Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

ஜல்லிக்கட்டு பிரச்னை எப்படி உருவானது?

ஜல்லிக்கட்டு பிரச்னை எப்படி உருவானது?

ஜல்லிக்கட்டு பிரச்னை எப்படி உருவானது?

பண்பாடு, கலாச்சாரம், உரிமை என்ற அடிப்படையில் விரிவாக விவாதிக்கப்பட்டு விட்டதால் எனது பதிவை பெரும்பாலும் சட்டம் சார்ந்து சுருக்கி கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஜல்லிக்கட்டுக்கான தடை எல்லோரும் நினைப்பது போல 2011-ம் ஆண்டு மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் வெளியிட்ட காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளைகளை சேர்த்தவுடன் ஆரம்பிக்கவில்லை.

2006-ல் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி கேட்டு மதுரை உயர் நீதி மன்ற கிளையை அணுகிய போது தான் இந்த பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் மாண்புமிகு பானுமதி அவர்கள் அந்த வழக்கை மட்டும் தள்ளுபடி செய்யாமல் மிருகவதை தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை குறிப்பிட்டு விலங்குகளின் மீதுள்ள ‘கருணை’யால் ஒட்டுமொத்தமாக ரேக்ளா ரேஸ், எருதோட்டம், ஜல்லிக்கட்டு போன்றவற்றையும் தடை செய்து உத்தரவிட்டார். இது விலங்குகள் நல ஆர்வலர்களே எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி. ஏனென்றால் விலங்கு நல அமைப்புகள் ஏற்கனவே எடுத்த பல்வேறு முயற்சிகள் பலனளிக்காத போது இது எதிர்பாராமல் கிடைத்த பரிசு.
பிறகு மேல்முறையீட்டில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஜனவரி 2007-ல் பானுமதியின் தீர்ப்புக்கு தடை விதித்து அந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வழிகோலியது. இந்த வழக்கின் மேல்முறையீட்டின் போது தான் விலங்குகள் நல வாரியம் (AWBI ) உள்ளே வருகிறது. விசாரணைக்கு பிறகு 2007 மார்ச் மாதம் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் பானுமதியின் தீர்ப்பை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறது. மேலும் ஒழுங்குமுறை சட்டம் இயற்றுமாறு உத்தரவிடுகிறது.
இதை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் உச்ச நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். அங்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. எனவே மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு முட்டுக்கட்டை. 2008ம் ஆண்டு வழக்கம் போல ஜனவரியில்உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்ட உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கிறது, வேண்டுமானால் ரேக்ளா ரேஸ் நடத்திக்கொள்ளுங்கள் என்று பெருந்தன்மையுடன் அனுமதிக்கிறார்கள். ஆனால் சில நாட்கள் கழித்து தமிழக அரசு (திமுக) சீராய்வு மனு போட்டு மீண்டும் அனுமதி கோருகிறார்கள். உச்ச நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதிக்கிறது. இதையொட்டி உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுகளிலேயே ஜல்லிக்கட்டு நடக்கிறது. பிறகு திமுக அரசு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009 இயற்றுகிறது. அவ்வப்போது இடைக்கால அனுமதி வாங்கி ஜல்லிக்கட்டு நடத்தி எல்லாம் சுமுகமாக போய்கொண்டு இருக்கிறது.
