Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

அகம்பாவ ஜெயலலிதா மேன்மையான கலைஞர்

அகம்பாவ ஜெயலலிதா மேன்மையான கலைஞர்

அகம்பாவ ஜெயலலிதா மேன்மையான கலைஞர் அப்பலோவில் ஆதித்தனாரை பார்க்க சென்ற ஜெயலலிதா வை மேடம் இது ஐசியு இங்க செருப்பு போடக்கூடாது என்று சொன்ன டாக்டர் பெயர் Dr. கருணாநிதி என்ற பெயர் காரணத்தினால் அவர் மறுநாள் புழல் சிறைவாசியானார்
எவ்வளவு அகம்பாவம், காழ்ப்புணர்ச்சியின் மொத்த வியாபாரி அகம்பாவ ஜெயலலிதா எங்கே?
நடுஇரவில் வயதான ஒரு முன்னாள் முதல்வரை அவரது மூப்பை பாராமல் அவரை இழுத்துச் சென்ற முகமத் அலி, ஜார்ஜ், முத்துக்கருப்பன் போன்ற உயர் மட்ட காவலர்களை 5 ஆண்டு கழித்து 2006ல் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றதும் பழிக்கு பழி என எதுவுமே செய்யாத கலைஞர் எங்கே?

இதுப்பற்றி அவரிடம் கேட்ட போது அவர்கள் என்ன செய்வாங்க? அவங்க செய்யச் சொன்னதை இவர்கள் செய்தார்கள்’ என்று பெருந்தன்மையோடு நடந்து கொண்டதை வரலாறு போற்றும்
திருவாரூர் சிறிய பள்ளியில் படித்தாலும், சென்னையின் ஆகச் சிறந்த சர்ச் பார்க்கில் படித்தாலும், ஸ்டெல்லா மேரிக் கல்லூரியில்(சில நாட்கள்) படித்திருந்தாலும், எதை மனதில் எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் மெய்யான, தரமான கல்வி.
சங்கு சுட்டாலும் நிறம் மாறாது. மேன்மக்கள் மேன்மக்களே!

Muralitharan PB

ப ஜ க நாம் தமிழர் கட்சி இரண்டுமே ஒன்றுதான் | எழுத்தாளர் டான் அசோக்

ப ஜ க நாம் தமிழர் கட்சி இரண்டுமே ஒன்றுதான்  எழுத்தாளர் டான் அசோக்

ப ஜ க நாம் தமிழர் கட்சி இரண்டுமே ஒன்றுதான் ஒற்றுமையை விளக்குகிறார் எழுத்தாளர் டான் அசோக்  சிறுவயதில் அண்ணன் எம்.ஜி.ஆரையும் தம்பி எம்.ஜி.ஆரையும் நம்பியார் பிரித்துவிடுவார். அண்ணன் எம்.ஜி.ஆர்தான் தனது எதிரி என தம்பி எம்.ஜி.ஆர் நினைத்துக் கொண்டிருப்பார்
சண்டை எல்லாம் கூட போடுவார்கள். ரெண்டு பேரும் வேறு வேறு மேனரிசங்கள் செய்வார்கள். ஒருவருக்கு கன்னத்தில் ‘மரு’ இருக்கும், இன்னொருவருக்கு இருக்காது
ஒருவர் கதாநாயகியின் பைஷப்ஸை மசாஜ் செய்தபடியே ‘க்யூட்டாக’ லவ் பண்ணுவார். இன்னொருவருக்கோ காதல் என்றாலே பிடிக்காது. இப்படி ஏதேதோ வித்தியாசம் காட்ட ரொம்ப கடுமையாக முயற்சிப்பார்கள்
ஆனால் நமக்கோ ரெண்டுமே எம்.ஜி.ஆர்தான் என்றும், கடைசியில் எப்படியும் சேரத்தான் போகிறார்கள் என்பதும் அவர்களின் முகரைகளைப் பார்த்த அடுத்த கணமே தெரிந்துவிடும். இருந்தாலும், “என்னதான் செய்றாய்ங்கனு பார்ப்போமே,” என பொறுமையாக காத்திருப்போம்
திரையில் உள்ள எம்.ஜி.ஆர்களுக்கு கடைசியில்தான் தாங்கள் வேறுவேறல்ல, ஒரே வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் என்று தெரியும். உடனே, “அண்ணே தம்பி அண்ணே ” என கண்ணீருடன் கட்டித்தழுவிக் கொள்வார்கள்
பாஜக சங்கிகளும், நாம் தமிழர் தம்பிகளும் அப்படித்தான். தாங்கள் வேறுவேறு என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
ஆனால் அவர்கள் இருவரும் ஒன்றுதான் என நமக்கு முதலில் இருந்தே தெரிந்தாலும், அவர்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமைகளான பெரியார் எதிர்ப்பு,
திராவிட எதிர்ப்பு, மும்மொழி ஆதரவு, நுழைவுத்தேர்வு ஆதரவு என எவ்வளவுதான் பல சான்றுகளுடன் விளக்கிச் சொன்னாலும் அவர்களில் சிலர் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் சிலருக்கு பொசுக்கென்று கோபம் கூட வருகிறது.
ஆனால் இன்றுகூட பாருங்கள், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி, “திராவிடம்” எனப் பேசியவுடன் இரண்டே இரண்டே தரப்புக்குதான் அடிவயிற்றில் அல்சர் ஏற்படுகிறது
ஒன்று பாஜக. இன்னொன்று நாம் தமிழர். இப்படி நாம் பல உதாரணங்களைக் காட்ட முடியும். ஆனால் என்ன, நாங்கள் ரெண்டு பேரும் ஒன்று இல்லை என எம்.ஜி.ஆர்களைப் போலவே சாதிப்பார்கள். சரி விடுங்கள் எப்படியும் திரைக்கதை முடியும்போது, “அண்ணே… தம்பி… அண்ணே…” என கட்டிக்கொண்டுதானே ஆக வேண்டும் அப்போது இருக்கிறது கச்சேரி!
டான் அசோக்
ஜூன் 30, 2019

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்களுக்கு என்ன பாதிப்பு | ஏன் அதை எதிர்க்கிறார்கள்?

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்களுக்கு என்ன பாதிப்பு | ஏன் அதை எதிர்க்கிறார்கள்?

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட போகிறது ஏன் அதை எதிர்க்கிறார்கள்?
மத்திய அரசு கொண்டுவரும் எல்லா நல்ல திட்டங்களையும் எதிர்ப்பது ஏற்புடையதல்ல!
இப்படி எல்லாவற்றையும் எதிர்த்துக்கொண்டிருந்தால் நாடு எப்படி வளர்ச்சி பெறும் என்று கேள்வி எழுப்புகிறது சென்னை உயர்நீதிமன்றம்!
இப்படித்தான் ஆட்சியாளர்களும் கூறுகிறார்கள்! எல்லா திட்டங்களையும் மக்கள் கண்மூடித்தனமாக எதிர்ப்பதில்லை உதாரணமாக சேது சமுத்திர திட்டத்தை மக்கள் எதிர்த்தார்களா? மதவாதிகள்தான் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக அதை எதிர்த்தார்கள்!
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை எதிர்த்தார்களா?
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை எதிர்த்தார்களா இல்லையே? எல்லோருக்கும் வீடு கழிவறை என்றார்கள் அதை யாருமே எதிர்க்கவில்லையே?
மாவட்டத்திற்கு
10 தொழிற்சாலைகளை தொடங்கச் சொல்லுங்கள் யாரும் எதிர்க்கப்போவதில்லை!
இன்னும் பத்து மருத்துவக் கல்லூரிகளை, மருத்துவ மனைகளை தொடங்குங்கள் யாருமே எதிர்க்க மாட்டார்கள்!
எது நல்லது எது தங்களுக்கு தீங்கானது என்பதை மக்கள் பகுத்தாய்ந்துதான் முடிவெடுக்கிறார்கள்!
நீதிமன்றங்கள் அரசின் தவறான மக்கள்விரோத கொள்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் மன்றங்களாக மாறிவிடக்கூடாது என்பதே நமது கவலையாகும்!

பிச்சை எடுப்பவரை ததீவிரவாதி என்று பிடித்து சென்ற காவல்துறை

பிச்சை எடுப்பவரை ததீவிரவாதி என்று பிடித்து சென்ற காவல்துறை

கடந்தமேமாதம் 11ஆம் தேதி அன்று பெங்களூரில் உள்ள ஆர்டி நகரில் உள்ள பள்ளிவாசலில்  பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சாஜித் கான் என்கின்ற 38 வயது நபரை கைது செய்தது காவல்துறை பெங்களூருவில் மிகப்பெரிய தாக்குதல் சாஜித் கான் என்பவரால் நடத்தப்படும் என்கின்ற கோணத்தில் விசாரணை செய்தது
இது ஒருபுறமிருக்க பெங்களூருவில் உள்ள செய்தி மற்றும் காணொளி ஊடகங்கள் மேமாதம் 6 ஆம் தேதி மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுத்து ஒரு செய்தியை வெளியிட்டது தீவிரவாதி ஒருவர் பெங்களூருவில் ஊடுருவி உள்ளார் என்றும் ஒரு கன்னட தொலைக்காட்சி செய்தி வெளியிட மற்றொரு கன்னட தொலைக்காட்சியோ
பெங்களூருவில் உள்ள கெம்பகௌடா மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வெளியே ஒரு முஸ்லின் வரும்பொழுது மெட்டல் டிடெக்டர் பீப் சவுண்ட் ஒளியில் வெளியிட்டது என்றும் அவருக்குப் பின்னால் வரும் நபர் அவருடைய உதவியாளர் என்றும்
இந்த காணொளி நிகழ்வுகள் காட்டி பெங்களூருவிற்கு மிகப் பெரிய ஆபத்து வந்து விட்டதாகவும் செய்திகளை வெளியிட்டது
இவர்கள் இருவரும் முஸ்லீம் பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றும் அடைமொழியிட்டு செய்திகளை வெளியிட்டது
அதுமட்டுமின்றி ரயில் நிலையத்தில் வேலை செய்யும் துப்புரவு பணியாளர் இடம் தான் ஒரு கோடி ரூபாய் பணம் தருவதாகவும் தன்னை வெடிகுண்டோடு உள்ளே விடுமாறும் அந்த முஸ்லிம் பேரம் பேசியதாகவும் இந்த தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன
இந்த தகவல்களை கேட்டு யார் அந்த தீவிரவாதி என்று தேடி அலைந்த காவல்துறையினர் ஒரு மசூதியின் அருகில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சாஜித் கான் என்பவரை கைது செய்து
இரண்டு நாட்களாக அவரிடம் விசாரணை நடத்தியது அதில் தெரிந்த உண்மை இதுதான் சாஜித் கான் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜூன் ஜூன் மாவட்டத்தை சேர்ந்தவர்
அவர் ஒரு விவசாயக் கூலி மூன்று ஆண்டுகளாக ரமலான் மாதம் வந்து விட்டால் பெங்களூருவிற்கு வந்து அங்கு உள்ள பள்ளிவாசல்களில் பிச்சை எடுத்து அதைக் கொண்டு தன்னுடைய குடும்பத்தின் உடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு மிகக் கொடிய வறுமையில் இருக்கக் கூடியவர்கள் என்றும்
தான் பிச்சை எடுத்து சேர்த்த 5 ரூபாய் நாணயங்கள் 150 ரூபாய் வரை இருக்கும் அதை ஒரு துணியில் போட்டு கட்டி ஹன் இடுப்பில் முடிந்திருந்ததாகவும் அதனால் தான் பீப் சந்தம் கேட்டது என்பதை அவரின் விளக்கிச் சொல்ல உண்மையை அறிந்து அவரை விடுவித்தது காவல்துறை
இதை விட பெரிய கொடுமை அவரின் உதவியாளர் என்று ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டவர் ரியாஸ் அகமது என்பவர் அவர் பெங்களூருவில் உள்ள மெஜஸ்டிக் நகரில் ரோட்டோர வியாபாரியாக தன்னை தீவிரவாதி என்று வரும் செய்திகளைப் பார்த்து காவல்துறையினரிடம் சென்று தன்னுடைய நிலையை அவர் விளக்கியுள்ளார்
இதையும் விசாரித்து உண்மை என்று அறிந்த காவல்துறையினர் இவரையும் அனுப்பிவிட்டார்கள்
இது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட சாஜித் கான் என்பவரை சில நடுநிலை செய்தியாளர்கள் சந்தித்து கேட்டபோது அவர் கண்ணீர் மல்க சொன்னது
நாங்கள் ஏழைகள் எங்களால் என்ன செய்ய முடியும் எங்களால் அழ மட்டும் முடியும் எங்களுடைய இரு கைகளில் ஏந்தி இறைவனிடம் முறையிட மட்டுமே முடியும் என்று சொல்லியுள்ளார்
மற்றொருவரான ரியாஸ் அகமது என்பவர் சொல்கிறார் என்னை தீவிரவாதி என்று செய்தி ஊடகங்கள் சொல்லியதால் இங்கே சாமானிய மக்கள் அதை உண்மை என்று நம்பி என்னை அடித்துக் கொன்று விடுவார்களோ என்று அச்சமாக உள்ளது என்று தன்னுடைய அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்
இவர்கள் இருவரையும் எந்தவித கூச்சமும் இன்றி எந்தவித ஆதாரமும் இன்றி தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் என்று அலறிய ஊடகங்கள் காவல்துறையினர் இவர்கள் அப்பாவிகள் என்று சொன்ன பின்னும் அதைப் பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியிடாமல் மௌனமாக வேறு ஒரு செய்திக்கு போய்விட்டன
இதுதான் விபச்சார வேசி ஊடகங்கள் ஊடக பயங்கரவாதம் என்று நடுநிலைவாதிகள் சொல்லப்படுகிறது
இந்திய தேசத்தில் பிச்சை எடுப்பதற்கு கூட இஸ்லாமிய சமூகம் அஞ்ச வேண்டும் போல
கமல்ஹாசன் கோட்சே பற்றி சொன்னதற்காக, அவரது நாக்கை வெட்ட வேண்டும் என்றெல்லாம்
பரிவாரங்கள் கூச்சல் போடுகின்றன. ஹிந்து தீவிரவாதம் என ஒன்று இருக்க
முடியாது” என ஆவேசப் படுகிறார், பிரதமர்
மோடி.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்
கில் விசாரணையை எதிர்கொண்டு வரும்
பிரக்யா சிங், போபால் தொகுதியில் பா.ஜ.க.
வேட்பாளராக வெற்றி பெற்றிருக்கிறார்.
இதை என்ன வெற்று சொல்வது
இஸ்லாமிய சமூகம் ?
என்று ஒரு போதும் சொல்லாதே
ஜெய்ஹிந்த்

பாராளு மன்றத்தில் கர்ஜித்த வங்கப்புலி மகுமா மெய்த்ரா

பாராளு மன்றத்தில் கர்ஜித்த வங்கப்புலி மகுமா மெய்த்ரா

இவரை தெரியுமா?  பாராளு மன்றத்தில் கர்ஜித்த வங்கப்புலி மகுமா மெய்த்ரா
திருணாமுல் காங்கிரஸ் எம்பியான மகுமா மெய்த்ரா பாராளுமன்றத்தில் மோடி அரசை பாசிச அரசு என வர்ணித்து அதற்கான 8 காரணங்களையும் பட்டியலிட்டு பாராளுமன்றத்தையே கலங்கடித்துவிட்டார்

ஜெய்ஸ்ரீராம் கூற வற்புறுத்தி கொலை செய்யப்பட்ட அன்சாரிக்காக பாராளுமன்றத்தில் முதன் முதலில் குரல் கொடுத்ததும் இவர்தான்
இந்தியா வரலாற்றில் மதவாத அரசியல் செய்யும் ஒரே ஆட்சி இதுதான் என்று சாடினார்
உங்களின் தேசியவாதமும், நாட்டுப்பற்றும் முஸ்லிம்களை கொலைசெய்வதில்தான் உள்ளதா என்று வினா எழுப்பினார்.
வாழ்த்துக்கள் சகோதரியே
Written By Media toady 

கன்னிப் பேச்சுகளில் அனைவரையும் கவர்ந்த பேச்சு

பாராளுமன்ற புது உறுப்பினர்களின் கன்னிப் பேச்சுகளில் அனைவரையும் கவர்ந்த பேச்சுக்கு சொந்தக்காரர் மேற்கு வங்காள மாநிலத்தின் திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வென்ற மஹூவா மொய்த்ரா
இவரது பேச்சில் பேரினவாதத்தின் ஆரம்ப அறிகுறிகள் என்ற தலைப்பில் தற்போதைய பாஜக அரசின் பேரினவாதப் போக்கை கண்டித்தது ஆளும் கட்சியினரை அரளச் செய்தது என்பதை அவர்களின் கோஷங்கள் காட்டிக் கொடுத்தன.

