்ள சொல்லப்படாத காரணங்கள், மக்கள் நலன் என்பதாக முன்வைக்கப்படும் திட்டங்களின் உண்மை நோக்கம் என்ன – என்பதெல்லாம் மக்களை விட மிகத் தெளிவாக அதே உலகத்தில் இயங்கும் டிரம்புக்குத் தெரியும்.
அவர் ஒரு முதலாளி என்றாலும் உதிரித்தனம் கொண்ட மைனர். எனவே, ரசியாவுடனான மோதல் போக்கோ, சிரியாவில் நடக்கும் போரோ… எதனைக் குறித்தும் பேசும் முன்பாக அது முதலாளித்துவ வர்க்கத்தின் நலனைக் கட்டிக் காப்பாற்றும் அரசுகட்டமைவின் (Establishment) கருத்துடன் ஒத்துப் போக வேண்டுமே என்கிற அச்சம் டிரம்பிடம் இல்லை. அவர் அந்தக் கட்டமைவிற்கு மேலாகத் தன்னை நிறுத்திப் பார்க்கிறார். எனவே அதன் போலித்தனங்களையும், ஊடகங்களின் வழியாக அது எவ்வாறு நியாயப்படுத்தப்படுகின்றது என்பதையும் அறிந்தவர். லட்சக்கணக்கான மக்களின மரணங்களையே குழிதோண்டிப் புதைத்த அந்த உலகத்தில், தனது ‘கருத்துக்கள்’ கடலில் கரைத்த பெருங்காயமே என்பதை அவர் முற்றாக அறிந்துள்ளார்.
அப்படி அனைத்துக்கும் மேலிருந்து பார்ப்பதால், அவர் அளித்த வாக்குறுதிகளுக்கு விளக்கங்கள் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை – பொறுப்பேற்க வேண்டிய தேவையுமில்லை. ஒவ்வொன்றும் பேசும் போது பேச்சாக இருக்கும் – பேசி முடித்த பின் தெறித்து விழுந்த எச்சிலாக இருக்கும். இவற்றில் எதையாவது டிரம்ப் நிறைவேற்றுவாரா? அது அவரின் அந்தந்த நேரத்திய மனநிலையைப் பொறுத்தது. குடிகாரன் பேச்சு போலத் தான். நேற்று வரை நீங்கள் சொன்னவற்றில் இன்னதெல்லாம் நிறைவேற்றப்படவில்லையே என்று நாளை யாராவது கேட்டால் “அப்படியா சொன்னேன்” என்று புறங்கையால் ஒதுக்கி விட்டுப் போவார் அல்லது ”நீ எவன்டா அதைக் கேட்க” என்று அதே புறங்கையை ஓங்கவும் செய்வார்.
எனவே தான், ”ஒபாமா கேரைத் தூக்கிப் போடுவேன் – போட்டபின் எதாவது ஒன்றைக் கொண்டு வந்து விடலாம்” “சீனாவை தட்டி வைப்பேன்” “ரசிய அதிபர் புதின் நல்லவர்.. அவரை ஈசியாக டீல் செய்வேன்” “மெக்சிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஒரு சுவரைக் கட்டுவேன் – அதற்கான செலவை மெக்சிகோவை ஏற்கச் செய்வேன்” என்பதில் துவங்கி எதைக் குறித்தும், எந்த நேரத்திலும், எப்படி வேண்டுமானாலும் அவரால் பேச முடிகிறதது. சீமான், விஜயகாந்த் வகையறாக்கள் அளிக்கும் வாக்குறுதிகளை கவனித்துப் பார்த்தால், அதில் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற பொறுப்போ, நாளை பதில் சொல்லியாக வேண்டுமே என்கிற அச்சத்தையோ நாம் காண முடியாது. டிரம்ப் ஒரு சர்வதேச சீமான்.
ஹிலாரி ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி (Seasoned politician) என்பதால் எதைக் குறித்தும் வாக்குறுதி அளிப்பதற்கு முன் அதன் சாதக பாதகங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு பேச வேண்டியிருந்தது. ஆனால், டிரம்ப் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் சாத்தியப்பாடுகள் குறித்து அவருக்கு எந்த அக்கறையும் இல்லை. வேலையிழப்புக்கு என்ன காரணம்? வந்தேறிகள். அதற்கு என்ன செய்யலாம்? அவர்களை விரட்டியடித்து விடலாம். இதைத் தான் படிப்பறியும், உலக ஞானமும் இல்லாத வெள்ளையின தொழிலாளர் வர்க்கம் விரும்பியது. ஹிலாரி கிளிண்டன் மற்றும் அவரது பிரச்சாரக் குழுவினர் மெனக்கெட்டு கட்டமைத்த “ரசிய பூதம்” “இசுலாமிய வேதாளம்” ”மூன்றாம் உலக காட்டுமிராண்டிகள்” போன்றவற்றை வெறும் வெற்றுச் சவடால்களின் மூலமாகவே ஊதித் தள்ளிவிட்டார் டிரம்ப்.
கடந்த ஓராண்டுகளாக குடியரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களைத் தொடர்ந்து வரும் ஆவணப்பட இயக்குனர் மைக்கேல் மூர், டிரம்ப் வெல்லப் போகிறார் என்பதை முன்னரே யூகித்து விட்டார். குடியரசுக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த வாக்காளர் ஒருவர், மைக்கேல் மூரிடம் “நாம் டிரம்புக்கு ஓட்டளிக்க வேண்டும். அனைத்தையும் தலைகீழாக கவிழ்த்துப் போட வேண்டும்” (Shake things up) என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஏகாதிபத்திய மூலதனம் தனது லாப வேட்டைக்காக உள்நாட்டிலிருந்து உற்பத்தி ஆலைகளை மூன்றாம் உலகநாடுகளுக்குக் கடத்திச் சென்றதால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது அமெரிக்க தொழிலாளர் வர்க்கம். இந்தப் போக்கானது பொதுவில் குற்றச் செயல்களை அதிகரித்திருந்தாலும், குறிப்பாக கருப்பினத்தவரிடம் அதிகரித்தளவில் காணப்படுகின்றது. மாறாக வெள்ளையினத்தவரிடம், வேலையிழப்புகள் நம்பிக்கையற்ற நிலையைத் தோற்றுவித்து போதைப் பழக்கத்தை அதிகரித்துள்ளது. எனவே வழமையான ஆளும் வர்க்கப் பசப்பல்களை அவர்கள் நம்ப மறுக்கின்றனர். மறுபுறம் இதே பிரிவினர் கல்வியறிவற்றவர்களாகவும், அரசியல் அறிவற்றவர்களாகவும் இருப்பதால் டிரம்ப் முன்மொழியும் எளிமையான தீர்வுகளுக்கு பலியாகினர். இதோடு கூடவே, வெள்ளையினத்தின் இறுதி மீட்பராக டிரம்ப்பை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டர் இனவெறி அமைப்பினர்.