2011-ம் ஆண்டு ஜூலை வாக்கில் ஹேமமாலினி அவர்கள் சுற்றுச்சுழல் துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். காளைகளை காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று. பல விலங்குரிமை பிரபலங்கள் ஆதரவளிக்கிறார்கள். (2011-ம் ஆண்டு தான் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தை எதிர்த்து PETA அமைப்பு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது). சர்ச்சைக்குரிய அறிவிக்கை காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளை இணைத்து வெளியிடப்படுகிறது. (இதே ஆண்டு ஹேமமாலினிக்கு PETA PERSON OF the year விருது அளிக்கப்பட்டது, போன ஆண்டு தோழர் சன்னி லியோனிக்கு அளிக்கப்பட்டது என்பது உப தகவல் )
இதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் தொடுக்கப்படுகின்றன. மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது ( கவனிக்க, இடைக்கால நிவாரணமாக மட்டுமே ). இறுதியாக ஜல்லிக்கட்டு தொடர்பான பல்வேறு வழக்குகளையும் இணைத்து விசாரித்து உச்சநீதிமன்றம் 2014-ம் ஆண்டு may மாதம் இறுதி தீர்ப்பு அளிக்கிறது. தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டம் மிருகவதை தடுப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் அறிவித்து விட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட தமிழக அரசின் சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இப்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது, பாஜக நம்மை நீதிமன்ற தீர்ப்பிற்காக காத்திருக்க சொல்வது, கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த சொத்தை அறிக்கை சட்டப்படி செல்லத்தக்கதா இல்லையா என்பதே. சந்தேகமே வேண்டாம், நமக்கு பெரிய நாமக்கட்டி தான் கிடைக்கும். (2014 தீர்ப்பில் இருக்கும் குறைபாடுகளை தனியாக எழுத முயல்கிறேன்)
இப்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு என்ன வழி ? ஒரு பிரபல வழக்கறிஞர் அந்த 2011-ம் ஆண்டின் காட்சிப்படுத்த இயலாத பட்டியலில் இருந்து காளையை நீக்கினாலே போதுமானது, அல்லது அந்த அறிவிக்கையையே திரும்ப பெற்றால் போதுமானது, அவசர சட்டம் தேவையில்லை என்று தொலைகாட்சி ஊடகத்தில் சொன்னார். அது சரியானது அல்ல என்பதே எனது பார்வை. பிரச்சினை இப்போது அந்த அறிவிக்கை அல்ல. உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக ஜல்லிக்கட்டு என்பது இயல்பிலேயே ஒரு மிருகவதையுடன் கூடிய விளையாட்டு தான் என்று தீர்ப்பளித்து விட்டது. இதற்கு முன்பு உச்ச நீதிமன்றம் 2008ல் ஜல்லிக்கட்டை தடை செய்த போது ‘2011 அறிவிக்கை’ இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மிருகத்தையின் பேராலேயே பானுமதியும் தடை செய்தார். (பிறகு ஜல்லிக்கட்டு நடந்தது எல்லாம் இடைக்கால நிவாரணங்களின் மூலம் தான்)
எனவே இப்போது அதை எதிர்கொள்ள வேண்டுமென்றால் அவசர சட்டத்தின் வழியாக தான் செய்ய வேண்டும். சரி யார் பிறப்பிக்க வேண்டும்? மிருகவதை தடுப்பு சட்டம் மத்திய சட்டம் என்பதால் மத்திய அரசு தான் பிறப்பிக்க வேண்டும், அது தான் உடனடியானதும் எளிதானதும் கூட. ஆனால், அது தனியாக ஒரு சட்டமாக அல்லாமல் (தமிழக அரசு இயற்றிய தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் போல அல்லாமல் ) மிருக வதை தடுப்பு சட்டத்தையே திருத்த வேண்டும். எப்படி செய்வது ? எது எல்லாம் வதை (Cruelty) என்று சொல்லும் மிருகவதை தடுப்புச்சட்டம், அதற்கு விதிவிலக்குகளும் கொடுத்துள்ளது.