அவரின் பேச்சின் சில பகுதிகள் மட்டும் இங்கே.
1. இந்தியாவில் மிக உயர்ந்த பதவி வகிக்கும் மத்திய அமைச்சர்களாலேயே தாங்கள் படித்த பட்டங்களுக்கான சான்றிதழ்களை காட்ட முடியாத போது,
சாதாரண குடிமக்கள் இந்த நாட்டில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தும் அதற்கான சான்றுகள் இல்லையென்று நாடிழந்தவர்களாக மாற்றுவது சரியா..? அதிலும் முஸ்லிம்களை மட்டும் குறி வைப்பது முறையா..?
2. நாட்டில் மதத்தின் பெயரால் கூட்டம் கூட்டமாக வந்து சிறுபான்மை மக்களை அடித்துக் கொல்வது பாஜக ஆட்சியில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
3. ராமர் கோவிலுக்கான 2.77 ஏக்கர் நினைப்பில் ஒட்டு மொத்த 80 கோடி ஏக்கர் நிலப்பரப்பு மக்களை மறந்து விட்டீர்கள்.
4. நாட்டின் ஊடகங்கள் ஆளும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
5. ராணுவ சாகசங்களை அரசியலாக்குவது.
6. அரசும் மதமும் பின்னிப் பிணைந்துள்ளது.
7. தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் பூச்சாண்டி காட்டுவது.
8. தேர்தல் கமிஷனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பது.
அமெரிக்கா வெளியிட்டுள்ள பேரினவாதத்தின் ஆரம்ப அறிகுறிகள் என்ற பட்டியலில் இடம் பெற்ற அனைத்தும் தற்போதைய அரசுடன் ஒத்துப் போகிறது என்று முத்தாய்ப்பாக தனது பேச்சை முடித்தார்.
Ahmed meeran
முகநூல் பக்கத்திலிருந்து….

ச‌ம்ப‌ள‌த்தை அதிக‌ரிக்கா விட்டால் வ‌ரிச்ச‌லுகை நிறுத்த‌ப் ப‌டும் என‌ பிரதமர் அறிவித்துள்ளார்

ச‌ம்ப‌ள‌த்தை அதிக‌ரிக்கா விட்டால் வ‌ரிச்ச‌லுகை நிறுத்த‌ப் ப‌டும் என‌ பிரதமர் அறிவித்துள்ளார்

நெத‌ர்லாந்தில் க‌ட‌ந்த‌ ஒரு வ‌ருட‌த்திற்குள் ம‌ட்டும் அத்தியாவ‌சிய‌ பாவ‌னைப் பொருட்க‌ளின் விலைக‌ள் பல மடங்கு அதிக‌ரித்துள்ள‌ன‌ ச‌ம்ப‌ள‌த்தை அதிக‌ரிக்கா விட்டால் வ‌ரிச்ச‌லுகை நிறுத்த‌ப் ப‌டும் என‌ பிரதமர் அறிவித்துள்ளார்
அதே நேர‌ம் க‌ட‌ந்த‌ ப‌த்து வ‌ருட‌ங்க‌ளாக‌ ச‌ம்ப‌ள‌ம் அதே நிலைமையில் தான் இருக்கிற‌து. தொழிற்ச‌ங்க‌ங்க‌ளின் ப‌ல‌ வருட‌ கால‌ போராட்ட‌ம் கார‌ண‌மாக‌, அர‌சு இப்போது தான் ச‌ம்ப‌ள‌த்தை கூட்ட‌ வேண்டும் என்ற‌ கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள‌து
த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ள் ஊழிய‌ரின் ச‌ம்ப‌ள‌த்தை அதிக‌ரிக்கா விட்டால் வ‌ரிச்ச‌லுகை நிறுத்த‌ப் ப‌டும் என‌ பிரதமர் அறிவித்துள்ளார்
தொழில‌திப‌ர்க‌ளின் ச‌ங்க‌ம் இது குறித்து “அதிர்ச்சி” தெரிவித்துள்ள‌து. வேலையாட்க‌ளின் ச‌ம்ப‌ள‌த்தை கூட்டினால் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் நெத‌ர்லாந்தை விட்டு வெளியேறி, குறைவான‌ ச‌ம்ப‌ள‌ம் கொடுக்கும் வெளிநாட்டில் முத‌லிடப் பார்க்கும் என்று முத‌லாளிக‌ள் அரசை மிர‌ட்டி வ‌ருகின்ற‌ன‌ர்
Kalai Marx

7 மாத கர்ப்பிணி பெண் போலீசாரால் கொடூர தாக்குதல்

7 மாத கர்ப்பிணி பெண் போலீசாரால் கொடூர தாக்குதல்

பத்திரிக்கைச் செய்தி சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகில் உள்ள கொந்தகை – முனியாண்டிபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சித்ரா (23) 7 மாத கர்ப்பிணி பெண் போலீசாரால் கொடூர தாக்குதல்
தலித் சமூகத்தைச் சேர்ந்த சித்ராவை திருப்புவனம் காவல்நிலைய போலீசார் 5 பேர் லத்திக் கம்பாலும் பூட்ஸ் காலாலும் எட்டி உதைத்து சித்திரவதை செய்துள்ளனர்
காயமடைந்த சித்ரா தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்
இச்சம்பவம் குறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் களஆய்வு மேற்கொண்டனர் களஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இப்பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்படுகிறது
முனியாண்டிபுரம் ஊர்காவலன் கும்பாபிசேக திருவிழா தொடர்பான நாடகம் கடந்த 18.06.2019 அன்று இரவு நடைபெற்றது
இந்த ஊர்காவலன் கோவில் என்பது பட்டியல் சாதி பள்ளர் சமூகத்து மக்கள் மட்டுமே வழிபடுகிற கோவிலாகும். நள்ளிரவு அதாவது 19.06.2019 அன்று சுமார் 1.00 மணியளவில் திருப்புவனம் காவல்நிலைய போலீசார் சுமார் 5 பேர் மூன்று இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்
அப்போது தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் 25 – 30 பேர் நியாயவிலைக் கடையின் மாடியில் நின்று கொண்டு நாடகத்தை பார்த்துள்ளனர்

திருப்புவனம் காவல்நிலைய  போலீசார் அடிக்கத் தொடங்கியிருக்கின்றனர்

அங்கு வந்த போலீசார் அந்த சிறுவர்களை ஆபாசமாக பேசி கீழே இறங்குங்கடா என்று மிரட்டியுள்ளனர். சிறுவர்களும் கீழே இறங்கியிருக்கின்றனர் திடீரென்று அந்த போலீசார் சிறுவர்களை பிடித்து அடிக்கத் தொடங்கியிருக்கின்றனர்
நாடகத்தை கீழே இருந்துதானே பார்க்கனும் ஏன் நியாயவிலைக் கடை மாடியில் நின்று பார்த்தீர்கள் என்று கேட்டுக் கொண்டே அக்குழந்தைகள் கன்னத்திலும் அறைந்துள்ளனர்
இதனை கவனித்த காளிஸ்வரன் என்கிற 28 வயது தலித் இளைஞர், ஏன் சார் குழந்தைகளை அடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு சாதி ரீதியாக இழிவாகப்பேசிக் கொண்டே அந்த போலீசார் காளிஸ்வரனின் கன்னத்தில் அறைந்து லத்தியைக் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர்
இதனை கவனித்த கிôôமத்து மக்கள் ஓடிவந்து தடுத்துள்ளனர். காளிஸ்வரனின் மனைவியான 7 மாத கர்ப்பிணிப் பெண் சித்ரா, சார் தயவு செய்து என் வீட்டுக்காரரை அடிக்காதீர்கள் என்று போலீஸ்காரர்கள் காலில் விழ, அவர்கள் லத்திக் கம்பாலும் பூட்ஸ் காலாலும் எட்டி உதைத்து தாக்கியிருக்கின்றனர்
போலீசாரின் தாக்குதலால் மயக்கமடைந்த சித்ரா உடனடியாக சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார்
சித்ராவுக்கு நடந்த வன்கொடுமை குறித்து மருத்துவமனையில் எம்எல்சி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை

போலீசாரின் அத்துமீறல்

சமீபத்தில் கடந்த 15.06.2019 அன்று இரவு மதுரையில் போலீசாரின் அத்துமீறலால் விவேகானந்தகுமார் என்பவர் கொல்லப்பட்டார்
போலீசாரால் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டிருக்கிறார். இரண்டு தினங்களுக்கு முன்பு சின்னசேலம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றவரை போலீசார் தாக்கியிருக்கின்றனர்
போலீசாரின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் வன்முறை என்பது பெரிய போராட்டம், கலவரம் போன்றவற்றில் தான் இருக்கும்
ஆனால் தற்போது சாதாரண நிகழ்வுகளில் கூட போலீசார் அத்துமீறல் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் பலமான சக்திவாய்ந்த ஆளுமை இல்லததனால் போலீசார் இப்படி தான்தோன்றி தனமாக செயல்படுகின்றனர்
இந்நிலையில் சித்ராவின் கணவர் காளிஸ்வரன் 20.06.2019 இன்று சம்பவம் குறித்து தலைமைச் செயலர் – தமிழ்நாடு, டிஜிபி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தேசிய மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியிருக்கிறார்.

பெண் போலீசாரால் கொடூர தாக்குதல் பரிந்துரைகள்

• கர்ப்பிணி பெண் சித்ரா மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்
• வன்கொடுமையில் ஈடுபட்ட போலீசார் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்
• பாதிக்கப்பட்ட சித்ராவின் குடும்பத்தினருக்கு ரூ.5 இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்
(A.கதிர்)  செயல் இயக்குன

இது தமிழ்நாடு இது வேற! எப்போதுமே இது வேற!

இது தமிழ்நாடு இது வேற! எப்போதுமே இது வேற!

இது தமிழ்நாடு இது வேற! எப்போதுமே இது வேற! வரலாறு முழுமைக்கும் பார்த்தால் தமிழ்நாடு என அண்ணாவால் பெயரிடப்பட்ட இந்த நிலப்பரப்பு எந்தக் காலத்திலுமே இந்தியா என இப்போது வழங்கப்படுகிற நிலபரப்புடன் இணைந்து இருந்ததில்லை
பாண்டிய மன்னனின் மகன்கள் சுந்தரபாண்டியனும், வீரபாண்டியனும் தங்களுக்குள் அடித்துக்கொண்டு அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் கஃபூரை அழைத்து (ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் சண்டையில் இப்போது தமிழகத்தை மோடி ஆள்வதைப் போல) வந்தபோது கூட, அவர்களது கையாட்களின் ஆட்சி இங்கே மிஞ்சிப்போனால் 50 ஆண்டுகள்தான் நீடித்தது
மவுரியர் காலமானாலும், பேரரசர் அக்பர் காலம் ஆனாலும் சரி, தென்னகம் தனி ஆட்சி தான் தனி நாடு தான் அவுரங்கசீப் ஆட்சிகாலத்தில் கூட அதிகபட்சம் கர்நாடகா வரையில்தான் அவர்களால் வர முடிந்தது
ஆங்கிலேயர் வந்தபின் தான் தென்னகம், குறிப்பாக தமிழகம் இந்தியா எனப்படுகிற நிலப்பரப்பில் இணைந்த ‘அசம்பாவிதம்’ நடந்தது
ஆக, நமக்கும் அவர்களுக்கும் இடையே மொழியில், கலாச்சாரத்தில், குறிப்பாக ‘நாகரீகத்தில்’, ‘பண்பில்’ வேற்றுமை இருப்பது ஒன்றும் தற்செயலானதல்ல. அது வரலாற்று வேற்றுமை இன வேற்றுமை! மரபணு வேற்றுமை!
மக்களவை என்பது மாநிலங்கள் அனைத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அவை. அங்கே தமிழ் எம்பிக்கள் பதவி ஏற்கும்போது “தமிழ் வாழ்க” என தங்கள் மொழியையும், “பெரியார் வாழ்க” என தங்கள் வழிகாட்டியையும் நினைவுகூர்ந்து பதவி ஏற்கிறார்கள்