trump
அமெரிக்கர்கள்
தற்போது அமெரிக்கா ஒரு அதிதீவிர வலதுசாரிப் பாதைக்குள் அடியெடுத்து வைத்திருப்பதாகவும், கூ கிளக்ஸ் கிளான் போன்ற இனவெறி அமைப்புகள் குடியரசுக் கட்சியைக் கைப்பற்றும் அபாயம் இருப்பதாகவும் லிபரல் ஜனநாயகவாதிகள் அச்சப்படுகின்றனர். ”டிரம்ப் போன்ற ஒரு அரைவேக்காட்டின் விரல் நுனியில் அமெரிக்க அணுகுண்டுகளை இயக்கும் சிவப்புப் பொத்தான் இருப்பதை நினைத்தாலே நடுக்கமாக உள்ளது” எனப் பதறுகிறது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை.
தாராளவாத ஜனநாயக காதலர்கள் அச்சப்படுவதைப் போல் அணுகுண்டின் சிவப்புப் பொத்தானின் மேல் டிரம்பின் விரல்கள் தாளமிட்டு விடுமா? உறுதியாகச் சொல்ல முடியாது. அரசுக் கட்டமைவிற்கு உள்ளே வானளாவிய அதிகாரத்துடன் நுழைந்துள்ள டிரம்ப்பை அது தனக்கேற்றபடி மறுவார்ப்பு செய்யுமா இல்லையா என்பதைப் பொறுத்தது. ஒருவேளை அரசுக் கட்டமைவின் தேவைகளுடன் டொனால்ட் டிரம்பின் சிந்தனைப் போக்கு பொருந்தி வரவில்லை என்றால்? ஹிலாரிக்கு இருப்பதைப் போல் திட்டமிட்ட கொடூர (systematic cruelty) மனம் டிரம்புக்கு இல்லை என்பதால் – அச்சச்சோ மக்கள் பாவம் என்றும் சிந்திக்கலாம்; அல்லது ஹிலாரியைப் போல் விளைவுகளைக் கணக்கிட்டுப் பார்க்கும் பொறுமை இல்லாததால் – மூன்றாம் உலகக் குரங்குப் பயல்கள் செத்தொழியட்டும் என்றும் சிந்திக்கலாம். எனினும் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்த அமெரிக்க அரசுக் கட்டமைவு தனக்கேற்றபடி டிரம்ப்பை தகவமைத்துக் கொள்ளும் வாய்ப்புகளே அதிகம் என்பதையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து, பெண்களைக் குறித்து இழிவாக சிந்திக்கும் ஒரு பொறுக்கியை எப்படி அமெரிக்க வாக்காளர்கள் தெரிவு செய்தனர் எனக் கலங்குகின்றனர் மேற்கத்திய பாணி பெண்ணுரிமை ஆர்வலர்கள்.
அது தான் அமெரிக்கா. பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடற்கரையோர மாநிலங்களைத் தாண்டி அமெரிக்காவின் மத்திய பகுதி மொத்தமும் தீவிர கத்தோலிக்க அடிப்படைவாத கருத்துக்களுடனும் மத்திய கால கலாச்சார விழுமியங்களுடனுமே உள்ளது. டிரம்ப்புக்கு வாக்களித்த பெண்ணிடம் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிருபர் ஒருவர் ”பெண்களை இழிவாக பேசும் டிரம்ப்புக்கு ஏன் வாக்களித்தீர்கள்?” எனக் கேட்டதற்கு அவர் அளித்த பதில், “அவர் தான் உண்மையான ஆம்பிள்ளை”.
ஆணாதிக்க எதிர்ப்பு, எல்.ஜி.பி.டி இயக்கங்கள், ஒருபாலினத் திருமணங்கள் என்பவை எல்லாம் நகரங்களில் உள்ள படித்த உயர் நடுத்தர வர்க்க அமெரிக்கர்களின் உலகத்துடன் முடிந்து விடுகின்றது. உண்மையான அமெரிக்காவோ கத்தோலிக்க தாலிபான்களின் சித்தாந்தத்தில் லயித்துக்கிடக்கிறது.
இறுதியாக, டிரம்ப் இசுலாமியர்களுக்கு எதிரானவர் என்பதால் இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் எதாவது எலும்புத் துண்டுகள் கிடைக்கும் என வாயில் எச்சிலூறக் காத்திருக்கின்றனர் அமெரிக்கவாழ் இந்தியர்கள். உண்மையில் டிரம்ப் குடியரசுக் கட்சியை வெளியிலிருந்து வந்து கைப்பற்றியவர் என்பதால் உட்கட்சியிலிருந்து எழும் கலகக் குரல்களை எதிர்கொள்ள வெள்ளையின வெறியர்களையே நம்பியுள்ளார். வெள்ளையின வெறியர்களை அவர் தனது ஏவல் நாய்களாகப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இனவெறியர்களைப் பொருத்தவரையில் தலையிலிருப்பது குல்லாவா குடுமியா என்பதல்ல பிரச்சினை – தோலின் நிறம் கருப்பா வெளுப்பா என்பதே முக்கியம்.
எனவே, முதலில் நாஜிகள் தாக்கப் போவது உங்களையல்ல – ஆனால் உங்கள் பாதுகாப்பும் உறுதியல்ல
 
அமெரிக்கர்கள்  Thanks by Vivavu Tamil news

ஏசுநாதர் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற வார்த்தைகளால் வாழ்த்துக் கூறினார்