11. (3) Nothing in this section shall apply to –
(a) the dehorning of cattle, or the castration or branding or noseroping of any
animal in the prescribed manner, or
(b) the destruction of stray dogs in lethal chambers 20[by such other methods as
may be prescribed] or
(c) the extermination or destruction of any animal under the authority of any law
for the time being in force; or
(d) any matter dealt with in Chapter I V ; or
(e) the commission or omission of any act in the course of the destruction or the
preparation for destruction of any animal as food for mankind unless such
destruction or preparation was accompanied by the infliction of unnecessary
pain or suffering.
—–
28. Saving as respects manner of killing prescribed by religion : Nothing contained in
this Act shall render it an offence to kill any animal in a manner required by the
religion of any community.
அதாவது கொம்பை நீக்குவது, காயடிப்பது, தெருநாய்களை கொல்வது, உணவிற்காக கொல்வது, மருத்துவ பரிசோதனைகளுக்கு பயன்படுத்துவது அல்லது மதநம்பிக்கைகளுக்காக பலியிடுவது மிருகவதையில் வராது. எனவே இந்த விதிவிலக்கு பட்டியலில் ஜல்லிக்கட்டையும் சேர்க்க வேண்டும். இதை தான் மத்திய அரசு போன வருடம் செய்திருக்க வேண்டும். ஆனால், அதை விட்டு விட்டு சட்ட பாதுகாப்பில்லாத நீதிமன்றம் தூக்கி எறியக்கூடிய ஒரு சொதப்பலான அறிவிக்கையை பாஜக வெளியிட்டு விட்டு, நாங்கள் நடவடிக்கை எடுத்தோம் என்று சொல்வது கயமைத் தனமின்றி வேறில்லை. அதுவும் அந்த அறிவிக்கை காளையை காட்சிப்படுத்துதல் பட்டியலில் இருந்து கூட நீக்கவில்லை, மாறாக காளையை அந்த பட்டியலில் வைத்துக்கொண்டே ஜல்லிக்கட்டை நடத்தலாம் என்றது! முதலாம் ஆண்டு சட்டம் படிப்பவனுக்கு கூட இது எவ்வளவு மடத்தனமானது என்று புரிந்து கொள்ள முடியும். இதையும் விட்டு விடுங்கள். அப்போது தெரியாது என்று சொல்பவர்கள் 2014-ம் ஆண்டு தீர்ப்பு வந்த பிறகு தெரிந்திருக்க வேண்டாமா..? உச்ச நீதிமன்ற தீர்ப்பின் operative portion இப்படி தான் ஆரம்பிக்கிறது
….77 (1) We declare that the rights guaranteed to the Bulls under Sections 3 and 11 of PCA
Act read with Articles 51A(g) & (h) are cannot be taken away or curtailed, except
under Sections 11(3) and 28 of PCA Act…
அதாவது மிருகங்களுக்கான உரிமைகள், சட்டப்பிரிவுகள் 11 (3) மற்றும் 28 ஐ தவிர வேறு எந்த விதத்திலும் பறிக்கபட முடியாது என்று தெளிவாக சொல்லிவிட்டது. எனவே ஜல்லிக்கட்டை இந்த பிரிவுகளில் சேர்ப்பது தான் உடனடியாக செய்ய வேண்டியது. சரி, அப்படியே சேர்த்தாலும் அது இந்த மிருகவதை சட்டத்தின் நோக்கத்திற்கும் அரசியலமைப்புச்சட்டத்திற்கும் விரோதமானது என்று விலங்குநல ஆர்வலர்கள் நிதிமன்றதை அணுகலாம். ஆனால், இவ்வளவு பெரிய மக்கள் போராட்டத்திற்கு பிறகு நீதிமன்றம் அவ்வாறு சொல்லாது என்பதே நிதர்சனம்.