தமிழ்நாடு வேறு ஏனைய பாரதம் வேறு

ஆனால் அங்கிருந்த காட்டுமிராண்டிகள் உடனே “ஜெய் ஸ்ரீராம்” என்றும், “பாரத் மாதா கீ ஜே” என்றும் கூச்சல் எழுப்புகிறார்கள் தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழ்நாட்டுக்கும் எதிரி பாரதமாதா என நாம் சொன்னோமா? இல்லை. அவர்கள்தான் சொல்கிறார்கள்
நேற்று, “தமிழ்நாடு வேறு ஏனைய பாரதம் வேறு,” என உலகுக்கே காட்டிக்கொடுத்திருக்கிறார்கள் இந்த வட இந்தியர்கள்! ஆனால் ‘Anti Indian‘ பட்டமோ நமக்கு!
காலம்காலமாக இந்தியாவின் எதிரி பாகிஸ்தான் என சொல்லி வளர்க்கப்பட்டவர்கள்தான் சராசரி இந்தியர்கள். ஆனால் சயீத் அன்வர் எனும் பாகிஸ்தானிய பேட்ஸ்மேன் சென்னையில் 194 அடித்து உலக சாதனை புரிந்தபோது எழுந்து நின்று கைதட்டிய சென்னை மக்களையும், அவர்களின் பண்பையும் இந்நேரத்தில் நான் நினைவுகூர்கிறேன்
பாகிஸ்தான் மீதே பண்பு பாராட்டிய தமிழகம் எங்கே? சொந்த நாட்டின் ஒரு மாநில மக்களின் மீதும், அவர்களின் எம்பிக்கள் மீதும், மொழியின் மீதும் பகைமை பாராட்டும் வடநாடு எங்கே!
ஆங்கிலேயர்கள் நமக்கு எவ்வளவோ தீமைகளையும், நன்மைகளையும் ஒருசேரச் செய்திருக்கிறார்கள்
நம்மைக் கொள்ளை அடித்த அதேவேளையில் நமக்கு கல்விக் கதவுகளை திறந்துவிட்டவர்கள் அவர்கள்தான்
மனுதர்மம் எனும் அடிமைசாசனத்தைத் தாண்டி சுதந்திர உலகம் என்று ஒன்று உண்டு, அங்கு அறிவியல் என்று ஒன்று உண்டு என நமக்குக் காட்டியவர்கள் அவர்கள்தான்
ஆரிய கலாச்சாரத்தின் ஊடுருவலால் நாசமாகப் போயிருந்த நம்மையும், சமஸ்கிருதம் கலந்திருந்த நம் மொழியையும் நாம் மீட்டெடுக்கத் துவங்கியதெல்லாம் பின்னர் நீதிக்கட்சி, திராவிட இயக்கம் என ஒவ்வொன்றாக நடந்த படிநிலைகள்
இந்தியாவின் ஏனைய தேசிய இனங்களுக்கும் ஆங்கிலேயர்கள் கல்வியைக் காட்டினார்களே தவிர அதை சரியாக அறுவடை செய்ய திராவிட இயக்கம் போன்றதொரு ஆதிக்க எதிர்ப்பு இயக்கம், சுய மரியாதை இயக்கம் அவர்களுக்கு வாய்க்கவில்லை
கம்யூனிசம் கூட இன்று பார்ப்பனர்களின் கூடாரமாக சுருங்கிப்போனதை நாம் பார்க்கிறோம்
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஆங்கிலேயர்களின் நிர்வாக வசதிக்காக ஒரு பெருந்தீமையையும் அவர்கள் நமக்குச் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள்! சிங்கங்களின் கூட்டத்தை நாகரீகமற்ற
பண்பற்ற கழுதைப்புலிகளின் கூட்டத்தோடு ஒட்டவைத்து விட்டுப் போய்விட்டார்கள்! எண்ணிக்கையில் அதிகம் என்கிற ஒரே காரணத்தினால் கழுதைப்புலிகள் நம்மை ஆள்வதைவிடவும் ஒரு பேரவலம் என்ன இருக்க முடியும்!
இது தமிழ்நாடு இது வேற! எப்போதுமே இது வேற!
-டான் அசோக்
ஜூன்19, 2019

சோவியத் யூனியனில் ஷரியா சட்டம் அனுமதிக்கப் பட்டிருந்ததா

சோவியத் யூனியனில் ஷரியா சட்டம் அனுமதிக்கப் பட்டிருந்ததா

சோவியத் யூனியனில் ஷரியா சட்டம் அனுமதிக்கப் பட்டிருந்ததா எனச் சிலர் கேட்கிறார்கள் ஆமாம்  சில இடங்களில் நடைமுறையில் இருந்தது!
முதலில் சோவியத் சட்ட அமைப்பு பற்றிய சுருக்கமான புரிதல் வேண்டும். அதனை நிகழ்காலத்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பிடலாம்
அதாவது, ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு குடியரசும் தனக்கென தனியான சட்ட்டங்கள் இயற்றி வைத்திருக்கலாம். அதே நேரம், எல்லோருக்கும் பொதுவான சோவியத் சட்டமும் இருக்கும்
தீர்ப்புகள் தவறென்று மேன்முறையீடு செய்தால், அல்லது சட்டங்களில் முரண்பாடுகள் காணப்பட்டால் சோவியத் சட்டமே இறுதியானது
அந்த வகையில், ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருந்த குடியரசுகளில் ஷரியா சட்டம் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது
ஆனால் அது சோவியத் சட்ட அமைப்புடன் சமாந்தரமாக அமுல்படுத்தப் பட்டது. அதாவது, அந்த இடங்களில் இரண்டு வகையான நீதிமன்றங்கள் இயங்கும். ஒன்று சோவியத் நீதிமன்றம். மற்றது ஷரியா நீதிமன்றம்.
ஷரியா நீதிமன்றத்தை நாடுவதா அல்லது, சோவியத் நீதிமன்றத்தை நாடுவதா என்பது அங்குள்ள மக்களின் தெரிவு
இதன் மூலம் இரண்டு வகையான நீதித்துறைகளையும் சீர்தூக்கிப் பார்த்து எது முற்போக்கானது என்பதை மக்கள் தாமாக முடிவு செய்து கொள்வார்கள்
காலப்போக்கில் பெருமளவு வழக்குகள் சோவியத் நீதிமன்றங்களினால் தீர்க்கப் பட்டமை வரலாறு.
உண்மையில் ஷரியா நீதிமன்றங்கள், சோவியத் நீதிமன்றங்களுக்கு கீழ்ப்படிவானவை. அதன் அர்த்தம் நாகரிக உலகிற்கு மாறான தீர்ப்புகளை வழங்க முடியாது
உதாரணத்திற்கு, திருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்ட வேண்டுமென ஷரியா நீதிமன்றம் தீர்ப்புக் கூறுவது தடுக்கப் பட்டிருந்தது
தற்காலத்தில் ஷரியா சட்டத்தை கொண்டிருக்கும் பாகிஸ்தான போன்ற நாடுகளிலும் இது போன்ற நிலைமை உள்ளது
ஷரியா நீதிமன்றத் தீர்ப்பில் அதிருப்தி அடைந்தவர்கள் சோவியத் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யலாம்
உதாரணத்திற்கு, விவாகரத்து வழக்கில் பெண்ணுக்கு பாதகமான தீர்ப்பு கூறப்பட்டால், பாதிக்கப்பட்ட பெண் சோவியத் நீதிமன்றம் சென்று தனக்குரிய நீதியை பெற்றுக் கொள்ள முடியும் இந்த விடயத்தில் சோவியத் சட்டமே இறுதியானது
பெரும்பாலான இஸ்லாமியர் அல்லாத மக்கள் மத்தியில் ஷரியா சட்டம் தொடர்பாக தவறான எண்ணம் காணப் படுகின்றது  உலகில் பல வகையான சட்ட அமைப்புகள் உள்ளன
உதாரணத்திற்கு இலங்கையில் இருப்பது ரோமன்- டச்சு சட்டம் எனப் பெயரிடப் பட்டுள்ளது. பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நெப்போலியன் காலத்து சட்டம் உள்ளது
அதே மாதிரி ஷரியா என்பதும் இஸ்லாமிய மதம் சார்ந்த பொதுவான சட்ட அமைப்பு தான் அதிலும் சட்டத் துறை சார்ந்த அறிஞர்கள் தமக்குள் முரண்படும் அளவிற்கு நான்கைந்து ஷரியா பிரிவுகள் உள்ளன
Kalaimarx 

ஜெய் பீம் ! என்ற முழக்கத்திற்குப் பின்னே ஒரு வீர வரலாறு

ஜெய் பீம் ! என்ற முழக்கத்திற்குப் பின்னே ஒரு வீர வரலாறு

ஜெய்பீம் உவைஸி அவர்களால் பாராளுமன்றத்தில் முழங்கபட்ட இந்த மந்திரம், இனி பாரதம் முழுதும் ஒலிக்கும் சூழல் உருவாகி உள்ளது
ஜெய் பீம் ! என்ற முழக்கத்திற்குப் பின்னே ஒரு வீர வரலாறு உண்டு  புனே நகருக்கு அருகே உள்ள ‘பீமா’ என்ற நதிக் கரையில் போர் நடந்து 200 ஆண்டுகள் ஆகும் இந்த வேளையில் அதன் வரலாற்றை அறிந்து கொள்வது அவசியம் ! 1800-களில் பார்ப்பன பேஷ்வாக்கள் மராட்டியத்தை ஆண்டு வந்தனர்

தலித்துகள் பகலில் தெருக்களில் நடமாடக்கூடாது

அப்போது,இந்துமத வேதப்பண்பாடுகளும்,மனுசாஸ்திரக் கொடுமைகளும் மிகக்கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டன
தலித்துகள் பகலில் தெருக்களில் நடமாடக்கூடாது நடந்தாலும் தெருவில் எச்சில் துப்பிவிடக்கூடாது எச்சிலைத் துப்புவதற்கு தம் கழுத்தில் ஒரு மண் கலயத்தைக் கட்டித்தொங்க விட்டுக்கொண்டு வரவேண்டும்
தலித்களின் கால் தடத்தைப் பார்ப்பனர்கள் மிதித்தால் பார்ப்பனர்களுக்குத் தீட்டாகிவிடும் அதனால்
அவர்கள் பின்பகுதியில் ஒரு பனை ஓலையைக் கட்டிக்கொண்டு நடக்க வேண்டும்.அந்தப் பனைஓலை தனது கால் தடத்தை அழித்துக்கொண்டே வரவேண்டும். தலித்கள் கல்வி கற்கக்கூடடாது.ஆயுதம் வைத்திருக்கக் கூடாது
இவைபோன்ற எண்ணற்ற சாஸ்திர, சம்பிரதாயக் கொடுமைகளுக்கு எதிராக, தாழ்த்தப்பட்ட மகர் மக்களும்,பிற்படுத்தப்பட்ட மக்களும்,சிறுபான்மை இஸ்லாமியரும் இணைந்து ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினர்
1817 டிசம் 31 இரவு. புனே நகருக்கு அருகே கோரிகான் என்றஊரில் உள்ள ‘பீமா’ என்ற நதிக்கரைதான் போர்க்களம்.
2-ஆம் பாஜிராவ் என்ற பார்ப்பன மன்னனின் தளபதியான, ‘கோகலே’ தலைமையில் 28000 பார்ப்பனப்படைவீரர்கள் ஒருபுறம்.500 மகர் சமுதாய வீரர்களும்,100 பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமியச் சமுதாய வீரர்களும் இணைந்த படை மறுபுறம். போர் தொடங்கிய 12 மணி நேரத்தில் 600 பார்ப்பனப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்
பார்ப்பனப் படைத்தலைவன் கோகலே களத்திலேயே படுகொலை ஆனான்.ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களும், அவர்களின் ஆதரவுப் படைகளும் சிதறின பாஜிராவ் கைதானான் பார்ப்பன பேஷ்வாக்களின் மராட்டியப் பேரரசுக்கு இரத்தத்தால் முடிவுரை எழுதியது மகர் ரெஜிமண்ட்.
வெற்றியின் நினைவாக, சாதி ஒழிப்புப் போராளிகள் விதைக்கப்பட்ட ‘பீமா’ நதிக்கரையில் ஒரு வெற்றிச்சின்னம் நிறுவப்பட்டது  1927 ஜனவரி 1 ல் தோழர் அம்பேத்கர் இந்த நினைவிடத்திற்குச் சென்றார் அன்றுதான் பீமா நதிக்கரை வெற்றியின் நினைவாக ஜெய் பீம் எனும் வெற்றி முழக்கம் வெடித்தது.
இந்துமத வேத,சாஸ்திர,சம்பிரதாயங்களுக்கு எதிராகவும், பார்ப்பனர்களுக்கு எதிராகவும்,தலித்துகளும்,பிற்படுத்தப் பட்டவர்களும்,சிறுபான்மையினரும் இணைந்துநடத்திய ஆயுதப் போராட்டத்தின் 200வது வீரவணக்கநாள் 1.1.2018.
– நன்றி தோழர் Aasif
Find Property in Chennai 

எண்ணைக் க‌ப்ப‌ல்க‌ள் தாக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ ஈரான் தான் தாக்குத‌லுக்கு கார‌ண‌ம்

 எண்ணைக் க‌ப்ப‌ல்க‌ள் தாக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ ஈரான் தான் தாக்குத‌லுக்கு கார‌ண‌ம்

அண்மைக் கால‌த்தில் ஈரானுக்கும் ஒமானுக்கும் இடையிலான‌ கட‌ற்பிராந்திய‌த்தில் நான்கு எண்ணைக் க‌ப்ப‌ல்க‌ள் தாக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ ஈரான் தான் தாக்குத‌லுக்கு கார‌ண‌ம் என்று அமெரிக்காவும், ச‌வூதி அரேபியாவும் தெரிவிக்கின்ற‌ன‌
ஆனால் ஐரோப்பிய‌ ஒன்றிய‌ம் கூட‌ அதை நம்ப‌த் த‌யாராக‌ இல்லை. சுயாதீன‌மான‌ விசார‌ணை நட‌த்த‌க் கோருகின்ற‌து
அதே நேர‌ம் சில‌ விசித்திர‌மான‌ போக்குகளை அவ‌தானிக்க‌க் கூடிய‌தாக‌ உள்ள‌து ஈரானில் ஜ‌ப்பானிய‌ தூதுவ‌ர் பேச்சுவார்த்தை நட‌த்திக் கொண்டிருந்த‌ நேர‌ம் ஜ‌ப்பானிய‌  எண்ணைக் க‌ப்ப‌ல்க‌ள் தாக்க‌ப் ப‌ட்டுள்ள‌து
இப்படியான நேரத்தில் ஈரான் தாக்குதல் நடத்த துணியுமா என்பது கேள்விக்குறி

தாக்குத‌லுக்குள்ளான‌ எண்ணைக் க‌ப்ப‌ல்க‌ளில் வேலை செய்த‌ யாரும் கொல்ல‌ப் ப‌ட‌வோ, காய‌ம‌டைய‌வோ இல்லை  அவ‌ர்க‌ள் உரிய‌ நேர‌த்தில் பாதுகாப்பாக‌ வெளியேற்ற‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர்
அது ம‌ட்டும‌ல்ல‌ எந்த‌க் க‌ப்ப‌லும் வெடித்து சித‌றிய‌தாக‌வோ அல்ல‌து எண்ணைக் க‌சிவு ஏற்ப‌ட்ட‌தாக‌வோ த‌க‌வ‌ல் இல்லை

அது ஒரு பொற்கால‌ம்:

அது ஒரு பொற்கால‌ம்  ஐம்ப‌துக‌ளில் இல‌ங்கையில் வெளிவ‌ந்த‌ ப‌த்திரிகை ஒன்றில் முஸ்லிம் பெண்க‌ளும் உழைக்கும் வ‌ர்க்க‌ப் பிர‌திநிதிக‌ளாக‌ ம‌திக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர்
த‌ற்கால‌ ஊட‌க‌ங்க‌ளை முஸ்லிம் பெண்க‌ளை பூர்க்கா அணியும் ம‌த‌ம் காவிக‌ளாக‌ ம‌ட்டுமே சித்த‌ரிக்கின்ற‌ன‌  ம‌த‌ அடையாள‌ அரசிய‌லும், முத‌லாளித்துவ‌ வ‌ர்க்க‌ அர‌சிய‌லும் ஒன்றுட‌ன் ஒன்று கை கோர்த்துக் கொண்டு உழைக்கும் வர்க்க‌ ம‌க்க‌ளை பிரித்து வைப்ப‌தில் க‌ணிச‌மான‌ அள‌வு வெற்றி பெற்றுள்ள‌ன‌
Kalai Marx

உங்கள் அன்போடும்,ஆசியோடும் ஜோதிமணி பெருமிதம்

உங்கள் அன்போடும்,ஆசியோடும்  ஜோதிமணி பெருமிதம்

உங்கள் அனைவரின் அன்போடும்,ஆசியோடும் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டேன் ஜோதிமணி பெருமிதம்
இந்த நெகிழ்ச்சி யான தருணத்தில் கரூர் பாராளுமன்றத் தொகுதி மக்களுக்கும்,திமுக,காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற
முற்போக்குக் கூட்டணியின் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றியினைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்!