ஏசுநாதர்   எடேbபேயர், இங்கிலாந்து நாட்டின் பிரசித்திப்பெற்ற உதைப்பந்தாட்ட வீரர். சமீபத்தில் இஸ்லாம் மதத்தை தழுவி, ஏன் இஸ்லாத்தைத் தழுவினேன் என்பதற்கான 13 உறுதியான காரணங்களை வெளியிட்டார்.
1. ஏசு நாதர் (நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம்), ‘ஓர் இறைவனே உள்ளான், ஓர் இறைவனே வணங்கப்பட வேண்டும் என கற்பித்தார்கள். (டியூட் 6:4, மார்க் 12:29).
முஸ்லிம்களும் இதையே நம்புகிறார்கள். (திருக்குர்ஆன் 4:171)
2. ஏசு நாதர் ஒருபோதும் பன்றி இறைச்சி சாப்பிடவில்லை. (லெவிட்டிகஸ் 11:7)
அதே போல் முஸ்லிம்களும் சாப்பிடுவது இல்லை (திருக்குர்ஆன் 6:145.)
3. ஏசுநாதர் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற வார்த்தைகளால் வாழ்த்துக் கூறினார். (ஜோன் 20:21.)
இது போலவே முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக் கூறிக் கொள்கிறார்கள்.
4. ஏசு எப்போதும், “இறைவன் நாடினால்” (இன்ஷா அல்லாஹ்) என்றுக் கூறினார்கள்
முஸ்லிம்கள் திருக்குர்ஆன் வாசகங்கள் கூறுவது போல், எதைச் செய்வதானாலும் முதலில் இதைச் சொல்லிவிடுகிறார்கள். (திருக்குர்ஆன் 18:23-24)
5. ஏசுநாதர் தொழுகைக்கு முன் தன்னுடைய முகம், கைகள், பாதங்களைக் கழுவினார்கள்
முஸ்லிம்களும் அதையே செய்கிறார்கள்
6. ஏசுநாதரும் பைபிலில் குறிப்பிடப்படும் ஏனய நபிமார்களும் தங்களின் சிரசை நிலத்தில் வைத்தே தொழுதுள்ளார்கள். (மத்தீயு: 26:39.)
திருக்குர்ஆன் கற்றுக்கொடுத்தது போல் முஸ்லிம்களும் அப்படியே தொழுகிறார்கள். (திருக்குர்ஆன் 3:43)
7. ஏசுநாதர் தாடி வைத்திருந்தார்கள். நீண்ட அங்கியை அணிந்திருந்தார்கள். முஸ்லிம் ஆண்களும் அதே போல் செய்துக்கொள்கிறார்கள்.
8. ஏசுநாதர் கட்டளைகளைப் பின்பற்றினார்கள். எல்லா நபிமார்களையும் நம்பினார்கள். (மத்தியு 5:17.)
திருகுரானிய வசனங்கள் 3:84, 2:285 கூறுவது போல் முஸ்லிம்களும் அப்படியே செய்கிறார்கள்.
9. ஏசுநாதரின் தாயார் மேரி (மர்யம் அலைஹிஸ்ஸலாம்) தன் முழு உடலையும் மறைத்து, தலையில் முந்தானை (ஹிஜாப்) இட்டு ஒழுக்கமான ஆடை அணிந்திருந்தார்கள். (திமோத்தி 2:9, ஜெனஸிஸ் 24:64-65, கொரின்தியன்ஸ் 11:6.)
முஸ்லிம் மாதர்கள் திருக்குர்ஆன் போதிப்பது போல் இவ்வாறே ஒழுக்கமாக ஆடை அணிகிறார்கள்.
(திருக்குர்ஆன் 11:6.)
10. ஏசுநாதரும் பைபிலில் கூறப்படும் ஏனைய நபிமார்களும் 40 நாட்கள் வரை நோன்பு நோற்று உள்ளார்கள். (எக்சோடஸ் 34:28, தானியல் 10:2-6, கிங்ஸ் 19:8, மத்தீவ் 4:1.)
இதையே முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் செய்கிறார்கள். முஸ்லிம்கள் கடமையான 30 நாட்கள் நோன்பை நோற்க வேண்டும். (திருக்குர்ஆன் 2:183)
சிலர் ஒருபடி மேலேயேச் சென்று, 6 நாட்கள் மேலதிக நோன்பையும் நோற்று நற்கூலிகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
11. ஒரு வீட்டினுள் நுழையும் போது, “இந்த இல்லத்திற்கு சாந்தி சமாதானம் உண்டாகட்டும்” என்று கூறுமாறு ஏசுநாதர் கற்பித்துக் கொடுத்தார்கள். (லூக் 10:5)
ஏசு நாதர் செய்த, கற்பித்துத் தந்த அதனையே முஸ்லிம்களும் செய்கிறார்கள். நாம் இல்லங்களுக்குள் நுழையும்போதும் மற்றவர்களுடைய இல்லங்களுக்குள் நுழையும்போதும் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறுகிறோம். (திருக்குர்ஆன் 24:61)
12. ஏசுநாதர்’கத்னா’ செய்யப்பட்டிருந்தார்கள். முஸ்லிம் ஆண்கள் கத்னா செய்யும்படி கேட்கப்பட்டுள்ளார்கள். ஏசுநாதர் எட்டு நாட்கள் பாலகராக இருக்கும்போது கத்னா செய்யப்பட்டார்கள். (லூக் 2:21)
முஸ்லிம்கள் நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றும்படி கட்டளையிடப்பட்டுள்ளார்கள். (திருக்குர்ஆன் 16:123)
நபி முஹம்மத் ﷺ அன்னவர்கள் கூறினார்கள், “நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் 80 வயதாக இருக்கும்போது கத்னா செய்துக்கொண்டார்கள்.”
13. ஏசுநாதர் அரமாயிக் மொழியையே பேசினார்கள். இறைவனை “எல்லாஹ்” என்று அழைத்தார்கள். அது “அல்லாஹ்” என்றே உச்சரிக்கப்படும். அரமாயிக் “எல்லாஹ்”வும் அராபிய “அல்லாஹ்”வும் ஒன்றே.
ஆகவே ஏசுநாதரின் இறைவனும் முஸ்லிம்களினதும் முழு மனித குலத்தினதும் இறைவனும் ஒன்றே என்பதையும் அவன் மாத்திரமே உள்ளான் என்பதையுமே இவை யாவும் நிரூபிக்கின்றன
இப்போது சொல்லுங்கள், யார் ஏசுநாதரை உண்மையாகப் பின்பற்றுபவர்கள்
E. Adebayor
E. எடேbபேயர
தமிழில்: அப்துர் ரஹீம் முஹம்மத் ஜஃfபர்
நல்லதைப் பகிருங்கள், நற்கூலி உண்டு
உலக முஸ்லிம் செய்திகளையும் தகவல்களையும் பெற்றுக்கொள்ள, எம் பக்கத்தை லைக் செய்து எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்:
உலக முஸ்லிம்
ரூபாய் நோட்டு பற்றி பீதி தேவையில்லை.. இப்போ மக்கள் செய்ய வேண்டியது இதுதான்! பீதியை கிளப்பவேண்டாம்

மோடி ரூபாய் நோட்டுக்குள்ள சிப்ஸ்சு வச்சிருக்காரு,

மோடி.
கேள்வி :- டொன் ஒசோக் அவர்களே, அடிக்கடி பார்ப்பனர்களை விமர்சிக்கிறீர்களே?  பார்ப்பன பெண் யாரையாவது காதலித்து தோல்வியடைந்தவரா நீங்கள்?
-பாஷ்யம் ரங்கநாதன்,
சிறீரங்கம்
பதில்:- பார்ப்பனக் காதலி பற்றி கடைசியில் சொல்கிறேன். கண்முன் இருக்கும் பிரச்சினையில் இருந்து துவங்குவோம். மோடியின் துக்ளக் தர்பாரில் நடக்கும் இந்த 1000/500 ரூபாய் விசயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.  கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல், இந்தக் கொடுமையை இணையத்தில் ஆதரித்துப் பேசுகின்றவர்களில் 10க்கு 9பேர் பார்ப்பனர்கள்.
இரவு 9மணிக்கு மோடி பஞ்ச் டயலாக் பேசினால் 8மணி 59நிமிடத்தில், “ஆஹா ஓஹோ.. இதனால இந்தியா வல்லசரசு ஆயிரும். அதுவரைக்கும் பக்கத்து வீட்ல கடன் வாங்குங்க. கிட்னியை வைத்து சட்னி வாங்குங்க. ஜெய்ஹிந்த்,” என்று வீடியோ போடுகின்றவர்கள் பார்ப்பனர்கள்தான்.
பூணூல் தெரிய சட்டை அணிந்துகொண்டு, “மோடி ரூபாய் நோட்டுக்குள்ள சிப்ஸ்சு வச்சிருக்காரு. சாட்டிலைட்டுகுள்ள கேக்கு வச்சிருக்காரு…,” என வீடியோ போடுகின்றவர்கள் பார்ப்பனர்கள்தான்.
“ஏழைங்க எல்லாம் எப்படி சில்லறை இல்லாமல், ரூபாய் நோட்டு இல்லாமல் சாப்பிடுவாங்க?” என யாராவது கேட்டால், “ரேஷன்ல அரிசி ஃப்ரீதானே? நாட்டுக்காக ரெண்டு நாள் பட்டினி கிடந்தா ஒன்னும் செத்துவிட மாட்டாங்க,” என க்ரெடிட் கார்டு திமிரில் பதில் போடுகின்றவன் பார்ப்பானாகத்தான் இருக்கிறான்.
தேவர் ஜெயந்தி வந்தால் முதல் ஆளாக வாழ்த்து போடுவதுபோல அந்த சாதி இளைஞர்களை உசுப்பிவிட்டு குளிர்காயும் ஆள் பார்ப்பானாகத்தான் இருக்கிறான்.
இன்று மட்டுமல்ல, காலங்காலமாய் ஏழைப் பாழைகள், உரிமைக்காக போராடுபவர்கள், கல்விக்காக ஏங்குபவர்கள் இப்படி அனைவரையும் ஈவிரக்கமின்றி நசுக்க முற்படுபவர்களில் முதல் வரிசையில் நிற்பவர்கள் அவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
சரி இவர்கள் செய்யும் அநியாயத்தில் கொஞ்சமேணும் ஏதாவது நியாயம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.
இடஒதுக்கீடு ஏதோ நாட்டையே கெடுப்பதுப்போல பொய்பேசும் இவர்கள் மேனேஜ்மண்ட் சீட்டுகள் இருப்பதை பற்றி என்றாவது பேசியிருக்கிறார்களா?
ஏழையிடம் பணம் பிடுங்குவதில் காட்டும் அக்கறையை ஏன் ஸ்விஸ் வங்கியில் குவிந்திருக்கும் கறுப்புப்பணத்தை பிடிங்குவதில் காட்டவில்லை மிஸ்டர்.மோடி என கேட்டிருக்கிறார்களா?
நீதிமன்றம் கேட்ட 500கோடிக்கு மேல் வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிய பணக்கார கடன்காரர்களின் லிஸ்டை ஏன் இன்னும் கொடுக்கவில்லை என யாராவது மோடியை கேட்டிருக்கிறார்களா?
நாய் மேல் காட்டும் பரிவை, காளைகள் மேல் காட்டும் பரிவை உடுமலை சங்கர்கள் மேல் காட்டியிருக்கிறார்களா? ஏதாவது சாதி ஒழிப்பு, மறுப்பு போராட்டங்களில் தென்பட்டிருக்கிறார்களா? அல்லது ஒரு கண்டனமாவது தெரிவித்திருக்கிறார்களா?  இட ஒதுக்கீட்டை ஒருபக்கம் திட்டினாலும், இன்னொருபக்கம் தலித்துகளுக்கு எதிராக ‘இட ஒதுக்கீட்டுப்போராளி’ அய்யா ராமதாஸ் ஒரு கூட்டத்தைக் கூட்டினால் நெய் ஊற்றி எரியவிட முதல் ஆளாக போய் அமர்ந்திருக்கிறார்கள்.
சரி. அப்படியே அவர்களில் யாராவது ஒருவன் மதவாதத்தை எதிர்த்து, மோடியை எதிர்த்து, அநியாயத்தை எதிர்த்து எழுதினால், “ஆஹா நமக்கொரு தோழன் கிடைத்துவிட்டான்,” என நிமிர்வதற்குள், அவனும் அரேபிய ஆடுகளை ஏமாற்றிக் கூட்டிப்போய் யாக நெருப்பில் போடுகின்றவனாக அல்லவா இருக்கிறான்?
இவர்களுக்கு 3000 ஆண்டுகளாக சமூகப்படிநிலையில் ஆண்டு அனுபவிக்கும் தங்கள் இடத்தை காத்துக்கொள்ள சாதி வேண்டும்.  அதற்கு மதம் வேண்டும்.  அதற்கு அழகான பட்டு அங்கியாக தேசப்பற்று என்ற சொல்லாடல் வேண்டும்.  அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், செய்கிறார்கள்.
கேட்டால், முன்பு போல் இல்லை அவர்கள் எல்லாம் சாந்தசொரூபிகள் என்பீர்கள்.  தனியார் துறையில் வேலை பார்க்கும் எவனாவது ஒருவனை தன் டூவீலரிலோ, அல்ல கணிணியிலோ பெரியார் படத்தை ஒருமாதம் வைக்கச் சொல்லுங்களேன் பார்ப்போம்.  ஒன்பது ஓட்டைகளிலும் ரத்தம் வரும் அளவிற்கு வேலையைக் காட்டுவார்கள்.     திராவிட இயக்கம் ஆழ வேரூன்றியுள்ள தமிழகத்திலேயே இதுதான் நிலைமை.
எனக்கும் தேசப்பற்று உண்டு. தேசம் என்பது அந்த தேசத்தின் மக்கள் தானேயொழிய, தேசப்பற்று என்பது அந்த மக்களின் மீது நாம் கொள்ளும் பற்றுதானேயொழிய, தேசம் என்பது தனியாக வானத்தில் இருந்து குதித்தது இல்லை. ஒருநாளைக்கு நூறு ஜெய்ஹிந்த் சொல்லும் ஆட்களை விட எனக்கு தேசப்பற்று நிறையவே உண்டு.
சார். நான் சாதி எல்லாம் பார்ப்பதில்லை.  மக்கள் விரோதமாக எழுதும் கயவர்களாக பார்த்து கண்டிக்கிறேன்.  அவர்களில் 99% பேர் பார்ப்பனர்களாக இருப்பது என் தவறில்லை.