மத்திய அரசுக்கு இதை விட எளிதான வாய்ப்பு இனிமேல் கிடைக்குமா என்று தெரியவில்லை. காவிரி நீர் வேண்டுமென்றால் கர்நாடகாவை சமாளிக்க வேண்டும், ஈழம் வேண்டுமென்றால் அடுத்த நாட்டின் ‘இறையாண்மை’ பாதிக்கப்படும். எந்த வித சிக்கலுமே இல்லாத மிக எளிதான கோரிக்கையில் கூட நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று சொல்வதற்கு உண்மையிலேயே மிகவும் தடித்த தோல் வேண்டும். மோடி தைரியமானவர் என்று பாஜகவினர் சொல்லும் போது எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் புல் டாஸ் பாலில் டொக் வைப்பதற்கு முரட்டுத்தனமான குருட்டுத்தனமும், குருட்டுத்தனமான தைரியமும் வேண்டும். அது தான் நம்மாளிடம் நிறையவே இருக்கிறதே 🙂 அதை ஆதரிப்பதற்கும் இங்கே ஆட்கள் இருக்கிறார்களே. பிறகு என்ன
கவலை?
மிகப்பெரிய காமெடி என்னவென்றால் முதல்வரின் கோரிக்கைக்கு மோடியின் பதில் ‘வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது, எனவே ஒன்றும் செய்ய இயலாது’. விருமாண்டி படத்தில் கமல் அவர் அம்மா இறந்தவுடன் குடித்து விட்டு சலம்பிக்கொண்டிருப்பார். அப்போது சண்முகராஜா ‘இங்க பாரு விருமாண்டி இப்போ நீ குடிச்சிருக்க’ என்று ஆரம்பிப்பார். அப்போது கமல் ‘ஏ இந்தா பாருடா போலீஸ் கண்டுபிடிச்சுருச்சு’ என்று சொல்வார். அது தான் ஞாபகத்திற்கு வருகிறது.
கடைசியாக, இதைவிட பெரிய வாழ்வாதார ஜீவாதார பிரச்சினைகளுக்கெல்லாம் போராடாமல் இது போன்ற ‘சிறிய’ பிரச்சினைக்கு மாணவர்கள் போராடுவதற்கு சில மொண்ணை அறிவுஜீவிகள்வழக்கம் போல துருப்பிடித்த பிளேடை வைத்து வழு வழு கன்னத்தில் தேய்ப்பது போல மொழியை திருகி, வளைத்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது பல்லாண்டுகளாக அடக்கி வைக்கப்பட்ட உணர்வு வெளிப்படுவது என்பதை தாண்டி இந்த ‘சிறிய’ உரிமையை கூட பெற்றுத்தர ஆட்சியாளர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் வக்கில்லை என்றே அரசியல்வாதிகளை காறி உமிழ்ந்து களத்தில் இறங்கியிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. வாயிலும் வயிற்றிலும் அடித்தது பத்தாது என்று அவன் கையில் இருந்த கிலு கிலுப்பையும் பிடுங்கினால் அழ மட்டும் செய்யாது குழந்தை, ஏதாவது எதிர்ப்பை காட்ட தான் செய்யும். இதை தாண்டி எனக்கு ஒரு கேள்வி..? எல்லா வாழ்வாதார ஜீவாதார போராட்டங்களுக்கும் மாணவன் தான் போராட வேண்டுமா? அப்புறம் என்ன ஹேருக்கு இங்கே ஆட்சியாளர்கள், மத்திய மாநில அரசுகள்?
இங்கு PETA பற்றி பலரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால், விலங்குகள் நல வாரியம் (AWBI) என்ற மத்திய அரசின் கீழ் வரும் அதிகாரப்பூர்வ அமைப்பையோ அல்லது Beauty without Cruelty, Compassion Unlimited Plus Action உள்ளிட்ட NGOக்களை வெளியில் தெரியாது. ஆனால், இவர்கள் செய்த ‘சாதனைகள்’ கொஞ்சம் நஞ்சம் அல்ல. (இவற்றை விரிவாகஅடுத்த பதிவில் பார்க்கலாம்).
பின்குறிப்பு: PETA சர்வதேச சதி, A 1, A2 பால், நாட்டு மாடு ஒழிப்பு இது பற்றி எனக்கு தெரியாது. தனிப்பட்ட முறையில் இதை நம்புமாறு இதுவரை நான் எதுவும் படிக்கவில்லை