ஜோதிமணி பெருமிதம்

உங்கள்,அன்பையும்,நம்பிக்கையையும் எப்பொழுதும் காப்பாற்றுவேன். கரூர் பாராளுமன்றத் தொகுதியின்,தமிழகத்தின்போர்க்குரலாக ஒலிப்பதில் எப்பொழுதும்,எவ்வித சமரசமும் செய்துகொள்ளமாட்டேன்
மீண்டும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🏻
ஜோதிமணி முதல் பெண் பாராள மன்ற உறுப்பினர் ஆகிறார் நாடாளுமன்றத் தேர்தலில் அவரது முதல் வெற்றி பதவியேற்பு

உங்கள் அனைவரின் அன்போடும்,ஆசியோடும் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டேன். இந்த நெகிழ்ச்சி யான தருணத்தில் கரூர் பாராளுமன்றத் தொகுதி மக்களுக்கும்,திமுக,காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றியினைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்! உங்கள்,அன்பையும்,நம்பிக்கையையும் எப்பொழுதும் காப்பாற்றுவேன். கரூர் பாராளுமன்றத் தொகுதியின்,தமிழகத்தின்போர்க்குரலாக ஒலிப்பதில் எப்பொழுதும்,எவ்வித சமரசமும் செய்துகொள்ளமாட்டேன். மீண்டும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🏻

Posted by Jothimani Sennimalai on Tuesday, 18 June 2019

சசிகலா விரைவில் விடுதலையாகப் போகிறார்!

சசிகலா விரைவில் விடுதலையாகப் போகிறார்

‘சசிகலா விரைவில் விடுதலையாகப் போகிறார்’ என்கிற செய்திதான், அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க ஆகிய கட்சிகளில் சிலருக்கு மகிழ்ச்சியையும் பலருக்கு பீதியையும் ஏற்படுத்தி வருகிறது. இருக்காதா பின்னே
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடந்த அரசியல் காட்சிகள், இதுவரை ஹாலிவுட் படங்களிலுமே நாம் காணாதவை. சரி, அ.தி.மு.க-வின் தற்போதைய தலைமை, அடுத்து என்ன திட்டமிட்டிருக்கிறது? 
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில், 2014-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டனர்
தொடர்ந்து, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அறிவிப்பதற் குள், ஜெயலலிதா மரணம் அடைந்தார். பின்னர், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட சசிகலா, முதலமைச்சர் ஆவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த நேரத்தில், சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்
அதனால் கோட்டைக்குச் செல்லும் கனவிலிருந்த சசிகலா, பெங்களூரு சிறைக்குச் சென்றார். இதற்கிடையே முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் போய்… எடப்பாடி பதவியேற்றது எல்லாம் தனிக்கதை. மறுபக்கம் தினகரன், கட்சியைக் கைப்பற்ற முயற்சிசெய்து தோல்வியடைந்தார். இதன் தொடர்ச்சியாக அ.ம.மு.க என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழகச் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் டெபாசிட் இழந்தது இக்கட்சி

அ.தி.மு.க தன் கைக்கு வந்துவிடும்’ என்று சசிகலா உறுதியாக இருந்ததால்


‘எப்படியும் அ.தி.மு.க தன் கைக்கு வந்துவிடும்’ என்று சசிகலா உறுதியாக இருந்ததால், அ.ம.மு.க-வில் அவர் பெயர் சேர்க்கப்படவில்லை என்கிறார் கள். அத்துடன், ‘அ.தி.மு.க மீதான உரிமை தொடர்பான வழக்கும் என் பெயரிலேயே நடக்கட்டும்’ என்றும் தினகரனிடம் சசிகலா சொல்லியிருப்பதாகத் தெரிகிறது
இந்த நிலையில்தான், தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வும் படுதோல்வியடைந்திருப்பதால், கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ராஜன் செல்லப்பா உள்ளிட்ட சிலர் செய்துவரும் விமர்சனங்களால், ‘ஆட்சி கை நழுவி விடுமோ’ என்ற பயத்தில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
இதனால், ‘சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுத்தால் மட்டுமே ஆட்சியைத் தக்கவைக்க முடியும்’ என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்து அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசியபோது, “எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து பத்து நாள்களுக்கு முன்பே சசிகலாவுக்குத் தூது விடப்பட்டது
உச்ச அதிகாரத்திலிருப்பவரின் மனைவியே, அடுக்கு டிபன் கேரியரில் சசிகலாவுக்குப் பிடித்த உணவுகளுடன் சிறைக்குள் சென்றார். அவர் சில விஷயங்களை, சசிகலா தரப்புக்குச் சாதகமாகச் சொல்லியிருக்கிறார்
தொடர்ந்து சசிகலா தரப்பில், ‘சிறையிலிருந்து வெளியே வருவதற்கு, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஒத்துழைத்தால், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடர உதவி செய்யப்படும்’ என்பது உட்பட சில விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதற்கு எடப்பாடி தரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளது
அத்துடன், இந்த வழக்குக்குக் காரணமான முக்கிய வி.வி.ஐ.பி ஒருவரே, ‘சசிகலாவின் விடுதலைக்கு ஆட்சேபனை இல்லை’ என்று தெரிவித்திருக்கிறார். அதனால், சசிகலாவை வெளியே கொண்டுவருவதற்கான வேலைகள் வேகம் எடுத்துள்ளன” என்றார்கள்.

சசிகலாவுக்கு நெருக்கமான வர்கள் சிலரிடம் பேசினோம். “கர்நாடக சிறைத்துறை சமீபத்தில் அந்த மாநில அரசுக்கு அளித்த அறிக்கையில், ‘சசிகலாவின் நன்னடத்தை சிறப்பாக இருப்பதால், முன்கூட்டியே விடுதலை செய்யலாம்’ என்று குறிப்பிட்டுள்ளது
சசிகலா, சிறையிலிருந்தபடி கன்னட மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்றிருப் பதையும் அறிக்கையில் குறிப்பிட் டிருக்கிறது சிறைத்துறை இந்த அறிக்கை, சசிகலாவுக்கு மிகவும் சாதகமாக அமையும்  ‘நன்னடத்தை அடிப்படையில் என்னை விடுதலை செய்ய வேண்டும்’ என்று சசிகலா சார்பிலும் கர்நாடக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட உள்ளது

சசிகலா விரைவில் விடுதலையாகப் போகிறார் நடவடிக்கை எடுக்கப்படும்

தவிர, கர்நாடக முதல்வர் குமாரசாமியின் குடும்பத்தினர், சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள்  அதனால், சசிகலாவின் கோரிக்கைமீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம். இதுதொடர்பான ஃபைல், கர்நாடக கவர்னர் மூலம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்படும்
அதனால் நான்கு மாதங்களுக்குள் சசிகலா விடுதலையாவார் என்று உறுதியாக நம்புகிறோம்” என்கிறார்கள்.
“சசிகலாவின் விடுதலைக்கு சட்டரீதியாக சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா?” என மூத்த வழக்கறிஞர் மோகன கிருஷ்ணனிடம் கேட்டபோது, “சசிகலா அல்ல யாராக இருந்தாலும் சிறைத்துறை நன்னடத்தை சான்றிதழ் அளித்தால், அதைக் காரண மாகக்கொண்டு சம்பந்தப் பட்ட நபரை ஆளுநர் விடுதலை செய்ய சட்டத்தில் இடம் உண்டு
ஆனால், ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்றவர்களை கவர்னர் விடுவிக்க முடியாது என்று சில ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது

எடப்பாடி தரப்பு செய்த துரோகத்தை அவ்வளவு சீக்கிரம் சசிகலா மறந்திருக்க வாய்ப்பில்லை!

அதற்குக் காரணம், வட மாநிலங்களில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் கவர்னர்களின் ஆசியுடன் பாதியிலேயே விடுதலைபெற்ற சம்பவங்கள் நடைபெற்றிருந்ததுதான். இதற்குப் பிறகு உச்ச நீதிமன்றமே இவ்விஷயத்தில் தலையிட்டு, சில விதிகளைக் கொண்டுவந்தது
சசிகலா விவகாரத்தைப் பொறுத்தவரை அவர் ஏற்கெனவே வேறு சில வழக்குகளில் சிறையில் இருந்த காலகட்டத்தையும் கர்நாடக சிறைத்துறை கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கலாம்
அப்படி எடுத்துக்கொண்டால் மட்டுமே, ஒருவேளை அவரை முன்கூட்டியே விடுதலை செய்யும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன” என்றார்.
சசிகலாவுக்கும் தினகரனுக்கும் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டிருப்பதை உணர்ந்துதான், சசிகலாவுக்குத் தூது விட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள்
அதை நிரூபிக்கும் வகையில், சசிகலாவின் விடுதலை தொடர்பான பணிகளிலும் தினகரன் தலையிடாமல் இருக்கிறார்
அரசியல் சதுரங்கத்தில் கணக்குகள் அனைத்தும் சரியாக இருந்து ஒருவேளை சசிகலா விடுதலையானால், எடப்பாடி பழனிசாமிக்கு ஆட்சியை விட்டுக் கொடுப்பாரா
இல்லை தட்டிப் பறிப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்ஏனெனில், எடப்பாடி தரப்பு செய்த துரோகத்தை அவ்வளவு சீக்கிரம் சசிகலா மறந்திருக்க வாய்ப்பில்லை!

  • அ.சையது அபுதாஹிர்


‘‘முன்விடுதலை சாத்தியமே இல்லை!’’ – டி.ஐ.ஜி ரூபா
சசிகலா விடுதலை குறித்து, பெங்களூரு முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபாவிடம் கேட்டோம். ‘‘கர்நாடக மாநில சிறைத்துறை விதிகளின்படி, சிறையில் தண்டனையை அனுபவிக்கும் காலகட்டத்தில் வேறு எந்தத் தவறும் செய்யாமல் நன்னடத்தையுடன் நடந்துகொண்டால், அதன் அடிப்படையில் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய சட்ட விதிகளில் இடம் உண்டு
இந்தச் சட்ட விதிகளைப் பயன்படுத்தி, சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு உள்ளதாகப் பலரும் பேசிவருகிறார்கள்  இதுகுறித்து தொடர்ந்து என்னிடமும் கேள்விகள் கேட்டு வருகிறார்கள். நான் கேள்விப்பட்டவரையில், சசிகலா சிறையில் நன்னடத்தையோடுதான் நடந்துகொண்டிருக்கிறார்
அதற்காகத் தண்டனையைக் குறைப்பார்கள் என்று சொல்லமுடியாது. சசிகலா வழக்கைப் பொறுத்தவரை, நன்னடத்தைச் சான்றுகள் ஏற்றுக்கொள்ளப்படுவது சிரமம்தான்
இந்த வழக்கு, மற்றப் பொதுவான விதிமுறைகளுக்குள் வராது ஆதலால், தண்டனைக் காலத்துக்கு முன்னதாகவே, அவரை விடுவிப்பது என்ற கேள்வியே எழாது  எனவே, அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பில்லை!’’ என்றார் உறுதியாக.
– இ.லோகேஷ்வரி

வெயில் தாக்கம் தமிழிசை உளறல் தூக்கலாக கேட்கிறது

வெயில் தாக்கம்  தமிழிசை உளறல்  தூக்கலாக கேட்கிறது

வெயில் தாக்கம்  தமிழிசை உளறல் கொஞ்சம் தூக்கலாக கேட்கிறது
37 பேர் பதவி பிராமணம் எடுத்துக்கொள்ளும் நேரத்தில் சத்தம் அதிகமாய் கேட்கிறது வயிற்றெரிச்சல்
தண்ணீர் பஞ்சம் பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லையாம் .. அரசியலில் இருக்கவே அருகதையே இல்லாத கலைஞரின் தயவில் படித்து கரையேறியவர் கதைக்கிறார் வீராணம் திட்டத்தை நடப்பில் ஆக்கியிருந்தால் தண்ணீர் பஞ்சம் தீர்ந்திருக்குமாம் கலைஞரின் கனவை நசுக்கியதன் விளைவிது
அன்றைக்கு பயனில்லாத திட்டமென்றவர்கள் இன்று பின்பாட்டு பாடுகிறார்கள் ..
என்னதான் முந்தைய அரசு செயல்படவே இல்லையென்றாலும் அதன் மீதே குறைச்சொல்வதை முதலில் விடவேண்டும்
கலைஞர் ஆட்சியில் ஏரிகள் தூர்வாரபட்டன நீர் சேகரிப்பிற்கு அதிக அக்கறை செலுத்தபட்டது ஆட்சிவிட்டு வந்து எட்டாண்டு ஆகிறது இன்னமும் இவர்கள் செயல்படவில்லை என்பதைதான் இவர்கள் பேச்சு சொல்கிறது
ஒன்றரை ஆண்டில் முழு அரசு இயந்திரத்தையுமே மாற்றி செயல்படவைத்திட முடியும் நூறுநாட்கள் தாருங்கள் அழுகிப்போன ஈரலை செப்பனிடுகிறேன் என சொல்லி செயல்படுத்தி காட்டியவர் கலைஞர்