பூணூல் தெரிய சட்டை அணிந்துகொண்டு, “மோடி ரூபாய் நோட்டுக்குள்ள சிப்ஸ்சு

காதலியைப் பற்றி கேட்டீர்கள் அல்லவா? ஆம். சிறு வயதில் எனக்கொரு பார்ப்பனக் காதலி இருந்தாள்.  அவள் பத்து க்ரெடிட் கார்டுகள் வைத்துக்கொண்டு தேசப்பற்று பேசும் பெரிய பணக்காரி எல்லாம் கிடையாது. இந்நேரம் தன் குழந்தைகளை வைத்துக்கொண்டு பேங்கிலோ, ஏடிஎம்யிலோ வரிசையில் நின்று கொண்டிருப்பாள். சில்லறைக்காக வெயிலில் அலைந்து கொண்டிருப்பாள்.  சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு இந்நேரம் அவளைப் போல எத்தனையோ பெண்கள்  சிரமப்பட்டுக்கொண்டிருப்பார்கள். எல்லோருக்கும் சேர்த்துதான் என்னைப் போன்றவர்கள் காட்டுக்கத்தல் கத்திக் கொண்டிருக்கிறோம்.

நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை :

நாம் ஏன் அரசை குறை சொல்கிறோம்..???
இது உண்மையிலே 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று செய்தி பரப்பிய தொலைக்காட்சிகளின் தவறு. அரசாங்கம் நாளை முதல் 500, 1000 நோட்டுகளின் மதிப்பு செல்லாது என்று சொல்லவில்லை. அந்த நோட்டுகளுக்கு ஈடான தொகையை தருவதாகத்தான் சொல்லி இருக்கிறது.

நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை :
நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை :

   நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை :
1. இன்று புழக்கத்தில் இருக்கும் 10,000 நோட்டுகளில் 40 நோட்டுகள் கள்ள நோட்டுகள். இனி இந்த நோட்டுகளை பயனற்றதாகிவிடமுடியும்.
2. 2.5 ஆண்டுகளாக கள்ள நோட்டுகளை ஒழிக்க என்ன செய்தது அரசு என்று கேட்டோம். கள்ள நோட்டுகளை ஒழிப்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. அதை செய்ய மக்களின் ஒத்துழைப்பு நிச்சயம் தேவை. கள்ள நோட்டுகள் பொதுவாகவே 500, 1000 ஆக தான் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவைகளை புழக்கத்தில் கொண்டு வர முடியும் (100, 2000 நோட்டுகளாக ).. நாட்டின், நாட்டு மக்களின் நன்மைக்காக மிக பெரிய இந்த முடிவை கொஞ்சம் சிரமேற்கொண்டு ஏற்று தான் ஆகவேண்டும்.
3. இந்த முடிவால் தற்போது சுற்று பயணங்கள் மேற்கொண்டுள்ளவர்கள், திருமணம் போன்ற விசேஷங்கள் வைத்திருப்பவர்கள், இன்று கையில் பணம் இல்லாமல் ATMல் வைத்திருப்பவர்கள் சிரமப்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதை விடவும் மிகுந்த சிரமத்துக்குள்ளாக இருப்பது லட்சங்கள் கோடிகள் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் தான். ஏனெனில். 11-11-2016 முதல் வங்கியில் ரொக்க பரிமாற்ற அளவு 1 நாளைக்கு 10000 தான். வாரத்திற்கு 20000 தான். ATM ரொக்க பரிமாற்றம் 1 நாளைக்கு 2000 தான். ஆகவே இன்னும் இருக்கும் 50 நாட்களுக்குள் 4 முதல் 5 லட்சத்துக்கு மேல் கருப்பு பணத்தை LEGAL முரையில் மாற்றி வெள்ளையாக்க இயலாது. கண்டிப்பாக ஆதார் அல்லது பான் எண் மூலம் மீதி பணத்தை வங்கிகளில் கட்டி ஆகவேண்டும். எனவே பெரிய கவலை பெரிய பணம் வைத்திருப்பவர்களுக்கு தான்.
4. மேலும் சாமானியன் இந்த சூழ்நிலைகளை எதிர் கொள்ளத்தான். ஜன் தன் யோஜனா போன்ற வாங்கி பரிவர்த்தனை தொடர்பான திட்டங்களை முதலில் அரசு ஊக்குவித்தது.
5. மேலும் இன்னும் வங்கி கணக்கு இல்லாத சாமானியர்கள் வங்கி கணக்கு துவக்க இது ஒரு வாய்ப்பாகிறது.
6. ஏன் இந்த கணக்கில் வராத பணத்தை நாமாகவே தெரிவிக்க செப்டம்பர் 31 வரை காலக்கெடு கொடுத்திருந்தது அரசு. நியாமாக வழங்க வேண்டிய அத்தனை வாய்ப்பையும் வழங்கிவிட்டு தான் இப்பொது இதை செய்கிறது அரசு.எல்லாமே முன்னரே பக்காவாக திட்டமிடப்பட்டுள்ளது சில ஆண்டுகளாக. இது வெறும் சில நாள் கஷ்டம்.
7. ரொக்கமில்லா பரிவர்த்தனை ஊக்குவிக்க இந்திய பொருளாதாரத்தை நிலையாக்க வளர்க்க இந்த சிரமத்தை நாம் தாங்கி கொள்ளத்தான் வேண்டும். ஏன் மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் வந்த போது 15, 20 நாட்கள் முதல் மாத கணக்கில் நாம் இதை தாங்கிக்கொண்டு மீண்டு வரவில்லையா. அது போல் நாம் ஒருவருக்குஒருவர் உதவிகொண்டு இந்த 2 நாட்களை கடக்க வேண்டியதுதான். நாட்டின் முன்னேற்றத்துக்காக இதை கூட தாங்கிக்கொள்ளவில்லை என்றால் அரசாங்கத்தால் மட்டும் என்ன செய்துவிட முடியும்.
8. கருப்பு பணத்திற்கெதிராக நானும் போராடுகிறேன் களத்தில் இறங்கி என்று பெருமை கொள்வோம். பொறுத்துக்கொள்வோம்.
எல்லாம் கொஞ்ச காலம்..
நன்றி ஜீ..
Thanks by  Ganapathy Bjp Nellai —