ஜல்லிக்கட்டு பிரச்னை எப்படி உருவானது? மிக விரிவான போஸ்ட். இதைத் தவறாம படிங்க. ஒரு வழக்கறிஞரின் பார்வையில் எழுதப்பட்டிருக்கிறது. படிச்சிட்டு இவரோட போஸ்ட்டை கட்டாயம் பகிரவும்.
Thanks on Written  By
RajaGopal Subramanian

வாருங்கள் மெரீனாவிற்கு உங்கள் இன அடையாளத்தை காக்க

 

வாருங்கள் மெரீனாவிற்கு உங்கள் இன அடையாளத்தை காக்க

வாருங்கள் மெரீனாவிற்கு

 
மாணவர் எழுச்சி அல்லது மக்கள் கிளர்ச்சி எப்படி வேண்டுமாலும் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் நேரடியாக மெரினா விற்க்கு செல்லாதவரையில் அதை உங்களால் ஒரு வரம்புக்குள் அடைத்து உவமை சொல்ல முடியாது

  1. ஆகவே உங்களால் வரமுடிந்தால் அல்லது நீங்கள் மெரீனாவிற்கு அருகில் இருந்தால் தயவு செய்து மெரீனாவிற்கு வாருங்கள் வந்து எங்கள் மாணவச்செல்வங்கள் தங்களது உரிமைக்காகப் போராடும் அழகை பாருங்கள், மெரீனாவிற்கு வாருங்கள்.
    வாருங்கள் மெரீனாவிற்கு உங்கள் இன அடையாளத்தை காக்க
  2. யாரும் யாருக்கும் தலைவன் கிடையாது ஆனாலும் அங்கே அடிமைகள் யாரும் இல்லை அல்லது வெற்று கோசம் இல்லை மேலும் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லை
  3. நீங்கள் வீட்டில் வசதியாக உக்கார்ந்தது கொண்டு டி வி பார்த்துக்கொண்டோ அல்லது இதைப்படித்து கொண்டோ இருக்கும் இந்தக் குளிர் இரவில் அங்கே கூடிய அணைத்து மக்களின் தேவை ஒன்றே ஒன்று தான் கோவமும் ஒன்றே ஒன்றுதான்,
  4. எங்களின் உரிமையை யாரும் பறிக்க முடியாது. எங்கள் அடையாளத்தை யாரும் அழிக்க முடியாது எங்களுக்கு வேண்டியது எல்லாம் ஜல்லிக்கட்டு நடத்த யாரும் தடை விதிக்க முடியாது நிரந்தரமாகத் தடையை நீக்க வேண்டும்.
  5. அதற்க்கு எந்த அரசியவாதியின் துணையும் அல்லது சினிமா நடிகரின் ஆதரவும் வேண்டாம் எங்கள் உரிமையை நாங்கள் மீட்டு எடுப்போம்
    வாருங்கள் மெரீனாவிற்கு உங்கள் இன அடையாளத்தை காக்க
  6. அதில் சில சந்தோசமான நிகழ்வு என்னவென்றால் மக்களின் உறுதியான நோக்கத்தைப் புரிந்து கொண்ட காவல் துறை நண்பர்கள் சிலர் அங்கே கூடிய மக்களில் தாங்களும் ஒருவராய் நின்று போராட்டத்துக்குத் தங்களின் ஆதரவை வெளிப்படையாகவே காட்டியதுதான்
  7. ஆகவே மக்களே போராட்டம் மிகப்பெரிய வலுவடைந்து மிகமுக்கியமான கட்டத்திற்கு சென்று உள்ளது இப்போது தான் உங்களின் ஆதரவு அல்லது உங்களின் பங்களிப்பு ஏதாவது ஒரு ரூபத்தில் தேவை படுகிறது
  8. உங்களால் முடிந்தால் ஒருநாள் வந்து இருங்கள் அல்லது ஒருமணி நேரமாவது வந்து இருங்கள் அப்படி முடியாவிட்டால் உங்கள் வீட்டில் இருக்கும் இளைஞர்கள் ஆன் பிள்ளை யோ அல்லது பெண் பிள்ளையோ தயங்கமால் அவர்கள் அங்கே செல்வதற்க்கு ஊக்கம் அளியுங்கள் தடை போடாதீர்கள் மெரினாவில் அவர்களுக்குரிய பாதுகாப்பு நிச்சயம் கிடைக்கும்
    வாருங்கள் மெரீனாவிற்கு உங்கள் இன அடையாளத்தை காக்க
  9. தயங்காமல் உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள்.அல்லது உங்களால்  முடிந்த உதவி எதுவாக இருந்தாலும் அங்கே போராடக்கூடியமக்களுக்கு உணவோ அல்லது ஒரு படுக்கை விரிப்பூ அல்லது ஒரு போர்வை அல்லது எதாவது அவர்களுக்கு தேவையான பொருள் அல்லது ஒரு பாட்டில் தண்ணீரோ கொண்டு போய்க் கொடுங்கள் அல்லது உங்கள் நண்பர்களுக்கு அங்கே போய் இருக்க ஊக்கம் அளியுங்கள்
  10. ஒன்று மட்டும் நிச்சயம் அங்கே கூடிய யாரும் ஒரு மதமாகவோ அல்லது ஜாதியாகக் கூடவில்லை அங்கே இருப்பவர்கள் எல்லாம் ஒரு தமிழின உணர்வாளர்களாகக் கூடி இருக்கின்றார்கள், ஏன் என்றால் முதலில் தங்கள் மொழியை திணிக்கத் தமிழை அழிக்க நினைத்தார்கள் அடுத்து தங்கள் கலாச்சாரத்தை மாற்ற நினைத்தார்கள் அதற்கும் தமிழன் பொறுத்து கொண்டான் மேலும் பல்வேறு விதமாகத் தமிழ் கலாச்சாரத்தை மறைத்து வடக்கத்திய கலாச்சாரத்தை உள்ளே நுழைக்க நினைத்தார்கள் அதற்கும் தமிழன் ஓர் அளவு போராடி விட்டுச் செய்வதறியாது பொறுத்து இருந்தான் ஆனாலும் அந்த வடக்கத்திய ஆவோஜிகல் ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கதையாக நிஜமாலுமே நமது நாட்டு மாடுகளை அளிக்க ஜல்லி கட்டு தடையைக் கொண்டு வந்ததன்நாள் இனியும் பொறுத்தால் நம்மளையே அளித்து விடுவார்கள் என்று தான் இன்று தமிழன் பொங்கி ஏழுந்து இருக்கிறான்
  11. ஆகவே வாருங்கள் மெரீனாவிற்கு உங்கள் இன அடையாளத்தை காக்க
  12. ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டம் ஒரு புதிய எழுச்சி