தமிழிசை உளறல் இதுதான் உங்கள் நிலமை

ஆனால் இன்றும் ஆட்சி செய்பவரை விட  புறமிருந்து இயக்குகிற கோழைகள் அதிகம் கதைக்கிறார்கள் அதிமுகவை நம்பிதான் நின்றோம் அவர்கள் எமக்கு வேலை செய்யவில்லை தோற்கடித்துவிட்டார்கள் அதிமுக ஆதரவின்றி தேர்தலில் நின்றிருந்திருந்தால் கட்டிவச்ச காசு கூட திரும்ப கிடைத்திருக்காது
இதுதான் உங்கள் நிலமை தன் தகுதி அறிந்து பேசவேண்டும் வார்டு கவுன்சிலருக்கு நின்றால் கூட ஓட ஓட விரட்டுவார்கள் தமிழ் மக்கள்
இந்த நிலையில் அணுகழிவால் ஆபத்தில்லை என சர்டிபிகேட் வேறு தருகிறார் தமிழிசை கர்நாடக எடியூரப்பா இங்கே கொட்ட கூடாதென தான் சார்ந்த மாநில நலனுக்காக பேசுகிறார் ஆனால் தமிழ் மக்களுக்கெதிராக பேசுகிற ஞானசூன்யமாய் குமரியின் மகள் வெட்கபடவேண்டும்
தகுதியில்லாத தரங்கெட்ட செயலை செய்கிறார்
அமைச்சர் வேலுமணி  தண்ணீர் பஞ்சமெல்லாம் இல்லை வீண் வதந்தி என்கிறார் ஒருவேளை அவர் வீட்டில் அமைச்சர் என்ற அதிகார வரம்பில் தண்ணீர் மிகுதியாய் இருப்பதால் மக்களின் கஷ்டம் புரியவில்லை
குளித்து சிலநாட்கள் ஆகிறது .. தண்ணீர் குடம் 10/ 20 என விற்கிறது சாமானியர்கள் வாடகை குடித்தனங்கள் உணவு விடுதிகள் தண்ணீர் பறறாக்குறை அமைச்சருக்கு தெரியவாய்ப்பில்லை .. அமைச்சராக இருக்க தகுதியற்றவர்
தகுதி இல்லாதவர்களை அமைச்சராக்கியது ஜெயலலிதா செய்த தவறு .. அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களெல்லாம் அமைச்சர்களாக்கியது தான் .. லாயக்கற்றவர்களை நாம் கொண்டாடியதுதான் இதற்கெல்லாம் காரணம் சினிமாகாரனை ரசிப்பதோடு நிறுத்தியிருந்தால் இத்தனை இன்னல்கள் வந்திருக்காது
அதிமுககாரன் திமுகவை குறை கூறுவதில் கூட ஏற்றுக்கொள்ளலாம் .. ஐந்தாண்டு நலத்திட்டங்களை திமுக செயல்படுத்திவிடும் அதைவைத்தே அதிமுக ஐந்தாண்டை கடத்திவிடும்
ஆனால் பாஜகவை சேர்ந்த தமிழிசையும் பொன்னரும் பேசுவதுதான் வேடிக்கை உங்களுக்கு என்ன சம்பந்தம் என்ன தகுதியிருக்கிறது தமிழகத்தில் எக்காலத்திலும் தனித்து நின்று வார்டு கவுன்சிலர் கூட ஆகமுடியாத சாரணர் தேர்தலில் கூட ஓடவிட்டு அடித்துதுவைக்கிற நிலைதான்
மைக் கிடைக்கிறது என்பதற்காக யாரை வேண்டுமானாலும் குறைச்சொல்லலாம் எதை வேண்டுமானாலும் பேசலாம் உளறலாம் என்பது .. திராவிடம் தந்த கருத்துரிமை தான் காரணம்
பிற மாநிலமாக இருந்தால் வாயிலேயே வெட்டுவிழும்
இங்குதான் தாரதரமின்றி விமர்சிக்கமுடியும் யோக்கியதை இல்லாதவன் கூட இங்கே கட்டவழித்துவிட்டவனை போல பேசி திரியமுடியும்
எதற்கும் ஒரு அளவுண்டு.. இவர்கள் அரசியல் தெளிவற்றவர்கள் ஆம்.. அருகதையற்றவர்களோடு கதைப்பது கூட அறிவுடை செயல் அல்ல.. நமக்குதான் இழுக்கு
தகுதியற்றவர்களின் அரசியலால் தரங்கெட்டு போய் கிடக்கிறது தமிழகம்
தமிழகத்திலிருந்து இந்த பாசிசத்தின் அடிமைகளும் இன துரோகிகளும் விரட்டபடவேண்டும்,.. திராவிடத்தின் அடலேறுகள் அதை செய்து முடிக்கும் ..
திராவிடமே இந்த மண்ணில் நிலைக்கும்
..
ஆலஞ்சியார்

தண்ணீர் கொடுக்க விடாமல் தடுத்த அ தி மு க முன்னால் கவுன்சிலர்

தண்ணீர் கொடுக்க விடாமல் தடுத்த அ தி மு க முன்னால் கவுன்சிலர்

நாம் தமிழர் கட்சியினரை பொதுமக்களுக்கு இலவச தண்ணீர் கொடுக்க விடாமல் தடுத்த அ தி மு க முன்னால் கவுன்சிலர்,
நாம் தமிழர் கட்சியினர் சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை போக்க பொதுமக்களுக்கு இலவச தண்ணீர் கொடுத்து கொண்டிருந்த பொழுது அங்கே வந்த ஆ தி மு க முன்னால் கவுன்சிலர் தண்ணீர் கொடுக்க கூடாது உடனே வண்டிய எடு என்று நாம் தமிழர் கட்சியினரை தடுத்தார்

தண்ணீர் கொடுக்க ஏன் சார் தடுக்கிறீர்கள்

அதனால் அங்கே இருந்த பொதுமக்கள் ஏன் சார் தடுக்கிறீர்கள் தண்ணீ நீங்களும் தரவில்லை தருபவரையும் தடுக்கின்றீர்கள் என்று கேட்டனர்
அதற்க்கு தண்ணீர் வேண்டுமென்றால் என்னிடம் கேள் என்றார் அதற்க்கு பொதுமக்களில் ஒருவர் ஆம் தண்ணீர் இல்லை கொடுங்கள் இல்லையேல் கொடுப்பவரை தடுக்காதீர்கள் என்று சண்டை போட்டார் அதன் முழு வீடியோ கீழே இருக்கிறது

#சென்னை யல் பொதுமக்களுக்கு தண்ணீர் கொடுத்த #நாம்தமிழர்கட்சிஉறவுகளை தண்ணீர் கொடுக விடாமல் தடுத்த முன்னாள் #கவுன்சிலர் 😠😠😠
#தவிக்கும்தமிழ்நாடு

 

#தமிழ்நாட்டுவேசிஊடகங்கள்#சென்னை யில் பொதுமக்களுக்கு தண்ணீர் கொடுத்த #நாம்தமிழர்கட்சி உறவுகளை தண்ணீர் கொடுக்க விடாமல் தடுத்த முன்னாள் #கவுன்சிலர் 😠😠😠#தவிக்கும்தமிழ்நாடு

Posted by நாம் தமிழர் கட்சி கடவூர் ஒன்றியம் on Monday, 17 June 2019

குண்டிகழுவ தண்ணீரின்றி நாறினாலும் ஒற்றை வாய் பேசாது

குண்டிகழுவ தண்ணீரின்றி நாறினாலும் ஒற்றை வாய் பேசாது

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையே வெள்ளத்தில் மூழ்கினாலும் குண்டிகழுவ தண்ணீரின்றி நாறினாலும் ஆளும்கட்சியான அதிமுகவுக்கு எதிராக ஊடகங்களின்/ஊடகர்களின் ஒற்றைவிரல் நீளாது; ஒற்றை வாய் பேசாது; ஒற்றைக்குரல் கூட ஒலிக்காது. இதுதான் இதுகளின் இன்றைய லட்சணம்
ஆனால் கடந்த 25 ஆண்டு அனுபவத்தில் ஒன்றை மட்டும் சொல்லமுடியும். இதே காலகட்டங்களில் திமுக மட்டும் தமிழ்நாட்டு ஆளும்கட்சியாக இருந்திருந்தால் இந்நேரம் எல்லா ஊடகங்களும் ஊடகர்களும் சதங்கை கட்டி சதிராட்டம் ஆடி முடித்திருப்பார்கள். அதுமட்டும் உறுதியாய் சொல்லமுடியும்

தண்ணீரின்றி தமிழ்நாட்டின் தண்ணீர் பஞ்சத்தை

ஏனென்றால் ஈழத்து இழவையே தமிழ்நாட்டு திமுக கணக்கில் எழுதிய ஊடகங்களுக்கு தமிழ்நாட்டின் தண்ணீர் பஞ்சத்தை அது ஆளும்கட்சியாக இருந்திருந்தால் அதன் தலையில் சுமத்த சொல்லியா தரவேண்டும்?
எல்லோரும் அதிமுகவினரைப்பார்த்து தான் டயரை கும்பிடும் அடிமைகள் என்கிறார்கள். உண்மையில் அவர்களைவிட பெரிய அடிமைத்தனம் இருப்பது தமிழ்நாட்டு ஊடகங்களிடமும் ஊடகர்களிடமும் தான்.
இல்லாவிட்டால் ஊடகங்களை மிரட்டி எடப்பாடி பகிரங்க எச்சரிக்கைவிடுத்து இரண்டு நாட்களான பின்னும் ஒரே ஒரு ஊடகமோ, ஊடகரோ அல்லது அவர்களுக்கான அமைப்புகளோ அதை எதிர்த்து ஒற்றை போராட்டக்குரலைக்கூட எழுப்பாமல் இருப்பார்களா?
குனியச்சொன்னால் விழுந்து கும்பிடும் ஆட்கள் எங்கள் துறை ஆட்கள்.

  • LR JAGADHEESAN

ஜோதிமணி எதிர்கட்சிகளுக்கு ஓர் அறிக்கை

ஜோதிமணி எதிர்கட்சிகளுக்கு ஓர் அறிக்கை

ஜோதிமணி எதிர்கட்சிகளுக்கு ஓர் அறிக்கை, கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றில் 2004 ல் எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளுவதற்கு அரசு உத்திரவு பிறபிக்கப்பட்டது
அப்பொழுது நான் கவுன்சிலராக பொறுப்பில் இருந்தேன் குடிநீர்,விவசாயம் இவற்றைக் கருத்தில் கொண்டு 5 ஆண்டுகாலம் மணல் அள்ளுவதற்கு எதிராக விவசாயிகள்,பொதுமக்களைத் திரட்டிப் போராடி 2008 ல் நீதிமன்றத்தில் நிரந்தர தடை ஆணையை பெற்றுள்ளேன்!
இத்தடை உள்ள பகுதிகளில் நீதிமன்றத் தடை ஆணை இருப்பதால் மணல் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் யாருக்கும் அனுமதி வழங்கமுடியாது
யாரும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வெளியூறுக்கு விற்பனை செய்ய முடியாதபடி ஊர் கண்காணிப்பு எங்கள் பகுதியில் அமலில் உள்ளது எப்பொழுதும் இருக்கும்
அதே நேரம் தற்பொழுது கரூர்,மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் காவிரி ஆற்றில் மணல் உள்ள பகுதிகளில் இயந்திரங்கள் மூலம் மணல் கொள்ளை நடந்துவருகிறது திருச்சி மாவட்ட நிர்வாகம் உள்ளுர் தேவைகளுக்கு மட்டும் மாட்டு வண்டியில் மணல் அள்ள முறையாக அனுமதி சீட்டு வழங்கியுள்ளது

மாட்டு வண்டிக் காரர்களிடம் பணம் பறிப்பது

ஆனால் கரூர் மாவட்டத்தில் ஆளும் கட்சியில் உயர்பொறுப்பில் இருப்பவர்கள் கரூர் மாவட்ட நிர்வாகம் மாட்டு வண்டிகளுக்கு அனுமதி வழங்காமல் தடுத்து, இயந்திரங்கள் மூலம் மணல் கொள்ளையில் ஈடுபடுவது
தாங்களே அனுமதி இல்லாமல் மாட்டுவண்டியில் மணல் ஓட்டி லாரியில் ஏற்றி வெளியூறுக்கு விற்பனை செய்வது,மாட்டு வண்டிக் காரர்களிடம் பணம் பறிப்பது என்று தொடர்ந்து அராஜகத்தில் இறங்கியுள்ளனர்  இதுதான் கரூரில் அவர்கள் ஆற்றிவரும் ஒரே மக்கள் சேவை!
இதனால் ஆற்றங்கரையில் இருந்தும் ஏழை மக்கள் வீடு கட்டுவதற்கு மணல் கிடைக்காமல் கரூரில் இருந்து வெளியூறுக்கு விற்பனை செய்யப்பட்ட அதே மணலை,வெளியூரிலிருந்து அதிக விலைக்கு வாங்க வேண்டியுள்ளது
தேர்தல் பிரச்சாரத்தின் போது மாட்டுவண்டி ஓட்டிப் பிழைக்கும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இதை எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த அராஜகத்தை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு மாவட்ட ஆட்சித் தலைவரை மாட்டுவண்டி விவசாயிகளோடு சந்தித்து மணல் சேமிப்பு அதிகம் உள்ள இடங்களில் விதிமுறைகளுக்கு உட்பட்டு உள்ளூர் தேவைகளுக்கு மட்டும் மணல் அள்ள
மாட்டு வண்டிகளுக்கு சட்டப்படி முறையான அனுமதி வழங்கும்படியும்,
மாட்டுவண்டியில் மணல் எடுத்து யாரவது வெளியூருக்கு லாரியில் ஏற்றி விற்பது தெரிந்தால் தயவுதாட்சண்யம் இல்லாமல் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கும்படியும்

செந்தில் பாலாஜி

சட்டவிரோதமாக ஆளுங்கட்சியின் உயர்பொறுப்பில் இருப்பவர்கள் மணல் கொள்ளையில் ஈடுபடும் இயந்திரங்களை பறிமுதல் செய்து உடனடியாக அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
நாங்கள் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்திப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு வாங்கல் வனப்பகுதியில் சட்டவிரோதமாக 200 லோடு மணல் குவிக்கப்பட்டிருப்பது கவனத்திகு வந்தது. உடனடியாக அரவக்குறிச்சி சட்டமன்ற உறுபினர் செந்தில் பாலாஜி மாவட்ட வருவாய்த்துறை ஆய்வாளர்,மாவட்ட வனத்துறை அதிகாரி இவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றதால் நடவடடிக்கை எடுக்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை மணல் விசயத்தில் எவ்விதமான சமரசத்திற்கு அன்றும்,என்றும் இடமில்லை என்பதே எனது உறுதியான நிலைப்பாடு.
நான்கு நாட்களாக வேலை மெனக்கெட்டு வழக்கம்போல கடுமையாக உழைத்து பொய்,அவதூறுகளை பரப்பிய பிஜேபி / ஆர் எஸ் எஸ் ஆதரவு இணையதளத்திற்கும், கரூர் மாவட்டத்தில் செயல்படும் அவர்கள் ஆதரவாளர்களுக்கும், ஆளும்கட்சியின் அதிகார முகமூடி அணிந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டுவந்த அனைவருக்கும் சகோதரியாக ஒரு இலவச அறிவுரை  உங்கள் சக்தியை மக்களுக்குப் பயனுள்ள நல்லவழிகளில் பயன்படுத்துங்கள்
செந்தில் பாலாஜி ஜோதிமணி

மேலும் தொடர்ந்து பொய்செய்திகளை பரப்பும் வரலாற்றுக் கடமையை செய்ய விரும்பினால் இன்னும் ஐந்தாண்டுகள் இருக்கிறது
களைப்படைந்து விடாமல் இருக்க கொஞ்சம் பொறுமையாகப் பொய் செய்திகளைப் பரப்புங்கள். அவற்றை வழக்கம்போல புன்னகையோடு, நிதானமாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் எனது அன்பு!💐😀
செ.ஜோதிமணி
பாராளுமன்ற உறுப்பினர்,கரூர்