அமெரிக்க புதிய அதிபர் பதவியேற்றவுடன், அதிரடியாக சிஐஏ, பெண்டகன், எஃப்பிஐ – உயர்மட அதிகாரிகளைச் சந்தித்தார்

அமெரிக்க புதிய அதிபர் பதவியேற்றவுடன், அதிரடியாக சிஐஏ, பெண்டகன், எஃப்பிஐ – உயர்மட அதிகாரிகளைச் சந்தித்தார்.
டிரம்ப் – ISIS உடனே ஒழிக்க வேண்டும், நோ டிலே.
சிஐஏ – அது முடியாது சார், நாமதான் அவங்கள துருக்கியோடு சேர்த்து உருவாக்கினோம்
டிரம்ப் – அது ஜனநாயக கட்சி உருவாக்கினது தானே, நமெக்கென்ன
சிஐஏ – அது நாம உருவாக்கினது சார், உங்களுக்கு வேண்டுமோ இல்லையோ அதனால பெட்ரோலியம் கிடைக்கிறது நின்னு போயிடும்.
டிரம்ப் – பாகிஸ்தானுக்கு கொடுக்கும் நிதியை நிறுத்துங்க, இந்தியா கூட டீல் வைங்க.
சிஐஏ – அது முடியாது சார்
அமெரிக்க புதிய அதிபராகப் பதவியேற்றவுடன், அதிரடியாக சிஐஏ, பெண்டகன், எஃப்பிஐ – உயர்மட அதிகாரிகளைச் சந்தித்தார்
அமெரிக்க புதிய அதிபர்
டிரம்ப் – ஏன் முடியாது ?
சிஐஏ – அப்படி செஞ்சா, பாகிஸ்தான் கிட்டே இருந்து பளுச்சிச்தானை இந்தியா பிரிச்சிடும்
டிரம்ப் – அதுபற்றி எனக்குக் கவலை இல்லை.
சிஐஏ – இந்தியா காஷ்மீர்ல அமைதியா கொண்டு வர நினைக்குது, நம்மகிட்டே இருந்து ஆயுதமும் வாங்குறது இல்ல. அவங்க சூப்பர் பவரா மாறிகிட்டு வாராங்க. நாம பாகிஸ்தானுக்கு நிதி கொடுத்தாதான் காஷ்மீர் எப்போதும் பிசியா இருக்கும்.
டிரம்ப் – சரி, தாலிபானை அழிச்சிடுங்க.
சிஐஏ – அதுவும் முடியாது சார், நாமதான் ரஷ்யாவை விரட்டத் தாலிபானை உருவாக்கினோம். இப்ப அவங்க தான் பாகிஸ்தானை எப்போதும் பிசியா வச்சி இருக்காங்க.
டிரம்ப் – மத்திய கிழக்கு நாடுகளில், பயங்கவாரதிகளுக்கு பண உதவி செய்யும் சோர்ஸ்சை நிறுத்த வேண்டும்.
பெண்டகன் – அது முடியாது சார், நாம தான் அவங்கள அப்படி செய்யச் சொன்னோம், அப்பத்தான் அவங்களோட ஆயில் நமக்குக் கேட்டபடி கிடைக்கும்.
டிரம்ப் – ஈரான் மீது படை எடுத்தல் என்ன ?
பெண்டகன் – நாம அவங்க கூட இப்ப பேச்சுவார்த்தை நடத்க்கிட்டு இருக்கோம், அதனால இப்ப முடியாது சார்.
டிரம்ப் – மறைமுகமாதான் அவங்கள காலி பண்ணனும். மேலும், அவங்களுக்கு சப்போர்ட்டா ரஷ்யா வரும். அப்புறம் சிரியாவுல இருக்கிற நம்ம ISISக்கும், இஸ்ரேலுக்கும் எப்போதும் ஈரான் ஒரு எதிரியாவே இருக்கட்டும், அப்பத்தான் நல்லது.
டிரம்ப் – அப்படின்னா, ஈராக்கை மீண்டும் கைபற்றுவோம்,
சிஐஏ – அது தேவையில்லை, நம்ம ISIS ஆளுங்க முக்கால்வாசி இடத்த புடிச்சி வச்சி இருக்காங்க, நாம புடிச்சா என்ன அவங்க புடிச்சா என்ன ?
டிரம்ப் – ஏன் முழு ஈராக்கையும் கைபற்றல?
சிஐஏ – ஈராக்கில நாம வச்சி இருக்கிற டம்மி சியா அரசுக்கு எப்போதும்
ISIS எப்போதும் செக் வச்சிகிட்டே இருக்கணும்.
டிரம்ப் – முஸ்லிம்கள், அமெரிக்காவர நான் தடை செய்யப் போறேன்.
எஃப்பிஐ – அது முடியாது சார்,
டிரம்ப் – ஏன் ?
எஃப்பிஐ – அப்புறம் நம்ம மக்களுக்குப் பயம் இல்லாம போயிடும்.
டிரம்ப் – H1B விசாவை கேன்சல் செய்யப் போறேன்…!
USCIS – அது உங்களால முடியாது?
மூத்த அதிகாரி – அப்படி செய்தா, வெள்ளைமாளிகை நிர்வாகத்தைப் பெங்களூருக்கு மாத்த வேண்டி இருக்கும்.
டிரம்ப் – (வேர்த்து விறுவிறுத்து போயி)அப்பப் பிரசிடெண்டா நான் என்ன செய்ய ?
சிஐஏ – வெள்ளை மாளிகையில நல்லா என்ஜாய் பண்ணுங்க, மத்தத நாங்க பாத்துகிறோம்.
(ஆங்கிலத்தில் தந்தவர் Maheen Kunjappa, thanks)
அமெரிக்க புதிய அதிபர்
Publish Free Ads Classifieds

ரூபாய் நோட்டு பற்றி பீதி தேவையில்லை.. இப்போ மக்கள் செய்ய வேண்டியது இதுதான்! பீதியை கிளப்பவேண்டாம்

ரூபாய் நோட்டு பற்றி பீதி தேவையில்லை.. இப்போ மக்கள் செய்ய வேண்டியது இதுதான்! பீதியை கிளப்பவேண்டாம்
இன்று இரவு முதல் ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்துள்ளார்.
கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை அவசியப்படுவதாகவும், சிரமத்தை பொறுத்துக் கொண்டு, மக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், மோடி கேட்டுக் கொண்டார்.