மெரினாவில் மாணவர்கள் போராட்டம் / # We Do Jallikkattu

மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடந்து கொண்டு இருப்பதை விலக்கும் ஒரு பதிவு சமூக வலைதளத்தில் பகிர்ந்தது
மெரீனா – Day 2

மெரினாவில் மாணவர்கள் போராட்டம்

1) நேத்திக்கு 2000 பேர்னா, இன்னிக்கு 2 லட்சம் பேர்.
2) நடிகர், நடிகைகளில் இருக்கும் விளம்பரம் தேடிகள் எவனையும் கூட்டத்துக்குள் விடவில்லை. ‘அவர்களைப் பேட்டி எடுக்கும் மீடியா, செல்பி எடுக்குறவன் எல்லாம் பேரிகேட்டுக்கு அந்தப்பக்கம் போ’ன்னு சொல்லிட்டாய்ங்க 🙂
3) ‘நேத்து வரைக்கும் நாங்க மட்டும்தான இருந்தோம். அப்ப எங்க போனீங்க’ன்னு கேக்கவும் க்ரவுட் அப்ளாஸ்.
4) குடும்பப் பஞ்சாயத்து செய்கிற லட்சுமி ராமகிஸ்ணன் தேடி வந்து பல்பு வாங்கிவிட்டு சென்றார்.
5) கோட்டு போட்டு உள்ளே வந்து மைக் பிடிக்க நினைத்த ஹைகோர்ட் வக்கீல்களுக்கும் வாட்ஸ் குறையாமல் அதே பல்பு.
6) விஜயகாந்த் குரலில், மிமிக்ரி செய்த ஒருவர் பீட்டாவையும், கட்சிகளையும் கழுவி ஊத்தி அப்ளாஸ் அள்ளினார்.
7) ஓரமாய் கழுத்தில் கட்டோடு இருந்த லாரன்ஸை மட்டும் உள்ளே அனுமதித்து மைக் கொடுத்தார்கள். அருமையாகப் பேசினார். கடைசியில் கையில் இருந்த 1 லட்ச ரூபாயைத் தூக்கி காண்பித்து ‘பேங்க்ல இவ்ளோதான் எடுக்க முடிஞ்ச்சு. நான் போராட்டம் முடியுற வரை இங்கதான், உங்ககூடத்தான் இருப்பேன். என்ன வேணாலும் என்கிட்ட கூச்சப்படாம கேளுங்க. இது நீங்கக் குடுத்த காசு” ன்னார். விசில் பறந்தது. மன்சூர் அலிகான் அலம்பலே இல்லாமல் வந்து அமைதியாக அமர்ந்து கொண்டார்.
8) இரண்டு கைகளும் இழந்த 5-6 வயது சிறுவனைத் தோளில் தூக்கிக் கொண்டு ஒருவர் உள்ளே வரக் கூட்டம் ஆர்ப்பரித்தது. அந்தச் சிறுவனின் சட்டையில் ‘We Do Jallikkattu’ என்று எழுதியிருந்தது.
9) சாப்பாடு, லெமன் ரைஸ், வாட்டர் பாக்கெட், சாத்துக்குடி என்று வரிசையாகச் சப்ளை செய்தார்கள்.
10) அவ்வப்போது சோஷியல் மீடியாவின் மூலம் வரும் தகவல்களைப் பகிர்ந்தபடி இருந்தார்கள். அப்போது மைக்கில் பேசியவர், ‘நெட்வர்க் சரியில்ல. போலீஸ்கார்அந்த ஜாம்மரை எடுத்துருங்க’ னு சொல்லவும் கூட்டத்தில் குபீர் சிரிப்பு.
11) இவர்தான் நம்ம சூச்சூ சூனா சாமியை மானாவாரியா திட்டியவர் என்று ஒருவரை அறிமுகம் செய்தார்கள்.
12) ஓபிஎஸ், மோடி படங்களைத் தூக்கி கத்தியவர்களை, நமது நோக்கம் இதுவல்ல என்று சொல்லி இறக்க சொல்லிவிட்டார்கள். கொடும்பாவி எரிப்புக்கும் ஸ்டிரிக்ட் நோ.