நாளை நாடாளுமன்றம் வருகிறது எம் திராவிடர் படை

நாளை நாடாளுமன்றம் வருகிறது எம் திராவிடர் படை

காத்திரு பகையே நாளை நாடாளுமன்றம் வருகிறது எம் திராவிடர் படை இதுவரை பார்த்திருந்த முகமன்று அஞ்சிபிழைத்த அருகதையற்றோரை கண்டு மகிழ்ந்திருந்ததெல்லாம் காற்றோடு போனது
கடூம்சீற்றமாய் அறநெறியோடு ஆற்றல் நல்படை வருகிறது  சொல் செயல் இரண்டும் சமநேர்கோடோடு சுட்டெரிக்கும் சூரியனின் பிள்ளைகள் வருகிறார்கள்
அணுகழிவு எம்மீது கொட்டலாமென்ற இருமாப்பை தகர்த்தெரிய
நீட் எனும் அரக்கனை எம் இன துரோகியை கொண்டே எம் கண்ணில் குத்திய கொடுஞ்செயலுக்கு பழிதீர்க்க
தமிழகத்தின் மறைமுகமாய் ஆட்சி செய்யும் பாசிசத்தின் சங்கறுக்க தளபதி படை வருகிறது காத்திரு பகையே
கர்நாடக ஒன்றும் குப்பை மேடல்ல என்று பாஜக எடியூரப்பா சொல்கிறார் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்

இங்கே ரொட்டி துண்டிற்கு வாலாட்டும் தமிழிசை போன்ற கருங்காலிகள் அணுக்கழிவை கொட்டுவதால் ஆபத்தில்லை என்கிறது  தண்ணீர் தட்டுபாடு ஏன் என்றதற்கு
எட்டாண்டுக்கு முன்பு ஆண்ட திமுகவும் காங்கிரஸும் காரணமாம் 

மும்மொழி கொள்கை என்னானதென்றால் திமுகவை கேட்கவேண்டியதுதானே சேக்கிழார் பதில் சொல்கிறார் .. புளித்தமாவிற்கெல்லாம் உலகத்தர செய்தியை வெளியிட்டு தண்ணீர் பஞ்சத்தை மறக்கடிக்க நினைக்கிற நான்காம் தூண்களை இனியும் நம்புவதென்பதென்பது முட்டாள்கள் செயல் 
பதினொரு பேரின் தகுதிநீக்க வழக்கென்னானது என கேள்வி எழுப்ப முடியவில்லை நீதிமன்றம் வாய்மூடி இருக்க ‍சொல்கிறது 
தகுதியில்லாதவன் ஐந்தாண்டு முடியும் வரை பதவியில்  வாக்குபதிவு இயந்திரம் பதிவைவிட அதிகம் காட்டுவதை தேர்தல் ஆணையமே ஒப்புகொண்டு ஜனநாயகம் வென்றதென முரசு கொட்டுகிறது
இப்படி நிறைய அநீதிகள்  இனியும் பொறுப்பதோ.


சிறந்த ஜனநாயகத்தை படிப்பிக்க .. தலைசிறந்த ஆசிரியர்களை அனுப்புகிறது தமிழகம் .. அறம் தவறா ஜனநாயக மரபுகளை மறந்து போன இந்தியாவிற்கு பாடம் எடுக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் வருகிறார்கள் .. காயிதெ மில்லத்தையும் அறிஞர் அண்ணாவையும் இரா.செழியனையும் , மாறனையும் தந்த தமிழகம் இன்று புதிய எழுச்சிமிகு இளைஞர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறது .. அனுபவமும் கொண்டவர்களும் புதிய ஆளுமைகளையும் பல்வேறு துறை சார்ந்தவர்களையும் இலக்கியவாதிகளையும் மக்கள் தொண்டர்களையும்
அனுப்புகிறது .. இனி தமிழகத்திற்கு ஒரு கேடு எனில் இந்த புரட்சிகாரர்கள் பொங்கியெழுவார்கள்
மேசையை தட்டி பூயுட்டிபுல் காஷ்மீர் என்றவரை பார்த்து களித்திருந்த இந்திய நாடாளுமன்றம் இனி பி கேர்புல் இந்தியா என கேள்வி கணைகளை தொடுக்கும் படைவீர்களை காண போகிறது ..
..
அறம் வெல்லும் என்ற நம்பிக்கையோடு .. ஜனநாயகத்தின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்ட தமிழர் படை இது தளபதி எனும் ஆற்றல்மிகு தலைவரின் வழிகாட்டுதலோடு .. நாடுவிரும்பிகளாய் நாட்டுமக்களின் நலம் விரும்பிகளாய் மொழி இனம் கலாச்சார காவலர்களாய்

பகுத்தறிவு பகவலவனின் ஒளிச்சுடர்களாய் .. கலைஞர் பெருமகனிடம் நேரடி பயற்சி பெற்ற தளபதிகளாய் வருகிறார்கள் ..
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
..
காத்திரு பகையே ..
..
ஆலஞ்சியார்

ம‌த‌வாதிக‌ளின் பார்வையில் க‌ம்யூனிச‌மும் ஒரு "போத‌னை"

ம‌த‌வாதிக‌ளின் பார்வையில் க‌ம்யூனிச‌மும் ஒரு “போத‌னை”

ம‌த‌வாதிக‌ளின் பார்வையில் க‌ம்யூனிச‌மும் ஒரு “போத‌னை” தான். ஏனெனில் அவ‌ர்க‌ள் அப்ப‌டித் தான் வ‌ள‌ர்க்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். மசூதிக‌ளில் குரான் போதிப்ப‌து மாதிரி, “கம்யூனிச‌ நாடுக‌ளில் க‌ம்யூனிச‌ம் போதிக்கிறார்க‌ள் போலும்” என்று சிறுபிள்ளைத்த‌ன‌மாக‌ நினைக்கிறார்க‌ள்.
ஒரு வாத‌த்திற்கு, பொஸ்னியா ப‌ற்றிய‌ இவ‌ர‌து கூற்றை ச‌ரியென‌ எடுத்துக் கொள்வோம்.
பொஸ்னியாவில் சேர்பிய‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்லாது முஸ்லிக‌ளுக்கும் க‌ம்யூனிச‌ம் போதித்து இருப்பார்க‌ள் தானே? உண்மையிலேயே அது ந‌ட‌ந்திருந்தால், இன்று வ‌ரை சேர்பிய‌ர்களும், முஸ்லிம்க‌ளும் த‌ம‌து இன‌, ம‌த‌ அடையாள‌ங்களை துற‌ந்து, ம‌னித‌ர்க‌ளாக ஒன்று சேர்ந்து வாழ்ந்திருப்பார்க‌ள். யுத்தமும் ந‌ட‌ந்திருக்காது. ஏனெனில் கம்யூனிச‌ம் ச‌கோத‌ர‌த்துவ‌த்தை போதிக்கிற‌து.

உண்மையில், யூகோஸ்லேவியா சோஷ‌லிச‌ நாடாக‌ இருந்த‌ கால‌த்தில், பொஸ்னியாவில் தான் பெரும‌ள‌வு க‌ல‌ப்புத் திரும‌ண‌ங்க‌ள் ந‌டைபெற்ற‌ன‌. க‌ம்யூனிச‌ம் தான் சேர்பிய‌ர்க‌ளையும், முஸ்லிம்க‌ளையும் ஒன்று சேர்த்து வைத்திருந்த‌து. ஆனால் தொண்ணூறுக‌ளுக்குப் பிற‌கு த‌லைதூக்கிய‌ தேசிய‌வாத‌மும், ம‌த‌ அடிப்ப‌டைவாத‌மும் அந்த‌ ம‌க்க‌ளை பிரித்து வைத்த‌து.
பொஸ்னிய‌ போருக்கு கார‌ண‌ம் ஒரு ப‌க்க‌ம் சேர்பிய‌ தேசிய‌வாத‌ம், ம‌றுப‌க்க‌ம் முஸ்லிம் தேசிய‌வாத‌ம். இல்லாவிட்டால் ஒரு ப‌க்க‌ம் கிறிஸ்த‌வ‌ மத அடிப்ப‌டைவாத‌ம், ம‌று ப‌க்க‌ம் இஸ்லாமிய‌ மத அடிப்ப‌டைவாத‌ம். அந்த ம‌க்க‌ள் க‌ம்யூனிச‌த்தை ம‌ற‌ந்து போன‌தால் ஏற்ப‌ட்ட‌ விளைவு. பொஸ்னியாவில் முன்பு ச‌கோத‌ர‌ர்க‌ளாக‌ வாழ்ந்த‌ ம‌க்க‌ளை, இன‌வெறியும், ம‌த‌வெறியும் தான் ஜென்ம‌ப் ப‌கைவ‌ர்க‌ளாக மாற்றின‌. இந்த‌ உண்மையை ஒத்துக் கொள்ள‌ ம‌றுப்ப‌து ஏனோ? இதை எழுதிய‌வ‌ருக்கு (Ahmed Jamsath Ahamedsha) உண்மையை பார்க்க‌ விடாம‌ல் ம‌த‌வெறி க‌ண்ணை ம‌றைக்கிற‌து.
த‌க‌வ‌லுக்காக‌: சோஷ‌லிச‌ம் (க‌ம்யூனிச‌ம் என்ப‌து வேறு) என்றால் அது ஒரு பொருளாதார‌க் க‌ட்ட‌மைப்பை குறிக்கும். பாட‌சாலையில், ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் மார்க்சிய‌ லெனினிச‌ம் த‌னிப் பாட‌மாக‌ ப‌டிப்பித்தாலும் அதை எல்லோரும் க‌வ‌ன‌மெடுத்து ப‌டிப்ப‌தில்லை. ஏனெனில் அர‌சிய‌லில் எல்லோருக்கும் ஆர்வ‌ம் இருப்ப‌தில்லை. அது ம‌னித‌ இய‌ல்பு
Written By Kalai Marx

தமிழகத்தின் பிரதிநிதி இல்லாத மோடி அமைச்சரவை பதவியேற்றிருக்கும் நாள் கருப்பு தினம்

தமிழகத்தின் பிரதிநிதி இல்லாத மோடி அமைச்சரவை பதவியேற்றிருக்கும் நாள் கருப்பு தினம்

தமிழகத்தின் பிரதிநிதி இல்லாத மோடி அமைச்சரவை பதவியேற்றிருக்கும் நாள் கருப்பு தினம்
தமிழகத்திலிருந்து யாரும் அமைச்சராகவில்லை ஒருவேளை நிர்மலாவோடு முடித்துக்கொள்ளலாமென எண்ணியிருக்கலாம்
இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகசெட்டியார் தந்த தமிழகத்தில் இன்று யாருமில்லாமல் இருப்பது வியப்பை தரவில்லை ஏனெனில் சில மரபுகள் வழக்கங்கள் எல்லாம் மீரபடுவது தான் பாசிசத்தின் தொடக்கம்.
இந்தியாவின் முதல் ஊழல்வாதி டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆனால் ஏனோ அதிகம் பேசபடாமல் மறுக்கபட்டது/மறுக்கபட்டது
தமிழகத்திலிருந்து சிறந்த ஆளுமைகள் டி.டி.கே ..வெங்கட்ராமன் என பார்பனியர்கள் என புகழ்ந்தார்கள் ஏனோ சண்முகம் செட்டியாரை மாறனை, பாலுவை ராசாவை சிதம்பரத்தை
மறக்க திறமைகளை மறுதலிக்க முயற்சிக்கிறார்கள் .. முதல் ஊழல்வாதியை உத்தமராக்க தெரிந்தது ஆனால் நிரூபிக்க முடியாமல் கட்டிசமைத்த பொய்களால் திராவிடர்களை பழிசொல்ல பழி ஏற்க செய்ய முடிகிறது ..
கலைஞர் சொல்வார் மாறனின் மகன் என்பார்கள் பார்பனிய குஞ்சென்றால் திருஞானசம்பந்தர் என்பர்
 

தமிழகத்தின் பிரதிநிதி

திராவிட வழிவந்த (கா.கா.கே.க) கட்சியிலிருந்து வந்த பொன்.ராதா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார் இணை அமைச்சரென்றாலும் சிறியளவிலான பங்களிப்பது .. சீதாராமனையெல்லாம் தமிழக பிரதிநிதியாக சொல்லமுடியாது ..தமிழக மக்கள் துரத்தியடித்து தூத்திவாரினார்கள் என்பதால் இடமில்லை அதே கேரளத்திலிருந்து ஒரு இடம்கூட கிடைக்காத போதும் கேரள பாஜக தலைவர் முரளிதரன் இணையமைச்சராக்கபட்டிருப்பது கவனித்தல் கொள்ளவேண்டும் ..
அதிமுக பன்னீர் மகனுக்கு தரபோவதாக செய்திகள் வந்து கடைசியில் தரவில்லை
மந்திரிசபையில் யாரை அமர்த்துவதென்பது பிரதமரின் தனிவிருப்பம் .. இந்த தேர்தலே வாக்குபதிவு இயந்திரங்கள் பலசரக்குகடையில் கிடைத்ததில் வந்த வெற்றியென்பதும் தமிழகம் போல விழிப்புணர்வு பெற்ற மாநிலங்களில் அவர்கள் சூழ்ச்சி முறியடிக்கபடும் என்பதால் வடமாநிலங்களில் செட்டிங் செய்யபட்டதென்றாலும் வந்த வெற்றி ஜனநாயகத்தின் கருப்பு பக்கங்களாய் நிகழ்ந்தவைகள்
..
தமிழகத்தின் பிரதிநிதி இல்லாத மோடி அமைச்சரவை பதவியேற்றிருக்கும் நாள் கருப்பு தினம்
Black Day of Democracy..
..
ஆலஞ்சியார்

சில அரைகுறைகள் திராவிடத்தை மேம்போக்காக அறிந்துக்கொண்டு பெரியாரை கலைஞரை விமர்சிக்கின்றன

சில அரைகுறைகள் திராவிடத்தை மேம்போக்காக அறிந்துக்கொண்டு  பெரியாரை கலைஞரை விமர்சிக்கின்றன