ரூபாய் நோட்டு
ரூபாய் நோட்டு

இப்போது செய்ய வேண்டியது என்ன என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும். குழப்பமோ, பதற்றமோ, பீதியோ படாமல் இதை படித்து பாருங்கள் போதும்.
*நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணியோடு ரூ.500 மற்றும் ரூ.1000 முகமதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் செல்லாது.
*ஏடிஎம் மற்றும் வங்கிகள் நாளை திறந்திருக்காது. எனவே நாளை நோட்டுக்களை மாற்றிக்கொள்ள முடியாது
*10ம் தேதி பல பகுதிகளில் ஏடிஎம் திறந்திருக்கும். சில பகுதிகளில் திறக்காது. வங்கிகள் திறக்கப்படும். அன்று ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம்.
*ஒருவரிடம், ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் மட்டுமே இருந்தால், நோட்டுகளை மாற்றிக்கொள்ளும்வரை, அவர்கள் டிடி, செக், டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம்.
*ஏழை, எளியவர்களிடம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இருப்பது சாத்தியமில்லை என்பதால், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் வரும் 11ம் தேதி நள்ளிரவு வரை ரூ.500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் செல்லும்.
*வரும் டிசம்பர் 30ம் தேதிவரை, இந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் கொடுத்து, புதிய வகை ரூ.500 அல்லது ரூ.2000 ரூபாய் நோட்டுக்களாக அவற்றை மாற்றிக்கொள்ள அவகாசம் தரப்பட்டுள்ளது.
சில காரணங்களால், அதற்குள் மாற்ற முடியவில்லை என்றால், அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிவரை அவகாசம் உள்ளது. ஐடி ஃப்ரூப் காண்பித்து ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம்.
100 ரூபாய் நோட்டுக்கள் அதிகம் வைத்திருப்பவர்கள் மற்றவர்களுக்கு உதவ முன்வரலாம் …தவறில்லை….
சென்னை மற்றும் நகரவாசிகள் பலர் கிரடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் அனைத்து பொருட்களையும் வாங்க முடியும் என்பதால் அவர்களுக்கு சிரமங்கள் அதிகமிருக்க வாய்ப்பில்லை
கிராம மக்களின் நிலைதான் பரிதாபத்திற்குரியது…இருந்தாலும்….கிராமத்தினர் மற்றவர்களின் கஷ்டங்களில் உதவுவார்கள் என நம்பலாம்…
நாளையும் நாளை மறுநாளும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தால் தப்பிக்கலாம்…..
மக்களிடம் பீதியை கிளப்பி அவர்களை மேலும் சிரமத்துக்குள்ளாக்க வேண்டாம்

http://Publish Free ads

2 இதைப்பத்தி எழுதவே கூடாதுன்னு நினைச்சேன். இருந்தும் இதைச் சொல்லாம போவது தப்பு என்பதால் இந்த ஸ்டேட்டஸ். இதுதான் முதலும் கடைசியும்.
1. இப்ப நான் ஒரு செய்தி படிச்சேன். நெட்ல நோண்டியபோது கிடைச்சது. இந்தியாவில் 93% வந்து இன்ஃபார்மல் செக்டார்தான். அதாவது, இந்தியாவில் வெறும் 7% மட்டுமே பக்காவாக வங்கி அக்கௌண்ட்கள் மூலம் சம்பளம் பெறுகின்றனர். பாக்கி 93%, சம்பளக்கவர்களில்தான் பணம் பெறுகின்றனர். அதாவது, தினக்கூலிகள் முதலியவர்கள். இவர்களின் சேமிப்பும் பணமாகத்தான் அவர்களிடமே உள்ளது. இவர்களுக்கு வங்கி அக்கவுண்ட் கிடையாது.
அதாவது, குறைந்தபட்சம் 233 மில்லியன் மக்களுக்கு வங்கி அக்கௌண்ட்கள் கிடையாது என்பது குறைந்த பட்சத் தகவல். இணையம் அப்படித்தான் சொல்லுது
இவர்கள் நாளை முதல் என்ன ஆவார்கள்? இவர்களின் சேமிப்பின் கதி என்ன? டிசம்பர் கடைசிவரை மாற்றிக்கொள்ளலாம் என்றாலும், இவர்களுக்கு நாளை முதல் வழங்கவேண்டிய தினசரி சம்பளத்தின் நிலை என்ன? நாட்டின் 93% மக்களின் சம்பளத்தேவையைப் பூர்த்தி செய்யும்வகையில் வங்கிகள் தயார் நிலையில் உள்ளனவா? எல்லாருக்கும் 100 ரூவாய்லதான் சம்பளம் கொடுக்கணும். அதான் மேட்டர். தயாரா?
2. புதுசா இண்ட்ரோ கொடுக்கும் 500, 2000 நோட்டுகளில் கறுப்புப் பணத்தைத் தடுக்க இவர்களின் மெஷர்கள் என்ன?
3. தங்கம், ப்ராப்பர்ட்டி, ஹவாலா, பினாமி… இதெல்லாம் வெச்சிப் பரவியிருக்கும் கறுப்புப் பணம்தான் இந்தியாவில் மிக அதிகம். இதை எப்படித் தடுக்கப்போறாங்க?
4. இதுதான் மிக முக்கியமான பாயிண்ட்டா எனக்குத் தோணுது. உத்தரப்பிரதேசத் தேர்தலின் தேதி என்ன?
வந்தார்கள் வென்றார்கள்ல முகம்மது பின் துக்ளக் பத்தி ஒரு ரெஃபரன்ஸ் இருக்கும். இந்தியாவில் முதன்முறையா நாணயம் அறிமுகப்படுத்தியது அவர்தான். ஆனால் கள்ள நாணயங்கள் உடனுக்குடன் தயாரிக்கப்பட்டதால், ஒருநாள் திடீர்னு, இதுவரை அடித்த நாணயங்கள் செல்லாதுன்னு அறிவிச்சார். முறைப்படி சேர்த்து வைத்தவனுங்களும் உடனடி போண்டி.நடுத்தெரு. அடுத்த நாள், முறைப்படி கணக்குக் காட்டினால் கஜானாவிலிருந்து பணம் தரப்படும்னு சொன்னார். அப்படி செஞ்சதில் மூணே மாசத்தில் அரசு கஜானாவே காலி.
கறுப்புப் பணம், பணமா மட்டும்தான் இருக்கா? அது எப்பவோ ரெகுலரா கன்வெர்ட் ஆகி வெளிநாடுகளில் என்னன்னமோ வகையா மாறியாச்சு. இப்போ இந்தத் திடீர் அனௌன்ஸ்மெண்ட்டால் ஏமாறப்போறவங்க கட்டாயம் உண்டு. உள்ளூர்ல கத்தை கத்தையா பணத்தைக் கறுப்பா வெச்சிருக்குறவங்க. அதை நான் மறுக்கமாட்டேன். ஆனால் இதெல்லாம் மிகமிகக் கம்மி பர்சண்டேஜ் மட்டுமே. நம்ம அரசியல்வாதிகளுக்கும் பண முதலைகளுக்கும் பணத்தை எப்படியெல்லாம் மாத்தலாம் என்பதைச் சொல்லியா தரணும்?
மோதி அரசு கறுப்புப் பணத்துக்கு எதிரா எதுவுமே செய்யல என்ற வாதத்தை இந்த அறிவிப்பு தடுக்கப் பார்க்குது. அவ்வளவே. பேப்பரில் இது ஒரு செம்ம திட்டம். ஆனால் ப்ராக்டிகலாக இதனால் எந்தப் பயனும் இல்லை என்பது என் கருத்து. தேர்தல்கள் நெருங்குது.திடீர் அறிவிப்புத் தேவை. அதான் இது என்பதே எனது எண்ணம். இது ஏன் இப்படி நினைக்கிறேன் என்பதுக்குப் பல காரணங்கள் உண்டு. சிலவற்றை மேல சொல்லீருக்கேன். அரசியல்வாதிகள் இதுபோல் அறிவிப்பதைக் கேள்வியே கேட்காமல் என்னால் கண்மூடித்தனமாகக் கொண்டாட இயலாது. அது காங்கிரசா இருந்தாலும் சரி, கம்மியூனிஸ்டா இருந்தாலும் சரி. பீஜேபியுந்தான். அதிமுக, திமுக. எல்லாமே இதில் அடக்கம். தனக்கு எதைப் பண்ணிக்கணுமோ அதெல்லாம் நல்லாப் பண்ணீட்டுதான் இது போன்ற ‘ரகசிய’ ப்ளான்கள் எல்லாம் அறிவிக்கப்படும் என்பதை நம்புறவன் நானு.
அவ்ளதான், நன்றி. வணக்கோம். Written By Karundhel Rajesh
3 1978 ல் அன்றைய ஜனதா அரசு அதிக மதிப்பீடு உள்ள நோட்டுகளை இதே போல் தடை செய்தது.(Soமோடிதான் முதன் முதலில் என்று வழக்கம்போல் வரலாறு தெரியாமல் ஆரம்பிக்காதீர்கள்!)