13) ‘பாப்பியா பாப்பியா விசாலு படம் பாப்பியா’, ‘குடிப்பியா குடிப்பியா கோக்கோ கோலா குடிப்பியா’, ‘பறந்தியே பறந்தியே நாடு நாடா பறந்தியே’, ‘சின்னம்மா சின்னம்மா மீனு வாங்கப் போலாமா’, ‘மீசையத்தான் முறுக்கு பீட்டாவை நொறுக்கு’ இவையெல்லாம் ஹைலட் கோஷங்கள். ( சென்சார் கட் நிறைய :))
14) சோழிங்கநல்லூரில் லத்தி சார்ஜ் என்ற செய்தி வந்தவுடன், வன்முறை கூடாது, மிகப்பொறுமையாக இருக்க வேண்டும், நம் வழி அறவழி என்று சொல்லி மிகமிக கவனமாக இருந்தார்கள்.
15) நேத்து சாயங்காலம் வரை ஒரே ஒரு மீடியா வேன் மட்டுமே இருந்தது. இன்று மொத்த நேஷனல் மீடியாவும் விவேகானந்தர் இல்லம் எதிரே. கிரேன் கேமரலாம் இருந்துச்சுபா.
16) பின்னால் இருந்தவன் ‘பாஸு..கேமரால மட்டும் என் மூஞ்சி தெரியாம பாத்துக்கங்க பாஸு. ஆபிஸ்ல லீவு போட்டு வந்துருக்கேன்’ என்றான். ‘ஊரே பாத்துருக்குமேடா’ என்றவுடன் ‘அய்யய்யோ’ என்றான்.
17) திருவல்லிக்கேணி ரயில்வே ஸ்டேசனில் நான் இவ்வளவு கூட்டம் இதுவரையில் பார்த்ததில்லை. முன்பு ஒருமுறை பீச்சில் தேமுதிக மாநாடு நடந்த போதுகூட இவ்வளவு கூட்டமில்லை.
18) ஆட்டோவில் சென்ற ஸ்கூல் சுள்ளான்கள் சிலபேர் ‘வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும்’ என்று சார்ட்டை காண்பித்து கத்தினார்கள். ஒரு வெசப்பயபுள்ள மட்டும் ‘ஐஸ்மோர் வேண்டும்’ என்று கத்தினான்.
19) கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்ல, இளைஞர்கள் ரோட்டில் இறங்குவதைத் தடுக்க, மைக்கில் பேசியவன் ” பின்னாடி போ நண்பா. கடல்வரைக்கும் போகலாம். நம்மகிட்ட கூட்டம் இருக்கு” என்று சிரித்தபடி சொன்னது அல்டிமேட்.
20) தாகம் தீர்க்கக் கூட்டத்தினுள் அனுப்பப்பட்ட லிம்கா பாட்டில் தூக்கி எறியப்பட்டது
21) இந்த இனத்தின் பிள்ளைகள், அவர்கள் பிள்ளைகளுக்காகப் போராடுகிறார்கள். கைக்குழந்தைகளோடு இரு குடும்பத்தினர் அமர்ந்திருந்தார்கள். இரண்டு இளைஞர்கள் அவர்களுக்குக் குடை பிடித்தார்கள்.
‘3 மாசப்புள்ள நமக்காகப் போராட வந்திருக்கு. நம்மள எவன் என்ன செய்ய முடியும் ? ‘ னு மைக்ல ஒருத்தர் கேட்டதெல்லாம் தெறி மாஸ்.
இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்தின் இனப்பாசத்தையும், நாகரீகத்தையும் அறிந்துகொள்ள மெரீனா பக்கம் வாருங்கள்
மெரினாவில் மாணவர்கள் போராட்டம்



சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left