சில அரைகுறைகள் திராவிடத்தை மேம்போக்காக அறிந்துக்கொண்டு  பெரியாரை கலைஞரை விமர்சிக்கின்றன
இதில் கொடுமை என்னவெனில் “எலைட்” தலித்கள் என அறியபடுவோர் தான் அதிகளவில் “புறம்”பாடுகின்றனர் யாருக்கு கல்வி மறுக்கபட்டு திராவிடத்தால் கிடைத்ததோ அவர்கள் தான் அதிகம் பேசுகிறார்கள் இன்று கல்வியில் ஒரளவு சரியான நகர்வை கண்டுவிட்டபிறகு பொருளாதாரத்திலும் நல்ல நிலை வந்தவிட்டபிறகும் சமுதாயத்தின் அங்கீகாரம் என்பது இன்னும் சமூக கலாச்சார மாற்றம் ஏற்படவில்லை என்ற உண்மையை மறுக்கவில்லை
ஆனால் பிற மாநிலங்களில் இதுபோல “மேம்பாடு ” கிடைத்திருக்கிறதா என்ற உண்மை நிலையை உணராமல் பிற்படுத்தபட்ட பிரிவினர்களும் இதே கேள்வியை கேட்கின்றனர்
எதற்கெடுத்தாலும் முன்பே இந்த புரட்சி நடந்திருக்கிறது.. என “புளித்தமாவை”யே திரும்ப திரும்ப சொல்கிறார்கள்
கலைஞர் வந்து தான் செய்தாரென்பதை ஏற்கமுடியாது
பெரியார் இல்லாவிட்டாலும் படித்திருப்போம்.. இன்றைக்கும் சாதி ஒழிந்துவிட்டதா .. சாதியை வளர்ப்பதே திராவிடம் தான் என்றெல்லாம் பேசுகிறார்கள்…
பேசுங்கள் எதையும் அறிந்துக்கொண்டு அறிந்ததை ஆய்ந்து உண்மைதானா என விளங்கி பின் விமர்சனம் செய்யுங்கள்
..
சாதியை பார்த்துதானே தேர்தலில் ஆளை நிறுத்துகிறார்கள் என கேட்போருக்கு மறுக்கவில்லை.. அந்தந்த பகுதியில் வாழும் சமுதாய மக்களின் பிரதிநிதியாய் அதே சமுதாயத்தை சேர்ந்தவரை நிறுத்துவதென்பது இயல்பான ஒன்று ‍
அதில் கூட சில இடங்களில் பிற சமூகத்தவரை நிறுத்தியிருக்கிறது.. ஆனால் தேர்தல் அரசியலில் வெற்றி முக்கியம் என்பதும் அதே வேளை கொள்கை சார்ந்தவர்களை நிறுத்தவேண்டியதும் அவசியம்.. குறைகளே இல்லையா என கேட்டால் உண்டு ஆனாலும் பிற கட்சிகளை விட திமுக மிக நேர்மையாக நடந்துவந்திருக்கிறது என்பதை மறுக்கமுடியாது

கலாச்சாரத்திற்கு திமுக செய்ததைப்போல வேறு எந்த கட்சியும் செய்ததில்லை

இனம் மொழி கலாச்சாரத்திற்கு திமுக செய்ததைப்போல வேறு எந்த கட்சியும் செய்ததில்லை காரணம் அடிப்படையிலிருந்து மாறாத கொள்கைப்பிடிப்பே காரணம்.. தமிழ்மொழியை செம்மொழியாக்கியதொன்றே போதும்.. வள்ளுவனுக்கு சிலை வடித்து வானுயர புகழ் சேர்த்தது
தமிழ்ப்புத்தாண்டை தை மாதமென்ற சட்டமேற்றியது ..பின் வந்த ஆரியமங்கை தான் சார்ந்த இனத்தின் கலாச்சார திணிப்பை மீண்டும் கொண்டுவந்தார்.. தமிழனின் பண்பாட்டை கட்டிகாப்பதில் எப்போதும் திமுக பின்வாங்கியதில்லை
..
எந்தவொரு திட்டமானாலும் உடனே சில அறிவுஜீவி..?கள் நாங்கள் ஏற்கனவே சிந்தித்தது நாங்கள் சொல்லிதான் செய்தது திமுக என உளற தொடங்கியிருக்கிறார்கள்
ஏன் அதற்கு முன் இருந்த ராஜாஜி பக்தவச்சலம் போன்றவர்களின் காங்கிரஸ் ஆட்சியில் செய்திருக்கவேண்டியதுதானே.. அல்லது மகோரா ‌மற்றும் ஜெயா ஆட்சியில் கேட்டு பெற்றிருக்கவேண்டியதுதானே என்றால் பதில் இல்லை .. பதில் வராது.. ஏனெனில் இவர்களையெல்லாம் அருகில் அண்டவிடுவதே இல்லை அல்லது இவர்களை ஒரு பொருட்டாக மதித்ததில்லை.. அது எந்த சாதி மதத்தினராக இருந்தாலும் கலைஞரை தவிர மற்றவர்கள் நடத்திய விதம் அப்படிதான்..காரணம் சிந்திக்கும் திறனற்ற எடுப்பார்கைப்பிள்ளையை போல அடுத்தவரின் நிழலில் அறிவில் குளிர்காய்கிறவர்களாக இருந்தார்கள் ..
அல்லது அவர்களிடம் கேட்க ஒருவித பயமிருந்தது.. ஆனால் கலைஞர் எல்லோரையும் கடுமையாக எதிர்க்கிறவர்களின் கருத்தையும் உள்வாங்கியகிறவராக அவர்களின் கருத்தை கோரிக்கைகளை ஏற்கிறவராக அதில் நியாமிருந்தால் நடைமுறைபடுத்த தயங்காதவராக இருந்தார்.. இந்திய வரலாற்றில் உச்சபட்ச ஜனநாயகவாதியாக திகழ்ந்தவர் கலைஞர் மட்டும்தான்
..
பெரியார் இல்லையென்றாலும் படித்திருப்போம் .. சரி..
ஆராயிரம் பள்ளிகளை மூடினாரே மூதறிஞர்..? என நம்பபட்ட ராஜாகோபால் (ராஜாஜி) அப்போது அவருக்கெதிராக ஏன் யாரும் அசையவில்லை
குலக்கல்வி கொண்டுவந்து அவனவன் சாதி தொழிலை செய்யுங்களென சொன்னபோது என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள் .. காமராஜரை நிறுத்தி ராஜா கோபாலையை புறமுதுகிட்டு ஓட செய்தது பெரியார் தானே .. ஆராயிரம் பள்ளியை மூடிவிட்டார் நீயாவது திறந்து எம்ம பிள்ளைகள் படிக்க ஏற்பாடு செய் என்ற கோரிக்கைதானே .. ஊரெங்கும் துவக்கப்பள்ளி வர காரணமாக இருந்தது
பள்ளி திறந்தும் யாரும் வர மாட்டேங்கிறாங்கய்யா என்ற போது மதிய சோறு போட்டாவது பசங்களை படிக்க வைத்தது திராவிடம்தானே
மதிய உணவிற்கு போதிய நிதி ஆதாரம் இல்லையென்ற போது பணக்காரர்கள் செல்வந்தர்கள் என கையேந்தி.. கடைசியில் விவசாயிகளிடம்.. முதல் மரைக்காய சாமிக்கும் இரண்டாவது மரைக்காய ஊர்கோவிலுக்கும் தரிங்க மூணாவது மரைக்காய எனக்கு தாங்க பிள்ளைகளுக்கு சோறு போடுறேன் என்றாரே
இதற்கெல்லாம் மூலகாரணமாக ராஜாகோபாலையை வீழித்தி நம் குழந்தைகள் படிககணுமென்ற பாடுபட்ட பெரியாரை ..இவர் இல்லாவிட்டாலும் படிச்சிருப்போமென்பது எவ்வளவு பெரிய கயமைத்தனம்
பெரியாரின் வழிவந்த கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகுதானே நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்தி..படிப்படியாக உயர்நிலை மேல்நிலையென கிராம்தோறும் கொண்டு சேர்த்தார் ..மாவட்டம் தோறும் கலைக்கல்லூரி
தொழில்நுட்ப கல்லூரியென ..செய்து இந்தியாவிலேயே மாவட்டம் தோறும் மருத்துவக்கல்லூரியை நிறுவியது இந்த பெரியாரின் நேரடி சீடர் கலைஞர் தானே.. பெண்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து மகளிர் கல்லூரி மாவட்டம்தோறும்
ஏன் முதல்பட்டதாரிக்கு கல்விக்கட்டணம் இல்லை.
அடுக்கிகொண்டு போகலாம்..
கல்வியில் புரட்சியை செய்தது திராவிடம்தான்..
..
இவையெல்லாவற்றையும் அனுபவித்து கொண்டே என்ன செய்தது திராவிடம் என்பவர்களை எப்படி அழைப்பது
ஈத்தரைகள்..
..
ஆலஞ்சியார்

பார்பனர்கள்கள் தமிழர்களா?

பார்பனர்கள்கள் தமிழர்களா?

பார்பனர்கள்கள் தமிழர்களா?  கும்பகோணம் மடத்தின் தலைவர் காஞ்சி பெரியவர்
தமிழை நீசமொழி என்றார் சமஸ்கிருதம் மட்டுமே தெய்வத்தோடு பேசும் மொழி என்றெல்லாம் தெய்வத்தின் குரலில் அளந்தார்
ஆனால் பார்பனர்கள் தங்களை தமிழர்களாக தேசியளவில் முன்னிறுத்தினாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை ஏச மறப்பதில்லை தமிழர்களை அவர்கள் தங்களின் பிரதான எதிராளியாகவே கருதுகிறார்கள் காரணம் அவர்கள் தங்களின் கோட்பாட்டிற்குள் வருவதில்லை/ அடைக்கமுடியவில்லை
பாஜக வின் ராகவனும் பத்ரியும் தமிழை எப்படி காட்டுமிராண்டி மொழியென்று பெரியார் சொல்லலாம் கூடவே எங்கள் #தமிழ்மொழி என சேர்த்துக்கொள்கிறார்கள்..
..
#பெரியார்
முதலில் மிகதெளிவாக சொன்னார்..
மொழியில் சீர்திருத்தம் செய்யாமல் எந்த மொழியும் வளராது..சமகாலத்திற்கு பொருந்துகிறார்ப்போல் வடிவமைக்கப்படாமல் இருப்பதைதான் பெரியார் குறிப்பிட்டார் ..
பெரியார் சீர்திருத்தம் செய்த தமிழ் மொழியின் எழுத்துக்கள் தான் இந்த கணணி யுகத்திலும் இலகுவாக பயன்படுத்த முடிகிறது..
தமிழைப்படித்து விட்டு சாமியாராக போனவர்கள் அதிகம் பட்டினத்தார் தாயுமானவர், வள்ளலார் போன்றோர்..அதையும் பெரியார் பலஇடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார்..
தமிழ் படித்து விட்டு மடமை பேசியவனே அதிகம் யாரும் பகுத்தறிவு பேசவில்லை என்றும் குட்டுவைத்தார் பெரியாரை ஒரு பிரேமிற்குள் அடைத்துவிடமுடியாது அவர் தனக்கு மொழிப்பற்றோ இனப்பற்றோ நாட்டுபற்றோ இல்லை இருப்பதெல்லாம் மானுடப்பற்று என்று சொன்னவர்..

பாப்பான்கள் எப்படி தமிழர்களாக முடியும்?

விடயத்திற்கு வருவோம்..
பாப்பான்கள் எப்படி தமிழர்களாக முடியும் #இனத்தால்..தமிழனில்லாத ஆரியர்கள்..
வடமொழி கலப்பிலேயே பேசும் சமஸ்கிருதத்தை பேச்சுவழக்கில் தமிழோடு கலக்கும் ..இவர்கள் தமிழர்கள் அல்லர்..
தமிழ் மொழி பேசுவதால் மட்டுமே தமிழன் என்று பொருள்கொள்ளமுடியாது..
எனக்கு ..ஆங்கிலம் தெரியும் பிரஞ்சு தெரியும் எனவே நான் ஆங்கிலேயன் பிரஞ்சுகாரன் என ராகவன் கோஷ்டி சொல்லுமா

புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாப்பானை.. இப்படிதான் பாடினார்
புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாப்பானை.. இப்படிதான் பாடினார்..
#அண்டிப்பிழைக்க_வந்தஆரியக்கூட்டம்
#பெரியார் பாப்பான் என்றே அழைக்கவும் சொன்னார் பிராமணன் என்றெழ்த்தால் நாம் அவன் சொல்லும் நால்வர்ண கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவராவோம் அவன்
நம்மவன் இல்லையென்றார்.. தன்னை தமிழனென சொல்லி திரிகிறான் அதிலிருந்து வேறுபட்டு இனங்கானவே திராவிடன் என்ற சொல்லி பயன்படுத்தியதாகவும் சொன்னவர் பெரியார்
..
#பாப்பான்..
தமிழ் இனத்தின் பிரதான எதிரி..
தமிழ்மொழி வளர்ச்சிக்கு ..இனத்தின் பெருமைக்கு மிகப்பெரிய இடையூறாய் இருக்கும் இவர்கள் எப்படி தமிழர் ஆவார்கள் தொடர்ந்து தமிழர்களை கிண்டல் செய்வதும் தங்களை உயர்வாக எண்ணி மகிழ்வதும் ஒருவகை மனநோய்
..
தமிழ் செம்மொழியாவதற்கு மிகப்பெரிய தடையாக இருந்தவனும் பாப்பான் தான்.
செம்மொழியாக அறிவிக்கப்பட்ட போது தினமலர் இனி விலைவாசி குறைந்து விடும் என கிண்டலடித்தது குறிப்பிடதக்கது செத்த மொழி சமஸ்கிருதத்தை உயர்த்திபிடிக்கவே மும்மொழியென பெயரில் ஏதேனும் ஒன்றை கற்கலாமென சொல்லி .. பிற மொழிக்கு ஆசிரியர் கிடைக்கவில்லையென கதையடித்து சமஸ்கிருதத்தை திணிக்க முயல்கிற முயற்சிதான் இதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் ..
அதேபோல்
ஹிந்தி மொழியில் இரண்டே இலக்கியம் தான் ராமாயணமும் ரெயில்வே கைடும் என்றார் அண்ணா.. மொழி வளமில்லாத தனக்கென்று தனி இலக்கணமில்லாத உருது மற்றும் ஹிப்ரூ மொழி வளத்தை தனக்காக்கி கொண்ட பேசும் மொழி ஒருநாட்டின் பொதுமொழி என்பது கையிருப்பு இல்லாமல் கதையளப்பதைப்போல சிதைந்து போகும் மொழி உயர்ந்ததெனில் விரும்பி கற்பார்கள் பிழைப்பிற்காக எனில் அதில் எந்த பயனும் ஏற்படபோவதில்லை ..
..
தமிழ் மீதும் தமிழர்கள் மீது தீராபகை கொண்டு திரியும் பார்புகளை அறிவுக்கொண்டு வெல்வோம்
#எம்மொழி_செம்மொழி ..
..
ஆலஞ்சியார்