ரூபாய் நோட்டு
ரூபாய் நோட்டு

அதனால் கருப்புப் பணம் ஒழிந்துவிட்டதா என்ன? அதிகரித்துத் தான் இருக்கிறது. ஆகவே இது ஒரு சிறு முயற்சி மட்டுமே அதுவும் சாதாரண மக்களின் வயிற்றெறிச்சலைக் கொட்டிக்கொண்டு!
மேலும் பெரும்பாலான கருப்புப் பணம் வெளிநாடுகளில், தங்கத்தில், ரியல் எஸ்டேட்டில் பதுக்கலாக ,முதலீடுகளாக உள்ளது.பெரும் கொள்ளைக்காரர்களின் பணம் பாதுகாப்பாக வெளிநாடுகளில் இருக்கும். நடுத்தர கொள்ளைக்காரர்களுக்கு ஏற்கனவே வெள்ளையாக்கும் ‘பேர் அன் லவ்லி’ திட்டம் மூலம் வாய்ப்பு அளிக்கப்பட்டு விட்டது. அதற்கு அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு வெள்ளையாக்க 50 நாட்கள் வாய்ப்பு உள்ளது. இதில் கிடந்து சாவது நம்மைப் போன்ற சாதாரண மக்கள்தான்.

கருப்புப் பணத்தை ஒழிக்க முதலில் ஊழலை ஒழிக்க வேண்டும். அதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம், லோக் பால், சிவிசி, உள்ளாட்சி அமைப்புகள்,நீதிமன்றங்கள், ஊடகங்கள் வலுவோடு இருக்க வேண்டும்
மோடி இவற்றைத்தான் முதலில் ஒழிக்கிறார். பிறகெப்படி கருப்புப் பணத்தை ஒழிப்பது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டு விட்டா?! Jothimani Sennimalai

 

அம்பானி குரூப் எண்ணெய் திருடிய ரிலையன்சின் அம்பானி குரூப்

எண்ணெய் திருடிய ரிலையன்சின் அம்பானி குரூப்
எண்ணெய் திருடிய ரிலையன்சின் அம்பானி குரூப்

எண்ணெய் திருடிய ரிலையன்சின் அம்பானி குரூப்.
அம்பானி குரூப்
பத்தாயிரம் கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கூறும் மத்திய அரசு.
ஓஎன்சி மற்றும் ரிலையன்ஸ் இணைந்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க ஒபந்தம் போட்டு இந்தியா முழுக்க தேடினார்கள், கடைசியில் எண்ணெய் இல்லை என்று கைவிரிதார்கள், இந்தத் திட்டத்திற்கு இந்தியா பல ஆயிரம் கோடி சிலவு செய்தது அது வேற கதை.
தேடுகிறோம் என்று கிடைத்த எண்ணெயை ரிலையனஸ் குரூப் திருட்டுத்தனமாக விற்று கொள்ளை லாபம் பார்த்து இருக்கிறது.
இதற்காகத் தனி நபர் கமிஷனும் அமைக்கபட்டுள்ளது. அந்தக் கமிஷன் அறிக்கையும் “திருட்டு” நடந்தது உண்மை அதனால் அரசுக்குப் பல கோடி வருமானம் இழப்பு என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அந்த அறிக்கையின் படி, நஷ்டஈடாக ரூ 1௦௦௦௦ கோடி, ரிலையன்ஸ் தர வேண்டும் என்று மத்திய கோரி உள்ளது.
– இந்தப் பத்தாயிரம் கோடிக்குப் பதிலாக ஐநூறு கோடி தேர்தல் நிதியாகக் கொடுத்து அவர்கள் பிரட்சினையை சுலபமாக முடிப்பார்கள் என்பது வேறு விஷயம், இதெல்லாம் பெரிய இடத்து சமாசாரம். சாமானிய மக்கள் வரி செளுத்தாவிட்டால்தான் பிரட்சினை…
2  எல்லை தாண்டிய பயங்கரவாதம்…..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவி, ஒரு இந்திய வீரரின் உடலைச் சிதைத்துவிட்டு சென்றுள்ளனர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்….?
எல்லை தாண்டி ஊடுருயவர்கள் யார்?
பாகிஸ்தான் ராணுவமா? – இல்லை …!
பாகிஸ்தானையோ அல்லது இந்தியாவையோ சார்ந்த ஏதோ ஒரு மூளை சலவை செய்யப்பட்ட ஒரு குழு,
இந்த செயலைச் செய்தது பாகிஸ்தான் ராணுவம், அதனைச் செய்யும்படி உத்தரவு போட்டது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், என்று யாரெல்லாம் கூறுகிறார்களோ, அவர்களைப் போன்ற அடி முட்டாள்கள் இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது.
உதாரணம் வேண்டுமா?
பிஜேபி ஆளும் ஹரியானாவில், மேவாத் என்ற இடத்தில் இரு முஸ்லிம் இளம் பெண்கள் கூட்டு பலாத்காரம் செய்யப் படுகிறார்கள், இருவர் கொல்லப்படுகிறார்கள்,
இந்த செயலைச் செய்தவர்கள் காவி தீவிரவாதிகள், இவர்களை இப்படி செய்யச் சொன்னது இந்திய பிரதமர் மோடி…. !
– இப்போது இதை ஏற்று கொள்கிறீர்களா? – இது சரி என்றால், அதைச் செய்தது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் என்பதையும் ஏற்று கொள்கிறோம்.
காரணம், பாகிஸ்தானியர்கள் பார்வையில், மாட்டு இறைச்சி என்ற பெயரில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது மோடியின் உத்தரவின் பேரில்தான் என்று அவர்களும் அங்கே செய்தி பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
written by Haja deen
 