பெரியாரை ஏற்றுக்கொள்கிறோம் நீங்கள் ஜெய்பீம் என சொல்ல தயாரா

பெரியாரை ஏற்றுக்கொள்கிறோம் நீங்கள் ஜெய்பீம் என சொல்ல தயாரா

இப்போதும் பொருந்துகிறது ரஞ்சித் போன்றவர்களின் அறியாமை யை காணும் போது
பெரியாரை ஏற்றுக்கொள்கிறோம்.. நீங்கள் ஜெய்பீம் என சொல்ல தயாரா என்கிறார் இளம் இயக்குனர் ரஞ்சித்
ஏன் அண்ணலை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் அண்ணல் அம்பேத்கர் மீது மரியாதை உண்டு .. ஒடுக்கபட்ட சமூகத்திலிருந்து உயர்ந்த பதவிகளை தன் திறமை மூலம் பெற்றவர்.. தான் பிறந்த மதத்தின் இழிவுகளை போக்க தன் சார்ந்த மக்களை புத்தமதம் தழுவ செய்தால் புனிதராகிவிடலாமென்ற நினைத்து மாறியவர்
அதிலிருந்தே தான் தாழ்ந்தவர் என்ற எண்ணம் கொண்டிருந்தாரென அறிய முடிகிறது..
தான் சார்ந்த சமூக பின்னணியில் இருந்து மிகப்பெரிய மாற்றத்தை வடமாநிலங்களில் குறிப்பாக மராட்டியத்தில் அவரால் கொண்டுவர முடியவில்லையே வெகுமக்களை ஒருங்கிணைக்காத
அல்லது வெகுமக்கள் ஆதரவில்லாத எதுவும் எந்த மாற்றத்தையும் தர முடியாது.. ஆனாலும் அம்பேத்கர் வாழ்க என்பதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.. ஆனால் பெரியாரை நாங்கள் ஏற்கவேண்டுமெனில் ஜெய்பீம் என அழைக்க வேண்டுமென்ற நிபந்தனை நிச்சயமாக தலித் மக்களை வெகு தூரத்தில் வைக்கவே பயன்படும்
இப்போது மெச்சபட்டிருக்கிற நிலை பெரியாரின் கைத்தடி தந்தது என்பதை உணரவேண்டும்.. தோளில் துண்டை போட கூட அனுமதிக்காத சமூக சூழலை மாற்றி ..
பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தது திராவிடம்.. வாடா முனியா என்றழைத்த காலத்தில் மேடை போட்டு முனியாண்டி அவர்களே என விளித்து பழக சொன்னது திராவிடம்.. ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றமில்லாமல் நாடும்,இனமும் முன்னேறாதென்ற நம்பிக்கையில் உரத்து நின்றது பெரியாரும் திராவிடமும் தான்..
..
தெளிவு போதாமை அல்லது சிறிய வெற்றியின் மமதை இவ்வாறு பேச வைத்திருக்கிறது.. இதே இப்போது இந்த துணிவோடு தமிழகத்தில் கதைக்க முடிகிறதே ..அதற்கு காரணம் பெரியார் திராவிடம்.. இதே போல் மகாராஷ்ட்ராவில் பேசிவிட்டு நடமாட முடியாது .. அந்தளவிற்கு மிக கொடூரமான மனபோக்கை தலித்கள் மீது கொண்டிருக்கிறார்கள்..
குடியரசு தலைவரையே வெளியே நிறுத்துகிற சூழல்
இங்கே 52 லேயே பரமேஸ்வரனை அறநிலையத்துறை அமைச்சராக்கியவர் பெரியார் .. திலகர் உடலை தொட கூட காந்தியை அனுமதிக்காத வரலாறெல்லாம் படியுங்கள் ரஞ்சித்.. இரண்டு சினிமாவில் தலித்திய சிந்தனையை படமாக்கிவிட்டால் எல்லாம் அறிந்தவரென்றோ போராளியென்றோ நினைத்துக்கொண்டு களம் இறங்குகிறீர்
ஒடுக்கபட்ட மக்களுக்காக கால்நூற்றாண்டுக்கு மேலாக பாடுபடும் போராடும் தோழர்.திருமாவிடம் கேட்டுபாருங்கள் பெரியார் யாரென்று தெரியும்
பெரியாரை முன்னெடுக்காவிடில் பெரியாருக்கல்ல இழுக்கு
பெரியாரை முதன்மைப்படுத்த இவர் வேண்டுமென்பதில்லை.. தமிழகத்தில் பெரியாரை திராவிடத்தை கலைஞரை தாக்கினால் பெரிய ஆள் ஆகிவிடலாமென்ற பழைய வறட்டு சிந்தனையின் விளைந்தது தான் இந்த பெரியாரை ஏற்கிறோம் ஜெய்பீம் என சொல்ல தயாரா.. என கேட்பது..
..
பாசிசம் அஞ்சும் ஓரு பெயருண்டு.. இந்த பெயரை கேட்டாலே பாசிசத்தின் குலைநடுங்கும் ..அந்த பெயர் பெரியார்.. ஆனால் ஜெய்பீம் என சொல்லி பாருங்கள் கடித்து குதறிவைக்கும் .. அண்ணல் அம்பேத்கர் அறிவாளி என்பதில் மாற்றுகருத்தே இல்லை ஆனால் .. நல்ல அரசியல் தலைவராகவோ..
தொலைநோக்கு சிந்தனையாளராகவோ.. மக்களின் நாடிதுடிப்பை அறிந்து அவர்கள் மனதை மாற்றியவரில்லை.. ஆனால் பெரியார் .. பிராமணீயத்தின் (ஆரியத்தின்) ஆணிவேரையே அசைத்தவராக.. சமூகநீதிக்காக.. சமநீதிக்காக.. ஒவ்வொரு விடயத்திலும் தொலைநோக்கோடு சிந்தித்து கல்வி வேலைவாய்ப்பு கருத்து சுதந்திரம் பெண்கள் கல்வி அவர்களின் உரிமை என எல்லா படித்தளங்களிலும் கவனம் செலுத்தி புதியதொரு விடியலை தந்தவர்.. நாடு விடுதலை அடைந்ததையே கறுப்புநாளென்றவர்.. சமூகவிடுதலை இல்லாமல் நாடு விடுதலை அடைந்து பயனில்லை என்றவர்.. பெரியார் தொலைநோக்கி..
..
எங்களுக்கு பெரியார் போதும்.. நீங்கள்
ஜெய்பீமையே முன்னெடுங்கள்.. அப்போது தெரியும் .. பெரியாரின் மேன்மை தளர்ந்து விழும் போது தூக்கி நிறுத்த ..ஆம்..
கடைசியில் பெரியார் தான் வந்து நிற்பார்
..
ஆலஞ்சியார்

இலங்கை முஸ்லிம்கள் அரபு மொழியை பயன்படுத்த கூடாது

இலங்கை முஸ்லிம்கள் அரபு மொழியை பயன்படுத்த கூடாது

இலங்கை முஸ்லிம்கள் எந்த சூழ்நிலையிலும் வணிக நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் அரபு மொழியை பயன்படுத்த கூடாது என்று இலங்கை அரசு ஆணை பிறப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
மிகவும் மடமையான செயல் எந்தவொரு மொழியும்
அதன் வளமும் பிற மக்களோடு தொடர்பினை ஏற்படுத்தவே தவிர மொழி தீவிரவாதமாகாது .. எந்த மொழி திணிப்பையும் எப்படி ஏற்பதில்லையோ அதைப்போல அந்தந்த மொழி அறிந்தோர் அதன் பயன்பாட்டை நிறுத்தவேண்டுமென சொல்வது அறிவுடை செயல் அல்ல..
இஸ்லாம் அரபுமொழி என்றாலே அது தீவிரவாதத்தின் வாசலென கட்டமைக்கபட்டிருப்பதற்கு ஒருவகையில் அந்த மொழி வழக்கை கொண்ட மதபோதகர்களின் செயல்பாடும் இஸ்லாத்தை அரபி மொழியோடு மட்டுமே தொடர்புபடுத்தியதும் அதை ஒரு “புனித” நிலைக்கு கொண்டுபோய் வைத்ததும் காரணம் .. இஸ்லாம் பயங்கரவாதத்தை எங்குமே எடுத்தியம்பாத போது சிலர் தங்கள் அதிகாரவரம்பை நிலைநிறுத்த செய்த செயல்கள் அதற்கு வேதத்தை .. எது எப்போது எந்த காலகட்டத்தில் இறங்கியது எதற்காக அதை செயல்படுத்தபட்டதென்ற அறிவின்மையால் .. நேரடி மொழியாக்கமென்ற பெயரில் அதன் உட்பொருள் அறியாமல் மேலெழுந்தவாரியாக மக்களிடையே திணிக்கப்பட்டதும்.. அதை தீவிரவாத மார்க்கமென வல்லரசுகள் நம்பவைத்ததும் இவர்களின் பழைய “புனித போர்” Holy War வேறொரு பரிணாமத்தை அடைந்து அதில் முஸ்லிம்கள் மீது உலகளாவியளவில் தீவிரவாதிகள் என்ற “அடைமொழி”யை வைத்துவிட்டார்கள் ..பொது சமூகம் ஒருவித பயத்தோடு இஸ்லாமியர்களை காண கூடிய சூழலை உருவாக்கியதில் சில வல்லரசுகளுக்கு உரிய பங்கு எவ்வளவோ அதிலும் சற்றும் குறையாமல் இஸ்லாமிய அமைப்புகளின் மத போதகர்கள் மதத்தை ரட்சிக்கவந்தவர்களென சொல்லிக்கொண்டோரின் பங்கும் உண்டு
..
மொழி என்பது ஒரு ஊடகம் .. சில மொழிகள் செத்தொழிந்து போயின காரணம் எந்தவொரு மொழியும் அதன் சிறப்பு இலக்கணத்தில் இருக்கவேண்டும் மக்கள் மொழியாக இருந்தால் அதை எந்த சக்தியாலும் அழித்திட முடியாது .. தமிழ் நிலைத்து நின்றதற்கு “திணைமரபு ” இலக்கணமே காரணம் .. சமஸ்கிருதம் செத்ததற்கு இலக்கணமில்லாததே காரணம் .. தெய்வமொழி என்பதாலோ.. நிலைத்திடாது அரேபிய மொழி அந்த மண்ணின் மொழி அதை மதத்தின் மொழியாக கருதியதால் இந்த இழிநிலை ..
வெகுமக்கள் பேசுகிற மொழியும் கூட..
..
ஜப்பான் மற்றும் சீன நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களில் அரபு மொழி எழுத்துக்களை பயன்படுத்தி சந்தை படுத்தி வருவதை நாம் அறிய முடிகிறது.. 54 நாடுகளில் பேசபடுகிற மொழி கீழைநாடுகளின் ஒருவித மதரீதியான தாக்கத்தை ஏற்படுத்திய மொழி பல்வேறு நாடுகளின் அலுவல் மொழியாகவும் இருக்கிற மொழியை இலங்கை போன்ற வளைகுடா பொருளாதாரத்தை பெரிதும்
நம்பியிருக்கிற நாட்டில் தடை என்பது கேலிகூத்காக முடியும்…எந்த ஒரு மொழியும் எப்படி பயங்கரவாத மொழியாக அமைய முடியும் அதற்கான சாத்தியங்கள் எவ்வாறு ஏற்படும் என்கிற சராசரியான அறிவு கூட இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு இல்லை என்று தான் நாம் கூற முடியும். இதன் பின்னில் குறிப்பாக சில பௌத்த துறவிகள்..? இது போன்ற வெறுப்பு தன்மைக்கு காரணம் என்று ஸ்ரீ லங்கா மீடியாக்கள் கருத்து தெரிவித்துள்ளன
..
#மொழி
..
ஆலஞ்சியார்

திராவிடம் திமிரி எழுகிறதே ஏன் தெரியுமா

திராவிடம் திமிரி எழுகிறதே ஏன் தெரியுமா

எப்படியும் வீழ்த்திவிடவேண்டுமென கங்கணம்கட்டி செயல்பட்டாலும் திராவிடம் திமிரி எழுகிறதே ஏன் தெரியுமா ..
அடித்தளம் சரியாக கட்டபட்டிருக்கிறதென்றார் அண்ணா
..
எத்தனை சூதுகள் நயவஞ்சகங்கள் கூடஇருப்போரையே கூர்தீட்டி எம்மிடமே திருப்பிய தந்திரங்கள் தாங்கள் தமிழர்களென எம்மவரை வாயாலேயே சொல்லவைத்து எவ்வளவு பார்த்தாயிற்று .. ஒரு மொழியை அழித்தொழிக்க நினைத்தால் முதலில் பேசும் மக்களிடம் பிரிவினையை உண்டாக்கு .. இனத்தின் கலாச்சாரத்தை அழிக்க நினைத்தால் முதலில் நூலகத்தை கொளுத்து மக்களிடமிருந்து கல்வியை பிடுங்கு இதைதான் ஆரியம் மிக சாதூர்யமாக நடந்திவந்தது .. திராவிட இயக்கம் தோன்றியதன் பின்னால் தான் மக்களிடையே கல்வியை பற்றிய விழுப்புணர்வும் நமதான உரிமை அது என்ற தெளிவும் வந்தது எங்கே நம்மிடம் உள்ளதெல்லாம் இதுவரை கட்டி காத்ததெல்லாம் நாம் மட்டுமே அனுபவித்ததெல்லாம் போய்விடுமோ என அஞ்சி மெல்ல பழைய நிலைக்கு கொண்டு செல்லும் திட்டத்தை படிபடியாக செய்துவருகிறது ஒவ்வொரு முறையும் வெகுண்டெழுந்து போராட வேண்டியிருக்கிறது .. நீட் தேர்விற்கு அனுமதியை ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது துரோகி மாஃபா பாண்டியராஜனை கொண்டு கையெழுத்திட்டு இன்று அதை நீக்க பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது எதையும் நேரடியாக எதிர்க்க முடியாமல் திரைமறைவிலேயே நகர்த்தும் வேலை தெரிந்தவர்கள் ..
..
இன்றல்ல ஆரம்பம் தொட்டே எல்லாவற்றையும் தமிழர்களுக்கு எதிராகவே செய்பவர்கள் .. தமிழ்நாடு என பெயரிட வேண்டுமென கேட்டபோது
திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டவர்கள் தமிழ் நாடென்று கேட்கிறார்கள் என கு.க.பாளையம் ராஜகோபால்(ராஜாஜி) டெல்லிக்கு தகவல் அனுப்பிய போது
அன்றைக்கு நாட்டிற்குள்ளே நாடா என நாடாளுமன்றம் கேட்டபோது…அண்ணா சொன்னார்
இந்தியாவே நாடு அல்ல துணை கண்டம் .. நாடென்றால் ஒற்றை கலாச்சாரம் ஒரே பண்பாடு ஒரே இனம் மொழி கொண்டதாக இருக்கவேண்டும்
பன்முக தன்மை கொண்ட பல்வேறு இன மொழி கலைச்சாரம் கொண்டது இந்தியா அதில் தமிழர்களுக்கென ஒரு நாடு என்றார் .. எதை செய்தாலும் அதில் தமிழ்நாட்டிற்கு தமிழ்மொழிக்கு தீங்கிழைப்பதையே கொண்டிருக்கிறது இந்த பாசிச அரசு ..
..
மெல்ல திணிக்கலாமென்று எண்ணத்தில் இந்தி ஆங்கிலம் மட்டுமே என்ற சுற்றறிக்கையை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கிறார் திரு.ஸ்டாலின் தமிழகத்தில் எந்தவடிவில் வந்தாலும் நசுக்கபடுவீர்களென எச்சரித்து திமுக தன் கடமையாற்றியிருக்கிறது இந்தி வேண்டுமென பேசிய மாபொசியை கூட கடந்துதான் கரிபூசியிருக்கிறோம் .. எத்தன் வழிகளுண்டோ முயற்சி செய்யுங்கள் .. பேரருளாளன் கலைஞர் மறைந்தவுடன் பெரிய வெற்றிடம் என்றெல்லாம் பேசி திரிந்து யார்யாரையோ மெருகேற்றி வெளிச்சம் போட்டுகாட்டி சாந்துபூசி .. கடைசியில் இங்கு திராவிட இயக்கத்தின் வேர் ஆயிரம் அடி ஆழ சென்று விரிந்து ‘தரு’ பரந்து விரிந்து நிழல் தருகிறது என்ற உண்மையை உணர்ந்திருக்கிறார்கள் ..
..
திமுக தமிழகம் காக்கும்
..
ஆலஞ்சியா

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left