Publish Free Ads Classifieds

திப்பு சுல்தான் மேற்கத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்

திப்பு சுல்தான்  அவன்
அரிதாய்ப் பூத்த
அத்திப்பூ…
———–
அவன் பெயரைச்
சொன்னால்
கொடியோருக்கு
கொ திப்பு…
தேசப்பற்றுள்ளோர்க்கோ
அத்திப்பே
தித்திப்பு..
Hajakhani.
No automatic alt text available.
திப்பு சுல்தான்
1. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை அதிகம் அச்சப்படுத்திய இந்தியர் திப்பு சுல்தான். மன்னர் திப்பு சுல்தான் இறந்தபொழுது, அதைக் கொண்டாடுவதற்கு, எழுத்தாளர்கள், நாடக ஆசிரியர்கள் மற்றும் ஓவியர்களைக் கொண்ட் படைப்புகளை உருவாக்கச் செய்து கொண்டாட்டங்களை முன்னெடுத்தது ப்ரிட்டிஷ் அரசு. எடுத்துக்காட்டாக, வில்கீ காலின்ஸின் பிரபல நாவலான “Moonstone”-இல் மன்னர் திப்புவின் கோட்டையைப் படை சூழ்ந்துள்ள காட்சிதான் முதல் காட்சியாக எழுதப்பட்டுள்ளது.
2. பிரிட்டிஷார்களால் இந்தியாவிற்கு வரவிருந்த ஆபத்துக்களை அறிந்த, அவர்களை எதிர்த்து நான்கு போர்களை மேற்கொண்ட ஒரே இந்திய மன்னர் என்னும் வகையில், அவரை முதல் சுதந்திரபோராட்ட வீரராகப் பார்க்கலாம்.
3. இந்தியாவிலிருந்து பிரிட்டிஷார்களை வெளியேற்றத் தன்னுடன் இணைந்து செயல்படுமாறு, ஓட்டோமேன் மற்றும் பிரெஞ்சு ஆட்சியாளர்களுக்குக் குழுவை அனுப்பியதன் மூலம், பிரிட்டிஷ் ஆதிக்கத்தை அதை முற்றிலும் எதிர்த்தார் என்பது புலப்படுகிறது.
4. திப்பு சுல்தான் மேற்கத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். இதனால், துப்பாக்கி செய்யும் வல்லுநர்கள், பொறியாளர்கள், மற்றும் போர்முறை ஆயுதங்கள் தொடர்பாக நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்களை ஃபிரான்ஸிலிருந்து மைசூருக்கு வரவழைத்தார். அதன் பிறகு, வெண்கலத்தால் ஆன பீரங்கிகள், வெடிபொருட்கள் மற்றும் குழல்களை மைசூரிலேயே தயாரிப்பதற்கான தயாரிப்பு ஆலையையும் வடிவமைத்தார்.
5. திப்பு சுல்தான் தனது ஆற்றலை உலகறியச் செய்வதற்காகப் புலியின் படத்தைப் பல்வேறு தளங்களிலும் பயன்படுத்தியிருக்கிறார். அவரது தங்க அரியணை, அவரது உடைகள், நாணயங்கள், வாள் மற்றும் போர் வீரர்களின் சீருடைகள் ஆகியவற்றில் புலியின் படத்தைப் பொறித்திருந்தார். அவரது ஆட்சியில் இந்து சமயத்தைப் பின்பற்றும் மக்களுக்காக, தெய்வீகத்தை ஆதரிப்பதை உணர்த்தும் விதமாகச் சூரியனின் புகைப்படத்தையும் பயன்படுத்தினார்.
6. திப்பு, கனவுகளின் புத்தகமான, க்வாப் நாமாவில் தனது கனவுகளைப் பதிவு செய்திருக்கிறார். படையெடுப்புகள், போர்களைக் குறித்த அறிகுறிகள் மற்றும் உள்ளுணர்வுகளைக் குறித்தும் அதில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
7. திப்பு படையெடுத்த வந்த அந்நிய மன்னர் அல்ல. அவரது மூன்றாம் தலைமுறையினர் தென் இந்தியாவில் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். திப்பு சுல்தானின் முதன்மை அமைச்சராக இருந்தவர் பூர்ணய்யா, இந்து மதத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீரங்கநாதர் கோவில், சிருங்கேரி மடம் உட்பட பல ஹிந்துக் கோவில்களுக்குத் தாராளமாக நிதி உதவி அளித்து, அவற்றின் கட்டுமானங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளார்.
திப்பு சுல்தான் 1783 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையில் போர்பற்றிய நியதிகளைக் கீழ்க்குறித்தவாறு அறிவித்துள்ளார்:- “போரிடும்போது எதிரிகளிடமிருந்து நாம் எதையும் அபகரிக்கக் கூடாது. மக்கள்மீது போர் தொடுக்கக் கூடாது. பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். கண்ணியக் குறைவாகப் பெண்களிடம் நடக்கக் கூடாது. குழந்தைகளைச் சித்ரவதை செய்யக் கூடாது. கோயில்களில் கொள்ளையடிக்கக் கூடாது. சேதப்படுத்தக் கூடாது. திப்பு 1787 ஆம் ஆண்டு முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார்…
திப்பு, கனவுகளின் புத்தகமான, க்வாப் நாமாவில் தனது கனவுகளைப் பதிவு செய்திருக்கிறார்
Thanks By news 7. ns7.tv/
முதல் நாள் கொண்டாட்டம் அப்புறம் திண்டாட்டம்!

பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!!

“மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேதுநா!”
என்று மந்திரம் தொடங்கியதும், கெட்டி மேளம் கெட்டி மேளம் என்ற சவுண்டை கேட்கலாம், மணமகன், மணமகளுக்கு தாலி கட்டுவார்.
இந்தத் தாலியில் பல வகை உண்டு, ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு வகையான தாலிகள், அதே போன்று தாலிகட்டுவதிலும் பல முறைகள் உண்டு.
1- கோமட்டி, கப்பேரர், குருபர், யாடர் ஆகிய சாதிகளில் புரோகிதன் தாலியைக் கட்டுவான்.
2- படகர் சாதியில் நான்கைந்து மனைவியை உடைய பெரிய மனிதர் வந்து பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவார்.
3- காடர், காட்டுப்பட்டர், கோட்டை வெள்ளாளர், தொட்டியர், ஊராளி, வலையன் ஆகிய சாதிகளில் மணமகனின் உடன்பிறந்தவளோ, தாயோ தாலியைக் கட்டுவர்.
4- புலையன் சாதியில் மணமகனும் அவன் தோழனும் சேர்ந்து பெண்ணுக்குத் தாலி கட்டுவர்.
5- உப்பரர் சாதியில் பெண்ணின் ஊரைச் சேர்ந்த சீர்க்காரி என்பார் தாலி கட்டுவாள்.
6- நாட்டுக்கோட்டைச் செட்டிகளில் தாலியை மண நாளன்று மணமகளின் கோவிலைச் சேராத பெரியவர் ஒருவரும், பெண்ணின் நாத்தனாரும் கட்டுவர். – இப்படி பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவதிலும் வெவ்வேறு நடைமுறைகள். உண்டு.
அதே போன்று, பெண்ணைத் தாரை வார்த்து கொடுப்பதிலும் பல சம்பிரதயாங்கள் சாதிக்கேற்றவாறு மாறுபடும்.
—- இப்ப கேள்வி என்னான்னா?
பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டால், திருமணம் ஒழுங்கு முறை படுத்தப்பட்டால், எல்லா இந்துக்களும் எந்த வகை தாலியை செய்ய வேண்டும்? பெண்ணின் கழுத்தில் யார் கட்ட வேண்டும். எந்த ஜாதியை பின் பற்ற வேண்டும்.
வடமாநிலங்களில் தாலி கட்டும் பழக்கம் அவ்வளவாக இல்லை, அதைப் பின்பற்றி இனி இந்துக்கள் தாலி அணிய கூடாதா?
முஸ்லிம்களும், கிருஸ்தவர்களும் திருமணத்தின்போது, அம்மி மிதித்து அருந்ததி பார்க்க வேண்டுமா?
இந்துக்கள் அல்லாத சிறுபான்மையினரும் கட்டாயம் தாலி அணிய வேண்டுமா?
– பொது சிவில் சட்டம் தேவையா?
சிந்திப்பீர்!..செயல்படுவீர்.!!
No automatic alt text available.
பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!!
LikeShow more reactions

Comment

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (1) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left